பரபரப்பான பொங்கல், புதுவருட ரிலீஸுகளைத்தாண்டி, இந்த மாதத்தில் பெரிய மற்றும் சின்ன பட்ஜெட் படங்கள் நிறைய வந்தது. வழக்கம் போல சின்ன பட்ஜெட் படங்கள் கண்ணுக்கு தெரியாமல் போய்விட கருப்பு குதிரையாய் இருக்கும் என்று நினைத்த படங்கள் துண்டைக்காணோம் என்று ஓடியதும் நடந்த மாதமிது.
மெரினா
சுமார் எண்பது லட்ச ரூபாய் முதலீட்டில் கேனான் 5டி கேமராவில் எடுக்கப்பட்டு, விளம்பரம் அது இதுவென சுமார் ஒரு கோடிக்குள் தயாரிக்கப்பட்ட படம். விஜய் டிவி மட்டும் சுமார் 1.25 கோடி ரூபாய்க்கு சாட்டிலைட் உரிமத்தை வாங்கியது. மீதி ஏற்கனவே இயக்குனர் பாண்டியராஜின் பெயருக்காக சுமார் மூன்று கோடி ரூபாய்க்கு ஏரியா விற்பனையாக பட ரிலீஸுக்கு முன்னரே தயாரிப்பாளர் பாண்டியராஜுக்கு வெற்றிப் படம். படத்தை வாங்கிய விநியோகஸ்தர்களுக்கு லாபமா என்றால் ஆம் என்று இல்லை என்றும் தான் சொல்ல வேண்டும். பெரும்பாலான மல்ட்டிப்ளெக்ஸ் தியேட்டர்களில் நன்றாக போன இப்படம். சிங்கிள் ஸ்கிரீன் தியேட்ட்ர்களில் போகவேயில்லை. அனாலும் வாங்கிய விலை குறைவானதால் கையை கடித்தாலும் தாங்கிக் கொள்ளக்கூடிய வகையில் இருந்ததால் பெரிதான குற்றச்சாட்டு இல்லை. இப்படத்தினால் நாம் தெரிந்து கொள்ள வேண்டிய ஒன்று. நியாயமான பட்ஜெட்டில் பெரிய இயக்குனராய் இருந்தாலும் சரியான மார்கெட்டிங்கோடு களமிறங்கினால் நிச்சயம் லாபம் என்பதுதான்.
தோனி
ப்ரகாஷ்ராஜ் நடித்து, இயக்கி, தயாரித்து வெளிவந்த படம். இதுவும் சின்ன பட்ஜெட் படம்தான். ஆனால் இரண்டு மொழிகளில் வெளிவந்தது. படம் விமர்சகர்களால் பாராட்டுப் பெற்றாலும் பெரிய அளவில் ஓடவில்லை என்றே சொல்ல வேண்டும். ஏன் மல்ட்டிப்ளெக்ஸ் தியேட்டர்களில் கூட பெரிய அளவில் ஓடவில்லை
அம்புலி 3டி
தமிழில் வெளிவந்திருக்கும் முதல் ஸ்ட்ரீயோபோனிக் 3டி திரைப்படம். பள்ளிச்சிறுவர்களிடையேவும், மக்களிடையேவும் 3டிக்காக மிகுந்த வரவேற்ப்பு பெற்ற படம். 3டியில் மட்டுமே வெளியானதால் தியேட்டரில் மட்டுமே சென்று பார்த்தாக வேண்டியிருந்ததாலும், படமும் பெரிய அளவிற்கு சுவாரஸ்யம் குறைவிலலாமல் இருந்ததாலும், தயாரிப்பாளர்களே நேரடியாய் வெளியிட்டதாலும், வியாபார ரீதியாய் சாட்டிலைட் மற்றும் விநியோகத்தின் மூலமாய் அவர்களது முதலீட்டை திருப்பி எடுத்துவிடும் என்று நம்பப்படுகிறது.
காதலில் சொதப்புவது எப்படி?
இதுவும் தமிழ் மற்றும் தெலுங்கு இரண்டு மொழிகளில் வெளியான படம். இரண்டிலுமே ஏ, மற்றும் பி செண்டர் படங்களாய் வெற்றி பெற்ற படம் என்றே சொல்ல வேண்டும். சுமார் 36 நாட்களில், ரெட் ஒன் கேமராவில் ஷூ ஸ்ட்ரிங் பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்தப் படம். வசூல் ரீதியாய் பெரிய வெற்றி என்றே சொல்ல வேண்டும். இரண்டு மொழிகளிலும் சாட்டிலைட், எப்.எம்.எஸ் எல்லாவற்றையும் சேர்த்து சுமார் ஐம்பது கோடிகளை தொட்டிருக்கும் என்கிறார்கள்.
முப்பொழுதும் உன் கற்பனைகள்
ஒரு பெரிய படத்திற்கு என்ன விளம்பரம் இருக்குமோ அவ்வளவு விளமப்ரங்கள் மற்றும் பிலடப்புகள் இருந்தும் மிகச் சொதப்பலான திரைக்கதை காரணமாய் சுத்தமாய் எடுபடாமல் போன படம். படத்தின் பப்ளிசிட்டிக்கு செலவு செய்த பணமாவது கிடைத்திருக்குமா என்பது சந்தேகமே.. இருந்தாலும் ஏற்கனவே வெற்றி படங்களை கொடுத்த தயாரிப்பாளர் இயக்கிய படமாகையால் சும்மாவே எட்டு வாரங்களுக்கு வாடகை கொடுத்து ஓட்டிக் கொண்டிருக்கிறார்கள்.
இம்மாத ஹிட்
காதலில் சொதப்புவது எப்படி?
ஆவரேஜ்
மெரினா
அம்புலி 3டி
கேபிள் சங்கர்
கேபிள் சங்கர்
Post a Comment
4 comments:
இரண்டு மொழிகளிலும் சேர்த்து சுமார் //அரை கோடிகளை //
Is it 6?
sorry corrected
தமிழ் புத்தாண்டு கொண்டாடினீர்களா
மெரினா படத்தை விட தோணி பரவால்லை சொல்லாம்.
Post a Comment