15 நான்
”நான் லவ் பண்றேன்” என்ற செந்திலைப் பார்த்து சிரித்தேன். அவன் கண்களில் வெட்கம் தெரிந்தது. “எது இங்கிலீஷ் லவ்தானே. அதைத்தான் நாம தினமும் பண்றோமே?”
“சே... அது இல்லைடா.. காதல்” என்றவனை பார்த்து எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. எனக்கென்னவோ காதல் எல்லாம் காமத்திற்கான அடித்தளம் என்ற எண்ணம் வலுவாய் இருந்தது.
’யாருடா? அப்பேர்ப்பட்ட அழகி”
“உனக்கும் அவளைத் தெரியும். சுப்ரஜா. சாப்ட்வேர் கம்பெனி பொண்ணு. ஞாபகமிருக்கா..?” என்றதும் சட்டென அவள் முகம் நினைவுக்கு வந்தது. ரெண்டு பேர் வேண்டும் என்று கேட்டு அடம்பிடித்த சுப்ரஜாவின் முகம் ஞாபகத்திற்கு வந்தது. அப்படி கேட்டவளின் குரலில் ஒரு விதமான வெறி இருந்தது. லீட் கொடுத்தவன் சொல்லித்தான் கூப்பிட்டான். பார்ட்டி ரொம்பவே டென்ஷனா இருக்கு பார்த்து நடந்துக்கங்க என்றான். பெரும்பாலான பெண்கள் ஒவ்வொருத்தியும் ஒவ்வொரு விதமான டைனமைட் போலத்தான் என்பது எங்களுக்கு பழக்கமானதால் பெரிதாய் அலட்டிக் கொள்ளாமல் அந்த ரிசாட்டுக்கு சென்றோம். சென்னையின் மிக ஓரத்தில் பெரிய மனிதர்கள் மட்டுமே வரும் ரிசார்ட் அது. ஒவ்வொரு ரிசார்ட் அறையும் ஒரு தனித்தீவு. அவ்வளவு தனிமையாய் இருக்கும். உள் நுழைந்த்து எல்லாமே ஏதோ சொல்லி வைத்தார் போல நடக்குமிடமது.
பழைய மாதவி போல இருந்தாள் சுப்ரஜா. “வாங்க” என்று அழைத்து உள் அறையில் உட்காரச் சொன்ன போதே தெரிந்துவிட்ட்து இவளுக்கு இது புதியது என்று. சற்று நேரம் பேசாமல் இருந்தாள். போனை எடுத்து ஹிந்தியில் “அவர்கள் வந்துவிட்டார்கள் எப்படி ஆரமபிப்பது? பணத்தை இப்பவே கொடுக்கணுமா? என்பது போல படபடவென எங்களை ஓரக்கண்ணால் பார்த்தபடி பேசினாள். எனக்கு ஹிந்தி நன்றாக புரியும். பேசி முடித்து வெளிநாட்டு சரக்கு ஒன்றை எடுத்து டேபிளின் மீது வைத்தவள். சாப்பிடுங்க என்றாள். இம்மாதிரியான ஆஃபர்களை எப்போதும் சட்டென உபயோகிக்க்க்கூடாது என்பது தொழிலின் விதி. போதையாகிவிட்டால் பின்னால் வரக்கூடிய ப்ரச்சனைகளை சமாளிக்க முடியாமல் போய்விட வாய்ப்பிருக்கிறது. “வாங்க நீங்களும் சாப்பிடுங்க..” என்று அவளை உட்கார வைத்தான் செந்தில். தயங்கித் தயங்கி ஆரம்பித்தாள். ரெமி மார்ட்டின் சல்லென வழுக்கும் சரக்கு. ரொம்பவும் யோசித்து யோசித்து குடித்தாள். அவ்வளவாக பழக்கமில்லாதவள் என்று அவளின் முகச் சுளிப்பில் தெரிந்த்து. ஒரு பெக் போனதும் அடுத்த பெக்கிற்கு வேகம் அதிகமாக, அதற்கடுத்த்தை சட்டென குடித்துவிட்டு, அழ ஆரம்பித்தாள். இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டோம். பெரும்பாலான நேரங்களில் இவர்களை கண்டு கொள்ள கூடாது. அப்படி ஏதாவது ஆறுதல் சொல்லப் போனால் நம் மீது பாய்வார்கள். பெரும்பாலும் தங்களைப் பற்றிய கழிவிறக்கங்கள் தான் அழுகையாய் மாறி கொட்டும். நாங்கள் காத்திருந்தோம். அவளின் அழுகை ஓயவில்லை. சட்டென ஆவேசமாய் டேபிளின் மேலிருந்த க்ளாஸை எடுத்து தரையில் ஓங்கி அடித்து உடைத்தாள். செந்தில் கொஞ்சம் தயாராகி, அவளின் பால் சென்று, அவளின் தோளை பற்றி லேசாய் அழுத்தினான். அவன் கொடுத்த அழுத்த்த்தைப் பார்த்து சட்டென அவனை அணைத்து இன்னும் பெரும் சத்த்த்துடன் அழ, செந்தில் அவளை அணைத்து, ஏதும் பேசாமல் அவளின் உதட்டில் முத்தமிட்டான். அவளின் முகம் முழுவதும் கண்ணீர் பரவியிருக்க, அவனின் அணைப்பும், முத்தமும், அவளை ஏதோ செய்திருக்க வேண்டும். அழுகை நின்று பரபரவென அவள் போட்டிருந்த ஷார்ட்ஸையும் டீ சர்ட்டையும் கழட்டி பேண்டீச் ப்ராவுடன் நின்றவள் என்னையும் அவள் பால் இழுந்த்து அணைத்து “வா.. வா.. வாங்க ரெண்டு பேரும்.. என்னால் முடியும்” என்று இறுக்க, செந்தில் “ஸ்லோலி..ஸ்லோலி.. ஒருத்தர் ஒருத்தரா ஆரம்பிப்போம்” என்று அவளை இன்னும் இறுக்கி அணைத்தான். அவனின் அணைப்பில் அணைந்தவளை அப்படியே அலேக்காக பெட்ரூமிற்குள் தூக்கி சென்றவன் ஒரு மணி நேரம் கழித்துத்தான் வெளியே வந்தான். நான் சத்தமில்லாமல் டிவி பார்த்துக் கொண்டிருந்தேன்.
அவன் வெளியே வந்தவுடன் நான் உள்ளே போக, சுப்ரஜா உடைகள் ஏதுமில்லாமல், மல்லாந்து படுத்திருந்தவள் என்னைப் பார்த்த்தும், சட்டென போர்வையை எடுத்து போர்த்திக் கொண்டாள். “நீ கொஞ்சம் வெளியே இரு.. ப்ளீஸ்” என்றாள். வெளியே காத்திருந்தேன். ரொம்ப நேரம் கழித்து ஹவுஸ் கோட் போட்டு வெளியே வந்தாள்.
”சாரி.. தேவையில்லாம ரெண்டு பேரைக் கூப்பிட்டுட்டேன்”.
“பரவாயில்லை .. இட்ஸ் அப் டு யூ” என்றேன். எதுவும் பேசாமல் அமைதியாய் இருந்தவள். செந்திலைப் பார்த்து “ என்னால உனக்கு திருப்தியா இருந்திச்சா?” என்று கேட்டாள். வழக்கமாய் நாங்கள் கிளம்பும் போது கேட்கும் கேள்வி. அடுத்த அழைப்பிற்கான கொக்கிக் கேள்வி. “ யா.. நெவர் பெல்ட் லைக் ரொட்டீன்” என்றான் செந்தில்.
”என்னால அவனுக்கு செக்ஷுவலா Satisfy பண்ண முடியலைன்னு காரணம் காட்டி டைவர்ஸ் வாங்கிட்டான் ப்ளாகார்ட். அவன் இம்போடென்ஸிய மறைக்க, காசு கொடுத்து எல்லா சர்டிபிகேட்டையும் விலைக்கு வாங்கி என்னை அசிங்கப்படுத்திட்டான். அவன் திரும்பத் திரும்ப சொன்னதுனால நிஜமாவே என்னால ஒரு ஆம்பளைக்கு சந்தோஷம் கொடுக்க முடியாதோன்னு என்னைப் பத்தி சந்தேகம் வந்திருச்சு. நேத்துதான் டைவர்ஸ் வாங்கினேன். ஒரே டிப்ரஷன். என்னால முடியும்னு ப்ரூப் பண்ண்ணுங்கிற வெறி. மரம் மாதிரி படுக்கறேனாம். நான் மரமா.. நான் மரமா நீ சொல்லு.. ஒருத்தனை என்னடா ரெண்டு பேரோட படுக்குறேன்னு கோர்ட் வாசல்ல அவன் மூஞ்சியில காரி துப்பிட்டு வந்திட்டேன். ஒரு ஆவேசத்தில ரெண்டு பேரைக் கூப்டுட்டேனே தவிர என்னால அப்படியெல்லாம் இருக்க முடியாதுன்னு தோணுது. சாரி.. சாரி..” என்று பல முறை சாரி சொல்லிவிட்டு, அதிகமான பணத்தைக் கொடுத்தாள். செந்திலுக்கு என்ன தோணியதோ தெரியவில்லை பணத்தில் பாதியை எடுத்து டேபிளின் மீது வைத்துவிட்டு கிளம்பிவிட்டான். வரும் வழியில் எல்லாம் ஏதும் பேசவில்லை. என்னடா டல்லாயிருக்கேன்னு கேட்டுக் கொண்டே வந்தேன். பதில் சொல்லவில்லை. வீட்டின் அருகே வந்தபோது “ என்னா பொண்ணுடா அவ” என்றான். நான் ஏதும் பேசவில்லை. பல சமயங்களில் இவர்களின் கதையை கேட்டு நானும் ஃபீல் செய்ததுண்டு.
அதன் பிறகு அவளைப் பற்றி பேச்செடுத்த்தில்லை. ஆனால் செந்திலை அவள் அடிக்கடி அழைப்பது ந்டந்து கொண்டிருக்கிறது என்று தெரிந்தது. சமயங்களில் சில கஸ்டமர்கள் ஒருத்தரையே விரும்பி அழைப்பதுண்டு. அப்படி போகும் போது ஏஜெண்டின் மூலமாய் போகாமல் நேரடியாய் அழைப்பார்கள்.நமக்கும் கட்டிங் இல்லாமல் பணம் கிடைக்கும். அப்படி நினைத்திருந்தேன். அவன் இன்று சுப்ரஜா என்று சொன்னதும்தான் புரிந்த்து இதன் பின்னணி என்ன என்று.
“ஸோ.. நிஜமாவே காதல்ங்கிறியா?’
“ஆமாடா. நாலு மாசமா.. என்னைப் பத்தி அவளுக்கு எல்லாம் தெரியும். அவள் ரொம்ப பாவம்டா.. ரெண்டு வருஷத்துல ரொம்ப அடிபட்டிருக்கா. எங்களுக்குள்ள செக்ஷுவலான நெருக்க்த்தைவிட மனசாலான நெருக்கம்தான் ஜாஸ்தி. என்னால அவளுக்கு ஒரு நல்ல புருஷனா இருக்க முடியுங்கிற நம்பிக்கையிருக்கு. இனிமே இந்த வேலைய செய்யப் போறதில்லை. ரெண்டு பேரும் யு.எஸ். போறோம். அங்கயே செட்டிலாகப் போறோம். யார்கிட்டேயும் சொல்லாதன்னு சொன்னா.. என்னால உன்கிட்ட மறைக்க முடியாது. கூடாதுன்னு தோணிச்சு. அதான் சொல்றேன். நீயும் நல்லபடியா செட்டிலாகப் பாரு” என்றான். அவனின் கடைசி வார்த்தை கொஞ்சம் காமெடியாய் இருந்த்து. செட்டிலாவது என்பது அமெரிக்காவில் அவளை குண்டி கழுவிக் கொண்டிருப்பதுதானோ? என்று கிண்டலாய் தோன்றினாலும் நான் செய்யும் வேலை எனக்கும் எரிச்சலாய்த்தான் இருந்தது.
பல நாட்கள் கனவுகளில் பாம்பாய், எலியாய் தலை மட்டும் நானாக ஏதாவ்து ஒரு இருட்டுப் பொந்திற்குள் நுழைந்து மூச்சடைத்துப் போய் திணறி வெளியே வருவது போன்ற கனவுகள் துரத்த வாழ்வது எரிச்சலாய்த்தானிருக்கிறது. அவனுக்கு ஆல் த பெஸ்ட் சொல்லி கிளம்பும் போது கொஞ்சம் வருத்தமாய்த்தானிருந்த்து. செந்திலுக்கு போன் வந்த்து. “ தோ.. வந்துட்டேன் டியர்” என்று அவன் சொன்னதைப் பார்த்து சிரித்து கொண்டேன்.
அப்புறம் ஒரு முறை யு.எஸ் விசாவிற்காக அங்கே பணிபுரியும் என் கஸ்டமர் ஒருத்தியின் உதவிக்காக கேட்டிருந்தான். செய்து கொடுத்தேன். ஊருக்கு போவதற்கு முன் போன் செய்து நன்றி சொன்னான். மனதினுள் அவனை வாழ்த்தி மறந்து போனேன். எனக்கென காதல் வரும் என்று எனக்கு நம்பிக்கையில்லை. ஆனால் திடீரென வந்த ப்ரச்சனையால் இனி இத்தொழில் இருப்பது அவ்வளவு சரியில்லை என்ற எண்ணம் தோன்றுமளவுக்கு ஒரு சம்பவம் நடந்தது.
கேபிள் சங்கர்
Post a Comment
5 comments:
Sir Super.
BR
Christo
சார் ஒவ்வொரு எபிசோடுக்கும் இடையே இவ்வளவு கேப் விடாதிங்க.
hmmmm Ippo than kathai Take off aaguthu. sema ..sema..
thala kalakittenga...
சங்கர், நீங்கள் தெலுங்கு பட விமரிசனம் எழுதுவதால் உங்களிடம் ஒரு ஆராய்ச்சி பூர்வமான கேள்வி கேட்க விரும்புகிறேன். ஜப்பானிய மொழிக்கும், தெலுங்கு மொழிக்கும் ஏதேனும் சம்பந்தம் இருக்கிறதா?? ஏனெனில். சமீபத்தில் ஒரு ஜப்பானிய "பலான" படம் பார்க்க நேர்ந்தது.. அதில் ஈடுபட்ட ஜப்பானிய பெண்...உச்சத்தில், "தெங் கீச்சி...தெங் கீச்சி" என கத்தியதால்...எனக்கு ஒரு டவுட்டு...."தமிழ்வாணனை" போல் என் சந்தேகத்தை நிவர்த்தி செய்யவும்...
Post a Comment