என் ட்வீட்டிலிருந்து
உன்னால் ஒரு பெண்ணை தற்காலிகமாய் வேண்டுமானல் காயப்படுத்தலாம் ஆனால் அவள் மீண்டும் எழுவாள் முன்பை விட காத்திரமாய்.
பிட்டு படம் என்பது குடும்ப படம். என்ன ஒவ்வொரு குடும்ப உறுப்பினரும் ஒவ்வொரு இடத்தில் தனிதனியாய் பார்க்கிறார்கள். #RGV
நேர்மையாய் இருந்ததற்காக என்றைக்கும் மன்னிப்புக் கேட்காதே
பல சமயங்களில் விருதுகள் வெகுஜன விரோதிகளுக்கு மட்டுமே என்பது போல் தெரிகிறது.
கேவலமாய் புரிந்து கொண்ட விஷயத்தைக் கூட நான் அவதானித்தேன் என்று சொல்லும் போது இலக்கியமாகிவிடுகிறது :)
நல்ல புரிதல் உள்ள உறவு என்பது முரண்களில்லாமல் இருப்பதில்லை. முரண்களால் ஏற்படும் பிணக்குகளிலிருந்து எவ்வளவு சீக்கிரம் வெளிவருகிறோம் என்பது.
கடந்து செல்ல நீ தயாராக இல்லாத போது காலம் உன் காயத்தை ஆற்றாது.
சில சமயங்களில் நமக்கு பிடித்தவர்களுடன் இருக்க சில நிமிடங்களையும், அவர்களை நினைத்து பார்கக் பல வருடங்களையும் அளிக்கும் கடவுளை என்ன சொல்வது
தகுதியில்லாத விஷயத்திற்காக தூக்கமிழந்து தவிப்பது முட்டாள்தனத்தின் உச்சம்
சாத்தியங்களின் எண்ணங்கள் புதியவர்களிடம் நிறைய இருக்கும் அதே ஜெயித்தவனிடம் மிக குறைவாகவே இருக்கும்.
நீ என்ன கொடுக்கிறாயோ அதுவே உனக்கு திரும்பக் கிடைக்கும்
உறவுகள் வெற்றியடைய இரண்டு விஷயம். இருவருக்குள் இருக்கும் வித்யாசத்தை கண்டுபிடிப்பது. பின்பு அதை மதிப்பது.
என்னை காதலிக்கிறாய் என்று சொல்லிவிடாதே.. அதன் பின்பு நான் செய்யும் பைத்தியக்காரத்தனங்களை நீங்க தாங்க மாட்டாய்.
ரஜினி முதல் ராஜா வரை அவர்களைப் பற்றி ஏற்படுத்தும் பிம்பங்களுக்கான காரணம் மீடியா. பெரும்பாலும் பொய்..
ஒவ்வொருவனுக்கு ஒரு சின்ன ரகசியம் ஒளிந்து கொண்டிருக்கிறது. நெருங்கிய நண்பனுக்கு கூட தெரியாமல்.
காதலின் போது இவன்(இவள்)னை விட்டால் வேறு யார் நமக்கு என்று நினைத்தது எவ்வளவு முட்டாள்தனம் என்பது வேறொரு காதலன்(லி) கிடைத்த பின் புரிகிறது.
சரியான நேரத்திற்காக காத்திருக்காதே. கிடைத்த நேரத்தை சரியானதாக்கு
உன்னால் மாற்ற முடியாத ஒன்றிக்காக போராடி நொந்து போவதை விட, ஒரு சிறு புன்னகையுடன் அவ்விடத்தை விட்டு நகர்வது சால சிறந்தது.
என்னுடய ஜனாதிபதி ரெக்கமெண்டேஷன் கலைஞர் தான். அப்படியாவது சகோதரர்கள் பிரச்சனைக்கு முடிவு வரட்டும்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
கேபிள் சங்கர்
Post a Comment
8 comments:
///சரியான நேரத்திற்காக காத்திருக்காதே. கிடைத்த நேரத்தை சரியானதாக்கு///
அருமை
/
என்னய்யா இது கொத்து பரோட்டா போடாம .. சின்ன புள்ள தனமாள்ள இருக்கு
//என்னுடய ஜனாதிபதி ரெக்கமெண்டேஷன் கலைஞர் தான். அப்படியாவது சகோதரர்கள் பிரச்சனைக்கு முடிவு வரட்டும்.//
தமிழ்நாட்டுக்கு நன்மை...
இந்தியாவுக்கு தீமை...
///நீ என்ன கொடுக்கிறாயோ அதுவே உனக்கு திரும்பக் கிடைக்கும்///
அருமை ..!
Your 'originals' in this set are also great!
How can the brothers unite if the father becomes the President?! It will be time to capture the party and the State and the duel will reach a crescendo! Only thing is that 'the President' can go away to visit other nations and escape the 'heat'!!
-R. J.
Raja kitta evvalavu Vannkina?
kothu porata enga?
santhoshathil minjuvadhu mazhichi mattume.............
tholviyil kidaippathu periya anubavam....
endrum ninaivil kollungal.
kaviperarasu vairamuthu sonnathu
Post a Comment