Thottal Thodarum

May 15, 2012

நான் – ஷர்மி – வைரம் -17

தமிழ் வலையுலகில் முதன் முதலாய் 50 லட்சம் ஹிட்ஸுகளை பெற்ற தளமாக்கிய வாசக அன்பர்களுக்கும், பதிவுகலக நண்பர்களுக்கும் என் நன்றி.. நன்றி.. நன்றி..
17 நான்
sharmi 17 ஆம் பெரிய ப்ரச்சனைதான். நானே இழுத்துவிட்டுக் கொண்டது. அவள் அப்படிச் செய்வாள் என்று நான் எதிர்பார்க்கவில்லை. அவள் பெயர் நிவேதிதா. கரோலின் என்கிற வெள்ளைக்கார பெண் மூலம் அறிமுகமானவள். கரோலின் ஸ்பெயினில் ஒரு பத்திரிக்கைக்காரி. நிவேதிதாவும் ஒரு பத்திரிக்கைக்காரி என்று எனக்கு தெரியாது. கரோலின் சுவாரஸ்யமான பெண். எவ்வளவோ பெண்களைப் பார்த்திருக்கிறேன். ஆனால் இவள் வித்யாசமானவளாயிருந்தாள்.



என்னுடன் உறவு கொள்ளும் போது மற்ற பெண்களைப் போல அவளுடய சோகத்தை சொல்லவில்லை. அல்லது அவளது வக்கிரங்களை வெளிப்படுத்தவில்லை. அவளின் ஒவ்வொரு மூவும் ரசனையோடு இருந்தது. அறைக்குள் வந்ததும் குளிக்க போய்விடுவாள் என்னையும் குளிக்கச் சொல்வாள். ரெட் ஒயினுக்கு ஆர்டர் சொல்லிவிட்டு, “உனக்கென்ன வேண்டும்?” என்று கேட்பாள். பெரும்பாலும் கஸ்டமர்களுடன் நான் குடிப்பதில்லை. அது பல சமயங்களில் சரி வராது என்று ஏற்கனவே சொல்லியிருக்கிறேன். ஆனாலும் அவளுடன் மட்டுமென்றால் ஒயினை தேர்தெடுப்பேன். டிவியை ஆன் செய்து ஏதாவது இசை சம்பந்தப்பட்ட சேனலை ஆன் செய்துவிட்டு, அது கேட்டும் கேட்காத வண்ணம் ஒலியை அமைத்து, ஒயினை எடுத்து ஆளுக்கொரு கிளாஸில் ஊற்றி அவள் கிளாஸை நானும், என் க்ளாஸை அவளும் மாற்றி வைத்துக் கொண்டு ஊட்டிவிடுவாள். நடுநடுவே ஒயின் குடித்த உதடுகளோடு என்னை முத்தமிட ஆரம்பித்து, முதல் க்ளாஸ் ஒயின் முடியும் போது அவளின் முத்தத்தில் வேகம் அதிகரிக்கும். வேகமிருந்தாலும் அதில் வெறி இருக்காது. மெல்ல, என் கீழுதட்டை கவ்வி, தன் நாக்கை என் வாய்க்குள் விட்டு, என் நாக்கை அவளின் நாக்கால் உறவாட, இயல்பான சூடு உடலில் பரவி எங்களுக்குள் நடக்கும் செக்ஸ் ரைஸ் குக்கர் ப்ரெஷர் போல மெல்ல, மெல்ல ஏறி உச்சத்தில் வெளியேறும் அந்த அனுபவத்தை அவளுடன் இருந்தால்தான் புரியும். என்னுடனான அனுபவம் அவளுக்கு எப்பவும் பிடிக்கும் என்பதால் எப்போது இந்தியா வந்தாலும் அவள் என்னை அழைக்காமல் இருக்க மாட்டாள். வேறு வேலை இருந்தாலும் நான் அதை தட்டிக் கழித்துவிட்டு வந்துவிடுவேன். ஏனென்றால் இவளிடம் தான் நான் செக்ஸை அனுபவிக்கிறேன் என்பது என் கணிப்பு.

அவள் ஒரு நாள் நிவேதிதாவுடன் வந்திருந்தாள். தன் தோழி எனவும், என்னைப் போன்ற ஆட்கள் இந்தியாவில் இருக்கிறார்கள் என்று சொன்ன போது அவள் நம்பவில்லை என்றும், அதனால்தான் உன்னை இங்கே வரச் சொன்னேன் என்றாள். அவள் என்னைப் பார்த்த வித்ததில் ஆச்சர்யமிருந்தது. இந்தியாவில் ஆண்களுக்கு பெண்களின் அருகாமை கிடைக்கவே அலைந்து கிடக்கும் நிலையில் பணம் கொடுத்து ஆணுடன் சல்லாபிக்கும் வாய்ப்பிருக்கிறவனை அவள் ஆச்சர்யமாய் பார்ப்பது ஒன்றும் அதிசயமில்லை. கரோலின் என்னுடன் உட்காரும் போது காட்டிய நெருக்கத்தை பார்த்து கூச்சப்பட்டாள். முகம் சிவந்தாள். எப்படி இந்த தொழிலுக்கு வந்தீர்கள்? இதை பற்றி என்ன நினைக்கிறீர்கள்? என்று கேள்விகளால் துளைத்தெடுத்தாள். எனக்கு அவளின் கேள்விகள் எரிச்சலாய் இருந்த்து. கரோலினின் நண்பியாக இருந்த்தால் வெளிக்காட்ட முடியவில்லை. அன்று டின்னர் முழுவதும் அவளின் கேள்விகளுக்கு பதில் சொல்லியே மாய்ந்து போனேன். அவளின் எல்லா கேள்விகளிலும் ஆச்சர்யம் கலந்திருந்தது. கிளம்பும் போது கரோலினை கட்டி அணைத்து விடைப் பெற்றவள் என்னையும் கட்டி அணைத்து விடைபெறும் போது அவள் உடலில் லேசான நடுக்கம் இருப்பதை உணர்ந்தேன். பட்டும் படாத ஒருவிதமான நாசூக்கான அணைப்பு. உள்ளூக்குள் மனசு அலைபாய்வதை உணர முடிந்தது.

அடுத்தடுத்த சந்திப்புகள் கரோலின் இல்லாமல் நடந்தது. ஏதாவது ஒரு நட்சத்திர ஓட்டலுக்கு வரச் சொல்லிவிட்டு, காபி ஷாப்பில் உட்கார்ந்து பேசிவிட்டு, மீண்டும் கிளம்புகையில் அதே நடுக்கத்துடனான அணைப்புடன் கிளம்பிவிடுவாள். போகும் போது எனக்கான பணமும் கொடுத்துவிட்டுத்தான் போவாள். அன்று அப்படித்தான் பணம் கொடுத்துவிட்டு கிளம்ப எத்தனிக்கையில் அவளின் கையில் பணத்தை திணித்து, “எனக்கு வேண்டாம்” என்றேன். அவள் புரியாமல் விழித்தாள். “என் சர்வீஸை பயன்படுத்தாமல் பணம் வாங்குவது ஒரு மாதிரியாக இருக்கிறது அதனால் வேண்டாம்” என்றேன். சட்டென பதட்ட்த்துடன்.. “சாரி.. சாரி.. அப்படி எடுத்துக் கொள்ளாதே நீ.. எனக்காக வந்திருக்கிறாய்.. உன் நேரத்துக்கான பணத்தை கொடுப்பதுதான் நியாயம்” என்றாள். நாம் மீண்டும் சிரித்தபடி அவளின் பேக்கில் பணத்தை வைத்தேன்.

“மேபி சம் அதர் டே.. எனக்கு இன்னமும் தைரியம் வரவில்லை”

“இப் யூ டோண்ட் மைண்ட் ஆர் யூ வர்ஜின்?”

சட்டென கண்களை விரித்து என்னைப் பார்த்தபடி “இல்லை.. பட்.. உன் போன்ற ஆட்களுடன் இதுவரை இல்லை. ஆனால் உள்ளூக்குள் ஆர்வம் எழத்தான் செய்கிறது. முடியத்தான் மாட்டேன் என்கிறது மனம்” என்றாள். அவள் பேசி முடிக்கும் போது அவளின் வார்த்தைகளில் பெரும் தடுமாற்றம் இருந்தது. அவளுள் இருக்கும் பதட்டம் எனக்கு பாவமாய் இருந்தது. காபி ஷாப்பென பாராமல் சட்டென அவளை அணைத்து உதடுகளில் முத்தமிட்டேன். அவள் விதிர்த்து விலகாமல், நடுக்கத்துடன் என் உதடுகளை தேடினாள். அடுத்த சில நிமிடங்களில் நானும் அவளும் அந்த நட்சத்திர ஓட்டல் சூட்டில் தான் நின்றோம். ஸ்டார்டிங் ட்ரெபிள்தான் அவளுக்கு என்பது அடுத்த சில மணி நேரங்களில் தெரிந்தது. அன்று போகும் போது டபுள் மடங்காய் பணத்தை என் பாக்கெட்டில் வைத்துவிட்டு போனாள். பிறகு என்னை தொடர்பு கொள்ளவேயில்லை. எதையும் ஒரு முறை பார்க்கும் பார்டியாய் இருக்குமென்று நான் மறந்திருந்த வேளையில் திடீரென ஒரு நாள் என் வீட்டிற்கு போலீஸ் வந்தது. எனக்கு ஒன்றும் புரியவில்லை. அய்யா வரச் சொன்னதாக சொல்லி வேறேதும் கூறாமல் ஜீப்பில் அழைத்துப் போனார்கள். ஸ்டேஷன் போனதும் தான் தெரிந்தது ப்ரச்சனை என்னவென்று. அங்கே நிவேதிதா இருந்தாள். கூடவே இன்னும் இரண்டு பேர் உட்கார்ந்திருந்தார்கள். ஒன்றும் புரியாமல் நான் நிவேதிதாவையே பார்த்தேன். அவளை முறைப்பதைப் பார்த்த ஒர் கான்ஸ்டபிள் “என்னாடா முறைப்பு..” என்று என் பின்னந்தலையில் ஓங்கி ஒரு அடி அடித்தார். கண்கள் எல்லாம் கிறு கிறுவென சுற்றி நின்றது போலிருந்தது. இது வரை நான் அடி வாங்கியதில்லை. நிவேதிதா ஒரு பதற்றத்தோடு என்னை நோக்கி ஓடி வர, “ அம்மா.. நீங்க சும்மா உக்காருங்க. இந்த மாதிரி தேவிடியா பசங்களையெல்லாம் சும்மா விடக்கூடாது” என்று மேலும் ஒரு அடி அடிக்க கையை ஓங்க.. சட்டென விலகி “சார். எதுக்கு சார் அடிக்கிறீங்க?” என்றேன் சத்தமாய்.

“ம்ம்ம்... அதை நான் சொல்றேன்” என்று எழுந்து வந்தார் இன்ஸ்பெக்டர். எங்கே அடிக்கப் போகிறாரோ என்று பயந்து பின்வாங்கினேன். ஆனால் அவர் அடிக்காமல் என் முன் தமிழில் வரும் ஒரு முக்கிய பத்திரிக்கையை போட்டார். அதில் என் சில்ஹவுட் பட்த்தோடு, காசுக்காக தன்னையே விற்கும் ஆண் விபசாரன்கள் என்று கொட்டை எழுத்தில் எழுதப்பட்டிருக்க, நிவேதிதா என்னிடம் கேட்ட கேள்விகள் எதற்காக என்று புரிந்தது. அவளை கோபத்துடன் பார்த்தேன். என்ன செய்வது என்றே புரியவில்லை. இத்தனை நாள் அக்காவுக்கு கூட தெரியாமல் இருந்த விஷயம் பேப்பரில் வந்துவிட்டிருக்கிறது. பதட்டமாய் இருந்தது.

“என்ன நிவேதிதா இப்படி பண்ணிட்டீங்க?”

“சாரி.. பத்திரிக்கையில கட்டுரை வந்த்தும், வாசகர்கள் கிட்டேயிருந்து பயங்கர ரெஸ்பான்ஸ். அதனால பத்திரிக்கை ஆசிரியர் நேர இதுக்கு ஆக்‌ஷன் எடுத்து அதை ரிப்போர்ட் பண்ணனும்னு சொல்லிட்டாரு வேற வழியில்லை” என்றாள் கையை பிசைந்து கொண்டே, அடுத்து என்ன செய்வது, யாரைக் கூப்பிடுவது, என்னை பிடித்தால் யாரெல்லாம் மாட்டுவார்கள், அரெஸ்ட் செய்வார்களா? இல்லை உள்ளே வைத்து அடிப்பார்களா? தப்பித்து ஓடி விடலாமா? என்றெல்லாம் கசகசவென யோசனைகளாய் மண்டைக்குள் ஓடிய வேளையில் எனக்கு சட்டென ஒரு முகம் நினைவுக்கு வந்தது. வசந்தி மேடம்.. உடன் அவளது நம்பரும் ஞாபகத்திற்கு வர, நிவேதிதாவை அணுக, கிட்டே போன போது “தம்பி.. கொஞ்சம் உக்கார்ரியா?” என்று கான்ஸ்டபிள் அதட்டினார். நான் பம்மிக் கொண்டு மரசேரில் உட்கார்ந்தேன். நிவேதிதாவுடன் வந்திருந்த இரண்டு பேரில் ஒருவர். என்னை வெறுப்புடன் பார்த்தபடி “சீ தீஸ் கெய்.. கொஞ்சமாவது குற்ற உணர்ச்சி இருக்கிறதான்னு பாருங்க..” என்று வெறுப்புடன் பேசினார்.

“அட இவன் கூட படுத்தவளுக்கு இல்லாத குற்ற உணர்ச்சி ஆம்பளை இவனுக்கெங்க வந்திருங்க” என்று பெரிய ஜோக்கை சொன்னதைப் போல தானே ஃபீல் செய்து இன்ஸ்பெக்டர் சிரித்தார். “ஆனாலும் பாருங்க.. அவனவன் இது கிடைக்காம ரேப்பு அது இதுன்னு ஆயிட்டிருக்கிற நேரத்தில காசும் கொடுத்து சுகமும் கிடைக்குதுன்னா மச்சம்தாண்டா.. உனக்கெல்லாம்” என்று டேபிளின் முன்னுக்கு வந்து என் தலையில் தட்டினார். சரியான் அடி. எதிர்பார்க்கவேயில்லை. அவர்களுக்கு என் மேல் கோபத்தை விட பொறாமை அதிகமாய் இருந்த்து அவர்களின் பார்வையிலேயே தெரிந்தது. இன்ஸ்பெக்டர் என்னுடன் படுத்த பெண்களைப் பற்றிச் சொல்லும் போது நிவேதிதா ஏதும் பேசாமல் வேறெங்கோ பார்த்துக் கொண்டிருந்தாள்.

“சார்.. இதுல என்ன எழுதியிருக்குனு கூட எனக்கு தெரியாது. இந்த பட்த்தில இருக்கிறது நாந்தானு கூட சரியா தெரியலை.. அப்படியிருக்க என்னை ஏன் கூட்டிட்டு வந்தீங்க? அவங்க பத்திரிக்கைக்காரங்க என்ன வேணும்னாலும் எழுதுவாங்க.. அதுக்காக ப்ரூப் இல்லாமல் என்னை ஏன் அழைச்சுட்டு வ்ந்து அடிக்கிறீங்க?”

”பாருங்க சார்.. இவனெல்லாம் சட்டம் பேசுறான். என்னா பண்ணா தேவலை.. பொட்டச்சிங்களாயிருந்தா அட்லீஸ்ட் ஹோமுக்காவது அனுப்பலாம். இவனை எந்த செக்‌ஷன்ல கேஸ் போடுறதுன்னு யோசிச்சுத்தான் போடணும். வேணுமின்னா போன் செய்து ஆபாசமா பேசினான்னு கேஸ் போட்டு ஒரு மூணு மாசம் உள்ள தள்ளிரட்டுமா?” என்று நிவேதிதாவுடன் வந்த்வர்களிடம் கேட்க, “சார்... நான் ஒரு போன் பண்ணிக்கணும்” என்றேன்.

”என்ன லாயருக்கு போன் பண்ணப் போறியா?” என்றார் நக்கலாய்.

”இந்தப் பசங்களை இந்தக் கேடு கெட்ட கலாச்சாரத்திலேர்ந்து காப்பாத்தணும் சார்.. அதைத்தான் எங்க வாசகர்களும் விரும்புறாங்க.. இத நாங்க ஒரு போட்டோ செஷனான பண்ணி போடப்போறோம். இந்த வாரம் இந்த நியூஸுக்கே பத்தாயிரம் காப்பி எக்ஸ்ட்ரா போயிருக்குன்னா பாத்துக்கங்க..” என்றார்.

இதற்கு நான் என் செல்லை எடுத்து வசந்தி மேட்த்திற்கு நம்பர் போட்டேன். ஹலோ என்ற என் குரலைக் கேட்ட்தும் மேடம் உற்சாகமாய் “ புஜ்ஜிக் குட்டி.. என்னடா செல்லம் நீயே கூப்பிடுற. என் நினைப்பு வந்திருச்சா?” என்றாள் கொஞ்சலாய். நான் அவள் கொஞ்சலுக்கு பதில் சொல்லாமல் நடந்த விஷயத்தை சொல்லி என்னை காப்பாற்ற்ச் சொன்னேன். ஸ்டேஷ்ன நம்பரையும் சொன்னேன். அரை மணி நேரத்தில் நீ வெளிய இருப்பே என்று சொல்லிவிட்டு போனை வைத்தாள். அடுத்த பத்து நிமிடத்தில் நான் எந்தவிதமான கேசும் இல்லாமல் வெளியே வந்தேன்.
கேபிள் சங்கர்

Post a Comment

10 comments:

'பரிவை' சே.குமார் said...

super...

rajamelaiyur said...

50,00,000 ஹிட்ஸ் மிக பெரிய சாதனை .. தொடரட்டும் உங்கள் சாதனை

rajamelaiyur said...

அருமையான , விறுவிறுப்பான கதை ...

rajamelaiyur said...

இன்று

ஒரு வீடு இரு திருடர்கள்

MANO நாஞ்சில் மனோ said...

இன்னும் பல சாதனைகளை தொட வாழ்த்துகிறேன்...!!!

சிவகுமார் said...

super turning and excellent fit ..,

கேரளாக்காரன் said...

Awesome story

Unknown said...

Congrats on 50 L.. Way to Go, Thala.. Awaiting 1 C hits Soon :)

Unknown said...

மிகப் பெரிய சாதனை! வாழ்த்துக்கள் பெருமையுடன்!

R. Jagannathan said...

50L! Great!! You will reach greater heights! Best Wishes! - R. J.