Thottal Thodarum

Apr 11, 2012

பகலில் எரியும் விளக்குகள்

street light 1 மொத்த தமிழ்நாடே மின்வெட்டால் அவதிப்பட்டுக் கொண்டிருப்பது  எல்லோருக்கும் தெரிந்த விஷயமே. அதற்கு நீ காரணம், நான் காரணம் என்று ஆளாளுக்கு கை நீட்டி குற்றம் சாட்டிக் கொண்டிருந்தாலும் கடைசியில் அவதிப்படுவது பொதுமக்கள் தான். சரி அதை விடுங்கள். மின்சாரத்தேவை 3500 மெகாவாட்டுக்கு மேல் இருக்கும் பட்சத்தில் புதியதாய் உற்பத்தி செய்வதை பற்றி யோசிப்பதை விட உபயோகிக்கும் மின்சாரத்தை எப்படி மிச்சப்படுத்துவது என்று சற்றே சிந்தித்தால் எவ்வளவு மின்சாரம் மிச்சமாகும்?. ஆனால் பெரும்பாலான அரசு துறை அலுவலகங்களில் வீணாக ஓடும் ஏஸிக்கள், மற்றும் பேன்களுக்கான மின்சார வீணடிப்பை யாரும் கவனிப்பதேயில்லை. கவர்மெண்ட் காசுதானே என்ற ஒரு அலட்சிய மனப்பான்மை அவர்களிடம் இருப்பதை மறுக்க முடியாது.


street light 3
அப்படி ஒரு அலட்சியம் நமது மாநகராட்சியிலும் நடக்கிறது. பெரும்பாலான தெருவிளக்குகள் பகல் நேரத்தில் எரிந்து கொண்டேயிருக்கிறது. ஒரு நாள் அல்ல இரண்டு நாள் அல்ல சுமார் ஒரு வாரம் இதை தொடர்ந்து கவனித்துவிட்டு இதை புகைப்படம் எடுத்து அனுப்பியுள்ளா நண்பர் சந்துரு. அவர் ஏரியா என்று இல்லை சென்னையின் பெரும்பாலான இடங்களில் பகல் நேரங்களில் தெருவிளக்கு எரிந்து கொண்டிருக்கிறது. மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துங்கள் என்று ரேடியோவிலும், டிவியிலும் அறிவிக்கும் முன் மாநகராட்சியின் இம்மாதிரியான மின்சார வீணடிப்பை கவனித்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்?
கேபிள் சங்கர்

Post a Comment

5 comments:

Jayaprakash said...

niyayam than! arasu aluvalgangala poi matha mudiyuma! appuram avargala kurai sollurathukku munnadi nambalum namma pangukku mitcha padutha arambitchuttu appuram avargalayum chollalam

Regards
JP

Sivasamy said...

Even in our area(Tharamani) lights are ON @ day time..
check the below pic..

http://i1249.photobucket.com/albums/hh520/sivasamy/Fantasy1138.jpg

Anonymous said...

கொஞ்ச நாள் கவுன்சிலர்..அப்பறம் டைரக்சன்...அடுத்து டெல்லி..இது போதும் சார்...

arul said...

neengal solvathu mutrilum unmai anna

வவ்வால் said...

கேபிள்,

இந்த பகலிலும் வீதி விளக்கு எரியும் கொடுமையை அடிக்கடிப்பார்க்கிறேன்.தினமலர் போன்ற நாளேடுகளில் கூட படத்துடன் செய்தி வந்துள்ளது. ஒரு முன்னேற்றமும் இல்லை.

எவ்வளவோ செலவு செய்யும் அரசு/மாநகராட்சி கொஞ்சம் செலவு செய்து தானியங்கி ஸ்விட்ச் வைக்கலாம், மாலை 6-காலை 6 வரையில் விளக்குகள் எரியும்.

விளக்கு கம்பத்தின் அடியில் இருக்கும் பெட்டியில் ஒரு ப்யூஸ் கேரியர் இருக்கும் அதை பிடிங்கினால் அணைத்து விடலாம்(மாலையில் மீண்டும் மறக்காமல் ப்யூஸ் போடவில்லை எனில் எரியாது!) கடுப்பாகி அப்படி ஒரு முறை செய்துள்ளேன்,சிலவற்றில் கம்பியோ அல்லது நேரடியாகவோ இணைத்து இருப்பார்கள்.ஒவ்வொரு விளக்கு கம்பத்துக்கும் போய் செய்ய முடியாது.

நிர்வாகம் தான் கவனிக்க வேண்டும்.

மின்சாரம் சேமிக்க எனதுப்பதிவில் சில யோசனைகள் சொல்லி இருக்கேன், அதில் ஒன்று திரையரங்குகளில் நான்கு காட்சிக்கு பதில் இரண்டு காட்சியாக்கலாம் என்பது. தமிழகம்ம் முழுக்க சுமார் 1500 அரங்குகள் எனில் நிறைய மின்சாரம் மிச்சம் ஆகுமே :-))

நான்கு காட்சி எனில் ஜெனெரேட்டர் வைத்து ஓட்டிக்கொள்ளலாம்(இப்பவும் அடிக்கடி ஜெனெரேட்டரில் விட்டு விட்டு ஓட்டவில்லையா)