திருவல்லிக்கேணியில் மெஸ்களுக்கு பஞச்மில்லை. தெருவுக்கும் ரெண்டு மூன்று இருக்குமென்று எல்லோருக்கும் தெரியும். ஆனால் எல்லா மெஸ்களும் பிரபலமாக இருப்பதில்லை. தொடர்ந்து இயங்குவதும் இல்லை. ஆனால் இந்த மெஸ்சைப் பற்றி திருவல்லிக்கேணி நண்பர்களிடம் எப்போது பேசினாலும் சொல்லப்படாமல் இருந்தத்தில்லை.
திருவல்லிக்கேணி பெரிய தெருவில் ஒரு சின்ன பழைய வீட்டில் அமைந்திருக்கிறது இந்த மெஸ்.காலை மாலை டிபன் மட்டுமே கிடைக்கிறது. ஒரு காலத்தில் மதியம் சாப்பாடு போட்டுக் கொண்டிருந்தார்கள் என்று சொன்னார் நண்பர் பாலா. சட்டென கண்டுபிடிக்க முடியாத வரிசை கடைகளுக்கு நடுவில் தான் அமைந்திருக்கிறது அம்பாள் மெஸ்.
வழக்கமான இட்லி, தோசையுடன், கம்பு தோசை, கேழ்வரகு தோசை, சப்பாத்தி,காய்கறி சாதம், கொத்து மல்லி சாதம் ஆகியவைகளும் இரவு நேரத்தில் கிடைக்கிறது. இட்லியுடன் தேங்காய் மற்றும் வெங்காய காரச்சட்னி, சாம்பார். மல்லிகைப்பூப் போல இருந்தது இட்லி. கார சட்னியில் ஒரு புரட்டு புரட்டி ஒரு விள்ளல். இன்னொரு விள்ளல் தேங்காய் சட்னியுடன், அப்புறம் சாம்பாருடன் என்று ஆறு இட்லி உள்ளே போனதே தெரியவில்லை. டிவைன்..
வழக்கமான இட்லி, தோசையுடன், கம்பு தோசை, கேழ்வரகு தோசை, சப்பாத்தி,காய்கறி சாதம், கொத்து மல்லி சாதம் ஆகியவைகளும் இரவு நேரத்தில் கிடைக்கிறது. இட்லியுடன் தேங்காய் மற்றும் வெங்காய காரச்சட்னி, சாம்பார். மல்லிகைப்பூப் போல இருந்தது இட்லி. கார சட்னியில் ஒரு புரட்டு புரட்டி ஒரு விள்ளல். இன்னொரு விள்ளல் தேங்காய் சட்னியுடன், அப்புறம் சாம்பாருடன் என்று ஆறு இட்லி உள்ளே போனதே தெரியவில்லை. டிவைன்..
அடுத்ததாய் ஏதாவது ஸ்பெஷல் அயிட்டம் என்று கேட்ட போது ராஜ்மா மசாலா தோசை என்றார்கள். சரி என்று நானும் கே.ஆர்.பியும், ஆளூக்கொன்றை ஆர்டர் செய்தோம். சுடச் சுட வந்தது ராஜ்மா மசாலா. வழக்கமாய் ராஜ்மா எனக்கு அவ்வளவாக பிடிக்காது. அதையும் மீறி படு சுவையாய் இருந்தது அதன் மசாலா காரணமாய். அதன் பிறகு சாப்பிட வயிற்றில் இடமில்லாததால் இன்னொரு நாள் வருவோம் என்று கிளம்பினோம். பில் கட்டும் போது இன்னும் கொஞ்சம் சாப்பிட்டிருக்கலாமோ என்று யோசனை வந்தது. அதற்கு காரணம் விலையும், வயிறு திம்மென இல்லாது போனதும் தான் காரணம். இரண்டு பேருக்கு ஏழு இட்லி, இரண்டு ராஜ்மா மசாலா தோசைக்கு வெறும் 84 ரூபாய் தான் மக்களே. முழுக்க முழுக்க வெஜிட்டேரியன் ஐயிட்டங்கள் தான் என்றாலும் முட்டை மட்டும் ஆம்லெட்டாக போடுகிறார்கள். முட்டை வெஜிட்டேரியன் தானே?
கேபிள் சங்கர்
Post a Comment
19 comments:
Hmmmm! Vadai enakku thaane
Enakkum aaasaiyaa thaan irukku but sri lankala oru Ulunthu Vadai Ista pattu saapida ponaa oru vadai 45/= vilaiya ketta udane pasiyum paranthu poidum ;((
Regards
M.Gazzaly
(greenhathacker.blogspot.coM)
கேபிள்,
ஒரு முறை சென்னையில் இரண்டு நாட்களாவது தங்க வேண்டும். எட்டு வேளையும் இந்த மாதிரி உணவகங்களுக்கு உங்களுடன் சென்று உணவருந்த வேண்டும்.
திருவல்லிக்கேணியில் இருந்த போது நானும் அங்க போய் இருக்கேன். ரொம்ப நல்ல மெஸ்.
நானும் ஆஸ்கர் விருதும்
// உங்களுடைய பதிவுகள் பலரை சென்றடைய வேண்டுமா? உங்கள் பதிவுகளை சுலபமாக கூகிள்சிறி இணையத்தளத்தில் இணைக்கலாம். உங்கள் பதிவின் சுருக்கத்தையும் அதன் இணைப்பையும் rss4sk.googlesri@blogger.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யுங்கள். மேலதிக தகவல்களுக்கு கீழுள்ள முகவரிக்கு செல்லுங்கள் http://www.googlesri.com/2012/02/are-you-want-to-writer.html//
கேபிள்க்கேவா...??? இது ரொம்ப ஓவர்.
அடுத்த முறை டிரை பன்ரேன்..ஏண்ணே அந்த தி.நகர்ல ரங்கநாதன் தெருவுக்கு எதிரில் இருக்கும் ரோட்டுல ஒரு அசைவ மெஸ் இருந்துது இப்போ இருக்கோ..கொஞ்சம் பாத்து சொல்லுங்க!
Dear Shankar,
Ambal mess is my one of the favourite mess.
Until 2008 i think they serving lunch! (i eaten lunch and dinner several days) after that i dont know what happen?
Also one more mess is there "Kasi Vinayagam" try to eat there and tell me your experience.
JP
jp.. already wrote about kasi vinayagam. and now they stopped lunch and dinner..meals
vaanga amarabarathi.. povom.
vikkiulakam neenga renuga messai solreengala.. athunna irukku..
பெயர் ஞாபகம் இல்லீங்க இந்த முறை ஊருக்கு வரும்போது திங்கனும் ஹிஹி அதுக்குத்தான் கேட்டேன்!
//டிவைன்//
எல்லா சாப்பாட்டு கடை பதிவுகளிலும் இந்த சொல் டெம்பிளேட் ஆக வந்து விடுகிறேதே! :)
இப்போது வரும் கோழி முட்டைகள் சாப்பிட மட்டுமே பயன் படும் லெக் ஹார்ன் வகையை சேர்ந்தவை.. கோழிகள் அதன் மேல் மாமாங்க கணக்கில் உட்கார்ந்தாலும், அவைகளுக்கு குண்டி வலிக்குமே ஒழிய முட்டை பொரிக்க வாய்ப்பு இல்லை..
EGG EATING VEGETARIAN, EGGETARIAN.......
ellam nalla irukku ana kadaisila muttai podranga nnu soliting athanal ennnai pondra vegeterians avoid panna vendiya mess agi vittathu !
உங்களுக்கு நேரம் இருந்தால் நம்ம இடத்திற்கு வாங்க சரித்திரத்தில் மறைக்கபட்ட ஒரு மெஸ் நான் காட்டுகிறேன் .
யூத்,
thanks for the post.
ஐந்து வருடங்கள் தினமும் சாப்பிட்ட மெஸ். பழைய நினைவுகளை கிளரிய பதிவு. நான் சாப்பிடும்போது பகலில் சாப்பாடுடன் முட்டை மசாலா போடுவார்கள்.
ஓஹோ என்று இல்லாவிட்டாலும் good for purse and body.
அவங்க போட்ட மதிய சோறு அற்புதமா இருக்கும். நான் தி.கேணியில் இருந்தவரை மதிய சோறு அங்க தான். வீட்டு சோறுமாதிரியே இருக்கும். முட்டைய அவிச்சு கொஞ்சம் முட்டை குழம்போட தனி கிண்ணத்தில் தருவாங்க பாருங்க அதுக்கும் அவங்க ரசம், தயிருக்கும் நான் அடிமை.
பாத்ததும் பல ஊர் மெஸ்கள் ஞாபகம் வருது!
ஒருநாள் போவோம்!
Billu Eppadinga Pottaruu... Paperalla add pannitta irupparu..2000 thlla saptathunga...suppera irukkum
பாவம் கே.ஆர்.பி, ஒரே ஒரு இட்லி தான் சாப்பிட்டு இருக்கார், இல்லை கேபிளார், அவர் இலையில் இருந்து ரெண்டு இட்லியா பிடுங்கிடிங்களா?
Post a Comment