Thottal Thodarum

Apr 20, 2012

மை

தமிழ் சினிமாவில் வர வர சின்ன பட்ஜெட் படங்கள் எல்லாம் நம்மை இம்சித்துப் பார்க்கும் படங்களாகவே இருந்து கொண்டிருக்கும் நேரத்தில் கொஞ்சம் ஜாலியான ஃபீல் குபடமாய் வந்திருக்கிறது இந்த மை.



பேச்சு சுனாமி சுப்பு (எ) சுப்ரமணியை பற்றிய கதை. சேலம் மேயர் கட்சி ஆதரவு பேச்சாளன். அவனின் அப்பாவும் அந்த கட்சி சிறப்பு பேச்சாளர். ஆள் செட்டப் செய்து தன்னைப் பற்றி பில்டப் செய்துவிட்டு சம்பாதிப்பவன். பேசும் வேலையில்லாத போது ஊரில் உள்ள வீட்டு கதவு, மோட்டார், நாய் ஆகியவற்றை லவட்டிக் கொண்டு சந்தையில் விற்பவன். ஆளுங்கட்சி பவர் இருப்பதால் போலீஸ் ஏதும் செய்ய முடியாமல் தவிக்கிறது. அவனுக்கு ஒரு சிறு வயது நட்பு. இந்நாள் காதலி பானுமதி. யெஸ்டிவி என்கிற லோக்கல் கேபிள் சேனல் நடத்துகிறவள். அம்மா இல்லாத அப்பா செல்லம். சிறு வயதில் சுப்பு செய்த ஒரு செயலால் அவனின் மீது பதினைந்து வருடமாய் கோபமாய் இருப்பவள். ஆனால் சுப்பு அவள் எது சொன்னாலும் செய்வான். இப்படி தான் தோன்றிதனமாய் திரியும் சுப்புவுக்கு பானுமதியை திருமணம் செய்ய வேண்டும் என்ற ஒரு குறிக்கோளைத் தவிர வேறேதும் சீரியசாய் இல்லாமல் சுற்றுகிறான். அப்படி அவனை திருமணம் செய்ய வேண்டுமென்றால், நாலு பேர் மெச்சுற மாதிரி வாழ்ந்து காட்டு கல்யாணம் செய்துகிறேன் என்று பானுமதி கேட்க, பானுமதியின் காதலின் உந்துதலால் சுப்பு என்னவாகிறான் என்பதுதான் கதை.

கதாநாயகனாய் விஷ்ணுபிரியன். ஏற்கனவே இலக்கணம், நினைத்தாலே இனிக்கும் போன்ற படங்களில் நடித்தவர் தான் என்றாலும் இப்படத்தில்தான் முழுவதுமான மனதில் நிற்குமபடியான கேரக்டர். வழக்கமாய் இம்மாதிரி கேரக்டர்களில் நான் ரவுடி நான் ரவுடி என்கிறார் போல ஒரு பில்டப் செய்வதும், ஊர் திருவிழாவில் குத்து பாட்டு பாடிவிட்டு, குடித்துவிட்டு கும்மாளம் போடுவதுமாய் அலைவார்கள். அம்மாதிரி இல்லாமல் மேடைப் பேச்சில் காட்டும் லாவகம், திருடிய பொருட்களை மார்கெட்டில் சல்லீசாய் பேரம் பேசும் ஸ்டைல். காதலியின் ஒரு கண் பார்வைக்காக சட்டென பம்மி, கண்களில் காதல் கொப்பளிக்க நிற்கும் அழகு.  மனிதர் முதல் பாதி முழுவதும் இந்தமாதிரி ஜாலியாய் செய்து கொண்டிருக்க, இரண்டாம் பாதியில் அவர் அரசியல்வாதியாய் மாறி பல பல திருப்பங்கள் நடந்து மேயரானதும் நம்மை நம்ப வைக்க முயற்சித்திருக்கிறார் தன் நடிப்பின் மூலம். நிச்சயம் பாராட்டத் தகுந்த நடிப்பு என்றே சொல்ல வேண்டும்.

கதாநாயகி புதுமுகம் சுவேதா பாசு, குழந்தைத்தனமான முகம், ஹோம்லியாய் இருக்கிறார். கொஞ்சம் சீரியஸ் கேரக்டர், யெஸ்டிவி எனும் சேனலை தனியொரு மனுஷியாய் கமர்ஷியல் அயிட்டங்கள் இல்லாமல் நடத்துவதில் தீவிரம் உடையவள். தான் சொன்னதற்காக ஒரு மனநிலை குன்றியவனை குளிப்பாட்டி கழுவி அவள் முன் நிற்க வைத்தப்பின் அவனின் காதலை ஏற்று, அவனை திருந்த சொல்லும் காட்சியில் மனதில் நிற்கிறார்.
வில்லனாக ஜெயப்பிரகாஷ். மனுஷன் சின்ன கேப் கிடைச்சாலும் கிடா வெட்டி விடுகிறார். தன் சின்னச் சின்ன பாடிலேங்குவேஜிலும், கண் பார்வையிலும். சுப்பு மேயர் பதவி ஏற்கும் போது ஒரு பார்வை பார்ப்பாரே பாருங்கள். அவ்வளவு வன்மம்.

ஒளிப்பதிவு பற்றி பெரிதாய் சொல்ல ஏதுமில்லை. உறுத்தாமல் இருக்கிறது.  தமிழ் படம் கண்ணனின் இசையில் இரண்டு பாடல்கள் நச். முக்கியமாய் “தேவைதை போல் இவள்” நல்ல மெலடி.  பிறகு அந்தக் குத்துப் பாடல், அதில் பாடியிருக்கும் விதமும், பாடல் வரிகளின் கோர்வையும், இசையும், ஆடிய பெண்ணும், நடனம் அமைத்த விதமும் இண்ட்ரஸ்டிங்கான காம்போசிஷன். படத்தில் ஐந்து பாடல்கள் இருந்தாலும் எதுவும் தனியே துருத்திக் கொண்டு இல்லாமல் படத்தோடு போவது சுகம்.
இயக்கியவர் கோபாலன். படத்தை போரடிக்காமல் சுவாரஸ்யமாய் கொடுத்தற்காக இவரை பாராட்டலாம். படு சீரியசாய் சொல்ல வேண்டிய கதையை, இயல்பான நகைச்சுவையுடன் கொடுத்திருக்கிறார். காட்சிகளில் புதுசாய் இல்லாமல் இருந்தாலும் சின்ன சின்ன நிகழ்வுகளின் மூலம் நம்மை இம்பரஸ் செய்கிறார். தீப்பொறி சுனாமி சுப்புவின் பேச்சைக் கேட்டு வேட்டி தீப்பிடிக்கும் என்று பில்டப் கொடுத்துவிட்டு, அவர்களே பத்த விடுவது.  ஓட்டுக்கு பணம் கொடுக்கும் மேட்டர்கள். அந்த பணத்தை வாங்கிவிட்டு குடிமக்களில் ஒருவர் ஓட்டுப் போடும் நாள் அன்று கலாய்க்கும் கலாய்ப்பு. பேங்க் லோன் ஆட்களிடம் சுப்பு அண்ட் கோ செய்யும் கலாட்டாக்கள். க்ளைமாக்ஸின் போது சுப்புவின் நண்பன் கேரக்டர் மூலம் கொடுக்கும் ட்விஸ்ட் என்று படு ஜாலியாக போகிறது படம்.   குறையென்று பார்த்தால்  நிறைய வில்லன் கொலை செய்யும் எதிர்கட்சி ஆள் காணாமல் போய் விட்டான் என்று சொல்லும் போது அதை யாரும் கண்டு கொள்ளாமல் இருப்பதும், அதையே க்ளைமாக்ஸில் உபயோகித்திருப்பது போன்ற லாஜிக் மீறல்களும், திடீரென விஷ்ணு கவுன்சிலராகி, மேயர் ஆவதும் சாத்தியமே என்றாலும், சட்டென ஏற்றுக் கொள்ள முடியவில்லை.ஆனாலும் ஓவர் பில்டப் செய்யாததினாலேயே பரவாயில்லை என்று சொல்லத் தோன்றுகிறது. ஒரு ஃபீல் குட் ஜாலி தமிழ் திரைப்படம்.
கேபிள் சங்கர்

Post a Comment

5 comments:

குரங்குபெடல் said...

Encouraging Review


Thanks for Sharing

Karthik Somalinga said...

மைக்குல ஹீரோ பேசுற ஸ்டில்ல பாத்தா, பழைய தியாகராஜன் ஞாபகத்துக்கு வர்றார்!

scenecreator said...

IN MY BLOG TODAY
ஒரு கல் ஒரு கண்ணாடி --இந்த கண்ணாடி உடைய இன்னும் சில கற்கள் தேவை
http://scenecreator.blogspot.in/2012/04/blog-post.html

arul said...

seems to be a different story

Unknown said...

தெளிவான விமர்சனம்....நன்றி