கிட்டத்தட்ட மூன்று வருடங்களாக வெளிவர முடியாமல் இருந்த படம். என்ன காரணம்? வேறென்ன பைனான்ஸ் ப்ரச்சனை தான். அப்படி இப்படி ஒரு வழியாய் வெளியாகிவிட்டது. இவ்வளவு தூரம் படம் வெளிவருவதைப் பற்றி நான் புலம்புவதற்கு காரணம் இப்படத்தின் இயக்குனர் எனது நண்பர்.
ஆதி – நாராயணா என்று இரண்டு மனநிலையில் இருக்கும் ஒரு இளைஞன் தன் காதல் தேவதையை அடைய துடிக்கும் வயலண்ட் கதை. அந்த தேவதை மீரா. மீராவின் ஒன் சைட் காதல் கருணாஸ். கருணாஸ் அதியின் நண்பன். ஆதியின் உண்மை ஸ்வரூபம் தெரிந்து அவளை அவனிடமிருந்து காப்பாற்ற நினைக்கிறார். கருணாஸ் தன் காதலியை காப்பாற்றினாரா? ஆதி தன் தேவதையை சந்தித்தாரா? மீராவுக்கு ஆதியின் காதல் புரிந்ததா? இல்லை கருணாசின் காதல் புரிந்ததா? என்பது போன்ற குழப்பமான கதைக்கு விடையை மேலும் குழப்பி கொடுத்திருக்கிறார்கள்.
அடிப்படையில் ஹிந்தியில் ஷாருக்கான் நடித்த டர் என்கிற படத்தின் லைன் தான். அதை தெளிவாக சொல்லாமல் தேவதை அது இது போட்டு குழப்பி எடுத்திருக்க வேண்டாம்.
ஆதி – நாராயணா என்று இரண்டு மனநிலை கேரக்டரில் கஜன். தகுதிக்கு மீறிய கேரக்டர். தோளிலும் சுமக்க முடியாமல், தலையிலும் சுமக்க முடியாமல் கேரக்டரை கீழே போட்டு அதில் மேல் உட்கார்ந்து விடுகிறார். அவரைச் சொல்லி தவறு இல்லை. மீரா ஜாஸ்மீனுக்கு வேலையே இல்லை. அவ்வப்போது அழகிய உடைகளில் சில காட்சிகளில் கொஞ்சம் குண்டாகவும், சில காட்சிகளில் ஒட்டிய வயிறுடனும் வருகிறார். இந்தக் கதையின் நாயகி அவர். ஆனால் அவருக்கு கதையின் நடக்கும் சம்பவங்களுக்கு எந்தவிதமான சம்பந்தமே இல்லை என்பது போல இருக்கிறார். பாதி காட்சிகளில் எல்லார் முகத்திலும் அநியாய மேக்கப். கருணாஸ் தான் படத்தின் இன்னொரு கதாநாயகன். அவர் கேரக்டரும் முழுமையாய் இல்லை என்பதால் சரியானபடி ஏற மறுக்கிறது.
ஒளிப்பதிவு ஆர்.செல்வா. ஒரு காலத்தில் பெரிய பட்ஜெட் விஜய் படங்களுக்கு எல்லாம் ஒளிப்பதிவு செய்தவர். பின்னாளில் சின்ன பட்ஜெட் படங்களில் மாட்டி காணாமல் போய்விட்டார். பெரிதாய் ஒன்றும் சொல்வதற்கு இல்லை. இசை ஸ்ரீகாந்த் தேவா.. பிறகு சொல்லத் தேவையில்லை.
எழுதி இயக்கியவர் வெற்றி வேந்தன் அருமையாய் சொல்லியிருக்க வேண்டிய த்ரில்லைரை வித்யாசமான திரைக்கதை யுக்தியில் சொல்ல முயன்று முதல் பாதியில் தோற்றிருக்கிறார். அதாவது ஆதி என்பவன் யார்? நாராயணன் என்பவன் யார்? அவன் ஏன் மீராவை பார்க்காமல் துரத்த வேண்டும்? மீரா ஏன் ஆதியை பார்த்து பயப்பட வேண்டும்? மீரா தற்கொலைக்கு முயன்றது ஆதி என்கிற நாராயணன் அவளை காதலிக்கிறேன் என்று முத்தமிட்டதாலா? கருணாஸை எதற்காக அதி தன் ந்ண்பனாய் ஏற்றுக் கொள்கிறான்?. நாராயணா என்று இருப்பவனின் மனநிலை மாற்றம் ஏன்? என்று இப்படி பல கேள்விகளுக்கு விடையில்லாமல் ஒரு மாதிரி ஒட்டி வெட்டி கதையை முடித்திருப்பதைப் பார்க்கும் போது நிச்சயம் பட்ஜெட் மற்றும் கிடைத்ததை, எடுத்ததை வைத்து முடித்திருப்பது தெரிகிறது. பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம் நண்பா.
Post a Comment
6 comments:
பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம் நண்பா.
உங்க நேர்மை . . . .
pudichirukku
யோவ் நீர் தான் KRP ஐயும் கூட்டி போனீரா? மனுஷன் தியேட்டரில் இருந்தே Facebook-ல் புலம்பி கொண்டிருந்தார்
மசாலா கபே படம் டிரைலர் அடிக்கடி போடுறாங்க. கலக்கலா இருக்கு ! என் நண்பர் வசனம் எழுதியது என பெருமையா வீட்டில் சொல்லிட்டு இருக்கேன்
பிரிவியூ ஷோ ஏதும் வச்ச்சா சொல்லுங்கையா
மீராவோட படத்துக்கு கீழ இருக்குற பெண்மணி(!) யாருன்னு சொல்ல மறந்துட்டீங்களா பாஸ்? ஒருவேளை, மீரா ஜாஸ்மின்தான் மேக்கப் இல்லாம இப்படி இருக்கிறாங்களோ?!
- Karthik
director ennudaya junior in college and my friend
hii.. Nice Post
Thanks for sharing
For latest stills videos visit ..
Best Regarding.
www.ChiCha.in
www.ChiCha.in
Post a Comment