அலிபாபா, கற்றது களவுக்கு பிறகு கிருஷ்ணா மிகவும் எதிர்பார்த்திருந்த படம். சூப்பர் ஸ்டாரின் படப்பெயரை மீட்டெடுத்து வைத்திருக்கிறார்கள். மலை உச்சியிலிருந்து தற்கொலை செய்து கொள்ளும் பிணங்களை மீட்கும், நான்கு பேரின் வாழ்க்கையை பற்றிய கதை என்பதால் கொஞ்சம் ஆர்வமாய்த்தான் இருந்தது. அந்த ஆர்வத்தை தக்க வைத்ததா என்பதை பார்ப்போம்.
கிருஷ்ணா, கருணாஸ், தம்பி ராமையா, மற்றும் இன்னொரு தாடிகார இளைஞர் நால்வரும் பிணம் மீட்கும் வேலை செய்பவர்கள். கிருஷ்ணாவிற்கு சாவைப் பற்றியோ சாவின் பாதிப்பு பற்றியோ எந்தவிதமான கவலையும் இல்லாத ஒரு அனாதை. அவன் வாழ்க்கையில் ஒரு காதல் வருகிறது. அக்காதல் ஜெயித்து திருமணமும் செய்து கொண்டு சந்தோஷமாய் இருக்கும் வேளையில் வில்லன் ஒருவனால் ஏற்பட்ட ப்ரச்சனை சாவு என்றால் என்ன என்பதை, அதன் வலியை அவனுக்கு உணர்த்துகிறது? அவன் என்ன செய்கிறான் என்பதுதான் கதை.நல்ல வித்யாசமான படமாய் இருப்பதற்கான அத்தனை அறிகுறிகளையும் கொண்டிருக்கத்தான் செய்கிறது இப்படத்தின் கதை.
கிருஷ்ணா முகத்தில் குளிர் பிரதேச கருத்த முகத்தை கொண்டு வருவதற்காக ஸ்பெஷல் மெனகெடல் செய்ததாய் செய்தி. ஆனால் மிகவும் செயற்கையான உதட்டு வெளுப்பு ஏதோ ஏலியன் பட ஹீரோ போல தோன்றுகிறார். அவருடனே இருக்கும் மற்ற நடிகர்கள் எல்லாம் பளிச்சென, ஏன் கருணாஸ் கூட மிக இயல்பாய் இருக்கும் போது இவருக்கும் மட்டுமேயான அந்த ஸ்பெஷல் மென்ஷன் ஏன் என்று புரியவில்லை. நடிப்பைப் பற்றி சொல்ல வேண்டுமானால் இன்னும் நிறைய தூரம் கடக்க வேண்டுமென்று மட்டுமே சொல்ல் முடியும்.
படத்தில் பெரும்பாலான நேரங்களில் பேசிக் கொண்டேயிருப்பவர்கள் கருணாஸும், தம்பி ராமையாவும்தான். மிகச் சில இடங்களில் கொஞ்சமே கொஞ்சம் நகைச்சுவை இருக்கிறது. மற்ற படி நத்திங் ஸ்பெஷல். ஜெயப்பிரகாஷ் வழக்கம் போல. சுஜிபாலா குண்டடித்திருக்கிறார்.
பிந்து மாதவியின் சோக கண்கள் ஸோ.. அட்ராக்டிவ். அந்த மென் சோக கண்களை வைத்துக் கொண்டு சிரிக்கும் போது நம்மை கவர்கிறார். ஆனால் அழுத்தமில்லாத ஒரு கேரக்டரால் மிக முக்கியமான கேரக்டராய் இருந்தாலும் மனதில் பதிய மறுக்கிறார்.
ஒளிப்பதிவு சத்யா. இரவு நேர சண்டைக்காட்சிகளிலும், பனிவிழும், மழை நேர கொடைக்கானலை படத்தின் அழுக்கு உணர்வோடு கொடுக்க முயற்சித்து வெற்றி பெற்றிருக்கிறார். இசை யுவன் சங்கர்ராஜா. ஆம்பளைக்கும் பொம்பளைக்கும் அவசரம் பாட்டு மட்டுமே சட்டென மனதில் நிற்கிறது. அதிலும் ஜிங்குச்சா.. பாடல் ஞாபகம் வருவதை தவிர்க்க முடியவில்லை. பின்னணியிசையில் ஆங்காஙே குட்டி ராஜா தென்படுவதை சொல்ல வேண்டும்.
எழுதி இயக்கியவர் சத்யசிவா. எடுத்துக் கொண்ட களத்தை திரையில் கொண்டு வர ப்ரயத்தனப்பட்டிருக்கிறார். நல்ல வித்யாசமான களத்தை எடுத்துக் கொண்டவரின் திரைக்கதை அசுவாரஸ்யத்தால் ஒட்டாமல் போய்விடுகிறது. மூவாயிரம் நாலாயிரம் அடி பள்ளத்தில் இறங்க ஒரு பத்து அடி கயிற்றை எடுத்துக் கொண்டு போனால் போதுமா? அதுவும் ஒரே ஒருவர்?. அம்மாம் பெரிய பள்ளத்தில் இறங்கி ஏறுபவர்களை ஏதோ நடுக்காட்டில் மிகச் சுலபமாய் நடந்து போவதைப் போலவே காட்டியிருப்பதால் அத்தொழிலில் உள்ள ப்ரச்சனையை நமக்குள் விதைக்காமல் போய்விடுகிறார். ஹீரோ கிருஷ்ணாவை பந்த பாசமற்றவன் என்பதை காட்டுவதற்காக விட்டேத்தியாய் பேச வைத்தவர் அவரைத் தவிர மற்றவர்கள் எல்லோரும் பாசம், பாவம் என்று செண்டிமெண்டை பேசிக் கொண்டிருப்பது ஒட்டவேயில்லை. திடீரென பிந்து மாதவிக்கு ஏன் கிருஷ்ணாவின் மேல் காதல் வர வேண்டும் தன் தங்கையின் பிணத்தை எடுத்து வந்தவன் என்பதினால் மட்டுமே காதல் வருமா? அதுவும் பிணம் தூக்குபவனோடு?. வில்லன் ஜெயப்பிரகாஷ் ஏதோ ஒரு டீ கம்பெனியிலிருந்து லோடாகும் டீ தூள் லோடைக் கடத்துகிறார். இத்தனைக்கும் அவரும் ஒரு கம்பெனி நடத்துபவர்தான் ஏன் அவர் கடத்த வேண்டும்? சரி.. அப்படியே அவரால் தான் கதைக்கு ப்ரச்சனை வர வேண்டும் என்றால் கிருஷ்ணா அண்ட் கோ பிணங்களின் மீது இருக்கும் நகைகளை எடுத்து ஆட்டையைப் போடுகிறவர்கள் தான். அதுவும் போலீஸ்காரர்கள் இவர்களைக் கூப்பிட்டு அவ்வப்போது அடிக்கிறவர்கள்தான். அப்படியிருக்க, வில்லன் கொன்ற போலீஸ் காரர்களின் பிணத்தை மறைக்க கிருஷ்ணா திடீர் ஹீரோத்தனமான முடிவெடுப்பது ஏன்? என்று ஏகப்பட்ட ஒட்டாத காட்சிகள்தான் பெரிய மைனஸ்.
நல்ல விஷயம் என்று சொல்லப் போனால் வித்யாசமான கதைக் களன், முயன்ற வரை கமர்ஷியலாய் சொல்ல விழைந்த முயற்சி போன்றவற்றைத் தவிர ப்ளஸ்ஸாய் ஏதுமில்லை.
கேபிள் சங்கர்
Post a Comment
9 comments:
பிரிவியூ பார்த்தாச்சா? பிரிவியூ பார்த்துவிட்டு திட்டி எழுதினால் நண்பர்கள் கேட்க மாட்டார்களா?
விமர்சனம் அருமை.
//நல்ல விஷயம் என்று சொல்லப் போனால் வித்யாசமான கதைக் களன், முயன்ற வரை கமர்ஷியலாய் சொல்ல விழைந்த முயற்சி போன்றவற்றைத் தவிர ப்ளஸ்ஸாய் ஏதுமில்லை.
//
அப்ப படம் பார்க்கவேண்டாம் என சொல்றிங்க
ரைட்டு...படம் சரியில்ல.
ஆகா ஓகோன்னு சொன்னாங்களே? படம் அவுட்டா?
nalla velai ippo thaan padam paakkalamnu ninachen. unga vimarsanam parrthaadhala thapichen.
ஒசில படம் பாத்தா பிடிக்கலனு தான் சொல்ல தோணும் சார்..!!
பி.கு: நான் வலைதளத்திற்கு புதியவன் பிடிக்கலனா தூக்கிடுங்க??
thambi வாஷிகுரு.. நீ புதுசுதான்னு இதுலேர்ந்து புரியுது.. போ போய் பெரியவங்களை கூட்டிட்டு வா..:)
கழுகு - தி பிணம் தின்னி !!
மூவி ஒர்த் பார் எ குட் ஸ்லீப் !
Post a Comment