ராம் கோபால் வர்மா எதை எடுத்தாலும் கண்ணை மூடிக் கொண்டு, இதற்கு முன்னால் வந்த படங்களைப் பற்றியெல்லாம் யோசிககாமல் படம் பார்ப்பவகளில் நானும் ஒருவன். அப்படித்தான் இந்த படத்திற்கும் போனேன். இப்படத்தின் காண்டர்வஸிக்கெல்லாம் மீறி ராம் கோபால் வர்மா ஆங்காங்கே தன் இம்ப்ரஷனை கொடுக்கத்தான் செய்திருக்கிறார்.
அவருக்கு மிகவும் பழக்கமான களம்தான். தாதாக்களின் ஆதிக்கமும் போலீஸின் பவரும். தீவிரவாதத்தை ஒழிப்பதற்காக தனியே அமைக்கப்படும் ஒரு போலீஸ் அமைப்பில் தீவிரவாதியின் அல்லக்கையால் கரப்ஷன் ஆனால் என்னவாகும் என்பதைத்தான் சொல்லியிருக்கிறார்கள். பல கேரக்டர்கள் மூலம். இவரது படங்களில் நான் மிகவும் ரசிப்பது வித்யாசமான கேரக்டர்களின் அணிவகுப்பை. ஒவ்வொரு படத்திலும் ஒரு கேரக்டர் நம்மை கவராமல் இருக்காது. அது போலத்தான் இதில் செளபாத்தி தாதா.. வழக்கமாய் தாதாக்கள் எல்லாம் ஜீன்ஸும், டீ சர்ட்டுமாய் அலைந்து கொண்டிருக்கும் காலத்தில் காந்தி பாணி உடையில் அலையும் தாதா, பேசும் ஸ்டைல், பாடி லேங்குவேஜெல்லாம் கிட்டத்தட்ட காந்தி. செம கிண்டல்.
ராணாவுக்கு நல்ல கேரக்டர்தான் ஆனால் ஏகப்பட்ட குழப்படியான திரைக்கதையால் எதிலும் ஒட்ட முடியவில்லை. ராணா பார்ப்பதற்கு ஆஜானுபாகுவாய் அழகாய் இருக்கிறார். நடிக்க பெரிய ஸ்கோப் இல்லை. சஞ்செய்தத்துக்கும் பெரிய வேலையில்லை. நடுநடுவே துப்பாக்கியால் சுட்டுக் கொண்டும், வீட்டில் மனைவியிடம் சமையல் செய்யச் சொல்லி சாப்பிடுவதைத் தவிர பெரிய காரியமாய் ஏதும் செய்யாததால் நத்திங் டூ டெல்.
படத்தின் சுவாரஸ்யத்திற்கு அமிதாப்பும், கேங் லீடராய் வலம் வரும் அந்த பெண்ணும் கேனான் 5டி கேமராவும்தான்.. தலைவர் அமிதாப் கலக்குகிறார். Ilegaly legal kam kartha hoon என்று அடிக்கடி சொல்கிறார். வழக்கமாய் வரும் ஐயிட்டம் சாங்கில் வரும் பெண்ணின் உள்ஜட்டியும், புட்டமும் அப்பட்டமாய் தெரிகிறது. கவர்ச்சியை மீறி ஒரு விதமான எக்ஸ்போஸிங் இரிட்டேட்டிங். யோசிக்கவே முடியாத ஆங்கிள்களில் எல்லாம் கேமரா பயணிக்கிறது. இந்திய சினிமாவில் பல கோட்பாடுகளை முக்கியமாய் படமெடுக்கும் முறைகளை உடைத்த பெருமை ராம் கோபால் வர்மாவுக்கு உண்டு. அதை மீண்டும் மீண்டும் அவரே செய்து கொண்டிருப்பது தான் கொஞ்சம் எரிச்சலாய் இருக்கிறது. இதில் அநியாய மீறல். பட.. அந்த ஆர்வம் தான் ஆர்.ஜி.வி.
ஏற்கனவே ராம் கோபால் வர்மாவே தேவையான அளவிற்கு போட்டு தாக்கியெடுத்த கதை களன் ஆதலால் சுவாரஸ்யமே இல்லாது போகிறது படம். கிட்டத்தட்ட இப்படத்தில் அக்கதைக் களனை கற்பழித்தேவிட்டார் என்றே சொல்ல வேண்டும். ஒரு காலத்தில் நம்மூர் மதுரை, திருநெல்வேலி படமென்றால் ஊரில் உள்ளவர்கள் எல்லோரும் அருவாளோடுதான் அலைவார்கள் என்று நிஜத்தில் நம்பும் அளவிற்கு படமெடுத்த நம்மவர்களைப் போல இவரும் தன் பங்கிற்கு துப்பாக்கி சுடுவது என்பது ஏதோ வீடியோ கேமில் வருவது போல சுட்டுக் கொண்டே இருக்கிறார்கள் ஒரு பக்கத்தில் எந்தவிதமான அதிர்வும் இல்லாமல் குழந்தைகள் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். ஒரு வேளை இயக்குனர் துப்பாக்கி கலாச்சாரம் அவ்வளவு தூரம் மக்களின் வாழ்க்கையோடு கலந்து விட்டிருக்கிறது என்பதை குறியீடாக சொல்லியிருக்கிறாரோ என்னவோ.. பாஸ்.. போது இந்த் அண்டர்வேர்ல்ட் படமெல்லாம். ரங்கீலா மாதிரி ஒரு லவ் படம் கொடுங்களேன். ப்ளீஸ்..
கேபிள் சங்கர்
கேபிள் சங்கர்
Post a Comment
7 comments:
am first....athu enna theriyala cableG unga postla first comment panna athu oru gethu......seri....abt tis post neengalum intha padatha pathi azhuthama ethum sollala....storyium old so...better luck next time
fr ram gopAL
ராம் கோபால் வர்மா எதை எடுத்தாலும் கண்ணை மூடிக் கொண்டு!!!!!!!!!!!!!!!!!!!!
தலிவா !!!ஹி!!!ஹி!!!ஹி!!!ஹி!!! அப்புறம் எப்படி படம் பார்க்க முடியும் ????
வழக்கம் போல கலக்கல் .காமெடி . கருத்து - டுமில் !!! டுமில்!! டுமில் !!!!
நச் ! அட்டாக் விமர்சனம் .
வழக்கம் போல கலக்கல் .காமெடி . கருத்து - டுமில் !!! டுமில்!! டுமில் !!!!
நச் ! அட்டாக் விமர்சனம் .
கேபிள் சார், நம்ம ஊர் "ஆசை நூறு வகை பாடு " மிக்ஸ் படத்தில் உண்டாமே.அதை பத்தி சொல்லவே இல்லையே.எனகென்னவோ ராம் கோபால் வர்மாவிடம் சரக்கு தீர்ந்து போய் விட்டதாகவே நினைகிறேன்.சென்ற சில படங்களே பார்பதற்கு கிளிஷே வாக எரிச்சலாக இருந்தன.
//கேங் லீடராய் வலம் வரும் அந்த பெண்ணும்//
adhu vera yaarum illa.avan ivanla nadicha Madhu Shalini thaan ippadi aagidichu.....
padathin ore attraction thalaivar BigB thaan intha vayasulayum enna manerism,acting...amitabh amitabh thaan
It is worth reading (Chennai Times, 25.5.12) RGV's 'kutharal' of Sanjay Dutt and the co-producer for changing the script in between! He really has guts to take on a hero with past connections to under world! (Probably after filming so many 'Dada' films, RGV thinks he is also one! - R. J.
Post a Comment