Thottal Thodarum

Apr 30, 2012

கொத்து பரோட்டா 30/04/12

பெட்ரோல் விலையை ஏற்றுவதை தவிர வேறு வழியில்லை என்று சூசகமாய் சொல்லியிருக்கிறாராம் பிரதமர் மன்மோகன்சிங்ஜி. பெட்ரோல் நிறுவனங்களே இந்த விலையேற்றத்தை வரியை குறைத்து சரி செய்யலாம் என்று சொல்லிக் கொண்டிருக்கும் வேளையில் இவர் ஏற்றித்தான் ஆக வேண்டும் என்று கூறியிருப்பது மக்களின் மேல் கொஞ்சம் கூட அக்கறையில்லை என்பதைத்தான் காட்டுகிறது. தொடர்ந்து இப்படி விலையேறிக் கொண்டே போனால் மக்கள் எப்படி சமாளிப்பார்கள் என்று கொஞ்சம் யோசிக்கும் அரசாயிருந்தால் பரவாயில்லை. ம்ஹும் நமக்கு மத்தியிலும் சரி, மாநிலத்திலேயும் சரி.. மாட்டிக்கிட்டு அவஸ்தை படத்தான் எழுதி வச்சிருக்கு போலருக்கு.
@@@@@@@@@@@@@@@@@@@@@

Apr 29, 2012

லீலை

இந்தப் படமும் சுமார் நான்கு வருடங்களாய் பெட்டிக்குள் இருந்து வெளிவந்திருக்கும் படம். முதலில் ஆஸ்கர் ரவிச்சந்திரனின் தயாரிப்பில் ஆரம்பிக்கப்பட்டு, அவரது உறவினர் ரமேஷபாபுவின் ஆர் பிலிம்ஸ் சார்பாக வெளியாகியிருக்கிறது.

Apr 28, 2012

ஆதி நாராயணா

aadhinarayana-1130 கிட்டத்தட்ட மூன்று வருடங்களாக வெளிவர முடியாமல் இருந்த படம். என்ன காரணம்? வேறென்ன பைனான்ஸ் ப்ரச்சனை தான். அப்படி இப்படி ஒரு வழியாய் வெளியாகிவிட்டது. இவ்வளவு தூரம் படம் வெளிவருவதைப் பற்றி நான் புலம்புவதற்கு காரணம் இப்படத்தின் இயக்குனர் எனது நண்பர்.

Apr 27, 2012

சாப்பாட்டுக்கடை - அமிர்தம்


ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு உணவகங்கள் பிரபலமாக இருக்கும். பயணம் செய்யும் போது அவ்வூர்களை கடக்கும் சமயங்களை நம்முடைய லஞ்ச் டைமாகவோ, அல்லது டின்னர் டைமாகவோ அமைத்துக் கொண்டு போய் சாப்பிடுகிறவர்கள் எல்லாம் இருக்கிறார்கள். ஆனால் இப்பொழுது அதே உணவகங்கள் தமிழ்நாடு பூராவும் மெல்ல செயின் ஆப் ரெஸ்ட்ராரண்டுகளாய் பரவி வரும் கலாச்சாரக் காலமிது. எல்லா ஏரியா சரவணபவனிலும் ஒரே டேஸ்ட்டில் அதே அயிட்டங்களோடு கிடைக்கும் என்பதில் கொஞ்சம் த்ரில் குறைவாகத்தானிருக்கிறது. சரவணபவன் ஆரம்பித்து வைத்த இந்த கலாச்சாரம் இன்றைக்கு எல்லா முக்கிய உணவகங்களும் ஏரியாவுக்கு ஒரு கிளை என்று பரப்ப ஆரம்பித்திருக்கிறார்கள். சில உணவகங்கள் புதிதாய் திறக்கும் போதே இரண்டு மூன்று கிளைகளோடு ஆரம்பிக்கிறார்கள். அப்படித்தான் இந்த அமிர்தமும் ஆரம்பித்திருக்கிறது.

Apr 25, 2012

Joy"full" சிங்கப்பூர் - 7 நிறைவுப் பகுதி


DSC_6007 DSC_6008
அடுத்த நாள் காலையிலேயே குளித்து முடித்து ரெடியாகிவிட்டேன். பதிவர் ரோஸ்விக் விக்டர் பிரபாவின் வீட்டிற்கே வந்து விட்டார். அவருடய நண்பரும்  வாசகருமான ராஜுடன். ராஜ் பதினைந்து வருட சிங்கப்பூர்வாசி.

Apr 24, 2012

பத்து மணி நேர பவர் கட்

கேட்டால் கிடைக்கும் பதிவுகளுக்கு கிடைத்த வரவேற்பும், மற்ற சமூக பொறுப்போடு (என்று நினைத்து ) எழுதப்பட்ட பதிவுகளுக்கு கிடைத்த நல்ல மாற்றங்களையும் பார்த்துவிட்டு, நிறைய நண்பர்கள் அவர்களது ஏரியா ப்ரச்சனைகளை என் பதிவுகளில் எழுதச் சொல்லி போட்டோ முதற்கொண்டு எடுத்து மெயில் அனுப்புகிறார்கள். இன்னும் சிலர் கேட்டால் கிடைக்கும் என்கிற விஷயத்தில் நம்பிக்கை வைத்து அவர்கள் கேட்டு கிடைத்த அனுபவங்களை பகிர்ந்து கொண்டு வருகிறார்கள்.

Apr 23, 2012

கொத்து பரோட்டா -23/04/12

மாவோயிஸ்டுகளின் கடத்தல் சமீப காலமாக அதிகமாகி வருகிறது.  அதில் லேட்டஸ்ட்டாய் மாவட்ட கலெக்டர் கடத்தப்பட்டிருப்பது. அவர் தமிழ் நாட்டுக்காரர் என்பதால் தமிழ்நாட்டு மீடியா கொஞ்சம் சீரியஸாய் கவர் செய்து வருகிறார்கள். மாவோயிஸ்டுகள் கடத்தி விட்டார்கள், கடத்திவிட்டார்கள் என்று திரும்பத் திரும்ப சொல்கிறார்களே தவிர மாவோயிஸ்டுகளின் ப்ரச்சனை என்ன? எதற்காக கடத்துகிறார்கள், அரசு தரப்பு சொல்லும் விளக்கமென்ன என்பதைப் பற்றியெல்லாம் விளக்க வேண்டும் என்ற அக்கறை கூட இல்லாமல் ஜெயலலிதாவின் அறிக்கையையோ, அல்லது தாத்தாவின் அறிக்கையையோ படிக்க போய்விடுகிறார்கள்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

Apr 21, 2012

Neeku Naaku Dash..Dash

neeku_naaku_dash_dash_movie_review_ratings தெலுங்கு சினிமாவில் ஜெயம் என்கிற படத்தின் மூலம் புயலாய் நுழைந்து அடுத்தடுத்து ஹிட் கொடுத்தவர் சட்டென வீழ்ந்து காணாமல் போனார். இப்போது மீண்டும் 42 புதுமுகங்கங்களை வைத்து நான்கு வருட இடைவெளிக்கு பிறகு வந்திருக்கிறார்.

Apr 20, 2012

மை

தமிழ் சினிமாவில் வர வர சின்ன பட்ஜெட் படங்கள் எல்லாம் நம்மை இம்சித்துப் பார்க்கும் படங்களாகவே இருந்து கொண்டிருக்கும் நேரத்தில் கொஞ்சம் ஜாலியான ஃபீல் குபடமாய் வந்திருக்கிறது இந்த மை.

Apr 19, 2012

Joy"full" சிங்கப்பூர்- 6


IMGA0265 IMGA0268
அடுத்த நாள் காலையில் ராமிடமிருந்து விடைபெற்றுக் கொண்டு, நானும் ஜெகதீசனும், கோவி.கண்ணனை சந்திக்க கிளம்பினோம். ”நான் உங்களை கோவியாரிடம் ஒப்படைத்துவிட்டு அப்படியே கிளம்புகிறேன் என்ற ஜெகதீசன் பின்பு.. என்ன நினைத்தாரோ தெரியவில்லை. நானும் உங்களுடம் வருகிறேன் செண்டோசாவுக்கு என்றார். எனக்கு அவரை ரொம்பவும் பிடித்துவிட்டது. ஏன் என்றால் அவர் என்னுடய் நெருங்கிய நண்பரை போல அச்சு அசலாய் இருந்தார். பேச்சை தவிர. மிக மிக அளந்த பேச்சு, கூர்ந்து கவனிக்கும் தன்மை, மிக இயல்பாய் எங்களுக்குள்  ஒரு “கெமிஸ்ட்ரி” உருவாகிவிட்டது.

Apr 18, 2012

பச்சை என்கிற காத்து

PEK200510_1 சட்டென பெயரைப் பார்க்கும் போது ஏதோ இருக்கும் போலருக்கு என்ற எண்ணம் எழாமல் இல்லை. அதை நிருபிப்பது போலவே ஒரு ஆணின் கழுத்தில் ஒரு பெண்ணில் கால் வைத்து அழுத்திக் கொல்வது போன்ற ஒரு போஸ்டர் டிசைன் வேறு..சரி.. போய் பார்த்துவிடுவோம் என்று முடிவு செய்துவிட்டேன்.

Apr 17, 2012

Joy"full" சிங்கப்பூர் -5


DSC_5692 DSC_5697
ஆம் கிளம்பிய வேகத்தில் போய் சேரத்தான் முடியவில்லை. எம்.ஆர்.டியில் போகலாமா அல்லது பஸ்சில் போகலாமா என்று யோசித்தபடியே கடைசியில் டாக்ஸியில் போகலாம் என்று வெயிட் செய்ய ஆரம்பித்து, சுமார் இரண்டு மணி நேரம் நின்றதுதான் மிச்சம். நின்ற நேரத்தில் டயர்ட் ஆகியதால் இரண்டு பாட்டில் ”சாரு” ஒயினை வாங்கிக் கொண்டு ஒரு வழியாய் ரூமுக்கு போய் சேர்ந்தோம். அதற்கு பிறகு தூங்கும் போது மணி 2.

Apr 16, 2012

கொத்து பரோட்டா - 16/04/12

மசாலா கபேவிற்கு பிறகு சுந்தர்.சியின் அடுத்த படத்திற்கான வசனமெழுதும் வேலை நடந்து கொண்டிருந்தது. கட்டிலில் சாய்ந்தபடி நான் லேப்டாப்பில் டைப்படித்துக் கொண்டிருக்க, இன்னொரு உதவி இயக்குனர் கட்டிலின் மேல் கால் வைத்திருந்தார். கட்டில் ஆட, “ஏன் சார் கட்டிலை ஆட்டுறீங்க?” என்றேன். "நீங்க தான் சார் ஆட்டுறீங்க” என்றார். சட்டென கீழே கால் வைத்தும் தான் தெரிந்தது பூகம்பம் என்று. உடனே அறையில் இருந்த மற்றவர்களை அழைத்து கீழே போக கூப்பிட, நண்பர் ஒருவர் இருங்க சாப்ட்டு வந்திடறேன் என்றார். பூகம்பம் என்று சொன்னதும் சாப்பிட்ட கையோடு வெளியே வந்தார். வாசலில் இருந்த வாட்ச்மேனிடம் பூகம்பம் பற்றி சொன்னவுடன். “பத்து நிமிஷமா சேர் ஆடுது சார்னு கீழ் ப்ளாட் காரங்க கிட்ட சொன்னேன்.. நீயே தூக்கத்தில ஆட்டிட்டு சொல்றியாங்குறாங்க” என்றார். சுனாமி அறிவிப்பு சொன்னவுடன்..நண்பர் ஒருவர் வர்றீங்களா பீச்சுக்கு இந்த பக்கமா என் ப்ரெண்ட் ஆபீஸ் இருக்கு அதும் மாடில போய் பார்க்கலாம் என்றார். 8.9 ரிக்டர் அளவில் இந்தோனேஷியாவை ஆட்டி எடுத்ததன் இம்பாக்டே கலக்கி எடுத்திருக்க, ஒன்றும் ஆகவில்லை என்பதால் வேடிக்கை பார்க்க தயாராக இருக்கும் நண்பரை நினைத்து சிரிப்பதா அழுவதா என்று தெரியவில்லை. நமக்குன்னு வர வரைக்கும் எல்லாமே காமெடிதான் போலிருக்கு.
##################################

Apr 13, 2012

தமிழ் சினிமா இந்த மாதம் –பிப்ரவரி -2012

பரபரப்பான பொங்கல், புதுவருட ரிலீஸுகளைத்தாண்டி, இந்த மாதத்தில் பெரிய மற்றும் சின்ன பட்ஜெட் படங்கள் நிறைய வந்தது. வழக்கம் போல சின்ன பட்ஜெட் படங்கள் கண்ணுக்கு தெரியாமல் போய்விட கருப்பு குதிரையாய் இருக்கும் என்று நினைத்த படங்கள் துண்டைக்காணோம் என்று ஓடியதும் நடந்த மாதமிது.

Apr 12, 2012

நான் – ஷர்மி – வைரம் -16

16 ஷர்மி
sharmmi -16டாடியின் இழப்பு கொடுத்த வலியை விட ப்ரச்சனைகளிலிருந்து கொடுத்த விடுதலை அதிகம். இதை சொல்லும் போது கொஞ்சம் வருத்தமாயிருந்தாலும் நினைக்காமல் இருக்க முடியவில்லை. ப்ப்பிலிருந்து வீட்டிற்கு போன போது அப்பாவை நடுக்கூடத்தில் கிடத்தியிருந்தார்கள். அம்மா அழுது ஓய்ந்து போயிருந்தாள். குரல் உடைந்து மிகவும் விகாரமாய் இருந்தாள். வீட்டினுள் போகும் போது வாசலில் அதிகமாய் கூட்டமிருந்தது. ஒரு முறை வீட்டின் தன் பெண்ணின் கல்யாணத்திற்காக வந்திருந்த பெரியவர் கூட நின்றிருந்தார். “இருந்தாலே வாங்குறது கஷ்டம் தொங்கிட்டப்புறம் எங்க வாங்கறது. நாமளும் கூடவே தொங்க வேண்டியதுதான்” என்று சிலர் என் காது படவே பேசினார்கள். கழுத்தில் ஏதோ சிவப்பு நிற செயின் மாட்டியதைப் போல சிகப்பாய் இறுகிப் போய், கொஞ்சம் துறுத்திக் கொண்டிருந்த நாக்கோடு அவரை பார்க்கையில் அழுகை அழுகையாய் வந்தது. அப்பாவை எடுத்துக் கொண்டு போகும் போது என்னால் பார்த்துக் கொண்டு இருக்க முடியவில்லை. என் நினைவு தெரிந்து முதல் முறையாய் மயங்கினேன்.

Apr 11, 2012

பகலில் எரியும் விளக்குகள்

street light 1 மொத்த தமிழ்நாடே மின்வெட்டால் அவதிப்பட்டுக் கொண்டிருப்பது  எல்லோருக்கும் தெரிந்த விஷயமே. அதற்கு நீ காரணம், நான் காரணம் என்று ஆளாளுக்கு கை நீட்டி குற்றம் சாட்டிக் கொண்டிருந்தாலும் கடைசியில் அவதிப்படுவது பொதுமக்கள் தான். சரி அதை விடுங்கள். மின்சாரத்தேவை 3500 மெகாவாட்டுக்கு மேல் இருக்கும் பட்சத்தில் புதியதாய் உற்பத்தி செய்வதை பற்றி யோசிப்பதை விட உபயோகிக்கும் மின்சாரத்தை எப்படி மிச்சப்படுத்துவது என்று சற்றே சிந்தித்தால் எவ்வளவு மின்சாரம் மிச்சமாகும்?. ஆனால் பெரும்பாலான அரசு துறை அலுவலகங்களில் வீணாக ஓடும் ஏஸிக்கள், மற்றும் பேன்களுக்கான மின்சார வீணடிப்பை யாரும் கவனிப்பதேயில்லை. கவர்மெண்ட் காசுதானே என்ற ஒரு அலட்சிய மனப்பான்மை அவர்களிடம் இருப்பதை மறுக்க முடியாது.

Apr 10, 2012

Joy"full" சிங்கப்பூர் -4


IMGA0258 Image0456
அடுத்தநாள் ஜெய்யிடம் நான் எழுந்தபின் பேசிய நேரம் சுமார் 10 மணியிருக்கும், நான் இருக்கும் இடம் தான் சிங்கப்பூரின் நடு செண்டராம். அங்கிருந்து ஒரு ரவுண்ட் அடித்தால் முக்கிய இடங்களை பார்த்து விடலாம் என்று சொன்னார். எல்லாவற்றையும் நோட் செய்துவிட்டு, அவசர அவசரமாய் குளித்துவிட்டு, மெல்ல நடக்க ஆரம்பித்தேன்.

Apr 9, 2012

கொத்து பரோட்டா - 9/04/12

பெப்ஸிக்க்காரர்களின் ஸ்ட்ரைக் அவர்களே அவர்களின் தலையில் மண்ணை வாரிப் போட்டுக் கொள்ளும் முயற்சியாகவே தெரிகிறது. ஏற்கனவே புதிய யூனியனை அமைத்தே தீருவோம் என்றிருப்பவர்களை இன்னும் வேகமாய் தூண்டிவிடக்கூடிய விஷயமாகவே படுகிறது. இவர்கள் இல்லாவிட்டால் படமெடுக்க முடியாது என்று இவர்கள் நினைப்பது பூனை - கண் உதாரணத்தைத்தான் சொல்ல தூண்டுகிறது. யாரும் யாரையும் நம்பி இருப்பதில்லை என்பதுதான் உலக விதி. அதிலும் பணம் போட்டு படமெடுக்கும் ஆட்களை பகைத்துக் கொண்டு என்ன சாதித்துவிட முடியும்?. ஏற்கனவே டிஜிட்டல் யுகத்தில் லைட் இல்லாமல், பெரிய யூனிட் இல்லாமல், தரமான படம் தயாரிக்க முடியும் என்பதை நிருபித்து வரும் காலத்தில் மேலும் இப்படி இம்சையை ஆரம்பித்தால் நிச்சயம் ப்ரச்சனைதான். இரண்டு படப்பிடிப்பை நடத்தி காட்டிவிட்டார்கள். குறும்படங்களில் வேலை செய்யும் பல கேமராமேன்களும், லைட்மேன்களும் பெப்ஸிபோன்ற அமைப்புகளில் பணம் கட்டி மெம்பர் ஆகாதவர்கள்தான் வேலை செய்கிறார்கள். அவர்கள் எல்லோரும் வேலை செய்ய தயாராக இருக்கிறார்கள். யோசித்து பேசி சுமூகமாய் முடித்தால் எல்லோரும் நல்லது. ஆனால் நிச்சயம் இன்னொரு தொழிலாளர் அமைப்பு அமைவது எல்லோருக்கும் நல்லது என்பதே என் தரப்பு வாதம்.
#####################################

Apr 8, 2012

அஸ்தமனம்.

asthamanam-movie-stills-001 போர்களம் என்ற ஒரு படத்தை எடுத்த பண்டி சரோஜ்குமார் என்ற இளைஞரின் அடுத்த படம்.  போர்களம் படத்தின் மேக்கிங்கிற்காக பேசப்பட்டார். அடுத்த படத்தில் கண்டெண்டுக்காகவும் பேசப்படுவார் என்ற நம்பிக்கையை ஊட்டினார். அதை தக்க வைத்துக் கொண்டாரா என்றாரா என்றால் இல்லையென்றே சொல்ல வேண்டும்.

Apr 7, 2012

Joy"full" சிங்கப்பூர் -3


DSC_5752காலையில் எழுந்ததும், ஒரு காப்பியை போட்டு கொடுத்துவிட்டு “அப்புறம்ணே. நல்லா தூங்கினீங்களா?” எனறு கேட்டவரிடம், “நீங்க ஏன் தூங்கவேயில்லை..? “ என்றவனை கோபமில்லாமல் பார்த்து, “தூங்க விட்டாத்தானே?” என்றார்.

Apr 4, 2012

Ee Rojullo

wp-33eerojullo800 ஸ்ரீனிவாஸ் கேர்ள் ப்ரெண்ட்சுகளால் பாதிக்கப்பட்டவன். அவனிடம் உள்ள பணத்திற்காக மட்டுமே அவனை சுற்றியலைபவர்களாக இருக்கிறார்கள் என்று வெறுத்துப் போய் இருப்பவன். ஷ்ரேயா எல்லா ஆண்கள் நட்பு என்று ஆரம்பித்து அடுத்த லெவலுக்கு மூவ் செய்ய முயலும் போது நடக்கும் நிகழ்வுகளால் எரிச்சலடைந்து ஆண்களின் நட்பே வேண்டாம் என்று இருப்பவள். இருவரும் சந்திக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட, இருவருக்குள் நட்பும் கிடையாது காதலும் கிடையாது என்று பழக ஆரம்பிக்கிறார்கள். அவர்கள் காதலில் விழுந்தார்களா? இல்லையா என்பதுதான் கதை.

Apr 3, 2012

நான் – ஷர்மி – வைரம் -15

15 நான்
126 ”நான் லவ் பண்றேன்” என்ற செந்திலைப் பார்த்து சிரித்தேன். அவன் கண்களில் வெட்கம் தெரிந்தது. “எது இங்கிலீஷ் லவ்தானே. அதைத்தான் நாம தினமும் பண்றோமே?”

Apr 2, 2012

கொத்து பரோட்டா 02/04/12

www.simplelife.in என்கிற நிறுவனம் என்னுடய தளத்தில் வலது பக்கம் விளம்பரம் வெளியிட வேண்டும் என்று ஒரு டிசைனை அனுப்பியிருந்தார்கள். அதாவது அந்த விளம்பரத்தை க்ளிக் செய்து உங்களை ரிஜிஸ்டர் செய்து கொண்டால் ரூ.1000 க்கான தொகை உங்கள் கணக்கில் வைக்கப்படும் என்கிறார்கள். அப்படி உங்களை பதிவு செய்து கொள்ளும் போது உங்களுக்கான கோடை நீங்கள் அதில் சேர்க்க வேண்டும். கோட் "CABLESH" என்ற என் பெயரைத்தான் போட வேண்டுமாம். எது எப்படியோ இவன் பதிவ படிச்சி என்ன கிடைக்கப் போவுதுன்னு நினைச்சிட்டிருந்தவங்களுக்கு அட்லீஸ்ட் ஒரு டிஸ்கவுண்ட் கூப்பனாவது கிடைக்குதே எனக்கு ஒரு சந்தோஷம்தான். SO, ENJOY MAKAL'S
########################################

Apr 1, 2012

மீராவுடன் கிருஷ்ணா

Meeravudan Krishna Movie Stills  Mycineworld Com (9) சின்ன படங்கள் பல சமயங்களில் கண்களிலேயே படாமல் போய்க் கொண்டிருந்த காலத்தில் பளிச்சென்ற போஸ்டர்கள் அடிக்கடி கண்களில் படும்படியாய் ஒட்டி என்ன படம் இது என்ற ஆர்வத்தை ஏற்படுத்திய வகையில் மீராவுடன் கிருஷ்ணாவுக்கு  வெற்றி என்றே சொல்ல வேண்டும்.