Thottal Thodarum

May 5, 2012

வழக்கு எண் :18/9

vazhakku-enn-movie-preview சில ஈரானிய படங்களைப் பார்க்கும் போது இது போல தமிழில் படங்கள் வராதா என்ற ஒரு ஏக்கம் சின்னதாய் மனதில் ஓடிக் கொண்டேயிருக்கும். இதோ அதை நிவர்த்தி செய்ய வந்திருக்கும் படம்.



தினமும் தினசரிகளில் பார்க்கும் செய்திதான் படத்தின் கதை. செய்தியாய் பாதிக்காத அக்கதை படமாய் விரியும் போது பகீரென்கிறது. முகத்தில் ஆசிட் ஊத்தப்பட்டு ரணகளமாய் ஆஸ்பத்திரிக்கு வந்து சேரும் வேலைக்கார பெண்ணிடமிருந்து கதை ஆரம்பிக்கிறது. அதே ஏரியாவில் ப்ளாட்பாரக்கடையில் வேலைப் பார்க்கும் வேலுவின் மீது அப்பெண்ணின் அம்மா சந்தேகப்பட, அவனைக் கூட்டி வந்து விசாரணை செய்கிறார்கள். இது ஒரு எபிசோட். இன்னொரு எபிசோட் அந்த பெண் வேலைப் பார்க்கும் வீட்டில் உள்ள பெண் தன்னுடன் ப்ளிரிட் செய்தவனும், ஆபாச வீடியோ எடுத்தவனுமான மேல் வீட்டுப் பையன் தான் செய்திருக்க வேண்டும் என்று சொல்கிறாள். இரண்டையும் விசாரித்த போலீஸ் என்ன செய்தது? கோர்ட்டுக்கு போகும் வழக்கு எண் 18/9ன் தீர்ப்பு என்ன என்பதுதான் கதை.9_20120315_1419389527 ஸ்ரீ எனும் புதுமுகம் தான் ப்ளாட்பாரக்கடை இளைஞன். சட்டென நாம் எங்காவது பார்த்த முகம் போல ஞாபகம் வருவதை தவிர்க்க முடியவில்லை. ஓரிரு இடங்களில் அபரிமிதமான அழுகையும், அப்பாவித்தனைத்தையும் தவிர பாராட்டக் கூடிய நடிப்பு. அவரின் நண்பனாய் வரும் கூத்து கலை சிறுவனின் நடிப்பும், அவ்வப்போது கொடுக்கும் பஞ்ச்சுகளும் அட்டகாசம். மிக சீரியஸாய் போகும் படத்தில் கொஞ்சமே கொஞ்ச நேரம் ரிலாக்சேஷன்.
18_CP_still_jpg_954603f
கதாநாயகிகளாய் வலம் வரும் வேலைக்காரப் பெண் ஊர்மிளாவின் முகமும், அவருடய காஸ்ட்யூமும் அவ்வளவு இயல்பு.  ஊர்மிளா வேலை செய்யும் வீட்டுக்கார பெண் மஹிமாவின் நடிப்பு ஓகே. மேல் வீட்டுப் பையனின் நடவடிக்கைகளைப் பார்த்து மயங்கிப் போய் என்ன செய்வது என்று புரியாமல் அவனுடன் ஈ.சி.ஆர்.போய் வரும் காட்சியிலும், தோழிகளுடன் அவனைப் பற்றி பேசும் காட்சியிலும் ஈர்க்கிறார்.

இன்ஸ்பெக்டர் குமரவேல். படத்தில் எல்லோரையும் தூக்கிச் சாப்பிட்டு விடும் படு யாதார்த்தமான நடிப்பு. மனுஷன் போலீஸ் இன்ஸ்பெக்டராகவே வாழ்ந்திருக்கிறார். அவ்வளவு இயல்பு. அவரது பாடி லேங்குவேஜ், டயலாக் டெலிவரி எல்லாமே படு சிறப்பு.

கேனான் 5டியில் ஒளிப்பதிவு செய்திருக்கிறார் விஜய் மில்டன். இப்படத்திற்கு இந்த டெக்னாலஜி படு பாந்தமாய் பொருந்துகிறது. கிட்டத்தட்ட நம் பக்கத்து வீட்டில் நடப்பதை கூடவே இருந்து பார்ப்பது  போன்றதொரு விஷுவல்கள். வாழ்த்துக்கள் விஜய். ப்ரசன்னாவின் பின்னணியிசை ஓகே.  அந்த வானத்தையே எட்டிப் பிடிப்பேன் பாடல் மனதை தொடவில்லை.
Vazhakku-Enn-18-9-Movie-Stills-03
ஆரம்பக் காட்சிகளில் வரும் விபச்சாரப் பெண், அவளது தோழி, ப்ளாட்பாரக்கடை ஓனர்,  வேலைக்காரப் பெண்ணின் அம்மா, பணக்காரப் பெண்ணின் தோழிகள், அவளுடய அம்மா, அப்பா, போலீஸ் இன்ஸ்பெக்டர்,  முகம் காட்டாத அமைச்சர், என்று குட்டிக் குட்டிக் கேரக்டர்களுக்கு கூட முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார் இயக்குனர் பாலாஜி சக்திவேல். பல இடங்களில் வசனங்கள் கேரக்டர்கள் பேசுவதை விட வாய்ஸ் ஓவரில் சொல்லும் விஷயங்கள் சூப்பர். உதாரணமாய் இரண்டு விபச்சாரிகளும், பேசிக் கொண்டே நடக்க, அவர்களது பேச்சு எந்த ஏரியாவில் அவர்கள் இன்று நிற்க போவது என்றும் சாந்தி தியேட்டர் சப்வே என்று சொல்வது, இப்படி பல இடங்களில் கைதட்டல் வாங்குகிறது வசனங்கள். இன்றைய இளம்பெண்களின் ஆட்டிட்டியூடை பட்டவர்தனமாய் வெளிப்படுத்தியிருப்பது சூப்பர். பல இடங்களில் ஹீரோயின்களை விட அவளது தோழிகள் செம அழகாய் இருக்கிறார்கள்.இரண்டு தனித்தனி எபிசோடுகளாய் இருந்தாலும் அதை இணைக்கும் காட்சிகளை வைத்திருக்கும் இடங்கள் அருமை.Vazhakku-Enn-18-9 படம் நெடுக ப்ள்ஸ்களே நிறைய இருந்தாலும் ஆரம்பக் காட்சியில் தெரியும் லேசான டாக்குமெண்டரித்தனமும், க்ளைமாக்ஸில் வேலைக்கார ஹீரோயின் எடுக்கும் முடிவுக்கான தைரியத்தை எங்கிருந்து பெற்றாள்? ஹீரோவின் ப்ரெண்டு சொன்னதால் உடனே நம்பிவிடுவாளா? எங்கப்பா அப்படி எங்களை வளர்க்கவில்லை என்று சொல்லும் போது தான் அவளுக்கு அப்பா யார் என்ற கேள்வி எழுகிறது. ஒரே ஒரு காட்சியில் அவளுடய அம்மா மத்தவங்களுக்கு உதவி செய்தே இறந்து போனார் என்று புலம்புவதைத் தவிர வேறேதும் காட்சிகள் இல்லாத பட்சத்தில் புரியாமல் போக வாய்ப்பிருக்கிறது. மற்றபடி தமிழ் சினிமா சந்தோஷமாய், தைரியமாய், திமிருடன் காலரை தூக்கிக் கொண்டு திரிய வைத்திருக்கும் பாலாஜி சக்திவேலுக்கு நன்றிகள் பல. இம்மாதிரியான படங்கள் நன்றாக ஓடினால்தான் நல்ல படங்கள் நமக்கு கிடைக்கும். 
 வழக்கு எண்:18/9 – அருமை… அருமை.. அருமைய்யா
கேபிள் சங்கர்

Post a Comment

35 comments:

GeeYen said...

Good review brother... TheatreTime's wishes..

GeeYen said...

Good review brother... TheatreTime's wishes..

GeeYen said...

Good review brother... TheatreTime's wishes..

Anonymous said...

அருமையான விமர்சனம்.. இதை படிக்கும் போதே காட்சிகள் கண்முன் விரிகின்றது படம் பார்க்காமலே..சீக்கிரம் பார்த்துவிடவும் ஆவலை தூண்டுகிறது.. நன்றிகள்..

ஹாலிவுட்ரசிகன் said...

நல்ல விமர்சனம் சார். படத்தைப் பார்க்க ஆவலும் வருகிறது.

rajasundararajan said...

//ஒரே ஒரு காட்சியில் அவளுடய அம்மா மத்தவங்களுக்கு உதவி செய்தே இறந்து போனார் என்று புலம்புவதைத் தவிர வேறேதும் காட்சிகள் இல்லாத பட்சத்தில் புரியாமல் போக வாய்ப்பிருக்கிறது.//

எனக்கும் இந்தக் கவலை வந்தது. நல்ல படங்கள் வணிக அளவிலும் வென்றாக வேண்டுமே என்கிற பதைபதைப்பு தானாகவே தொற்றிக் கொள்கிறது.

பொறுப்பான விமர்சனம். வாழ்க!

இந்தநேரம் பார்த்து நட்சத்திர நடிகர்களின் படங்களை வெளியிடுவார்கள் பாருங்கள், அந்தப் பொறுப்பின்மைக்கும் பதைபதைக்க வேண்டி இருக்கிறது.

Unknown said...

நேர்த்தியான விமர்சனம்:))

Ravichandran Somu said...

வழக்கம்போல அருமையான விமர்சனம் தலைவரே... இன்று படம் பார்த்திடலாம் !!!

Anonymous said...

Nice Review, Visit my website to know about coimbatore movie screening information.

www.coimbatorecinemas.com

MARI The Great said...

அருமையான விமர்சனம்

prabhu ram said...

// க்ளைமாக்ஸில் வேலைக்கார ஹீரோயின் எடுக்கும் முடிவுக்கான தைரியத்தை எங்கிருந்து பெற்றாள்?///

In the first duet song, they shows some books such as 'Lenin' etc and she says "These are my father's collections". This clearly says where she got that guts..

scenecreator said...

கேபிள் சார், நான் இதுவரை உங்கள் பதிவில் மரியாதை குறைவாகவோ,நாகரீகமற்ற முறையிலோ ,பின்னோட்டம் போட்டதில்லை.நீங்கள் என் பின்னோடங்களை எடுத்து பார்க்கலாம்.ஆனால் நீங்கள் தான் என்னை காமெடி பீஸ் ,எழவு என்றெல்லாம் எனக்கு பதில் சொல்லி இருகிறீர்கள்.நான் சொன்னது என்ன,விஜய்,தனுஷ் போன்றவர்கள் உங்களுக்கு பிடிக்காது.இது உங்கள் பதிவை தொடர்ந்து படிக்கும் நிறைய பேருக்கு தெரியும்.மற்றொரு விஷயம் நீங்கள் எழுதிய 90 சதவிகித பதிவுகளை படித்துள்ளவன் நான். விமர்சனங்களை தாங்க முடியாத நீங்கள் விமர்சனம் எழுதுவது எப்படி? தயவு செய்து மரியாதையை கொடுத்து பின்னோட்டம் போடுபவர்களிடம் கொஞ்சமாவது நாகரீகத்தோடு ,நாவடக்கதொடு , பதில் போடுவது நல்லது.

rajasundararajan said...

//In the first duet song, they shows some books such as 'Lenin' etc and she says "These are my father's collections". This clearly says where she got that guts..//

ஆனால் அது நாயகன் காணும் கனவுப் பாட்டு என்றல்லவா காண்பிக்கிறார்கள்? ஆகவே அந்த லெனின் புத்தகம் நாயகனின் குணம் சார்ந்தது என்று வேண்டுமானால் கொள்ளலாம்.

rajamelaiyur said...

மன்னிக்கவும் நான் விமர்சனத்தை படிக்கவில்லை , கதை தெரியாமல் படம் பார்க்க வேண்டும் என நினைக்கிறேன் , படத்தின் அருமை உங்கள் விமர்சனத்தின் முதல் இரண்டு வரியில் தெரிந்து விட்டது

rajamelaiyur said...

இன்று

கண்டபடி E-Mail அனுப்பி தொல்லை செய்பவர்களை தடுப்பது எப்படி ?

KARTHIIGUNA said...

ரொம்ப நாளைக்கு அப்பறம் ஒரு நல்ல தமிழ் சினிமா இல்லை இல்லை ஒரு இந்திய சினிமா

வெற்றி-[க்]-கதிரவன் said...

Lenin book is enough to define her father character -:) rest all acceptable .

-vetrikkathiravan

Cable சங்கர் said...

mr. scene creater. உங்களை நான் எழவு என்று திட்டவில்லை. ஒரு வேளை வேறு பெயரில் வந்து மயித்துக்கு என்று பின்னூட்டம் போட்டது நீங்களாய் இல்லாவிடில் அது உங்களுக்கு அல்ல.. ஓகே.. நான் நல்ல படங்களை ரசிப்பவன். எனக்கு நடிகர் பயாஸ்ட் கிடையாது. அதனால்தான் அந்த விமர்சனத்தின் ஆரம்பத்திலேயே எல்லா தெலுங்கு பட கதாநாயகர்களைப் பற்றி கிண்டலடித்திருந்தேன். அதில் மகேஷ்பாபுவும் அடக்கம். அதைத்தான் ஒழுங்காக படிக்கவில்லை என்று சொன்னேன். இப்போதும் சொல்கிறேன். மற்றபடி உங்களது பர்ஷப்ஷன்களுக்கு நான் பொறுப்பில்லை. நன்றி.

ramesh said...

sir song montage la antha ponnu veetla lennin book irukum anga irunthu vanthathu sir antha thairiyum
avanga appa communist

Philosophy Prabhakaran said...

// ஸ்ரீ எனும் புதுமுகம் தான் ப்ளாட்பாரக்கடை இளைஞன். சட்டென நாம் எங்காவது பார்த்த முகம் போல ஞாபகம் வருவதை தவிர்க்க முடியவில்லை. //

நானும் அப்படித்தான் நினைத்தேன்... அப்புறம்தான் தெரிந்தது கனா காணும் காலங்கள் தொடரில் நடிச்ச பயபுள்ளயாம்...

Philosophy Prabhakaran said...

// எங்கப்பா அப்படி எங்களை வளர்க்கவில்லை என்று சொல்லும் போது தான் அவளுக்கு அப்பா யார் என்ற கேள்வி எழுகிறது. ஒரே ஒரு காட்சியில் அவளுடய அம்மா மத்தவங்களுக்கு உதவி செய்தே இறந்து போனார் என்று புலம்புவதைத் தவிர வேறேதும் காட்சிகள் இல்லாத பட்சத்தில் புரியாமல் போக வாய்ப்பிருக்கிறது. //

கம்யூனிச புத்தகங்களை இரண்டு காட்சிகளில் காட்டினார்கள்... சரியாக பார்க்கவில்லையா...

Philosophy Prabhakaran said...

@ கே.ஆர்.பி.செந்தில்
// நேர்த்தியான விமர்சனம்:)) //

ம்க்கும்... வெளங்கிடும்...

Unknown said...

spoiler podama ezhudha kathukonga sir.. first rendu lines laye oru mukiyamana vishayatha udachiteengale..

Unknown said...

director antha ponnunkku enna achunu theriyatha alavukku katchigal vaithiruppar.. neenga enna na.. Acid oothidumnu pottu udachiteenga.. pathu pannunga sir.. Thank u.

Balaganesan said...

super review sir...abt movie extraordinary work by balaji sakthi vel sir.saw tis movie first show.one of the best cinema and its equal to iranian cinema as u said in the review sir.

ARASU said...

படம் முடிந்த உடன் அனைவரும் எழுந்து கை தட்டினார்கள் ,அதுவே இந்த படத்தின் வெற்றி க்கு அடையாளம் . ஏதோ சாதித்த திருப்தி நமக்கு வருகிறது.

Raj... said...

Anna... Someone is doing copy, paste work...
http://www.yarl.com/forum3/index.php?showtopic=102090

arul said...

arumai anna

யுவகிருஷ்ணா said...

//எங்கப்பா அப்படி எங்களை வளர்க்கவில்லை என்று சொல்லும் போது தான் அவளுக்கு அப்பா யார் என்ற கேள்வி எழுகிறது. ஒரே ஒரு காட்சியில் அவளுடய அம்மா மத்தவங்களுக்கு உதவி செய்தே இறந்து போனார் என்று புலம்புவதைத் தவிர வேறேதும் காட்சிகள் இல்லாத பட்சத்தில் புரியாமல் போக வாய்ப்பிருக்கிறது.//

கொஞ்சம் நுணுக்கமாக பார்த்தீர்களேயானால் புரியும்.

அந்தப் பெண்ணின் வீட்டை காட்டும்போது அவளது அப்பாவின் படம் மாட்டப்பட்டிருக்கும். படத்தின் கீழே ‘தோழர் பாலன்’ என்றும் எழுதப்பட்டிருக்கும்.

யுவகிருஷ்ணா said...

//எங்கப்பா அப்படி எங்களை வளர்க்கவில்லை என்று சொல்லும் போது தான் அவளுக்கு அப்பா யார் என்ற கேள்வி எழுகிறது. ஒரே ஒரு காட்சியில் அவளுடய அம்மா மத்தவங்களுக்கு உதவி செய்தே இறந்து போனார் என்று புலம்புவதைத் தவிர வேறேதும் காட்சிகள் இல்லாத பட்சத்தில் புரியாமல் போக வாய்ப்பிருக்கிறது.//

கொஞ்சம் நுணுக்கமாக பார்த்தீர்களேயானால் புரியும்.

அந்தப் பெண்ணின் வீட்டை காட்டும்போது அவளது அப்பாவின் படம் மாட்டப்பட்டிருக்கும். படத்தின் கீழே ‘தோழர் பாலன்’ என்றும் எழுதப்பட்டிருக்கும்.

Cable சங்கர் said...

yuva.. அது ஹீரோவின் கனவில் வரும் பாடல் காட்சி. அப்படி நுணுக்கமான காட்சியை புரிந்து கொண்டவர்களுக்கு வந்தனம். ஆனால் அக்காட்சி தவறு. அப்படிப் பார்த்தால் அக்காட்சியில் ஹீரோ ஹீரோயினை திருமணம் செய்து கொள்வார். அப்போது அதுவும் உண்மையாகிவிடுமா?.கனவுக் காட்சியில் காட்டப்படும் ஹீரோயின் கேரக்டரை எப்படி புரிந்து கொள்ள முடியும்?

Philosophy Prabhakaran said...

லக்கி சொல்லும் காட்சி கனவுப்பாடலில் மட்டுமல்ல... இறுதியில் கூத்துக்கார சிறுவன் உண்மையை ஜோதியிடம் சொன்னதும், ஜோதி அறைக்குள் சென்று அழுவாள்... அப்போது வாசலில் அவளுடைய தந்தையின் புகைப்படமும், அருகில் கம்யூனிச புத்தகங்களும் வலிந்து காட்டப்பட்டிருக்கும்....

யுவகிருஷ்ணா said...

கேபிள்!

ஜோதியின் வீடு காட்டப்படும் முதல் காட்சியிலேயே தோழர் பாலனின் படமும் காட்டப்படுகிறது.

தோழர் பாலன் ஒரு கம்யூனிஸ்ட். தொழிற்சங்க விவகாரங்களில் தொழிலாளர்களின் உரிமைகளை தட்டிக் கேட்டு உயிரைவிட்டவர் என்று நாமாக ஒரு சப்டெக்ஸ்ட்டை உருவகப்படுத்திக் கொள்ள இயக்குனர் வாய்ப்பு வழங்குகிறார்.

Unknown said...

வழக்கு எண் :18/9 படத்தை பாராட்டி எழுதிய எல்லா பத்திரிகை நண்பர்களுக்கும் , மீடியா நண்பர்களுக்கும் அனைத்து ரசிகர்களுக்கும் நன்றி . - லிங்குசாமி

Ba La said...

எனக்கென்னமோ “காதல்“ கூட நல்லாருக்கு