தொடர்ந்து எத்தனை தோல்விகளைக் கொடுத்தாலும் இன்றைக்கும் அட்டகாசமான ஓப்பனிங்கை தொடர்ந்து கொடுத்துக் கொண்டிருப்பதில் இவருக்கு இணை வேறு யாருமில்லை. சமீபத்திய தெலுங்குப் பட ரெக்கார்டுகளையெல்லாம் தூக்கி சாப்பிட்டுவிட்டதாகவும், இந்தப்படம் வைக்கப் போகும் ரெக்கார்டை மகேஷ் பாபு முறியடிப்பாரா என்றெல்லாம் இப்போதே ஆந்திராவில் செம பெட்டிங் ஓடிக் கொண்டிருக்கிறதாம். எனக்கும் இவரின் ஒவ்வொரு படத்தையும் பார்த்து பார்த்து நொந்து போனாலும் இவரின் பவர்புல்லான ஸ்கீரின் ப்ரெசென்ஸில் மயங்கி அடுத்த படத்துக்கு தயாராகிவிடுவேன். அப்படி தயாராகிப் பார்க்கப் போன படம் தான் நம்ம தெலுங்கு தல பவர் ஸ்டார் பவன் கல்யாணின் கப்பர் சிங்.
ஒரே படத்தை இந்தி, தமிழ், தெலுங்கு என்று எல்லா மொழிகளிலும் பார்த்த பெருமை என்னை போல மிகச் சிலருக்கே சேரும் என்பதை பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறேன். ஆனால் கொடுத்த காசுக்கு ஏமாற்றவில்லை பவன். சாதாரணமாகவே துள்ளுவார். இதில் கேட்கவே வேண்டாம் சும்மா துள்ளித் துள்ளி அடித்து தூள் பரத்துகிறார். முதல் காட்சியிலிருந்து கடைசி எண்ட் கார்டு வரை பவன், பவன் பவன் தான். என்னா ஒரு ஸ்கீரின் ப்ரெசென்ஸ்டா..
ஸ்ருதி தெலுங்கில் ஒரு ராசியில்லாத நடிகை என்று எடுத்த பெயர் இப்படத்தோடு போய்விட்டது. வெறும் பாடல்களுக்குக் மட்டுமே பயன்படுத்தப் பட்டிருக்கிறார். க்ளாமராகவும் பெரியதாய் ஏதுமில்லை. நோ.. கமெண்ட்ஸ்.
ஹிந்தியை அப்படியே நகலெடுத்திருந்த தமிழைப் போல் இல்லாமல் கதையி ஸ்கெலிட்டனை வைத்துக் கொண்டு, பாடியை புதியதாய் பவனுக்காக பில்ட் செய்திருக்கிறார் இயக்குனர் ஹரி சங்கர்.
முழுக்க முழுக்க, பவனின் பவர்புல் பர்பாமென்ஸை மட்டுமே நம்பி எழுதப்பட்ட திரைக்கதையில் ஓட்டைகள் ஓசோன் லேயரை விட பெரியதாய் இருந்தாலும் தனி ஒரு மனிதனாய் தன் தோளில் சுமக்கிறார் பவன். போலீஸ் ஸ்டேஷனில் ரவுடிக் கும்பலோடு ஆடும் அந்தாக்ஷரி ஆட்டம் செம. அக்காட்சியில் பவனின் கண்களில் தெரியும் குறும்பும், அந்த சிரிப்பும். அஹா.. அட்டகாசம்.
என்னதான் இந்தப்படம் அஹா ஓஹோ என்று ஓடினாலும், பல இடங்களில் தூக்கம் சொக்கி அடிக்கிறது என்பதை மறுக்க முடியாது. பவன் கல்யாணை மட்டுமே ரசிக்கக்கூடியவராய் இருந்தால் நிச்சயம் பார்க்கலாம்.
கேபிள் சங்கர்
Post a Comment
5 comments:
எழுத்துப்பிழைகளே இல்லாமல் எழுதும் கலையை எங்கே கற்றீர்கள்? ஒரு குறிப்பு : நீங்களும் நானும் ஒரே ஜாதிதான் (அட ஆமாங்க நானும் டிப்ளமா படிச்சவன்)
nice post. http://newsigaram.blogspot.com
#ஹிந்தியை அப்படியே நகலெடுத்திருந்த தமிழைப் போல் இல்லாமல் கதையி ஸ்கெலிட்டனை வைத்துக் கொண்டு, பாடியை புதியதாய் பவனுக்காக பில்ட் செய்திருக்கிறார் இயக்குனர் ஹரி சங்கர்#
இதுவும் பவனும் தான் கலக்சன் அல்லுவதற்கு முக்கியமான காரணம் ... தமிழில் இரண்டுமே டோட்டல் மிஸ்ஸிங்
ஸ்ருதியைப் பத்தி பெருசா எதுவும் சொல்லாமல் விட்டுட்டீங்களே...
Post a Comment