வர வர தெலுங்கு பட ஹீரோக்களுக்கு ஓப்பனிங் சீன் பிடிக்கவே அங்குள்ள இயக்குனர்கள் மண்டையை பிய்த்துக் கொண்டு அலைவார்கள் போலிருக்கிறது. அப்படியிருக்கிறது இப்படத்தின் ஓப்பனிங் சீன். சிஜியில் கண்ணாடியை உடைத்துக் கொண்டு இரண்டு அக்குள், கால் இடுக்கிலும் கட்டி வந்தது போல் கால், கை அகட்டிக் கொண்டே குதித்து, அதே போஸில் டாப், லோ, மிடில் என்று எல்லா ஆங்கிள்களிலும் அங்கிருக்கும் விலை உயர்ந்த காரின் மேல் நின்றால் காரின் பானெட்டிலிருந்து எல்லாம் பாகமும் பிய்த்துக் கொண்டு போய் விழுகிறது. இதைவிட எப்படி ஒரு ஹீரோவுக்கு ஓப்பனிங் சீன் யோசிக்க முடியும். இப்படியாக ஆரம்பிக்கிறது தம்மு.
கொஞ்சம் அடுத்த வாரிசு, கொஞ்சம் தேவர்மகன், இன்னும் கொஞ்சம் பழைய தெலுங்கு படங்களின் வரிசை என்று எல்லாவற்றையும் உள்ளே போட்டு கலக்கி ஒரு அரை அரைத்தால் தம்மு ரெடி. அப்புறம் இருக்கவே இருக்கிறது அம்மா செண்டிமெண்ட், தங்கச்சி செண்டிமெண்ட், அக்கா செண்டிமெண்ட், இரண்டு ஹீரோயின்கள், ஊரைக் காப்பாற்றும் தலைவன் என்று எல்லாவிதமான கேரக்டரும் கொண்ட கதாநாயகன். ஆளுக்கு ரெண்டு என்று ரெண்டு ஹீரோயினோடு பாட்டு. கூடவே எக்ஸ்ட்ராவாக ஒரு குஜிலியோடு வேறு ஆட்டம். வேறென்ன வேண்டும் ஒரு படத்தில்? கலெக்டரே தன் குடும்பத்தை காப்பாற்றும் படியாய் வந்து கெஞ்சி வில்லன் மேல் கொடுத்த கம்ப்ளெயிண்டை வாபஸ் வாங்க சொல்லும் அளவிற்கான வில்லன், தன் சொந்த பையன் தோற்றுவிட்டான் என்று அவனை மூச்சுக் குழாயை அறுத்துவிடும் அளவிற்கான வன்மம் உள்ள வில்லனான நாசர் கடைசி காட்சியில் பிம்பிலிக்கி பிலாப்பி என்று ஹீரோவுக்கு ஜே கொட்டுவது செம காமெடி. ஆலி, பிரம்மானந்தம் என்று காமெடியன்கள் இருந்து பரிதாபமாய் இருக்கிறது. வழக்கம் போல ஜூனியர் என்.டி.ஆர் படம் முழுக்க பேசிக் கொண்டேயிருக்கிறார். சண்டை போடுகிறார். சுமன் 25 வருடம் பூட்டிய அறைக்குள் இருந்தார் என்பதெல்லாம் மசாலா படத்தின் தகுதிக்கு மீறிய பூச்சுற்றல்.
திரிஷாவிற்கு முகம் கிழடு தட்டிவிட்டது. கார்த்திகா ஓங்கு தாங்கான சிலுக்கு போல இருக்கிறார். ஆர்தர் வில்சனின் ஒளிப்பதிவு பெரிய பட்ஜெட் படங்களுக்கு எப்படி இருக்குமோ அப்படியே இருக்கிறது. மகதீரா போல ஒரு சிஜியில் ஆரம்பிக்கும் ஒரு பாடலில் சிஜி ஒரளவுக்கு ஓகே. சண்டைக் காட்சிகளில் படு புதுமையாய் எடுத்திருக்கிறார்கள். இன்னும் எத்தனை நாளைக்குத்தான் பத்து பேரை ஒருத்தர் ஒருத்தராய் அடிப்பது. அதனால் இப்படத்தில் ரெண்டு ரெண்டு பேராய் சேர்த்து சேர்த்து அடிக்கிறார் ஜூனியர் என்.டி.ஆர். அப்படியே அடித்து கீழே விழுந்தால் ரப்பர் பந்து போல ஆட்கள் எம்பி அந்தரத்தில் மோதிக் கொண்டு விழுகிறார்கள். ராம் லஷ்மண் சகோதரர்களின் கற்பனைக்கு ஒர் அளவேயில்லை என்று சொல்ல வேண்டும்.
தம்மு- முடியலை.
கேபிள் சங்கர்
Post a Comment
18 comments:
ஒரு சீன்ல வயக்காட்டுல Jr NTR ஒரு ரவுடிய அடிக்கும் போது அவன் டென்னிஸ் பால் மாதிரி ரெண்டு பிட்ச் குத்தி அப்புறம் ஜம்ப் அடிச்சி விழுவான்.. தியேட்டர்ல எல்லாருமே குலுங்கி குலுங்கி சிரிச்சாங்க அதுக்கு.. இதுக்கு முன்னால வந்த Oosaravelli kku தம்மு எவ்வளவோ பரவால்ல...
"இரண்டு அக்குள், கால் இடுக்கிலும் கட்டி வந்தது போல் கால், கை அகட்டிக் கொண்டே குதித்து "
அண்ணே முடியல . .
நல்ல நகைச்சுவை வர்ணிப்பு . .
இதுக்காகவே இதுமாறியான
படங்கள் வரட்டுமே . .
நன்றி
இதே சண்டை காட்சியில் மகேஷ் பாபுவோ ,தமிழில் அஜித்தோ நடித்திருந்தால் ஆஹா,ஓஓஹோ என்று பாரடியிருபீர்கள். என்ன செய்வது விஜய்,தனுஷ் என்று உங்களுக்கு பிடிக்காத நடிகர்கள் லிஸ்டில் இப்போ ஜூனியர் என்.டி.ஆர்.. உங்கள் பாரபட்சம்மான விமர்சனத்துக்கு ஒரு அளவே இல்லையா?
ஐயையோ ! ! திரிஷா-க்கு முகம் கிழடு தட்டிருச்சா ??? அப்போ இனி “அண்ணி’ கேரக்டர் பண்ண வேண்டியதுதான்..... வெங்கடேஷ்-க்கு போன் போடலாமா ???
scene creator.. எதையும் முழுசா படிக்கறதில்லை. அப்புறம் என்ன எழவுக்கு இங்க் பின்னூட்டம் போடுறீங்க.. தயவு செய்து என்னுடய எல்லாம் பட விமர்சனங்களையும் படிச்சிட்டு எழுதுங்க.. இல்லாட்டி வந்து பின்னூட்டம் போடாம போங்க. முடியலை உங்களைப் போல காமெடி பீஸுகளின் இம்சைய..:))
@cable...
நீ அப்டியே கல்வெட்டு செதுக்கி வச்சிருக்க.. ஒழுங்கா பதில்கூட சொல்ல தைரியம் இல்ல உனக்கு, அப்புறம் என்ன மயித்துக்கு பதிவு போட்ற
திரிஷா கிழவியாகி பலவருடங்களாச்சு ...
இன்று
கண்றாவி கவுண்டவுன் – சிரிப்புக்கு நான் கேரண்டி
அட போங்கப்பு... இதெல்லாம் ஒரு ஓபனிங் பில்டப்பாம்... சொல்ல வந்துட்டீரு,,, ரெண்டு நாள் முன்னால கேடிவில ஒரு சீன் பாத்தேன். வில்லன் புர்சி கலிஞ்சரை சுட, குண்டு அவர் மாருல பட்டு அவனையே அட்டாக் பண்ணி சாவடிக்குது, இதவிடப் பெருசா ஒருத்தன் யோசிச்சிட முடியும்,.?
கணேஷு.. ஓடுற ட்ரையினை ஒத்தக் காலால மிதிச்சு ரிவர்ஸுல அனுப்பிச்சி வச்ச சீனெல்லாமே அங்கிருந்து இக்கட வந்ததுதான். தலைவரே..
@subramanian logesh
இதோ இன்னொரு காமெடி பீஸு.. பூனைக்குட்டி வெளிய வருது.. அவரு என்னா கேள்வி கேட்டுட்டாரு.. மயிரையெல்லாம் எடுத்துக்கட்டிட்டு பதில் சொல்லணும். இதுவும் ஒழுங்கா படிக்காதது போலருக்கு.
ப்ளாக்கையே ஒழுங்கா படிக்க தெரியாதது எல்லாம் கல்வெட்டு படிக்கிறத பத்தி பேசுதுங்க.. போப்பா.. போய் பசங்கள சே.. முதல்ல நீ ஒழுங்க படிக்கிற வழிய பாரு.. உன்னையெல்லாம் யார் கூப்ட்டா.. மயிறு மட்டைன்னு பேசிறதுலேர்ந்து தெரியுது எம்பூட்டு படி.. சரி விடுங்க..
அண்ணே... பேசாம விவரமில்லா நாகரீகமற்ற பின்னூட்டங்கள் வந்தா அதை நீக்கி விட வேண்டியது தானே... எதுக்கு அத தளத்தில வெளியிட்டு பின் நீங்களும் பதில் அளித்து... எதுக்கு இந்த வேலை...
@cable
இந்த டம்மி பீசு கிருக்குறதுக்கு பேரு ப்ளாக்ஆம்.... எழவுன்னு எழுதிட்டு படிக்க சொல்லி ஊருக்கு உபதேசம் பண்ணுது. இது எழவுன்னு எழுதுறதுல இருந்து எம்புட்டுன்னு கிழிசிருகுதுன்னு தெரிஞ்சுதான் மைருனு மட்டைன்னு கமெண்ட்ல வருது.
அரவேக்காட்டு தனமா பதிவு எழுதிட்டு அத வேற முழுசா படிக்கலைன்னு எல்லார்கிட்டயும் சப்பகட்டு கட்டுது.
எந்த கேள்விக்கும் ஒழுங்க பதில் எழுத தெரியாம இந்த மாதிரி லூசு தனமா பதில் கமெண்ட் எழுதிட்டு எஸ்கேப் ஆகிடலாம்னு நெனைக்குது இந்த டுபுக்கு. இது ஒரு வெத்து கொடம் அதான் ஓவரா சவுண்ட் போடுது
கேபிள் சார், நான் இதுவரை உங்கள் பதிவில் மரியாதை குறைவாகவோ,நாகரீகமற்ற முறையிலோ ,பின்னோட்டம் போட்டதில்லை.நீங்கள் என் பின்னோடங்களை எடுத்து பார்க்கலாம்.ஆனால் நீங்கள் தான் என்னை காமெடி பீஸ் ,எழவு என்றெல்லாம் எனக்கு பதில் சொல்லி இருகிறீர்கள்.நான் சொன்னது என்ன,விஜய்,தனுஷ் போன்றவர்கள் உங்களுக்கு பிடிக்காது.இது உங்கள் பதிவை தொடர்ந்து படிக்கும் நிறைய பேருக்கு தெரியும்.மற்றொரு விஷயம் நீங்கள் எழுதிய 90 சதவிகித பதிவுகளை படித்துள்ளவன் நான். விமர்சனங்களை தாங்க முடியாத நீங்கள் விமர்சனம் எழுதுவது எப்படி? தயவு செய்து மரியாதையை கொடுத்து பின்னோட்டம் போடுபவர்களிடம் கொஞ்சமாவது நாகரீகத்தோடு ,நாவடக்கதொடு , பதில் போடுவது நல்லது.
கேபிள் அவர்களுக்கு பணிவான வணக்கம்.
இன்டர்நெட் என்பது பொது, யார் வேண்டுமாலும் ப்ளாக் பேஜ் ஓபன் பண்ணலாம், யார் வேண்டுமானாலும் படிக்கலாம், கமெண்ட் எழுதலாம். சம உரிமை இருக்கு. இது உங்களுக்கு தெரிந்த விசியம். உங்களுக்கு அஜித் பிடிக்கும் என்பதால் நீங்கள் எப்படி சுயநலமாய் அவனை பத்தி ஆஹா ஓஓஹோ என தூக்கி எழுதறிங்க. மத்த ஹீரோ முக்கியமா விஜய் ஓட்டி எழுதறிங்க, அவனுடைய பான்ஸ் கடுப்பா reply பண்ணுறாங்க.
உங்களுக்கு தெரியாதா? அஜித் பான்ஸ் equala ஏன் அதற்கும் மேல விஜய் பான்ஸ் இருகாங்க. உங்களுக்கு அஜித்துக்கு சோம்பு அடிக்கறவன் மட்டும் உங்க ப்ளோக படிச்சா / கமெண்ட் பண்ணா போதும் நெனசிங்கனா. உங்க ப்ளோக privacy மதிகொங்க, user name /password போட்டு உங்க அஜித் பான்ஸ் மட்டும் access கொடுங்க. சும்மா அசிங்கமா பேசாதிங்க.
Post a Comment