தமிழ் வலையுலகில் முதன் முதலாய் 50 லட்சம் ஹிட்ஸுகளை பெற்ற தளமாக்கிய வாசக அன்பர்களுக்கும், பதிவுகலக நண்பர்களுக்கும் என் நன்றி.. நன்றி.. நன்றி..
தமிழ் சினிமாவில் இளம் நடிகர்கள் அறிமுகமாகும் படமென்றால் ஒன்று காதல் அல்லது வன்முறை இவை ரெண்டைத் தவிர ஏதுமில்லாமல் இருப்பது ஒரு விதத்தில் மொனாட்டனியாய் இருந்தாலும், ராட்டினம் என்கிற பெயரே என்னை இன்ஸ்பயர் செய்தது. புது நடிகர்கள், டெக்னீஷியன்கள் ரெட் ஒன் டிஜிட்டல் கேமரா என்று புத்தம் புதிய டீம். இம்மாதிரி படங்கள் தான் வாரத்திற்கு மூன்று வருகிறதே என்று நினைத்த நினைப்பில் இல்லை நாங்கள் வேறு என்று நம்மை நிமிர்ந்து உட்கார வைத்திருக்கிறார்கள். அதனால் தானோ என்னவோ படம் பர்ஸ்ட் காப்பி ரெடி ஆனதும் பார்த்த விநியோகஸ்தர்கள் அப்படியே நல்ல விலைக்கு பேசி வாங்கியிருக்கிறார்கள்.
ஹீரோவும், அவன் நண்பர்களும் வழக்கம் போல தம்மடித்துக் கொண்டும், ஊர் சுற்றிக் கொண்டும், நண்பனின் காதலுக்கு உதவிக் கொண்டு இருக்க, நண்பனின் காதலுக்கு உதவப் போய் காதலில் விழுகிறான். ஹீரோவின் குடும்பம் அரசியல் ஈடுபாடுடைய குடும்பம். அண்ணன் தன் மனைவியை கவுன்சிலராக்கி அரசியல் செய்பவன். ஹீரோயின் குடும்பம் கொஞ்சம் உயர்ந்த குடும்பம். அப்பா தூத்துக்குடி போர்ட்டில் ஆபீசர். மாமா பப்ளிக் ப்ராசிக்யூட்டர். இருவரின் காதலும் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமாய் வளர, ஒரு சுபயோக சுபதினத்தில் மாட்டிக் கொள்கிறார்கள். அதன் பிறகு இரண்டு வீட்டிலேயும் நாசூக்காக நடந்து கொள்வதாய் நினைத்து டார்ச்சர் செய்ய, வீட்டை விட்டு ஓடிப் போய் கல்யாணம் செய்து கொள்கிறார்கள். ஆனால் அதன் பிறகுதான் ப்ரச்சனையே. இவர்களின் காதலை வைத்து அரசியல் தலைவனை ஹீரோவின் அண்ணன் எதிர்க்க, ஹீரோயினின் மாமாவும், அப்பாவும் அரசியல் தலைவனை ஆதரிக்க, இப்பிரச்சனையை வைத்து பகடை ஆட ஆரம்பிக்கிறார் அரசியல்வாதி தலைவன். பின்பு என்ன நடந்தது என்பதை வெள்ளித்திரையில் பார்த்துக் கொள்ளுங்கள்.
கதை என்று பார்த்தால் மிகச் சாதாரணக் கதைதான். ஆனால் அதை மிக இயல்பாய் சொன்ன விதம் தான் படத்தின் பெரிய பலம். நடித்த நடிகர்கள் அத்துனை பேரும் புதுமுகங்கள் அல்லது கொஞ்சமே கொஞ்சம் தெரிந்த டிவி நடிகர்கள். இயக்குனர் ராஜாவையும், அவரது மனைவி, ஹீரோவின் அண்ணி போன்றவர்களைத் தவிர தெரிந்த முகங்கள் இல்லாத படம்.
லகுபரண் தான் கதாநாயகன். சட்டென பார்த்தவுடன் பிடித்துவிடுகிற பக்கத்துவீட்டு பையனின் முகம். நன்றாக எமோட் செய்கிறார். காதலில் உருகுகிறார். கோபப்படுகிறார். ஓரளவுக்கு நடனமாடுகிறார். என்ன நடக்கும் போதுதான் கொஞ்சம் சைடு வாக்கில் நடக்கிறார். மற்றபடி முதல் படமென்று குறை சொல்ல முடியாத நடிப்பு.
புதுமுகம் சுவாதிக்கு நல்ல பெரிய கண்கள். பல நேரங்களில் அதிலேயே பல விஷயங்களை சொல்கிறார். ஸ்கூல் படிக்கும் பெண்ணிற்கு கொஞ்சம் ஓங்கு தாங்குதானென்றாலும், காதல் வருவதற்கு முன் பயந்து நடுங்குவதும், பின்பு தைரியமாய் ஊர் சுற்ற மெசேஜ் அனுப்பவதும், மாட்டிக் கொண்டவுடன் அழுது கரைவதும், ப்ரச்சனை என்றவுடன் பொங்கி ”நான் அவனைத்தான் கட்டிப்பேன். இல்லாட்டி செத்துருவேன்’ என்று போராடுவதும், வீட்டை விட்டு ஓடிப் போய் திருமணம் செய்து கொள்ளுமிடத்திலும் அட போடவைக்கிறார்.
எப்போதாவது பேசும் ஹீரோவின் அப்பா, காதலர்களை உற்சாகப்படுத்தும் வெள்ளந்தி அண்ணி, ஹீரோயினின் பி.பி மாமா. தருண் மாஸ்டரின் நடிப்பு செம கேஷுவல். ஹீரோவுடன் வரும் நண்பர்கள், ஹீரோயினுக்காக சண்டைப் போடும் தூத்துக்குடி பெண், ஹீரோவின் அண்ணனுக்கு அல்லக்கையாய் வரும் உடல் ஊனமுற்ற இளைஞன், அரசியல்வாதி அண்ணனாய் நடித்தும் இருக்கும் இயக்குனர்,என்று சின்னச் சின்ன கேரக்டர்கள் கூட சுவாரஸ்யம்.
மனோ ரமேஷனின் இசையில் ஓரிரு பாடல்கள் ஓகே. என்ன பின்னணியிசையில் தான் பழைய கால “லா...லா” என்று பாடுவதை தவிர்த்திருக்கலாம்.சுந்தரின் ஒளிப்பதிவு படத்தின் மூடை சரியாக கொடுத்திருக்கிறது. ரெட் ஒன் டிஜிட்டல் கேமாராவை சரியாக கையாண்டிருக்கிறார். வாழ்த்துக்கள் சுந்தர்.
எழுதி இயக்கியவர் கே.எஸ்.தங்கசாமி. புதுசாய் யோசிக்கிறேன் என்று எத்தையோ போட்டு சத்தாய்க்காமல், தனக்கு தெரிந்த விதத்தில் மிக இயல்பாய் ஒரு காதல் கதையை நம் கண் முன்னே ஓடவிட்டு, அவர்களுடேயே பயணிக்க வைத்ததினால் ஜெயிக்கிறார் இயக்குனர். முதல் பாதி கொஞ்சம் ஆங்காங்கே திரும்பத் திரும்ப இவர்கள் பார்பதையே சொல்லியிருந்தது இழுவையாய் இருந்தாலும், இடைவேளை ப்ரச்சனை படு இயல்பு. அதற்கு பிறகு படம் படு சுறு சுறுப்பாய் போகிறது. இம்மாதிரி காதல் படங்களில் ப்ரச்சனை என்னவென்றால் முடிவுதான். என்ன தான் யோசித்து ஒரு முடிவை வைத்தாலும் ஏற்கனவே வந்தவிஷயமாய்த்தான் இருக்கும். அது போன்ற ஒரு முடிவு இல்லாமல் கதைக்கு ஒட்டிய மிகையில்லாத க்ளைமாக்ஸை வைத்திருந்ததில் தான் இயக்குனர் வெற்றியடைந்திருக்கிறார். நிச்சயம் மக்களிடையே வெற்றி பெறப் போகும் படமென என் தமிழ்த்திரை நிகழ்ச்சியில் சொல்லியிருந்த படம்.
கேபிள் சங்கர்
கேபிள் சங்கர்
Post a Comment
11 comments:
// தமிழ் வலையுலகில் முதன் முதலாய் 50 லட்சம் ஹிட்ஸுகளை பெற்ற தளமாக்கிய வாசக அன்பர்களுக்கும், பதிவுகலக நண்பர்களுக்கும் என் நன்றி.. நன்றி.. நன்றி.. //
எங்க அண்ணன் சிபி இருக்கும்போது இதுமாதிரியெல்லாம் சொல்லப்பிடாது...
கேபிள்ஜி,
இது போன்ற விடலைப்பருவ காதல் அதன் பிரச்சினை என்றாலே படம் பார்க்கும் ஆவலே இப்பொதெல்லாம் யாருக்கும் வருவதில்லை , கதையில் என்ன தான் புது வர்ணம் பூசினாலும் சலிப்பு தட்டிய களம் ஆகிவிட்டதை இயக்குநர்கள் ஏன் உணர்வதில்லை?
எத்தனை தடவை தான் டீவில சலிக்காம வித்தியாசமான யூத் லவ் ஸ்டோரினு எல்லாரும் பேட்டிக்கொடுப்பாங்களோ :-))
சிறிய பட்ஜெட் படமாக இருப்பதால் 2-3 நாள் ஓடினாலே போதும் என நினைக்கிறேன் முதலுக்கு மோசம் வராது.
////தமிழ் வலையுலகில் முதன் முதலாய் 50 லட்சம் ஹிட்ஸுகள்///
வாழ்த்துக்கள் சார் ..!
வாழ்த்துக்கள் சார் ..!
எனக்கென்னமோ “காதல்“ கூட நல்லாருக்கு
பள்ளிக் குழந்தைகளை காதல் என்ற பெயரில் சீரழிப்பதை பரப்பும் இன்னெரு நல்ல படம்..
வாழ்த்துக்கள் சார் ,
உங்கள் பதிவுகள் மேலும் சிறக்கட்டும்.
நல்ல விமர்சனம்,
வாழ்த்துக்கள்.
Movie is same line with "Kadhal" ..
Good concept. Climax sequence and msg is good.. But.. Screenplay is worst. and BGM marana mokka.. songs are worst... no single interesting and lovable scenes in film except climax.
I dont know why media giving too much hype for this film.. ellarum onnu koodi koovuranunga... GM told "thothukudiyil oru VTV".. nambi yemandhuten...
1.5/5
வாழ்த்துகள்.
விமர்சனத்துக்கு நன்றி.
Post a Comment