தொழிலாளர்கள் ப்ரச்சனை. சம்பள ஏற்றம். தயாரிப்பாளர்களுக்கும் தொழிலாளர்களுக்குமான முட்டல் மோதல் என்று நாளுக்கு நாள் சூடேறிக் கொண்டிருக்கிறது. ஆனால் நிஜத்திலேயே இவர்களின் அமைப்பு செய்யும் அராஜகங்கள் மிக அநியாயம். ஒரு படத்தின் பட்ஜெட்டில் தயாரிப்பாளர்களின் தேவைக்கு ஏற்ப ஆட்களை உபயோகித்தால் சுமார் 20-30 சதவிகிதம் செலவு குறையும். ஆனால் அதை செய்யவும் விட மாட்டார்கள். அதையெல்லாம் மீறி இவர்கள் செய்யும் அட்டூழியங்கள் தான் இப்படி எல்லோரும் முண்டா தட்டி நிற்கக் காரணம். உதாரணமாய் இரண்டு நிகழ்வுகளை இங்கே பகிர்கிறேன்.
சில ஆண்டுகளுக்கு முன் என்னுடய குறும்பட படப்பிடிப்பு நடத்து கொண்டிருந்தது. உணவு இடைவேளைக்கு முன் திடீரென ரெண்டு பேர் வ்ந்து நீங்கள் ஏன் ஆர்ட் டிபார்ட்மெண்ட் ஆட்களை வைத்துக் கொள்ளவில்லை? அதனால் படப்பிடிப்பை நடத்த விட மாட்டோம் என்று ப்ரச்சனை செய்ய ஆரம்பித்தார்கள். எனக்கோ அன்றைய தினமே கடைசி நாள். அவர்களுடன் வாதிட விருப்பமோ, நேரமோ இல்லை. இருந்தாலும் பொறுமையாய் சொன்னேன். இது கமர்ஷியல் படமல்ல. குறும்படம். அதனால் உங்களுக்கு நாங்கள் கட்டுப்பட வேண்டிய அவசியமில்லை. அப்படியும் எங்களுக்கு தேவையான ப்ரொடக்ஷன் ஆட்கள், லைட்மேன்களை வேலைக்கு வைத்துள்ளோம். எனவே இம்மாதிரியான மிரட்டல்களை எல்லாம் எங்கள் மீது கட்டவிழ்த்து விடாதீர்கள். மீறினால் உங்களால் முடிந்ததை பார்த்துக் கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டு என் வேலையை பார்க்க போய்விட்டேன். வந்த நிர்வாகி அதுவரை ரஃப்பாக மட்டும் பேசியவர். நீ எங்க சப்போர்ட் இல்லாம படமெடுத்திருவியா? அது இதுவென கிட்டத்தட்ட ஒரு ரவுடி போல பேசினார். நான் அதன் பிறகு அவரை வெளியே நிற்கச் சொல்லிவிட்டு வேலையை பார்க்க ஆரம்பித்துவிட்டேன். அதன் பிறகும் த்யாரிப்பாளரிடம் எட்டாயிரம் ரூபாய் அபராதம் கேட்டு ப்ரச்சனை செய்ய, வேறு வழியில்லாமல் நான் எனக்கு தெரிந்த கலை இயக்குனரிடம் பேசி அவரின் ஆட்கள் வேலை செய்வதாய் சொல்லி ப்ரச்சனையை முடித்தும், ரெண்டாயிரம் ரூபாய் வாங்கிக் கொண்டு போனார்கள்.
இதே போல இன்னொரு நிகழ்வு. படத்தின் டப்பிங்கில் ஒரு சின்ன கரெக்ஷன். மொத்தம் பத்தே பத்து நிமிஷ வேலை. டப்பிங் தியேட்டர்காரர்கள் கட்டணம் ஏதுமில்லாமல் வேலை செய்ய ஓகே சொல்ல, நடிகரும் பேச வந்துவிட்டார். பேசி விட்டு வெளியே வந்தால் வாசலில் நிற்கிறார் சங்க நிர்வாகிகளில் ஒருவர். என்னவென்று கேட்டால் எப்படி ப்ரொடக்ஷன் இல்லாமல் நீங்கள் டப்பிங் செய்யலாம்? என்று கேட்டு ப்ரச்சனையை ஆரம்பித்திருக்கிறார். தயாரிப்பாளரோ புதியவர் அவருக்கு போன் போட்டுக் கேட்ட போது “ சார் நடிகர், டப்பிங் தியேட்டர், அதன் இன் ஜினியர் என்று எல்லோரும் பணம் வாங்காமல் வந்திருக்கும் போது எதற்காக ப்ரொடக்ஷன் ஆட்களை வைத்துக் கொள்ள வேண்டும். அது மட்டுமில்லாமல் ஒரு நாள் முழுவதுமோ, அல்லது அரை நாள் இருந்தாலாவது பரவாயில்லை. இது அநியாயம் என்று புலம்பியிருக்கிறார். ஆனால் அதைப் பற்றியெல்லாம் அவர் கேட்கவேயில்லை. பத்து நிமிஷத்துக்காக ப்ரொடக்ஷன் ஆட்களையெல்லாம் ஏற்பாடு செய்ய முடியாது என்று சொன்னவுடன் ஒரு போன் செய்ய அடுத்த ரெண்டாவது நிமிடத்தில் அப்படத்தின் ப்ரொடக்ஷன் ஆள் அங்கு வந்து நின்றிருக்கிறான். எல்லாம் கூட்டுக் களவாணித்தனமாய் தெரிந்திருக்கிறது. வேறு வழியில்லாமல் அந்த ப்ரொடக்ஷன் ஆள் மூலம் ஒரு பாட்டில் தண்ணீர் வாங்கி வரச் சொல்லி இருபது ரூபாய்க்கு பில்லைப் போட்டு, ப்ரொடக்ஷன் இரண்டு ஆட்களுக்கான சம்பளமாய் 900 ரூபாயை கிட்டத்தட்ட ரவுடியிசமாய் மிரட்டி வாங்கிப் போய்விட்டார். இந்த ரெண்டு விஷயங்கள் போதும் இவர்களின் அராஜகமான மோனோபாலியைப் பற்றி. இயக்குனர்களின் சம்பளத்தைப் பற்றியெல்லாம் அறிக்கை விடுகிறவர்கள் அவர்களுடய உதவியாளர்களுக்கு அடிப்படை சம்பளத்தை கொடுத்தால் சந்தோஷமடைவார்கள்.
Post a Comment
17 comments:
\\இயக்குனர்களின் சம்பளத்தைப் பற்றியெல்லாம் அறிக்கை விடுகிறவர்கள் அவர்களுடய உதவியாளர்களுக்கு அடிப்படை சம்பளத்தை கொடுத்தால் சந்தோஷமடைவார்கள்.\\
Niyayamana etkama sir! Vunga feelings correct future la neenga periya director agum pothu marama irukkanum nu vunga kitta thalmayudan vendikolgiren.
Anbudan,
JP
இன்னும் கொஞ்சம் டீட்டெயிலாக இந்த பிரச்சினை பற்றி உங்களிடமிருந்து தெரிந்து கொள்ள அவா.
எனக்கு நீண்ட நாட்கள் குறும்படம் எடுக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. இந்த பதவை படித்த எனக்கு குறும்படம் எடுக்கும் ஆசை போய்விட்டது.
பிரச்சனையை பார்த்த தயாரிப்பாளர்கள் எப்படி அடுத்த படம் எடுக்க வருவார் ?
கேபிள்ஜி,
இந்தப்பிரச்சனையைப்பற்றி படிக்கிறப்ப எனக்கு ஒரு சந்தேகம், இல்ல ஆலோசனை, இல்ல கருத்துன்னு வச்சுக்கங்களேன். அதாவது, ஃபெஃப்ஸிகாரர்கள் கேட்கும் கூலிக்கு தயாரிப்பாளர்கள் ஒத்துக்கொள்ளவேண்டும். அதேநேரத்தில் படப்பிடிப்புக்கு அல்லது பிற துணைநிகழ்வுகளுக்கு எந்தெந்த சங்கத்துக்காரர்கள் தேவையென்பதையும், அதில் எத்தணைபேர் தேவையென்பதயும் தயாரிப்பாளரே முடிவு செய்துகொள்ளலாம் என்பதற்கு ஃபெஃப்ஸிக்காரர்களும் ஒத்துக்கொண்டால் என்ன? இதன்மூலம், ஃபெஃப்ஸிக்காரர்களின் சம்பள உயர்வு கோரிக்கையும் ஏற்றுக்கொள்ளப்படும், அதேமாதிரி தயாரிப்பாளருக்கு ஆகக்கூடிய தேவையில்லாத மிகைப்படுத்தப்பட்ட ஆட்கள் தேவையும் குறையுமல்லவா?
மிக அருமையான பதிவு . . .
எனக்கு தெரிந்த நண்பர் ஒருவர் முன்பு ஆடியோ கேசட்
கடை வைத்திருந்தார் . . .
அதற்க்கான தேவை இப்போது இல்லாமல் போக
செல் செர்விசுக்கு மாறி விட்டார் . . .
" இல்ல நான் ஆடியோ கேசட் கடை தான் வச்சிருப்பேன்
நீங்க எல்லாம் வந்து கேசட் வாங்கணும் " என்பது போல் உள்ளது இவர்களின் வாதம் . . .
நல்ல பகிர்வு . .
நன்றி
அமீர் ஆன்லைனில் வந்தால் நன்றாக இருக்கும் :))
உங்கள் கருத்துடன் நான் முரண்படுகிறேன் !
1 .ஒரு நடிகர் ஐந்து வருடத்தில் -தன்னுடைய சம்பளத்தை -எவ்வளோவோ ஊயர்த்திவிட்டார்.ஒரு கோடி வாங்கியவர் -ஐந்து கோடி வாங்குகிறார்.ஐந்து கோடி வாங்கியவர்- பத்து வாங்குகிறார். உச்சபட்சமாக ,தற்போது -ஐந்து வருடத்திற்கு முன்னாள் பத்து கோடி வாங்கியவர்- முப்பது கோடி வாங்குகிறார்- நடிகருக்கு -சம்பளத்தை -குடுப்பதில் -எந்த பிரச்சனையும் -செய்யாத -தயாரிப்பாளர்கள் -ஒரு தொழிலாளிக்கு -சம்பளம் கொடுப்பதில் -சில நூறு ரூபாய் -அதிகம் -கொடுக்க -தயன்கூவது-ஏன் ?
2 . சினிமா -தொழிலில் -உள்ள -தொழிலாளிக்கு -சில நாட்கள் தான் வேலை கிடைக்கும் -அதை வைத்து -அவர்கள் -வருடம் -முழுவதும் -வாழ்கை -வாழ வேண்டும் -அதையும் -நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
நன்றி வணக்கம்
யூனியன் என்று ஆரம்பிப்பதும் தேர்தல் என்ற பெயரில் குண்டர்கள் பதவியப் பிடிப்பதும் இந்த தாதாயிஸத்திற்குத் தான். இந்தக் கொள்ளையை இந்தியாவில் தடுக்க முடியாது. பதிலுக்கு உங்களால் ஒரு சங்கத்தை ஆரம்பித்து அதன் தலைவராகவேண்டியதுதான்!
தடியெடுத்தவன் தண்டல்காரன்!
-ஜெ.
உண்மைதான். குறிப்பிட்ட எண்ணிக்கையில் ஆட்களை வைத்துக்கொள்ள வேண்டும் என்பதும், அனைத்து துறை ஆட்களுக்கும் வேலை கொடுக்க வேண்டும் என்பதும் ஒரு விதமான பாரத்தை/அராஜகத்தை தயாரிப்பாளர் மீது சுமத்துகிறது.
ஒரு திரைப்படம் தயாரிக்க தேவையான ஆட்கள் எத்தனை என்பது அந்த படைப்பாளிக்கு தெரியாதா? தனக்கு தேவையான ஆட்களின் எண்ணிக்கையை விட குறைவான ஆட்களை வைத்து வேலை செய்தால், தன் வேலைதான் கெடும் என்பதும் நேரம் விழுங்கும் என்பது ஒரு இயக்குனருக்கோ, ஒளிப்பதிவாளருக்கோ அல்லது புரடக்ஷன் மேனேஜருக்கோ தெரியாதா?
அதையும் மீறி தங்களின் பொருளாதார குறைவினால், குறைந்த ஆட்களை வைத்து வேலை செய்துக்கொள்ள ஒரு தயாரிப்பு நிறுவனம் நினைத்தால் அதை தடுக்க நினைப்பதும், அதையும் சிலர் அராஜக வழியில் நடைமுறைப்படுத்துவது..கண்டிக்க பட வேண்டிய ஒன்று.
இவ்வகையான அராஜகங்களே, உழைப்பாளிகளுக்கான ஊதிய உயர்வை தடுக்கிறது. குறைந்த ஊதியம் என்றாலே அதிக எண்ணிக்கையிலான ஆட்களினால் பெரும் பணம் செலவாகிறது. அதிக ஊதியம் என்றால் கட்டுபடியாகாது என்ற பயம்தான்..எல்லா பிரச்சனைக்கும் அடிப்படை காரணம்.
சில சமயங்களில் ஊழியர்களும், தங்களின் லாபத்திற்காக யூனியனை காரணம் காட்டி, மிரட்டி அதிக பணம் பெறுகிறார்கள். இதை அவர்கள் நிறுத்த வேண்டும். தங்களுக்கு வேலை கொடுப்பது தயாரிப்பாளர் தான் என்பதும், அதை சாத்தியமாக்கியது இயக்குனர் தான் என்பதும் அவர்கள் நினைவில் கொள்ள வேண்டும். அத்தகைய இயக்குனருக்கும் பட நிறுவனத்திற்கு அனுசரனையாக நடந்துக்கொண்டு, தங்களுக்கான நியாயமான ஊதியத்தை பெற்றுக் கொள்ள வேண்டும். சிலர் தன் சுய கயமையால், பேராசையால் செய்யும் தவறுகளே பெருபாலான பிரச்சனைகளுக்கு காரணம்.
மூன்றே நடிகர்களையும், நான்கு சிறிய(4Bank-2, baby-2)விளக்குகளையும் வைத்து படபிடிப்பு நடத்தக்கூட, 50 வேலை ஆட்களை வைத்துதான் செய்ய வேண்டும் என்ற நிலை இங்கே இருக்கிறது. இதை நான் என் அனுபத்தில் கண்டிருக்கிறேன். 8 லைட்மேன், மேக்கப்மேன், உதவி மேக்ப்மேன், ஏர் டிரஸ்சர், ஆர்ட் அசிட்டண்டு, செட் அசிட்டண்டு, டச்சப்பாய்,காஸ்டிமர், உதவி காஸ்டிமர், டிரைவர், புரடக்ஷன் பாய்ஸ் என 50 ஆட்கள் படபிடிப்பு தளத்தில் இருக்க வேண்டியது கட்டாயம் என யூனியன் சொல்லுகிறது என்று மிரட்டுகிறார்கள். அது தேவை எனில் யாரும் அதை மறுத்துவிட்டு வேலை செய்ய முடியாது. தேவையில்லாதபோதும் கட்டாயப்படுத்துவது பெரும் பாரமாக இருக்கிறது. இது தடுக்கப் பட வேண்டும்.
true facts.
my blog today: http://scenecreator.blogspot.in/
அருமையான கருத்து கேபிள். துறைக்குள் இருந்து கொண்டே இப்படி எழுதும் நேர்மை உங்களிடம் இருக்கிறது. இந்த அடாவடிகளுக்குத் தான் இவர்களுக்கு அரசியல் ஆதரவு தேவைப் படுகிறது போல. நடிகரின் சம்பளத்தைப் பற்றி இவர்கள் பேசுவது தவறு. எந்த ஆளையும் வைத்து ப்ரொடக்ஷன் ப்ளோர் வேலை பார்க்கலாம், ஆனால் முன்னனி நடிகரை வைத்துத் தான் படம் எடுக்க முடியும்.
//சினிமா -தொழிலில் -உள்ள -தொழிலாளிக்கு -சில நாட்கள் தான் வேலை கிடைக்கும் -அதை வைத்து -அவர்கள் -வருடம் -முழுவதும் -வாழ்கை -வாழ வேண்டும் -அதையும் -நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்// எதுக்கு சார், அவ்வளவு கஷ்டப் பட்டு இந்த துறையிலேயே இருக்கீங்க. விவசாயக் கூலிகளுக்கும் இதே நிலைமை தானே. அவர்கள் என்ன சினிமா தொழிலாளர்கள் மாதிரி இரண்டு பேர் செய்யும் வேலைக்கு 20 பேருக்கு சம்பளம் கொடுக்க வேண்டும் என்றா கூறுகிறார்கள்?
எந்த முடிவையும் பணம் போடும் தயாரிப்பாளர் தான் எடுக்க வேண்டும். மற்றவர்கள் அனைவரும் ஊதியம் வாங்கும் தொழிலாளர்களே. தயாரிப்பாளரை கருத்தில் கொள்ளாமல் இருந்தால் சினிமா உலகம் உருப்படாது. நடிகர்களுக்கும் முதலில் ஒரு சிறு தொகையும் படத்தில் ரிலீசுக்குப் பின்னால் வெற்றியைப் பொறுத்து சதவீத அடிப்படையில் சம்பளம் தரலாம்.
30 ரூபாய் டிக்கெட்டை 150 ரூபாய்க்கு கவுண்டரில் விற்பது என்பது தயாரிப்பாளர்-தியேட்டர் உரிமையாளர்- அரசாங்க அலுவலர்கள் ஆகியோர் கூட்டாக செய்யும் அராஜகம்.
மனசாட்சியே இல்லாமல் சம்பளம் வாங்கும் நடிகர்கள் மற்றும் இயக்குனர்கள் செய்வதும் அராஜகமே.
தங்களுடைய மனத்திருப்திக்காக மொக்கை மொக்கையாய் படம் எடுத்து சினிமா உலகையே காமெடி ஆக்கும் படைப்பாளிகள் செய்வதும் அராஜகமே...
நீங்கள் கூறியது போன்று தொழிளார்கள் செய்வதும் அராஜகமே
எல்லா தரப்பிலும் இருக்கு அராஜகம்
கேபிள்,
கலக்கல் விமர்சனம், கண்டிப்பாக பார்க்கவேண்டிய படம்!
ஹி ..ஹி இனிமே இப்படி கமெண்ட் போட்டா தான் நல்லவன்னு பேர்க்கிடைக்கும் போல :-))
விஷயத்துக்கு வரேன்,
யூனியன் என்றப்பெயரில் சம்பள உயர்வு கேட்பதில் நியாயம் இருக்கு ஆனால் இத்தனைப்பேரை வேலைக்கு வைக்க வேண்டும் எல்லா துறையினருக்கும் வேலை கொடுக்கணும் என்றெல்லாம் சொல்வது சர்வாதிகாரம்.
நல்ல ஊதியத்தில் தேவைக்கு ஏற்ப ஆட்களைப்பயன்ப்படுத்திக்கொள்ளலாம் என பேச்சு வார்த்தையில் முடிவு எட்டப்பட வேண்டும்.
சங்கத்து சிங்கங்களின் விதிமுறையைகளை பார்த்தால் மிக சாதாரணமாக லோவ் பட்ஜெட்டில் படம் எடுக்க கூட ஒரு கோடி தேவைப்படும் போல இருக்கு ஆனால் இதையே பாலைப்படம் பட்ஜெட் பற்றி பேசும் போது 50 லட்சம் கூட செலவு செய்யவில்லை என சொன்னீர்கள்.
சரி போகட்டும் , ஆனால் ஏன் படங்களில் கீரோக்கள் பட்டாளிவர்க்கத்திற்காக கொடிப்பிடித்து வேலை கொடு, வேலைக்கு ஏற்ற சம்பளம் கொடுன்னு நரம்ப்பு புடைக்க வசனம் பேசுறார்.அதுவும் கோடி கணக்கில் சம்பளம் வாங்கிக்கொண்டு :-))
அன்பே சிவம் படத்தில் கமல் பாட்டாளித்தோழனா புரட்சிக்கருத்து பேசியபோது தியேட்டரில் பலமக சிரித்து கமெண்ட் அடித்தார்கள். நடைமுறை என்ன என்பது மக்களுக்கு தெரிந்ததாலே படமும் தோல்வியடைந்தது.
படம் எடுக்க கதைக்கு மட்டும், தொழிலாளி, ஏழைபங்காளன் என இனியாவாது கீரோக்களும்,இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும் இப்படி காமெடி செய்யாமல் படம் எடுப்பார்களா?
வக்காலி, என் பொண்ணு வீடியோ கேமரா எடுத்து போற வரவைங்கள படம் எடுத்தா கூட, இவிங்க அலப்பற பண்ணுவாய்ங்க போல இருக்கு. எல்லாம் சேர நாட்டு சகவாசம்.
எல்லாம் சேர நாட்டு சகவாசம்....ithu thaanga unmai.velaiye seyyaama kooly vaanguvathu avarkal naattil nadakkirathu, athai ingeyum konduvanthuttaanga.
Post a Comment