Thottal Thodarum

Mar 19, 2012

கொத்து பரோட்டா 19/03/12

பெரிய படங்கள் ஏதுமில்லாமல் தியேட்டர்களில் ஈயடிக்கிறது. வெளியாகியிருக்கும் புதிய படங்களும் பெரியதாய் சோபிக்கவில்லை. பரிட்சை நேரம் வேறு அதனால் பெரிய படங்களின் வெளியீடு நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. சின்னப் படங்களை பார்ப்பதற்கோ அல்லது அதைப் பற்றி யோசிப்பதற்கோ மக்களுக்கு நேரமில்லை. இல்லை அவர்களது கவனைத்தை இவர்கள் கலைக்கவில்லை. கர்ணன், குடியிருந்த கோயில், வெங்காயம், ஆரண்யகாண்டம் போன்ற படங்களை ரீரிலீஸ் செய்ய முடிவெடுத்து சில படங்கள் வெளியாகியும், இன்னும் சிலது வெளியாகவும் இருக்கிறது. தேவிபாரடைஸில் இந்த வாரம் படமே வெளியிடவில்லை. கேட்டால் டெக்னிக்கல் ப்ரச்சனை என்றார்கள். ஆனால் படம் போடவில்லை என்பதுதான் உண்மை என்று சொல்கிறார்கள். மீண்டும் அமீர் -அதாவது பெப்ஸி- தயாரிப்பாளர்கள் ப்ரச்சனையை கிளப்பியிருக்கிறார்கள். நொந்து போயிருக்கும் தமிழ் சினிமா எழுந்திருப்பது கொஞ்சம் கஷ்டம் தான் போலிருக்கிறது. கிடைக்கிற கேப்பில் அமீர் கொஞ்சம் கதையை ரெடி செய்து ஜெயம் ரவியை ரிலீஸ் செய்யலாம்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@

மத்திய பட்ஜெட்டை சச்சினின் செஞ்சுரி கலைத்துவிட்டார். சச்சின் கலைத்ததை இந்திய டீமின் தோல்வி கலைத்தது. இந்திய டீம் கலைத்ததை சேனல் 4 வீடியோ கலைத்தது. வீடியோ கலைத்ததை நேற்றைய பாகிஸ்தானை இந்தியா வெற்றி கொண்டது கலைத்தது. இவையெல்லாத்தையும் தெனம் ரெண்டு முதல் எட்டு மணி நேர பவர்கட்டினால் வியர்வை ஊற்றி எடுப்பதால் சனியன் பிடித்த உடைகளை  கலைத்து உட்கார்ந்தால் நன்றாக இருக்கும் போலருக்கு
@@@@@@@@@@@@@@@@@@@@@
ராமதாஸ் கலைஞர் தமிழுக்கு என்ன செய்துவிட்டார். தமிழர்களை குடிகாரர்களாகவும், சினிமா பித்து பிடித்து அலையத்தான் வைத்தாரே தவிர,  வேறென்னத்தை செய்தார் என்று பிடிபிடியென பிடித்துள்ளார். நியாயமாய் பார்த்தால் டாஸ்மாக் என்ற ஒன்றின் மூலம் அரசாங்கத்திற்கு வருமானம் சேர்க்க ஆரம்பித்தது ஜெ அரசுதான். திட்டுவதாயிருந்தால் டாக்டரு ஜெவைத்தான் திட்ட வேண்டும். என்ன தான் மாத்தி மாத்தி திட்டினாலு உருப்படியா நாலு வேலை பண்ணலைன்னா பருப்பு வேகாதுன்னு சொல்லுங்க் யாராச்சும். ரொம்ப மாசமா டாஸ்மாக்குக்கு பூட்டு போடப் போறேன்.. போடப்போறேன்னு சொல்லிட்டிருக்காரு. வாய்லதான் சொல்றாரே தவிர பூட்ட மாட்டேன்குறாரு. இன்னுமா பூட்டு கடை திறக்கலை?  எங்க நில ஆக்கிரமிப்பு கேஸ் வந்திருமோங்கிற பயமா?
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
சமீபகாலமாய் திரைத்துறை நண்பர்களில் சிலர் மீண்டும் என்னை நடிக்க வைத்து பார்க்க ஆசைப்பட்டதன் காரணமாய் நடித்திருக்கிறேன். சென்ற வாரம் சந்தமாமா  படத்தில் நடிக்க போனதும் அப்படித்தான். நாளைய இயக்குனர் நளன் இயக்கும் இந்த கனா காணும் காலங்கள் தொடரில் ஒரு சிறுபாத்திரத்தை செய்ய வேண்டுமென்ற அவரின் நட்பை ஏற்று செய்தேன்.
@@@@@@@@@@@@@@@@@@@
என் ட்வீட்டரிலிருந்து
எனக்கென்னவோ தேவர்களுக்கு இருக்கும் ஜாதி வெறிதான் இன்றைய பார்பனியத்தின் உச்சம் என்று தோன்றுகிறது.

பொய்யை விட அதை நிருபிக்க செய்யப்படும் பிரயத்தனங்கள் தான் அதிர்ச்சியூட்டுகிறது.



வாழ்க்கையை சுலபமாக ஆக்க வேண்டிக் கொள்வதைவிட கடுமையான பாதையை காட்டி அதை சமாளிக்கும் திறனை கொடுக்க வேண்டிக் கொள்ளலாம்


பெண்களை சந்தோஷமாய் வைத்துக் கொள்வது ஒன்றும் ராக்கெட் ரகசியமல்ல நேரம் ஒதுக்கி, கொஞ்சமே கொஞ்சம் அவர்களுக்கான கவனத்தைக் கொடுத்து காதலுடன் கொஞ்சம் ஞாபகசக்தியுடன் பேசினால் போதுமாம். என்ன பெண்களே அப்படியா?


இன்னொரு அடிக்குது குளீரூஊஊஊ ரெடியாவுது..


டீக்குடிப்பேன்னு சொன்னது வயசானதுனால வாய்குளறி தீக்குளிப்பேன்னு ஆயிருச்சோ.. #டவுட்டு


ஆன்லைனில் இடம் பார்த்து சீட் புக் செய்து படம் பார்க்க ஆர்வமாயிருக்கும் போது ஒரு காட்டெருமை முன்னால் உட்கார்ந்து மறைப்பது செம கொடுமை.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
ப்ளாஷ்பேக்
ரா.சங்கரன் இயக்கிய படம். தட்ஷிணாமூர்த்தியின் இசையில் எஸ்.பி.பியின் ஐஸ்க்ரீம் குரலில் கிட்டத்தட்ட ஒரு ஜுகல் பந்தியே நடத்தியிருப்பார். மிக அருமையான காம்போஷிஷன். என் அப்பா நடித்த ஒரு சில படங்களில் இதுவும் ஒன்று.
@@@@@@@@@@@@@@@@@@@@@@
எக்ஸ்பட்டேஷன் மீட்டர்
“அட்டக்கத்தி” சமீபத்தில் திரைத்துறையினருக்கான சிறப்புக் காட்சியில் பார்த்து அட என்று ஆச்சர்யப்பட வைத்தப் படம். தமிழில் இம்மாதிரியான ஒரு கல்ட் எண்டர்டெயினிங் படம் வந்து நாளாகிவிட்டது. அருமையான மெலடி பாடல்களும், இதன் மேக்கிங்கும் ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. அதனால் தான் சின்ன படமான் இப்படத்தை ஸ்டூடியோ க்ரீன் விலைக்கு வாங்கி வெளியிடப் போகிறது.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
குறும்படம்
நிதிலன் என்கிற இளைஞரின் குறும்படம். நாளைய இயக்குனர் 3 சீரியஸில் வந்த படம். ஒரு பெண் விபத்துக்குள்ளாகிறாள். அவளிடமிருந்து பணம் திருடப்படுகிறது. அவளின் மொபைல் திருடப்படுகிறது. இன்னொரு பக்கம் பணம் திருடியவனின் மொபைல் மிஸ்ஸாகிறது. அங்கிருந்த போலீஸ் இன்ஸ்பெக்டரின் மொபைல் திருடு போகிறது.. போலீஸ் ஒரு போட்டோவை வைத்து குற்றவாளியை தேடுகிறது. இப்படி இந்த விபத்து சம்பவத்தை வைத்தே எழுதப்பட்ட திரைக்கதையின் முடிச்சுகளை அவிழ்க்கும் போது புதிர் விலகுகிறது. சமீபத்தில் பார்த்த சிறந்த குறும்படங்கள் ஒன்றாய் இந்தப் படத்தை சொல்லலாம்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
அடல்ட் கார்னர்
மூன்று குழந்தைகளுடன் ஒரு பெண் டிபார்ட்மெண்டல் ஸ்டோரில் ஷாப்பிங் செய்து கொண்டிருக்க, மூன்றாவது குழந்தை சுட்டித்தனமாய் அமர்களம் செய்து கொண்டிருக்க, பொறுமையாய் எவ்வளவோ கண்டித்தும் அவனின் அமர்களம் அதிகரிக்க. ‘பேசாம உன்னை முன்னாடியே முழுங்கியிருக்கணும்” என்றாள்.
கேபிள் சங்கர்    

Post a Comment

22 comments:

Unknown said...

சூடான வட.. ரொம்ப நாளைக்கு பொறவு..

sarav said...

Cable ji nadikkum padangal matrum Serial gal vetri pera vazhthukal.... Unga father yaru ? avar naditha padam yenna ? suspense ?

UNMAIKAL said...

சானல் 4 தொலைக்காட்சி காண்பிக்காத முஸ்லீம்களுக்கு எதிரான புலிகளின் போர்க்குற்ற ஆதாரங்கள்.
இதுவரையிலும் ஊட‌க‌ங்க‌ளில் க‌ண்டிராத‌வை

அந்த போர்க்குற்றங்களை இங்கு ஆதாரத்துடன் முன்வைக்கிறோம்..!

சிங்களப் பேரினவாதத்தின் கொடுமைகளிலிருந்து விடுதலை பெறுதல் எனும் தூரநோக்கோடு ஸ்தாபிக்கப்பட்ட தமிழ் விடுதலைப் போராட்டங்களில் இறுதியாக நிலைத்து நின்றது தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் மட்டும்தான்.

ஆயினும், சிறுபான்மையினர் போராட்டமாக உருவெடுத்த விடுதலைப் புலிகள் அமைப்பு, பின்னர் மற்றொரு சிறுபான்மை இனமான முஸ்லிம் சமூகத்தின் மீது கொடுமைகளையும் படுகொலைகளையும் கட்டவிழ்த்து விட்டமையே அதன் அழிவுக்குக் காரணமாயமைந்தது.

விடுதலைப் புலிகள், முஸ்லிம் சமூகத்தை நசுக்க ஆரம்பிக்கும் வரைக்கும், அவர்களது போராட்டத்துக்கு தமது உடல், பொருளால் முஸ்லிம்கள் பெரும் உதவிகளையும் ஒத்துழைப்புகளையும் வழங்கி வந்துள்ளார்கள்.

ஆரம்ப கட்டங்களில், புலிகளின் முன்னணி வீரர்களாக நின்று போராடியவர்கள் முஸ்லிம்களே.

புலி உறுப்பினர்களை, இந்திய இராணுவத்திடமிருந்தும் இலங்கை இராணுவத்திடமிருந்தும் பாதுகாத்துக் காப்பாற்றி வந்தவர்களும் முஸ்லிம்களே.

புலிகள் வருமானமின்றி நாதியற்றுத் திரிந்த காலப்பகுதிகளில், தமது மாடுகள், வயல் விளைச்சல்கள், வர்த்தகப் பண்டங்கள், பொருளாதாரங்கள், ஆளணியினர் என பலவகையிலும் உதவியவர்கள் முஸ்லிம்களே.

எனினும், முஸ்லிம்களை தமது இனமொன்றாகக் கருதாது, அவர்களை இரண்டாந்தரமாகவே கருதி வந்த புலிகள், கிடைத்த சந்தர்ப்பங்களில் அவர்கள் மீது படுகொலைகளையும் கொடுமைகளையும் கட்டவிழ்த்து விட்ட போதே, முஸ்லிம்கள் விழித்துக் கொண்டனர்.

புலிகளுக்கான தமது ஆதரவையும் ஒத்துழைப்பையும் முழுமையாக வாபஸ் பெற்றனர்.

அதன்பின், முஸ்லிம்களின் பகிரங்க விரோதிகளாகிப் போன புலிகள், அம்முஸ்லிம்கள் மீது கட்டவிழ்த்து விட்ட கொடுமைகளும் வன்முறைகளும் மிகக் குரூரமானவை.

வடகிழக்கிலுள்ள முஸ்லிம்களிடமிருந்து கப்பம், ஆட்கடத்தல், கொள்ளை, திருட்டு என புலிகள் சேகரித்துள்ள பொருளாதாரத்தின் மொத்தத் தொகை, 550 கோடிகளையும் தாண்டுவதாக ஒரு கணிப்பீடுள்ளது.

அதேவேளை, வடக்கிலிருந்து புலிகளால் விரட்டியடிக்கப்பட்ட மக்களிடமிருந்து புலிகள் அபகரித்துக் கொண்ட பொருளாதாரத்தின் மொத்தத் தொகை 1135 கோடிகளையும் தாண்டும் என்பது சரிகாணப்பட்ட புள்ளிவிபரமாகும்.


எத்தனை குழந்தைகள் துப்பாக்கிகளுக்கும் கூறிய வாள்களுக்கும் இரையாகின.

எத்தனையோ ஒரு வயது , இரண்டு வயது , மூன்று வயது நான்கு வயது பிஞ்சுகள் சற்றும் இறக்கம் இன்றி படுகொலை செய்யப்பட்டனர்.

ஏன் பிறந்து ஒரு வாரம் கூட ஆகாத பிஞ்சுகள் சில மாதங்களே ஆன எத்தனை பிஞ்சுகள் பிச்சு ஏறியப்பட்டனர், நிறை மாத தாயின் கருவறை அறுக்கப்பட்டு சிசு வெளியில் எடுக்கப்பட்டு மரத்தில் அடித்து சிதறடிக்கப்பட்ட கோர சம்பவம் கூட ”சூரியதேவனின்” வரலாற்றில் பதிவாகியுள்ளது


இதில் மிக வேதனைக்குறிய விடையம்

இளம் கற்பிணி தாய் ஒருவரை வெட்டி கொன்றுவிட்டு அவளின் வயிற்றை கோடரியால் கொத்தி கிழித்து சிசுவை வெளியே எடுத்து அருகில் இருந்த பனை மரத்தில் அடித்து சிசுவின் தலையை சிதறடித்தார்கள் என்பதுதான்

சொடுக்கி >>>>> படுகொலைகளும் அட்டூழியங்களும் - போட்டோ, வீடியோ ஆதாரங்களுடன்... <<<<<< படியுங்கள். SEE PHOTOS , VIDEOS.


இங்கு கிளிக்செய்து >>>>> கொலைவெறி புலிகளின் இன‌ஒழிப்பு (படங்கள் = விடியோ) <<<< பார்வையிடவும்.

சொடுக்கி >>>>> சிசுக்களின் கோரப் படுகொலை <<<< படியுங்கள்.

CS. Mohan Kumar said...

Nadikar Cable very busy :))

Anonymous said...

//வியர்வை ஊற்றி எடுப்பதால் சனியன் பிடித்த உடைகளை கலைத்து உட்கார்ந்தால் நன்றாக இருக்கும் போலருக்கு //

அப்படியே அந்த கவர்ச்சிப்படத்த அடல்ட் கார்னர்ல அடுத்த வாரம் போட்டுருங்க.

புதுகை.அப்துல்லா said...

புலிகள் அப்படிச் செய்தது கண்டிக்கத்தக்கது. அதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் இப்போது ஐநாவில் அமெரிக்கா தீர்மானம் கொண்டு வந்திருப்பது இலங்கை அரசு விடுதலைப்புலிகளின் மேல் நிகழ்த்திய தாக்குதலுக்கு அல்ல.. அப்பாவி தமிழ் மக்களின் மேல் நிகழ்த்திய தாக்குதலுக்கு. எப்படி புலிகள் அப்பாவி இஸ்லாமிய மக்களைத் தாக்கினரோ அதேபோல சிங்கள அரசு அப்பாவி தமிழர்களைத் தாக்கியுள்ளது. விடுதலைப்புலிகள் அப்பாவி முஸ்லீம்களைத் தாக்கியதால் சிங்கள அரசு அப்பாவி தமிழ் மக்களைத் தாக்கியதை எதிர்க்க மாட்டேன் என்று சொல்வது முட்டாள்தனம். எந்த மதத்தில் இருந்தாலும் அப்பாவிகள் அப்பாவிகளே! நம் இனத்தை சேர்ந்த அப்பாவிகளை போர் தர்மம் மீறி கொன்று ஒழித்த இலங்கை அரசை ஆதரிப்பது மானுடவிரோதம்.

கேரளாக்காரன் said...

Thevar? Jaathi veri? You too cable

NAGARAJAN said...

தேவர் இனத்தவர் ஜாதி வெறியில் பார்ப்பனீயம் எப்படி வந்தது?

அதை ஏன் தேவரீயினம் எனக் கூறவில்லை?

தருமி said...

// என் அப்பா நடித்த ஒரு சில படங்களில் இதுவும் ஒன்று.//

ஆரு ...?

முத்தரசு said...

கொத்து பரோட்டா.............ம்

dude said...

அட்டகத்தி preview நானும் பார்த்தேன் ... low budget -இல் எடுக்கப்பட்ட ஒரு நல்ல படம் ....... http://vettitamilan.blogspot.in/2012/03/preview.html

வவ்வால் said...

கேபிள்,

தேவரின ஜாதியத்தின் வெளிப்பாடு தானே அரவான் ,அதை ஆராதனை செய்தீர்களே,ஆனாலும் உங்கள் கருத்து சரியே, வர்ணாசிரம அடுக்கில் மேலிருந்து கீழாக ஜாதியம் ஆதிக்கம் செலுத்துவதால் பார்ப்பனியத்தின் உச்சம் என்பது சரியே.

---
அடல்ட் ஜோக்,ராமதாசர் மஹாந்மியமெல்லாம் ரிபீட் ஆகிறது, சுய நகலாக்கமா :-))

----
மத்திய பட்ஜெட்டை சச்சினின் செஞ்சுரி கலைத்துவிட்டார்(விட்டது ). சச்சின் கலைத்ததை இந்திய டீமின் தோல்வி கலைத்தது. இந்திய டீம் கலைத்ததை சேனல் 4 வீடியோ கலைத்தது. வீடியோ கலைத்ததை நேற்றைய (ஆட்டத்தில்) பாகிஸ்தானை இந்தியா வெற்றி கொண்டது கலைத்தது. இவையெல்லாத்தையும் தெனம் ரெண்டு முதல் எட்டு மணி நேர பவர்கட்டினால் வியர்வை ஊற்றி எடுப்பதால் சனியன் பிடித்த உடைகளை கலைத்து உட்கார்ந்தால் நன்றாக இருக்கும் போலருக்கு...

ஹி..ஹி நான் முழுதும் கலையாமல் ஜட்டி ,பனியனை மட்டும் துறந்து கொஞ்சம் ஃப்ரியா விடு ..ஃப்ரியா விடு ...னு காத்து வாங்கிக்கொள்கிறேன் :-))

வவ்வால் said...

கேபிள்,

நந்தா நீ என் நிலா ... பாட்டு கேட்டு இருக்கேன் விடியோவா இப்போ தான் பார்க்கிறேன்,ஒலியில் கேட்டு ஒரு நினைப்பில் இருப்போம் அதில் பெரும்பாலும் மண் அள்ளிப்போட்டுவிடுகின்றன பழைய பாடல்கள் :-))

இது போல பல சூப்பர் ஹிட் பாடல்கள் விஜயகுமார், தேங்காய்,ஜெய்கணேஷ் என நாம எதிர்ப்பார்க்காதவர்கள் நடிப்பில் இருக்கு.

நந்தா என் நிலா படத்தை இயக்கியது ஏ.ஜெகந்நாதன் என போட்டு இருக்கு, நீங்கள் ரா.சங்கரன்னு போட்டு இருக்கிங்க,ஹி..ஹி உங்க அப்பா பேரை சொல்லிட்டிங்க நினைக்கிறேன், அவங்க தான் நடிச்சு இருக்காங்களா, திருட்டுவிசிடி யில் படம் இருக்கு பார்த்து கண்டுப்பிடிச்சுடுறேன் :-))

ஹாலிவுட்ரசிகன் said...

//சமீபத்தில் பார்த்த சிறந்த குறும்படங்கள் ஒன்றாய் இந்தப் படத்தை சொல்லலாம்.//

நான் நினைக்கிறேன், நாளைய இயக்குனர் சீசன் 3யின் முதல் எபிசோடில் போட்டாங்கன்னு. சுப்பர்ப் திரைக்கதை. இரண்டு முறை பார்த்தபின் தான் மரமண்டைக்கு புரிந்தது.

Anonymous said...

///டாக்டரு ஜெவைத்தான் திட்ட வேண்டும்.///

இப்படி சொல்லி டாக்டரை வம்பில மாட்டி விடாதீங்க... கலைஞரை ஈஸியா திட்டிரலாம்... ஆனா அம்மாவை திட்டுறது அவ்வளவு ஈஸியா என்ன...

Kannan said...

இந்த பதிவை வாசிப்பவர்கள் தயவு செய்து இந்த facebook page இல் உங்களது கருத்துக்களை பதிவு செய்யுங்கள் சனல் 4 வீடியோவுக்கு எதிராக சிங்கள இனவாதிகளால் இது செய்யப்படுகிறது

http://www.facebook.com/Channel4.Fake.Video

ஜி.ராஜ்மோகன் said...

"மத்திய பட்ஜெட்டை சச்சினின் செஞ்சுரி கலைத்துவிட்டார். சச்சின் கலைத்ததை இந்திய டீமின் தோல்வி கலைத்தது. இந்திய டீம் கலைத்ததை சேனல் 4 வீடியோ கலைத்தது."

அது சரி கூடங்குளம் , முல்லை பெரியார் பிரச்சனைகள் என்ன ஆச்சு ! நாமெல்லாம் அறிஞர் அண்ணாவோட வாரிசு ஆச்சே ! மறப்போம் மன்னிப்போம் .

bandhu said...

//நியாயமாய் பார்த்தால் டாஸ்மாக் என்ற ஒன்றின் மூலம் அரசாங்கத்திற்கு வருமானம் சேர்க்க ஆரம்பித்தது ஜெ அரசுதான். திட்டுவதாயிருந்தால் டாக்டரு ஜெவைத்தான் திட்ட வேண்டும். //
மதுவிலக்கை எடுத்ததே கருணாநிதி தானே.. சரியாகத்தான் திட்டியிருக்கிறார்!

Anonymous said...

தமிழர்களுக்காக ஈழம் என்று போராடியவர்கள்,முஸ்லிம் தமிழர்களையும் மலையக தமிழர்களையும் ஏன் இரண்டாம் தர மக்களாக கருதினார்கள் என்பதை பற்றி யாரேனும் விளக்க முடியுமா?

அப்துல்லா சார்,புலிகள் இத்தனை கொடுமைகள் புரிந்த போது அதனை கண்டித்து புலம் பெயர்ந்த தமிழர்கள் குரல் கொடுத்திருந்தால் ஒரு வேலை 2009 -ல் நிகழ்ந்த கொடுமைகள் நடக்காமல் போயிருந்திருக்கலாம்

As Niemoller very famously said "Then they came for me and there was no one left to speak out for me"

R. Jagannathan said...

நந்தா என் நிலா பாடலை என் சகோதரர்களுடன் பகிர்ந்துகொண்டேன். பாடல் அழகு, நடிகர் அழகு, நடிகை அழகு, ஆஹா சுகம். சுஹாசினியின் ஆதங்கம் சரியோ என்றுதான் தோன்றுகிறது! - ஜெ.

raja said...

அய்யா நானும் ஒரு முஸ்லிம் தான்... முஸ்லிம் மக்களை விடுதலி புலிகள் கொன்றார்கள்... சரி... அதற்காக...அப்பாவி தமிழ் மக்களை...இலங்கை ராணுவம் கொள்வதை பார்த்து கொண்டு இருக்க முடியுமா....

அப்போ ஈராக்ல்... சதாம் ஹுச்சீன் கொன்றார்... இப்போ அமெரிக்க கொல்லுது... உயிர் போவது அப்பாவி மக்களுக்கு....

எல்லாரும் நல்லா இருக்க எல்லாம் வல்ல அல்லா விடம்... துவா கேட்கிறேன்

IlayaDhasan said...

"அண்ணா நூலகத்தை மருத்துவமனை ஆக்கினால் நான் தீக்குளிப்பேன் என்று சொன்னதாக வேண்டுமென்றே புறம்பேசும் ஒரு கூட்டம் ஊதிப் பெரிதாக்கி வருகிறது. வயதுக்கு மரியாதை கொடுக்கத் தெரியாத மூடர்களுடன் அரசியல் நடத்த வேண்டிய துர்பாக்கிய நிலையை எண்ணி எண்ணி என் உள்ளம் குமுறுகிறது. அறிஞர் அண்ணா வழிவந்த அன்புத் தம்பி என்னைப் பார்த்து ஒரு வீணர் கூட்டம் மனிதாபிமானமே இல்லாமல் எப்போது எப்போது என்று கேட்பது முறையா?

அண்ணா நூலக வளாகத்தில் வழக்கமாக நான் காப்பி குடிப்பேன்... அதை மருத்துவமனை ஆக்கினால் என்னால் முடியாது. எனவே நான் டீக் குடிப்பேன் என்று சொன்னதை... இந்த ஈனர்கள் என்னவெல்லாம் பிதற்றி திரித்துக் கூறுகிறார்கள்..? பெரியாரின் வழிவந்த எனக்கு தீக்குளித்தல் பெரியாரின் கொள்கைக்கு எதிரானது என்பது தெரியாதா? நான் அப்படிக் கூறுவேனா? கழகக் கண்மணிகளே கண்டுகொள்ளுங்கள் இந்தப் பொய்யர்களை!
Email PrintDelicious Digg Facebook Twitter 11 கருத்துக்கள் கருத்துகள் அவருக்கு நாக்கு தவறிட்டு போலிருக்கு!!
By Kavinmozhi
3/19/2012 1:25:00 PM தீ குளிப்பேன் என்று சொன்னது உணமைதான் என் தலைவனுக்கு மறதி அதிகம் .
By ramamoorthy
3/19/2012 10:22:00 AM இவர் தீகுளித்தால், தீ அணைந்துவிடும். தீ அசுத்தமாகிவிடும்..
By ப
3/19/2012 8:53:00 AM ஆண்டு, அனுபவித்தாகி விட்டது, டீ குடித்தாலென்ன? தீக்குளிதாலென்ன? வாயை வச்சுகிட்டு, பெருசு சும்மா இருந்தாலென்ன?
By பி.டி.முருகன்
3/18/2012 12:58:00 PM கருணாநிதி உண்மையிலேயே தீக்குளிப்பார்; தமிழகத்திற்கு விடிவுகாலம் பிறக்கும். கலங்காதீர் தமிழர்களே.
By கு.கா.ராஜா
3/18/2012 12:21:00 PM இன்றோ நாளையோ என்றிருக்கும் முதியவர் தீ குளித்தால் ஒன்றும் நடக்கப்போவதில்லை .
By Arivu
3/18/2012 10:45:00 AM வயசு ஆக ஆக நல்ல புத்தி வரணும் இந்த மனிசனுக்கு ஏன் இப்பிடி புத்தி போகுது ..இம் ...இந்த ஆள என்ன பண்ணலாம் ?பேசாம கைல மஞ்ச பைய குடுத்து மறுபடியும் கள்ள ட்ரைன் எத்தி விட்ருவோமா?
By muthuramalingam
3/18/2012 8:40:00 AM ஸலாம் குத்புதீன் பாய் கரீட்ட சொன்னேபா, பத்திரிக்கை தரம் தாலுதுன்னு! இந்த தமில் "ஈன" தலீவன பத்தி நூஸ் போட்டாலே தரம் தானா பூடும் நைனா. லைப்ரரிய மாத்தினா மொத ஆளா இம்மேடியட்டா டீ குடிப்பாராம்... யெலங்க பிரச்சனைனா 3 மணி நேரம் உண்ணாவெரதம் வெச்சு ரோசிப்பாராம். வாத்தியாரே மொதல்ல பெட்ரோலுக்கு ஏற்பாடு செய்பா!!
By சைதை அஜீஸ்
3/17/2012 6:54:00 PM என்னோமோ முத்துக்குளிக்க வாறீகளா என்பதுபோல் இருக்கிறது...
By kaipulla
3/17/2012 6:22:00 PM "ஞாபகம் வருதே ஞாபகம் வருதே" அய்யோ கொல்றாங்களே தான்.
By ramachandhirasaekaran.
3/17/2012 5:14:00 PM ahha ennamai samalikkirar?
By K Vijayaraghavan
3/17/2012 12:17:00 PM உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

(Press Ctrl+g or click this to toggle between English and Tamil)

இ-மெயில் * சரியான மின்னஞ்சலைக் கொடுக்கவும் சரியான மின்னஞ்சலைக் கொடுக்கவும் பெயர் * சரிபார்ப்பு எண் * மேற்காணும் எண்ணை பதிவு செய்க *
குறிப்பு: வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் ஆசிரியர் குழுவின் பார்வைக்கு பிறகே வெளியிடப்படும். வாசகர்களின் கருத்துகள் தினமணியின் கருத்துகள் அல்ல. வாசகரின் கருத்துக்கான முழுப் பொறுப்பும் அவரையே சாரும். நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதலை, கட்டுரைகளுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே இடவேண்டாம். வாசகர்களின் கருத்துச் சுதந்திரத்துக்கு வாய்ப்பளிக்கும் இந்தப் பகுதியைத் தவறாக பயன்படுத்த வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறோம். நாகரீகமற்ற கருத்துகள் குறித்து எங்கள் கவனத்துக்கு கொண்டுவந்தால், உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
"
- From Dinamani Fotoons