Thottal Thodarum

Mar 7, 2012

சாப்பாட்டுக்கடை – வைரமாளிகை

2012-02-27 22.44.26 ரெண்டு வருடங்களுக்கு முன் மணிஜி, ரமேஷ்வைத்யாவுடன் குற்றாலத்திற்கு போயிருந்த வேளையில் நல்ல சாப்பாட்டுக்கடையை தேடிய போது எல்லோரும் சொன்னது, வைரமாளிகை கடையைப் பற்றித்தான். பரோட்டாவுக்கும், சிக்கனுக்கும் செங்கோட்டை பார்டர் கடைதான் பெஸ்ட் என்று பெயர் இருந்தாலும், திருநெல்வேலியிலேயே அந்த தரத்துக்கு ஒரு பரோட்டா கடை இருக்கிறது என்ற போது டேஸ்ட் செய்யாமல் வருவது சரியில்லை என்று தோன்றியதால் ஒரு விஸிட் அடித்தோம். அவர்கள் அங்கு கொடுத்த பரோட்டாவும், தேங்காய் எண்ணையில் பொறித்த நாட்டுக் கோழியையும் இன்று நினைத்தாலும், எச்சிலூறும் அப்படி ஒரு சுவை. அதன் பிறகு யார் திருநெல்வேலிக்கு போனாலும் திருநெல்வேலிக்காரனுகே அல்வா கடையை சொல்லியது போல, அந்தக்கடையை பற்றிச் சொல்லாமல் விட்டத்தில்லை.


2012-02-27 21.49.14
சமீபத்தில் நடிகர் மேஜர் சுந்தர்ராஜனின் மகன் கெளதமும் அவர்களது நண்பர்களும் சேர்ந்து ஒரு புது ரெஸ்ட்டாரண்டை துவங்கியிருக்கிறார்கள் என்றதன் பேரில் சுந்தர்.சியும், பத்ரியும் போயிருக்கிறார்கள். போனவுடன் என் ஞாபகம் வந்து என்னை போனில் அழைத்து உடன் போய் சாப்பிட்டு பார்த்துவிடு அட்டகாசம் என்றார் பத்ரி. அவர்கள் சொன்னதுமே தெரிந்துவிட்டது திருநெல்வேலி வைரமாளிகை தானென்று. அடுத்த நாளே கெளதமுக்கு போன் செய்து விட்டு போய் விட்டோம்.
2012-02-27 22.29.56
மிக அமைதியாக அமைந்திருந்தது அந்த உணவகம். உள்நுழைந்ததுமே தேங்காய் எண்ணெய் வாசனை நம்மை உள்ளிழுக்க,  கெளதமின் நண்பர் எங்களை வரவேற்றார். வழக்கம் போல பரோட்டாவும் சிக்கனும் ஆர்டர் செய்ய, கூடவே சால்னாவுடன் வந்தது. அதே திருநெல்வேலி வைர மாளிகை பரோட்டா. அதே சாப்ட்னெஸ். சால்னாவை அதில் ஊற்றி ஊற வைத்து, எவ்வளவு பிய்க்கிறோமோ அதே அளவு மட்டும் ஊறிய பரோட்டாவிலிருந்து விள்ளலாய் வர, நன்றாய் உள்வரை ஊறிய மசாலாவுடன், தேங்காய் எண்ணையில் நன்கு டீப் ஃப்ரை செய்யப்பட்ட, நாட்டுக்கோழி துண்டை ஒரு விள்ளல் சேர்த்துக் கொண்டு,  வாயில் போட்டால் கரைகிறது. வாவ்…. அருமை.. அருமை.. நிஜமாகவே டிவைனை உணரும் நொடிகள் அவை.
2012-02-27 22.47.28
மற்ற ஊர்களில் பிரபலமாய் இருக்கும் பல உணவகங்கள் இங்கே சென்னையில் ஆரம்பித்தாலும், அவ்வூரில் சாப்பிட்ட சுவை இங்கே கிடைப்பதில்லை ஆனால் இவர்களின் பரோட்டா, மற்றும் சால்னாவின் சுவை கொஞ்சமும் மாறவில்லையே எப்படி என்று கேட்டபோது, சென்னை தண்ணீரில் பரோட்டா போட்ட போது அரை மணிநேரத்தில் பரோட்டா பறக்கும் தட்டு போலானதால், மினரல் வாட்டர் எல்லாம் கூட முயற்சி செய்து பார்த்தும் அதே சுவை வராததால், சுவைக்காக, தினமும் ரயிலில் தாமிரபரணி தண்ணீரை எடுத்து வந்து சமைக்கிறார்கள். என்ன இருந்தாலும் ஊர் தண்ணி ஊர்த்தண்ணிதான் என்பதை இவர்களின் சுவை நிருபித்தது.

இவர்களின் சால்னாவில் ஒரு ஸ்பெஷாலிட்டி என்னவென்றால் கொஞ்சம் கூட திகட்டவே திகட்டாது. ஆனால் சுவையும் வாசனையும், ம்ஹும் ஆளையே தூக்குகிறது. ஆச்சர்யம் என்னவென்றால் இந்த சால்னா முழுக்க, முழுக்க, வெஜிட்டேரியன். சாப்பிட்டால் நம்பவே மாட்டீர்கள். ஸோ.. வெஜிட்டேரியன் ஆட்கள், முட்டை மட்டும் சாப்பிடும் சைவர்கள் கூட ஒரு கை பார்க்கலாம்.
2012-02-27 21.50.07
கூடவே இவர்களது ஸ்பெஷல் கலக்கி, ஒரு முட்டையை ஊற்றி தக்குணூண்டாய் சில கையேந்தி பவன்களிலும் ஓட்டல்களிலும் தருவார்களே அப்படியிருக்காது. நல்ல வெங்காயம், பெப்பர், மசாலாவுடன் கிரேவியாய் ஸ்பூனில் வைத்து சாப்பிடும்படியான கலக்கி. சுவை கலக்கியெடுத்துவிடும்.  அது மட்டுமில்லாமல் முட்டை லாபா, என்று முட்டையை நடுவில் வைத்து ஸ்டப்டு பரோட்டாவும் செமையாய் இருக்கிறது. அருமையான சுவை, மிக அதிகமில்லாத விலை என்று பர்ஸுக்கும் பங்கமில்லாத வகையில் சென்னையில் ஒரு ஸ்பெசிபிக் பரோட்டா ஸ்பெஷல் கடை என்றால் இன்றளவில் வைரமாளிகை தான்.  மூன்று பேருக்கு நான்கு பரோட்டா, ஐந்து பீஸ் சிக்கன், ரெண்டு முட்டை லாபா, மூணு கலக்கி எல்லாம் சேர்த்து எட்டு நூற்றிச் சில்லறைதான் வந்தது.  கீழே உள்ள மிச்சமீதி வைக்காத படத்தைப் பார்த்தாலே தெரியும் என்னா டேஸ்டு என்று..
2012-02-27 22.29.29
 சோளா ஹோட்டலைத் தாண்டி இடது புறமாக திரும்பினால் கஸ்தூரி ரங்கா சாலையின் ஆரம்பத்தில் ரஷ்யன் கல்சுரல் சென்டரின் உள்ளே அமைந்துள்ளது இந்த வைரமாளிகை உணவகம். மாலையில் மட்டுமே திறக்கப்படும் இந்த உணவம் இந்திய ரஷ்ய கலாச்சார பரிவர்தனையின் கீழ் நம் நாட்டு உணவுகளை அறிமுகப்படுத்தும் விதமாய் இக்கலாசார மையத்தினுள் வைரமாளிகையை அறிமுகப்படுத்தியிருக்கிறார்கள். மேலும் தென்னிந்திய பரோட்டா வகைகளை விரைவில் அறிமுகப்படுத்தப் போவதாய் சொன்னார்கள். நல்ல காற்றோட்டமான அருமையான ஆம்பியன்ஸ்,இனிமையான உபசரிப்பு,  அற்புதமான சுவையான உணவு உங்களுக்காக சென்னையில்.. திருநெல்வேலி புகழ் வைர மாளிகை பரோட்டா, நாட்டுக்கோழி... ஹேவ் எ ட்ரை. யு வில் ஃபாலின் லவ்.
கேபிள் சங்கர்

Post a Comment

15 comments:

கோவை நேரம் said...

டிவைன்..,.பதிவை படிக்கும் போதே எச்சில் ஊறுதே...

rajamelaiyur said...

சாப்பிடனும்னு தூண்டும் பதிவு ..

rajamelaiyur said...

இன்று

துப்பாக்கி Vs பில்லா 2

தமிழ் பையன் said...

கொத்து பரோட்டா கேட்டா இதைக் குடுத்துட்டீங்க.. சைவர்களுக்கும் சாப்பாடு இருக்குங்கற தகவலுக்கு நன்றி.

Rasigan said...

எங்கள மாதிரி பெங்களூர்ல காஞ்சி இருக்குறவங்க நாக்குல எச்சி வர மாதிரி இப்படி எழுதின நாங்க என்ன பண்றது... இப்படி ரசிச்சு எழுத உங்களா மட்டும் தான் முடியும்...keep it up...

அமர பாரதி said...

கேபிள்,
வழக்கம் போல அருமை. தேங்காய் எண்ணெயில் பொரித்த கோழி கூடப் பரவாயில்லை, ஆனால் பரோட்டா சாப்பிடுவதை தவிருங்கள் அல்லது குறையுங்கள். ஒரு பரோட்டா குறைந்த பட்சம் 500 முதல் 750 கலோரிகள் இருக்கும். மேலும் அதில் கோதுமை போல நார்ச் சத்துக்கள் எதுவும் இல்லை. ஒரே ஒரு பரோட்டா அதுவும் குழம்போ சைட் டிஷ்களோ எதுவுமில்லாமலே ஒரு நேர உணவுக்குப் போதுமானது. மேலும் அதில் இருக்கும் கொழுப்பு கலோரிகளை எரிக்க உத்தேசமாக 10 கிலோ மீட்டர் ஓடவோ நடக்கவோ வேண்டும் (ஒரு பரோட்டா எந்த குழம்பு மற்றும் சைட் டிஷ்கள் இல்லாமல்).

Rathnavel Natarajan said...

வாழ்த்துகள்.

Avargal Unmaigal said...

இன்று நான் பார்த்த பதிவெல்லாம் உணவைபற்றிவையாகத்தான் இருக்கிறது. மகளிர் தினம் என்பதாலா அல்லது பவர் கட்டினால் டிவி பார்க்க முடியாமல் இப்படி எல்லோரும் சமைக்க ஆரம்பித்துவிட்டார்களா என்பது தெரியவில்லை. ஆனால் நீங்கள் எல்லோரும் சேர்ந்து எங்களைப் போல தொலைதூர நாட்டில் உள்ளவர்களை இப்படி வதைகின்றீர்கள். எனக்கு பிடித்த உண்வை சாப்பிட்டது இல்லாமல் அதை படமாக எடுத்து போட்ட உங்களுக்கு எந்து கண்டனம்

Unknown said...

hello sir ,i am vasanth. i tried this ,super..! i added this place to my favorite list.thanks .

Anonymous said...

http://www.deccanchronicle.com/channels/cities/kochi/time-we-bid-white-flour-maida-bye-068

K.S.Muthubalakrishnan said...

Food is not that much good in vairamaligai(TVL) cant eat daily ,more oil in parota salna chicken. try to avoid this stuff .

Anonymous said...

Well said K.S.Muthubalakrishnan, and Maida has been banned in many countries and still these mediocre people trying to label with their place. North Indian Lachha paratha is made up of wheat. We should ignore Maida made food items. Please warn people.

Eddhi said...

Cable JI,

Just wanted to share a research on water.

I have taken a water from Combatore to thanjavur to taste the Siruvani.

My wonder, the taste completely changed in a 8 hours time. I have tried the same for more than 5 times. All the results are same.

So the final findings is, water taste is related to environment, i mean temprature and humidity.

So check their statement on Thamirabarani water from Tirunelveli.

Please share any of your experience.

Eddhi

Leo Suresh said...

Cableji This restaurant is closed.நேற்று குடும்பத்தோடு சென்று ஏமாந்து திரும்பினேன்
லியோ சுரேஷ்

saro said...

நானும்.......நண்பர்களுடன் சென்று ஏமாந்தேன்..