Thottal Thodarum

Mar 29, 2012

சாப்பாட்டுக்கடை – நியூ உட்லான்ஸ்

woolands பெங்களூரிலிருந்து ஃபேஸ்புக் நண்பர் ஷங்கர் கிருஷ்ணமூர்த்தி வந்திருந்தார். ஒரு படப்பிடிப்பிற்காக வந்திருந்தவர் நியூ உட்லான்ஸில் தங்கியிருக்க, அவரை சந்திக்க ஞாயிறு இரவு ஒன்பது மணிக்கு சென்றிருந்தேன். இனிமையான நண்பர் அவரைப் பற்றி சொல்ல வேண்டுமென்றால் நிறைய விஷயம் இருக்கிறது. பல் துறையில் பழகி வருபவர். அதில் நடிப்பும் ஒன்று.  நான் சென்றிருந்த போது அவர் டின்னரை முடித்திருந்தார். சிறிது நேரம் பரஸ்பரம் பேசிக் கொண்டிருந்த பிறகு “அடடா.. கிச்சன் க்ளோஸ் பண்ணிருவாங்க.. என்ன சாப்பிடுறீங்க?. இங்க அட்டகாசமான ஒரு அயிட்டம் கிடைக்கும். உங்களுக்கு ஓகேன்னா உடனடியா எடுத்துட்டு வரச் சொல்றேன்” என்றார்.


வழக்கமாய் நான் இரவு நேரங்களில் அரிசி எடுத்துக் கொள்வதில்லை என்றாலும் அவர் சொன்ன மெனு என் சுவை நாளங்களை தூண்டிவிட்டபடியால் வேறு வழியில்லாமல் தலையாட்டினேன். சொல்லப் போனால் கொஞ்சம் ஆர்வமாகவே இருந்தேன் என்று கூட சொல்லலாம். இந்த அயிட்டம் ஒன்றும் எனக்கு புதியதல்ல என்றாலும், எப்பவுமே இந்த காம்பினேஷனை அடிக்க வேறொன்று கிடையாது என்பது என் எண்ணம்.
அயிட்டம் வந்தது. ரூம் சர்வீஸ் என்பதால் சாதம், சைட் டிஷ் எல்லாவற்றுக்கும் சில்வர் பாயில் போட்டு பேக் செய்து வந்திருந்தார்கள். திறந்தேன் கூடவே அதே வேகத்தில் இரண்டு  சைட் டிஷ் பேக்குகளையும் திறந்தேன். முதல் பேக்கில் இருந்த அயிட்டத்தை எடுத்து இரண்டு ஸ்பூன் சாதத்தில் விட்டு லேசாய் கலந்து ஒரு வாய் எடுத்து சாப்பிட்டேன்.. வாவ்வ்வ்வ்வ்வ்வ்வ்… நிஜமாகவே டிவைன்.

என்னடா இப்படி பில்டப் செய்கிறானே என்று நினைக்காதீர்கள். நிஜமாகவே உங்களுக்கும் அப்படித்தான் தோன்றும் சாப்பிட்டப் பிறகு. நன்றாக அடித்து பிசைந்த சாதத்தில் பால், புளிக்காத தயிர், கொஞ்சம் இஞ்சி பசசை மிளகாய், நடுநடுவே இடறும் முந்திரியைப் போட்டு  கடுகு தாளித்த தயிர்சாதமும், கூடவே சுண்டக்காய் வத்தலை வறுத்து, லேசாய் எண்ணைய் மிதக்கும் வத்தக்குழம்பும், அதி அற்புதமான காரம் மேலே தூக்காத ஆவக்காய் ஊறுகாயும் இந்த வெய்யிலுக்கு இதமாய் சாப்பிட்டுப் பார்த்தவர்களுக்கு தெரியும் டிவைன் என்பதற்கான அர்த்தம். நியூ உட்லான்ஸ் ஓட்டல் எதுக்கு வேண்டுமானாலும் ஃபேமஸாய் இருக்கலாம். பட் டோண்ட் மிஸ் தயிர்சாதம், வத்தக்குழம்பை.
கேபிள் சங்கர்  

Post a Comment

2 comments:

கோவை நேரம் said...

ஆஹா////தயிர் சாதம் அவ்ளோ டேஸ்டா...அப்புறம் நியூ உட்லாண்ட்ஸ் எதுக்குங்க பேமஸ்...அதை சொல்லலை..

Unknown said...

உங்க டேஸ்டை சொல்லிட்டீங்க...உணவின் ருசி உங்களின் வர்ணனையில் இருக்கிறது!