முதல்வன் பட இண்டர்வியூ போல சி.என்.என் - ஐ.பி.என் டிவி பேட்டியிலிருந்து பாதியில் வெளியேறியிருக்கிறார் மம்தா அக்கா. கல்லூரிகளில் இருந்து வந்திருந்த மாணவர்கள் தொடர்ந்து ஜெய்தேவ் கார்டூன் ப்ரச்சனையை பற்றியும், அவருடய மாநிலத்தில் பெண்கள் மீது நடக்கும் அராஜகங்களையும், போலீஸாரின் நடவடிக்கைப் பற்றியும், சட்ட ஒழுங்கு பிரச்சனை குறித்தும் தொடர்ந்து கேள்வி கேட்க, கடுப்பாகிப் போன மம்தா பாதி நிகழ்ச்சியில் சட்டசபையில் வெளிநடப்பு நடப்பது போல வெளியேறியிருக்கிறார். போகிற போக்கில் அம்மாதிரியான கேள்வி கேட்டவர்கள் எல்லாம் மாவோயிஸ்ட் தீவிரவாத மாணவர்கள் என்று குற்றம் சாட்டியிருக்கிறார். நிகழ்ச்சியை நடத்திய சகாரிகா கோஷ் எவ்வளவோ அவர்கள் மாவோயிஸ்ட் அல்ல, இந்திந்த யூனிவர்சிட்டியிலிருந்து வந்திருக்கும் மாணவர்கள் என்று விளக்கம் அளித்துள்ளார். அதற்கு அப்படியே இருந்தாலும், அவர்கள் மாவோயிஸ்ட் மாணவர்கள்தான் என்று காச்சு காச்சு என்று கத்திவிட்டு போயிருக்கிறார். இப்படியெல்லாம் நடக்கும்னு தெரிஞ்சுதான் நம்மூர் அரசியல்வாதிகள் எல்லாம், பப்ளிக் கலந்து கொள்ளும் டிவி நிகழ்ச்சிகளுக்கு போவதில்லை. அப்படி மட்டும் மம்மியோ, த...