ஒவ்வொரு வாரமும் புதுப் படங்கள் வெளியான வண்ணம் இருந்தாலும் ஓப்பனிங் என்று சொல்லப்படும் மக்கள் கூட்டம் மிகச் சிலப்படங்களுக்கே கிடைக்கும் அதுவும் பெரிய நடிகர்கள், இயக்குனர்கள் படத்திற்கு மட்டுமே. அப்படி ஓப்பனிங் கிடைக்கக்கூடிய நடிகர்களின் படங்கள்தான் தோற்றாலும் ஜெயித்தாலும் பந்தயம் கட்டி விளையாடக்கூடியவை.
பிரசாந்த் என்கிற நடிகர் எனக்கு தெரிந்து தமிழில் உள்ள அத்துனை பெரிய இயக்குனர்கள் படங்களிலும் நடித்திருக்கிறார். ஆனால் இவரின் ஜீன்ஸுக்கு கிடைத்த ஓப்பனிங் அதன் பிறகு கிடைத்ததேயில்லை. அதே போல ஸ்ரீகாந்த் அவருக்கும் எவ்வளவோ படங்களில் நடித்தாலும் ஓப்பனிங் இருந்ததேயில்லை. ஓப்பனிங் என்ற ஒரு விஷயம் தான் நடிகர்களின் தலையெழுத்தை நிர்ணையிப்பதாய் இருக்கிறது. அந்த விஷயத்தில் எம்.ஜி.ஆர், சிவாஜி, ரஜினி, கமல், அஜித், விஐய், தற்போது சூர்யா, கார்த்திக் என்ற வரிசை ஓடிக்கொண்டிருக்கிற்து.
அங்காடித்தெரு படத்திற்கு பிறகு வெளியான வசந்தபாலனின் அரவானுக்கு ஓப்பனிங் மிகமிகக் குறைவு என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். மக்களைப் பொறுத்தவரை படம் வெளிவருவதற்கு முன்பே ஒரு எதிர்பார்ப்பு மீட்டரை அவர்களுக்குள் பிக்ஸ் செய்து கொண்டுதான் இருக்கிறார்கள்.
நேற்று ரிலீஸான விண்மீன்கள், கழுகு, போன்ற படங்களுக்கு கிடைத்த மிக சொற்பமான ஓப்பனிங்கை விட பழைய படமான கர்ணனுக்கு கிடைத்த ஓப்பனிங் அட்டகாசம் என்கிறார்கள் தியேட்டர்காரர்கள். கர்ணனுக்கு போட்டியாய் உட்லாண்ஸில் குடியிருந்த கோயில் போட்டும், 120 ரூபாய் கொடுத்து சத்யம் மற்றும் எஸ்கேப்பில் ஹவுஸ்புல் காட்சிகளாய் ஓப்பனிங் கிடைத்திருப்பதைப் பார்த்தால் பழைய ஹிட் படங்கள் மீண்டும் ஆட்டத்தை தொடங்கும் என்று தெரிகிறது. இன்றும் நாளையும் ரிசர்வேஷனில் ஃபுல்லாகியிருக்கிறது கர்ணன். ஒரு விஷயம் மட்டும் புரிகிறது. நல்ல கண்டெண்டோடு, மார்கெட்டிங்கும் செய்தால் கூட்டம் வரத்தான் வருகிறது.
கேபிள் சங்கர்
டிஸ்கி: ராஜ் டிவி தங்கள் டிவியில் இந்த மூணு மணி நேரப் படத்தை எட்டு மணி நேரம் போட்டு தாலியறுத்ததைவிட, மூன்று மணி நேரம் சந்தோஷமாய் பார்க்கலாம் என்ற எண்ணத்தை ஏற்படுத்தியிருந்ததும் இதற்கு ஒரு ப்ள்ஸ் என்றே தோன்றுகிறது. :))
Post a Comment
9 comments:
ராஜ் டிவியில் படம் பார்க்கும் கொடுமைக்கு 'தாலியறுத்தது' என்ற வார்த்தை வெகு பொருத்தம்.
இந்த வருடத்தில் குடும்பத்தோடு போய் பார்க்கும் முதல் படம் கர்ணன்தான்.
பழைய படங்களுக்கு உள்ள மதிப்பே தனி தான் ..
உள்ளத்தில் நல்ல உள்ளம் பாடல் கேட்டால் இப உள்ள பாடல்களை கேட்டக பிடிக்காது
இன்று
நீங்கள் தொலைகாட்சியில் தோன்ற வேண்டுமா ?
சேதுவுக்கு முன் எப்படியோ ஆனால் இப்போது விக்ரமுக்கும்
ஓபனிங் இருக்கிறதில்லையா?அதை எப்படி நீங்கள் விடப்போயிற்று?
கர்ணன்.காட்சிகளில் பிரம்மாண்டம்.,சிவாஜி,என்.டி.ஆர்.ன் நடிப்பு.,கவியரசர் கண்ணதாசனின் பாமாலை. msv யின் இசை வெள்ளம் அடாடாடாடா.இனி எப்பொழுதும் இல்லை இது போல் ஒரு படம்.
சார் டிஸ்கி பிரமாதம்
sir,
enakke mgra marubadiyum periya thirayila pakkanumnu irukku. 20 varusham aachu. ennoda 9vathu vayasula kadaisiya ennoda appaa naala adimaipen parthen.
Post a Comment