அடித்து பிடித்து எழுந்தேன். மணி ஆறு ஆகியிருந்தது. எழுந்த வேகத்தில் பக்கத்தில் படுத்திருந்த கேட்டியை உலுக்கி..” ஏய்.. கேட்டி.. கேட்டி.. வேக் அப்” என்று திரும்ப, திரும்ப உலுக்க, கேட்டி மிகுந்த அயர்ச்சியுடன் எழ, உடலில் பொட்டு துணி கூட இல்லாமல் ஷாம்பெயின் மார்பகத்துடன் நின்று..
”வாட்ஸப்.. விசு.. ஏன் இப்படி அதிகாலையில் எழுப்புகிறாய். ஐயாம் டாம் டயர்ட்.. நேற்று நீ ரொம்பவே வேகம்.. நாளை என்பதே இல்லை என்பதை போல..:” என்று தூக்க கலக்கத்தில் அவள் கையை ஆட்டி, ஆட்டி பேசும் போது, லேசாய் அதிர்ந்த மார்பகங்களை பார்க்க, பார்க்க உடல் வெப்பமானது. ஆனால் அதற்கெல்லாம் நேரமில்லை.
“என்னை பொருத்த வரை இன்னும் 15 நாளுக்கு நாளை என்பது இல்லை தான். கமான் குவிக்.. நான் உடனே எர்போர்ட் போகவேண்டும்,” என்று சொல்லிக் கொண்டே நிர்வாணமாய் எழுந்து சரக்கென்று என்னுடய ஜாக்கியை தேடி இழுத்து விட்டுக் கொண்டே, ஜீன்ஸை மாட்டிக் கொண்டு, “கேட்டி ஹனி.. ஒரு உதவி.. இங்கேயிருக்கும் பியர் பாட்டிலகளையும், காண்டம் குப்பைகளையும், எடுத்து வெளியே எறிந்துவிட்டு, பார்த்தால் ஒரு கன்னி கழியாத இந்திய பாச்சுலர் அறை போல மாற்றி விட்டு போகிறாயா.? ஐ காட் எ விசிட்டர் ப்ரம் இண்டியா.. ? ஹோலி மேன் என்று அவளை இறுக அணைத்து முத்தமிட்டுவிட்டு “ மறக்காமல் உடை மாட்டி கிளம்பு”
“நிச்சயம்.. போன முறை போல் நடக்காது.. பை டேக் கேர்..” அவள் வழியனுப்ப பை சொன்ன நேரத்தில் என்னுடய கார் ஹைவேயில் வழுக்கிக் கொண்டிருந்தது.
“நிச்சயம்.. போன முறை போல் நடக்காது.. பை டேக் கேர்..” அவள் வழியனுப்ப பை சொன்ன நேரத்தில் என்னுடய கார் ஹைவேயில் வழுக்கிக் கொண்டிருந்தது.
பதினைந்து நாள சைவ சமய சொற்பொழி செய்ய ஆதீனம் அமெரிக்கா வருவதாகவும், அவரை வீட்டில் தங்க வைத்து மரியாதை செய்து அனுப்பும் படி அப்பா உத்தரவு. கிராமத்து கோயில் பூசாரியான அப்பாவுக்கு குல சாமியே ஆதீனம்தான். ஆனால் அவர் இது வரை ஆதினத்தின் மடத்தின் வாசல் வரை தான் அனுமதிக்கபட்டிருக்கிறார். அப்பாவே நெருங்க முடியாத ஆதீனம் இன்று முதல் தன்னோடு இருக்க போவதை நினைத்து, உள்ளுக்குள்ளே சிரித்துக் கொண்டேன்.
வீட்டில் என்னை இன்னமும் அதே தேவாரம், திருவாசகம் படித்தவனாகவே பாவிக்க, நடித்துக் கொண்டிருப்பது ஒரு ஓரத்தில் குற்ற உணர்வு மேலோங்கினாலும், அமெரிக்காவின் விஸ்தீரணமும், அதன் கவர்ச்சியின் ஆக்கிரமிப்பும், என்னை விழுங்கி வருடங்களாகிவிட்ட நிலையில் பணமும் அது தரும் போதையும், சுகமும் பழகிவிட்டது.
வீட்டில் என்னை இன்னமும் அதே தேவாரம், திருவாசகம் படித்தவனாகவே பாவிக்க, நடித்துக் கொண்டிருப்பது ஒரு ஓரத்தில் குற்ற உணர்வு மேலோங்கினாலும், அமெரிக்காவின் விஸ்தீரணமும், அதன் கவர்ச்சியின் ஆக்கிரமிப்பும், என்னை விழுங்கி வருடங்களாகிவிட்ட நிலையில் பணமும் அது தரும் போதையும், சுகமும் பழகிவிட்டது.
ஏர்போர்ட் சேர எட்டு மணியாகிவிட்டது. பார்க்கிங் தேடி காரை வைத்துவிட்டு, உள்ளே போகவும், காவி வேட்டி ஆதீனம் வரவும் சரியாய் இருக்க, அமெரிக்க வழக்கப்படி கையை உயர தூக்கி ‘ஹாய்” என்பது போல் சைகை செய்துவிட்டு, சட்டென குழப்பமாகி ஹாய் சொல்வதா.. வணக்கம் சொல்வதா என்று யோசித்திருக்கும் நேரத்தில் ஆதீனம் அருகே வந்து விட சட்டென அறைகுறையாய் காலில் விழுந்தேன்.
வெளியே ஜெர்கினை மீறி குளிர் குத்தியது. வெற்றுடம்பு ஆதினத்துக்காக், எடுத்து வந்திருந்த ஜெர்கினை அவருக்கு கொடுத்து போட சொல்ல.. ஆதீனம் மெதுவாய் சிரித்து “ சிவன் உள்ளிருக்கும் போது குளிர் தெரியாது. இருந்தாலும் கொடு.. உனக்காக..” என்று ஜெர்கினை வாங்கி போடுவதற்கு முன் அதை ஆழ்ந்து முகர்ந்து பார்பதை பார்த்து, “சாமி.. வேறு வழியில்லை என்னுடயது தான் அவசரத்துக்கு வேறு உடனே வாங்க முடியல..” என்றதும், “சேச்சே அதில்லை. நல்ல வாசனை” என்றார். அவர் சிவன் என்று சொன்னதும் வேறு ஞாபகம் வந்தது. ஆம் சிவன் உள்ளிருக்கும் போது குளிர் என்ன எதுவுமே தெரியாதுதான்.
வீட்டிற்குள் அவருக்கான அறையில் எல்லா வசதிகளையும் செய்துவிட்டு, கிளம்ப எத்தனிக்கும் போது சுவாமி :”விசு உனக்கு பெயர் வைத்ததே நான் தான் தெரியுமா.?”
“அப்பா ..சொல்லியிருகார் சாமி”
”உன் அப்பா கஷ்டப்பட்டு உன்னை படிக்க வைத்து, அமெரிக்கா வரை உன்னை அனுப்பி நீ உயர எவ்வளவு கஷ்டபட்டிருக்கிறான் தெரியுமா.?” மீண்டும், மீண்டும் பலர் இதையே சொல்லி என்னை கடுப்பேற்றியிருந்தாலும், வேறு வழியில்லாமல் அமைதியாய் முகத்தை வைத்து கொண்டு கேட்டு கொண்டிருந்தேன்.
“அப்படி கஷ்டபட்டு படித்து அமெரிக்கா வரும் இந்த இளைஞர்கள், பெண் சுகத்துக்கும், போதைக்கும் அடிமையாகி அலைவது மனசுக்கு கஷ்டமாக இருக்கிறது. நீ இன்னும் திருமறை ஓதுறயாமே . அப்பா சொன்னார். தென்னாடுடய சிவன் உன்னை காப்பார்.” என்று ஆசீர்வதிக்க, நான் சிரித்தேன்.
“என்ன விசு சிரிக்கிறாய். ஒரு வேளை அமெரிக்கா உன்னையும் விழுங்கி விட்டதோ.?”
“சேச்சே.. நான் அப்படியில்லை சாமி.. எனக்கு பெண்கள் என்றாலே பிடிக்காது.. நான் உண்டு என் வேலையுண்டு என்று இருப்பவன். ஆண் நண்பர்களிடம் கூட ஒரு சிலரிடம் மட்டுமே நெருக்கமாய் இருப்பவன் என்று சொல்லும் போது கேட்டியின் மார்பகம் ஞாபகம் வர, சாமி என்னை உற்று பார்த்து கொண்டேயிருந்தார்.
“நான் உன்னை சந்தேகபடவில்லை.. காமம் கொடியது, அதிலும் பெண் மயக்கம் வாழ்க்கையையே புரட்டி போட்டு விடும். பட்டினத்தார் பாடியிருக்கிறார் ” எத்தனை பேர் நட்ட குழி, தொட்ட முலை” தெரியுமல்லவா.. என்னையே எடுத்துக் கொள் பத்து வயதில் இளைய பட்டம் கட்டிக் கொண்டேன். இப்போது என் வயது நாற்பது என்றால் நம்புவாயா..?
பார்பதற்கு என்னை விட இளைமையாக்வே இருந்தார். “காமத்தை வென்றதால் தான் இவ்வளவு இளமையாகவும், சுறுசுறுப்பாகவும் இருக்கிறேன்.”
பார்பதற்கு என்னை விட இளைமையாக்வே இருந்தார். “காமத்தை வென்றதால் தான் இவ்வளவு இளமையாகவும், சுறுசுறுப்பாகவும் இருக்கிறேன்.”
அவர் பேச, பேச என்னுள் கேட்டிக்களும், லிசாக்களும், அம்மணமாய் ஓட, “சாமி. தவறாய் எடுத்து கொள்ள மாட்டீர்கள் என்றால் ஒன்று கேட்கிறேன்”. சாமி என்னையே பார்த்து கொண்டிருக்க, “ பத்து வயசில வேண்டுமானால் காமத்தை பற்றி தெரியாமல் இருக்கலாம் ஆனா வாலிப வயசில பெண் வாடையில்லாவிட்டாலும், உங்களுக்குள் எழும் காமத்தை எப்படி அடக்கினீர்கள்?”என்றதும் மெல்ல என் அருகில் வந்து தோளை தொட்டு அணைத்தபடி, மெல்ல நடந்து, வீட்டின் பால்கனிக்கு அருகே நின்று, என்னையே பார்க்க, பார்வையின் அர்த்தம் புரியாமல் நான் அதை தவிர்க்க, சாமி ஏதோ சொல்ல வாயெடுக்க, குரல் ஒரு மாதிரி பிசிறடிக்க, தொண்டையை கனைத்து கொண்டு
”உன்னை மாதிரியான இளைஞர்களை பார்க்கும்போது எனக்குள் ஒரு எழுச்சி வரும். அவர்களால் ஒரு மகிழ்ச்சி கிடைக்கும் அது போதும்,” என்றபடி மெல்ல அவர் கை என் ஜீன்ஸின் பின்பக்கத்தை தடவியபடி, “ரொம்ப குளிராயிருக்குல்ல” என்ற சாமியின் கண்கள் பளபளவென இருந்தது.
Technorati Tags: நிதர்சன கதைகள்
டிஸ்கி: லெமன் ட்ரீயும் ரெண்டு ஷாட் டக்கீலாவும் புத்தகத்திலிருந்து, நிறைய பேரின் விருப்பத்தின் பேரில் இங்கு மீள் பதிவு செய்யப்படுகிறது. புத்தகத்தை ஆன்லைனில் வாங்க.
கேபிள் சங்கர்
டிஸ்கி: லெமன் ட்ரீயும் ரெண்டு ஷாட் டக்கீலாவும் புத்தகத்திலிருந்து, நிறைய பேரின் விருப்பத்தின் பேரில் இங்கு மீள் பதிவு செய்யப்படுகிறது. புத்தகத்தை ஆன்லைனில் வாங்க.
கேபிள் சங்கர்
Post a Comment
14 comments:
வொர்ஸ்ட் ஸ்டோரி . . sorry sir
a small doubt
" லெமன் ட்ரீயும் ரெண்டு ஷாட் டக்கீலாவும் புத்தகத்திலிருந்து, நிறைய பேரின் விருப்பத்தின் பேரில் இங்கு மீள் பதிவு செய்யப்படுகிறது. "
யார் அந்த நெறைய பேரு . . .
Appo ithuthaan ilamai ragasiyamaa?
Right time for a break!!
hii.. Nice Post
Thanks for sharing
For latest stills videos visit ..
Best Regarding.
www.ChiCha.in
www.ChiCha.in
ஆஹா..என் மண்டைக்குள்ள மதுரை ஆதீனம் தெரியிறாரே...?
ஹெ,,ஹே... இவென் அவென்ல..
nice twist in the end.......
avana ivan..... nithyanatha kooda senthavanpola...
பரபரப்பாக எழுத வேண்டும் என்பதற்காக இது போன்று எழுதுகிறீர்கள். இன்றைய செய்திகள் பார்த்து வருத்தத்தில் இருக்கும் பலரும் பாராட்டவும் செய்கிறார்கள். எத்தனையோ பலரை, அவர்களது நம்பிக்கையை ஆழமாகக் குத்துகிறோம் என்றெல்லாம் வருத்தம் இல்லை. இதே கதையை ஒரு கத்தோலிக்க குருமாரைக் கொண்டோ அல்லது இஸ்லாமிய குருமாரைக் கொண்டோ உங்களால் எழுத முடியுமா? அது முடியாதவரை நீங்கள் இந்து மதக குருமார்கள் பற்றியும் எழுத வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்.
உங்களின் படைப்பை இன்று வலைச்சரத்தில் குறிப்பிட்டுள்ளேன். சமயமிருப்பின் பார்த்துக் கருத்திடும்படி வேண்டுகிறேன்.
http://blogintamil.blogspot.in/2012/05/blog-post_04.html
சில ஆதீனங்கள் நிஜத்திலேயே இப்படின்னு கேள்விப்பட்டிருக்கேன். ஒரு ஆதீனம் பத்திய மேட்டர் ஜூவி லையோ நக்கீரன்லையோ வந்ததா ஞாபகம். மயிலாடுதுறை நண்பர்களிடம் விசாரித்தபோது அது நிஜம் என்றே சொன்னார்கள்.
மேட்டர் என்னனு சொல்ல முடியாது. :-))))
நான் ஆதீனம் பொம்பள விஷயத்துல மாட்டுனா மாதிரி முடியும்னு நினைத்தேன். எதிர்பாராத சூப்பர் முடிவு.
/* பரபரப்பாக எழுத வேண்டும் என்பதற்காக இது போன்று எழுதுகிறீர்கள். ...... இந்து மதக குருமார்கள் பற்றியும் எழுத வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன் */
வசனத்த மாத்துங்கப்பா. ஒரே மாதிரி மொக்கை வசனம், போரடிக்குது. என்னிக்கி பிற மதம் இந்து மதம் போல flexibleஆ இருக்கோ அன்னிக்கிதான் நாங்க அத பத்தி கிண்டல் செய்வோம். ஒரின சேர்க்கை இந்து மதப்படி தப்பேயில்லை. அப்புறம் நாங்க எப்படி christianity muslim பத்தி கமெண்ட் அடிக்குறது ? அப்படியா ஏதாவது கில்மா matter வந்தாலும் minority முகமூடி போட்டுகிட்டு தப்பிப்பானுங்க.
so stop மொக்கை வசனம்ஸ்.
தமிழ்ப் பையன் சொல்வது முற்றிலும் சரி!
thamizhpaiyan.. நான் அவர்களைப் பற்றியும் எழுதியிருக்கிறேன் என் பதிவுகளை தொடர்ந்து படிப்பவர்களாய் இருந்தால் தெரியும்.
Post a Comment