Thottal Thodarum

Jun 18, 2012

கொத்து பரோட்டா - 18/06/12

தமிழ் சினிமாவின் மல்ட்டிப்ளெக்ஸுகளின் நிலை படு மோசமாய் இருக்கிறது கடந்த இரண்டு வாரமாய் மக்கள் கூட்டத்தை வரவழைக்கும் படங்களாய் ஏதுமில்லாததால் ஆளில்லாமல் காய்ந்து வழிகிறது. பெரும்பாலான காட்சிகள் கேன்சல் செய்யப்பட்டு தியேட்டர்கள் மூடிக் கிடக்கிறது. சென்ற வாரம் ரிலீசான பிரமோதியஸ் கூட புட்டுக் கொண்டதால் வீக் டேஸ்களில் சென்னை புறநகர் மல்டிப்ளெக்ஸுகள் எல்லாம் ஷோக்களை கேன்சல் செய்கிறது என்றால் பார்த்துக் கொள்ளூங்கள். சென்ற வாரத்தில் ஒரு நாள் ஆயிரம் சீட்டுக்கள் இருக்கும் ஓ.எம்.ஆரில் உள்ள ஒரு மல்ட்டிப்ளெக்ஸில் இருபத்திரெண்டு பேருக்கு மட்டுமே மடகாஸ்கர் காட்டினார்கள் மற்ற படங்கள் எல்லாம் கேன்சல். அந்த தியேட்டரே பூத் பங்களாபோல லைட்டெல்லாம் ஆஃப் செய்யப்பட்டு, அங்கொன்றும் இங்கொன்றுமாய் லைட் போடப்பட்டு மொத்தமே ஆறு முதல் ஏழு ஸ்டாப்புகள் தான் இருந்தார்கள். இந்த லட்சணத்தில் இடைவேளைக்கு பிறகு ஏசியை ஆப் செய்து என்னிடம் திட்டு வாங்கி மீண்டும் போட்டார்கள். வருவதற்கே யோசித்துக் கொண்டிருக்கும் நேரத்தில் இம்மாதிரியான சர்வீஸுகளை வழங்கினார் விளங்கிவிடும் மல்ட்டிப்ளெக்ஸ் வியாபாரம். அது மட்டுமில்லாமல் சோபா டைப் சீட் போடுகிறேன் என்று போட்டுவிட்டு, சோபாவில் சாய்ந்திருப்பதற்காக முட்டியில் முட்டுக் கொடுத்துக் கொண்டே உட்கார்ந்திருப்பதில் சவுகரியம் இல்லை என்பதை இவர்களுக்கு யார் சொல்வார்கள்?. சென்னையில் நிஜ சோபா அனுபவத்திற்கு சத்யம் மட்டுமே ஒர்த். நிஜமாகவே உள்ளுக்குள் அமிழும் சேர்கள். ஒன்றிரண்டு ஆங்காங்ஙே கிழிந்திருந்தாலும் கூட.. சொன்னால் சரி செய்து விடுவார்கள். சமீபத்தில் ஒரு சிங்கிள் ஸ்கீரின் தியேட்டருக்கு சென்னையில் மூடு விழா நடத்தியிருக்கிறார்கள்.
@@@@@@@@@@@@@@@@@@@@



கேட்டால் கிடைக்கும்
ஓ.எம்.ஆர் ஏ.ஜீஎஸ் மல்ட்டிப்ளெக்ஸ் மால் போலவேயில்லை. அவசரத்துக்கு ஆரம்பிக்கப்பட்ட ஒரு ப்ராப்பர்ட்டி போலவேயிருக்கிறது. உள்நுழையும் வசதிகள், எல்லாம் ஏதோ சாப்ட்வேர் கம்பெனியின் எண்ட்ரன்ஸ் போல இருக்கிறது. கந்தன்சாவடியில் விரைவில் ஆரம்பிக்கவிருக்கும் பி.வி.ஆர் மால் வரும் வரைத்தான் இதற்கு மவுசுருக்கும் என்று தோன்றுகிறது. வழக்கம் போல இங்கேயிருக்கும் புட்கோர்ட்டிலும் தண்ணீர் தர மாட்டோம் விலை கொடுத்துதான் வாங்கிக் கொள்ள வேண்டும் என்றார்கள். தண்ணீர் தராமல் போக மாட்டேன் என்று போராடி தண்ணீர் வாங்கிக் குடித்துவிட்டு வந்தேன். கேட்டால் கிடைக்கிறது. இது பற்றி அங்கிருக்கும் அதிகாரியிடம் புகார் தெரிவித்திருக்கிறேன். ஒவ்வொரு உணவகத்திலும் கட்டாயம் குடிப்பதற்கு நல் குடிநீரை தந்தே தீர வேண்டியது ஒவ்வொரு உணவகத்தின் கட்டாயம். அதை கொடுக்காமல் தண்ணீர் வாங்கித்தான் குடிக்க வேண்டும் என்று சொல்வது மனித உரிமை மீறல். உங்களுக்கு சாப்பாடு கொடுத்துவிட்டு, அதற்கு தண்ணீர் தர அந்த கடைக்காரர் போராடும் போராட்டத்தை பாருங்கள். உங்கள் பாக்கெட்டிலிருந்து எவ்வளவு சுலபமாய் திருடுகிறார்கள் என்று புரியும்.
@@@@@@@@@@@@@@@@@@@@@
உடல்நிலை சரியில்லை என்றால் நான் யாரிடமும் சொல்லிக் கொள்ள மாட்டேன். ஏனென்றால் உடனடியாய் கிடைக்கும் அட்வைஸுகள். அதிலும் அட்வைஸ் சொல்ல கூடிய ஆட்களைப் பற்றி தெரிந்திருந்தும் ஏதோ சொல்கிறார்ளே என்று கேட்டுக் கொள்ள வேண்டிய தலையெழுத்து நிலை என்பது படு கொடுமை. அதையும் மீறி சில நண்பர்கள் உடல்நிலைக் குறித்து எப்படியோ தெரிந்து கொண்டு, சட்டென் வீடு வந்தோ, பக்கத்தில் கேஷுவலாய்  சந்திப்பது போல சந்தித்துவிட்டோ,  எதுவும் பேசாமல், சந்தித்துவிட்டு, போகும் போது ஒரு சின்ன கைகுலுக்கலில் ஒரு அழுத்தம் கொடுத்துவிட்டுப் போகும் நேசமும், அன்பும் கொடுக்கும் உணர்வுக்கு மாற்றில்லை என்றே தோன்றுகிறது. நன்றி நண்பர்களே.
@@@@@@@@@@@@@@@@@@@@@
ஜனாதிபேதி
அப்துல்கலாமை ஜனாதிபதி ஆக்க முடியாதபடி ஏதோ கருணாநிதிதான் சதி செய்கிறார் என்றெல்லாம் இணையத்தில் ஆளாளுக்கு வசை ஓடிக் கொண்டிருக்கிறது. அப்படி நினைத்திருந்தால் பேராசிரியரை ஆக்கச் சொல்லியிருக்கலாமே?. எனக்கென்னவோ தமிழநாட்டு மக்களுக்கு யார் எதை வேண்டுமானாலும் சொல்வதற்கு உரிமையுள்ள, அன்பான, மனதுக்கு நெருக்கமான, காழ்ப்புணர்வை கொட்ட என்று இருக்கிற ஒரே நெருக்கமான அரசியல்வாதி, நண்பன், உறவினன் நம்ம தாத்தாதான் போலருக்கு. என்னைப் பொருத்தவரை அப்துல்கலாம் என்பவர் சரியாக மார்கெட் செய்யப்பட்ட இன்னொரு விதமான தமிழர் இன் ஜெக்‌ஷன் ரப்பர் ஸ்டாப் அவ்வளவுதான். அப்ப பிரணாப் முகர்ஜி மட்டும் என்ன வாழுதாம் என்றெல்லாம் கேட்கக்கூடாது.
@@@@@@@@@@@@@@@@@@@
ரவுடி ராத்தோரில் விஜய் ஆடுகிறார் என்றார்கள். நடுநடுவே ரெண்டு ஷாட்டில் ஃபன்னி பேஸ் காட்டிவிட்டு, எதோ ஒரு ஸ்டெப்பை போட்டுவிட்டு, போகிறார். எனக்கு தெரிந்து பின்னணியில் ஆடிய அந்த சிகப்பு கலர் டைட் ஜீன்ஸ் பெண் புட்டேஜ் கூட ஒரு பத்து செகண்ட் அதிகமிருந்ததாய் தெரிந்தது. பட் நாசரின் பர்பாமென்ஸ் கலக்கல் ஹிந்தியில்.
@@@@@@@@@@@@@@@@@@
டிவி பார்ப்பது எவ்வளவு பெரிய கொடுமை என்பது அதுவும் ஞாயிறுகளில் திரும்பிய சேனலெல்லாம் சினிமாவாக இருக்க, பத்து செகண்டுக்கு ஒரு சேனலை மாற்ற வைத்துவிடுகிறார்கள். அதிலும் காலையில் காமெடி நிகழ்ச்சிகள் என்று ஆளாளுக்கு கையை ஆட்டி, காலை ஆட்டி அடிக்கும் கூத்துக்கு முடியலை. சரி.. ஏதாவது படம் பார்க்கலாம் என்றால் பார்த்த படமாய் இருப்பதோடு மட்டுமல்லாம் விளம்பரம் போட்டே கொல்கிறார்கள். சரி ஆங்கில படம் பார்க்கலாம் என்றால் பாதி சேனலில் ஒன்று ஜாக்கி சான் படம் ஓடுகிறது. அல்லது படு மொக்கையான ஆங்கில படங்கள். தமிழே தேவலை என்பது போல. இவ்வளவு தேடலுக்கு நடுவே ஜீ தெலுகில் நானியும், நித்யா மேனன் நடித்த படம் கொஞ்சம் நேரம் பார்த்தேன் இம்ப்ரசிவ். ஏற்கனவே பார்த்திருந்தாலும்
@@@@@@@@@@@@@@@@@@@@
யானை டாக்டர்
சென்ற வாரம் ஜெயமோகனின் யானை டாக்டரைப் பற்றி எழுதியிருந்தேன்.  அதை படித்துவிட்டு, பதிவர் லாரன்ஸ்பிரபாவுக்கு ஒர் ஐடியா வந்திருக்கிறது. அச்சிறுகதையை ஏன் நாம் ஒலி வடிவாய் தரக்கூடாது என்ற எண்ணம்தான் அது. நல்ல கணீர் குரலுக்கானவர் லாரன்ஸ். உடனடியாய் அதை முயற்சி செய்து பதிவேற்றியும் விட்டார். தனியொரு மனிதராய் அவரே நான்கைந்து பேருக்கு தன் பல குரல் திறமைகளைப் பயன்படுத்தி நன்றாகவே செய்திருந்தார்.சிற்சில குறைகளைத் தவிர. வாழ்த்துக்கள் லாரன்ஸ்பிரபா.
@@@@@@@@@@@@@@@@@@@@@
என் ட்வீட்டிலிருந்து
மீண்டும் ராமர் பிள்ளை ஐஞ்சு ரூபாய்க்கு பெட்ரோல் தர்றாராம். விகடன் நியூஸ்.


பெண் பொறாமை கொண்டால் அது இயல்பு. ஆண் பொறாமைக் கொண்டால் உனக்கொரு அடிமை சிக்கிவிட்டான் என்று பொருள்.


காதல் என்பது இசையைப் போல முதலில் கற்றுக் கொள்ள வேண்டும் பின்பு அதை நம் உணர்வுகளோடு கலந்தடிக்க வேண்டும். பல சமயங்களில் ஒர்க்கவுடாகும்


எவ்வளவு சீக்கிரமாய் அழ வேண்டுமோ அழுது முடித்துவிடு, ஏனென்றால் பின்னாடி அதே காரணத்திற்காக நாம் அழுவோமா என்று தெரியாது.


உன் கனவுகளை யாராலும் தூக்கிச் சென்று விட முடியாது. எனவே பெரிதாய் கனவு கொள்


நாளை என்கிற ஒன்றை நாம் எதிர்நோக்குவதற்காக யாராவது ஒருவர் நமக்கு அனுப்பட்டால் அது ஒன்றும் தப்பில்லை.

உன்னைக் கண்ணீரைத் துடைப்பதைவிட, உன் கண்ணீருக்கு காரணமானவர்களை துடைத்தெடுப்பது புத்திசாலித்தனம்.

தொடு இதயத்தை உடலையல்ல களவாடு என்னை கன்னிமையை அல்ல. சிரிக்க வை என்னை அழுகையை மறைத்தல்ல

நேற்று மடகாஸ்கர் பார்த்தேன். கார்டூன் படங்கள் என்னை எப்போதுமே வசீகரிக்கிறது. சுமாராய் இருந்தாலும்.

உன்னைப் பற்றி அவர்கள் பேசுவதை நிறுத்தும் வரை நமக்கே புரிவதில்லை அவர்கள் எவ்வளவு நம்மை விரும்புகிறார்கள் என்று.

நான் ஏன் ஜனாதிபதியாய் ஆகக்கூடாது?எனக்கு 35 வயது தகுதியும், கல்யாணமும் 
ஆகிவிட்டது. ரப்பர் ஸ்டாம்ப் போஸ்டுக்கு இதை விட சிறந்த தகுதி வேண்டுமா?

ஒலகத்துல புதுசா கண்டுபிடிச்ச கதை ஏதுவுமே கிடையாது என்பதை யாராச்சும் சில பேருக்கு கண்டுபிடிச்சு சொல்லுங்கப்பா.. #முடியலை

தூங்கும் போது மேலுதட்டில் பூக்கும் துளிர் வியர்வையை மீசையாய் வரையலாமோ என்ற எண்ணத்தை உள்ளுக்குள் உருண்டோடும் உன் ரகசிய பார்வை தடுக்கிறதே.

உடல் நிலை சரியில்லாத போது கிடைக்கும் அட்வைஸ்களின் இம்சையை விட உடல் நிலையால் கிடைக்கும் இம்சை எவ்வளவோ மேல்.

தெலுங்கு, தமிழ், இந்தி என்று எந்த மொழியில் பார்த்தாலும் சுவாரஸ்யம கெடாமல் 
விக்ரமார்குடு இருப்பதற்கு காரணம் நானா? ராஜமெளலியா?

ஒவ்வொருவரின் நடத்தைக்கு பின்னும் ஒரு காயமோ, அல்லது காரணமோ இருக்கும். அதனால் அவர்களை பற்றி முடிவெடுக்கும் முன் நீ யோசி.

நாம் உருவாக்கும் வாழ்க்கையும், காதலும்தான் நம்மை வாழ வைக்கிறது.

ஒரே ஒரு தும்மல் 150 வகை வியாதிகளைப் பரப்பும் என்கிறார்கள். காதலிகள் விடும் ரகசிய தும்மல்களையும் சேர்த்தா?

செய்வதற்கும் சொல்வதற்கும் நிறைய வித்யாசம் இருக்கிறது.

பெண்களை அழவைத்து பார்க்க விரும்பாதவர்கள் என்பவர்கள் அனைவரும் அழ வைத்தே பார்க்கிறார்கள். பொய் சொல்லி சந்தோஷப்படுத்தி..

என்னை நீ தெரிந்தெடுத்து காரணமாய்த்தான் பழகுகிறாய் என்றால் நானும் உன்னை சாய்ஸில் விட்டுவிட வேண்டிய அவசியம் உண்டு

டாடா ஸ்கை இன்னமும் தினசரிகளில் பொய்ச் சொல்லிக் கொண்டிருக்கிறது. செட்டாப்பாக்ஸ் கட்டாயம் என்று # Dont Beleive TataSky
@@@@@@@@@@@@@@@@@@@@
அடல்ட் கார்னர்
டாக்டர் எனக்கு ஒரு வயாக்ரா எழுதிக் கொடுங்கள் இன்றைக்கு ஓர் சூப்பர் சிகுனி மாட்டியிருக்கிறாள் என்று கேட்டு வாங்கிக் கொண்டுப் போனான் ஒருவர். மறு நாள் அதே டாக்டரிடம் அவன் வந்து நிற்க டாக்டர் சிரித்தபடி என்ன முதுகும் இடுப்பும் பெண்டெடுத்துவிட்டாளா? என்று கேட்க, அவன் நொந்து போய் ”அடப் போங்க டாக்டர் நேத்து அவ வரவேயில்லை அதனால கை வலி தாங்க முடியல

Post a Comment

14 comments:

Balaganesan said...

thalaiva am the first...after reading ur tweets am flatted....super.

Prem S said...

//தமிழநாட்டு மக்களுக்கு யார் எதை வேண்டுமானாலும் சொல்வதற்கு உரிமையுள்ள, அன்பான, மனதுக்கு நெருக்கமான, காழ்ப்புணர்வை கொட்ட என்று இருக்கிற ஒரே நெருக்கமான அரசியல்வாதி, நண்பன், உறவினன் நம்ம தாத்தாதான் போலருக்கு.//உண்மை உண்மை

வவ்வால் said...

கேபிள்ஜி,

சென்னை புறநகர் தியேட்டர்களின் நிலை இது தான் எவ்ளோ சூப்பர் ஹிட் படமாக இருந்தாலும் செகண்ட் வீக்கில் காத்தாடும், இதை நான் பல முறை உங்களிடம் சொல்லியும் இருக்கிறேன். சனி,ஞாயிறுகளில் தான் கூட்டம் தேறும்.

மோசமான படம் எனில் ஒரு நாள் கூட தாங்காது.

உங்கள் கேட்டால் கிடைக்கும் பாலிசி நல்லது தான் ஆனால் தண்ணீரை கேட்டுக்குடிப்பதில் சிக்கல் இருக்கு, இலவசமாக கேட்டால் பாத்ரூம் டேப்பில் இருந்து பிடித்துக்கொடுத்துவிடுவார்கள். :-))

உதயம் தியேட்டர் போன்றவற்றில் இன்னமும் சில்வர் டிரம்மில் தண்ணீர் ஊற்றி சங்கிலிப்போட்டு கிளாஸ் எல்லாம் இருக்கும்,அந்த தண்ணீர் பாத்ரூம்மில் இருந்து குடத்தில் பிடித்து நிரப்ப்பிய தண்ணீர் ,அப்படி நிரப்புவதை நான் பார்த்திருக்கிறேன்.அதையும் மக்கள் குடிக்கவே செய்கிறார்கள். எனவே இலவசமாக தண்ணீர் கேட்டு வம்பை வாங்குவதில்லை :-))

சரவண பவன் போன்ற உணவகத்தில் வைக்கும் குடி நீரைக்கூட குடிப்பதில்லை. அங்கு உள்ள ஒரு வாட்டர் கூலரில் இருந்து தண்ணீர் பிடிப்பார்கள், டேப்பில் பிடிக்க நேரம் ஆகும் என்று டேங்கில் நேராக ஜக்கை விட்டு மொள்ளுகிறார்கள். அந்த் ஜக் வெளிப்புறம் இருக்கும் அழுக்கு எல்லாம் தண்ணீரில் கலக்கும். இப்படி அவசரத்தில் நீரை அசுத்தப்படுத்தி இலவசமாக கொடுத்தால் குடிப்பதில் என்ன பயன்?

சுகாதார அதிகாரிகள் சுத்தமான குடிநீர் வழங்கப்படுகிறதா எனக்கண்காணிக்க வேண்டும், ஆனால் "மாமூல்" வாழ்க்கையை ஓட்டுகிறார்கள்.
------
தாத்தாவுக்கு வாயில் வாஸ்து சரியில்லை :-))

மேற்கு வங்கத்தை சேர்ந்த மம்தா பானர்ஜி எல்லாம் அப்துல்கலாம் பெயரை சொல்லும் போது தமிழ்நாட்டு அரசியல்வாதி கலகம் என அருஞ்சொற்பொருள் விளக்கம் கொடுத்தால் என்ன செய்வார்கள்?

தாத்தா பேரை யாராவது பரிந்துரைப்பார்கள், சீச்சீ எனக்கு வேண்டாம் என சொல்லலாம் என காத்திருந்த வேளையில் ஒருத்தரும் பேச்சுக்கு கூட சொல்லாத கடுப்பாகயிருக்கும். ஆல் டைம் அல்லக்கை வீரமணி கூட சொல்லவில்லை :-))

-------
//நான் ஏன் ஜனாதிபதியாய் ஆகக்கூடாது?எனக்கு 35 வயது தகுதியும், கல்யாணமும்
ஆகிவிட்டது. ரப்பர் ஸ்டாம்ப் போஸ்டுக்கு இதை விட சிறந்த தகுதி வேண்டுமா?//

ரெண்டாவது முறையாகவும் ரப்ப்ர் ஸ்டாம்பு ஆக ஆசையா :-))

. said...

தேங்க்ஸ் கேபிள்.. யானை டாக்டர் ஒலி வடிவம் குறித்த தகவல்களை பகிர்ந்தமைக்கு.... மிக்க நன்றி....

தங்களின் அன்புக்கும் ஆலோசனைக்கும் கருத்துக்கும் கூடுதல் தேங்க்ஸ்.....

இந்த முயற்சி, என்னை பயிற்று விக்க கிடைத்த வாய்ப்பாக கருதுகிறேன்... மேலும், நம்மால் சில ஆக்கபூர்வமான தாக்கங்கள் உருவானால், மிக்க மகிழ்ச்சி...

மீண்டும் நன்றி... நண்பா...

சாதாரண கிராமத்தான் said...

அன்பின் கேபிள்,
எனக்கு புரிந்தவரை கருணாநிதி கலாம் என்ற சொல்லுக்கு கலகம் என்று சொன்னதாக நான் கொள்ளவில்லை. அவர் குறிப்பாக திரு கலாம் அவர்களித்தான் கலகக்காரர் என்று சொன்னதாக புரிந்து கொள்கிறேன். இது மிகவும் தவறானதாகவே எனக்கு படுகிறது. முன்புபோல் கண்ணன், குங்கும போட்டு, இந்து என்ற சொற்களுக்கு அடுத்து இந்த பொருள் விளக்கம் வந்து இருக்கிறது. என்னதான் தெளிவாக இதுவரை இந்து மதத்தைபற்றி மட்டுமே இப்படி சொல்லி வந்த கருணாநிதி முதல் முறையாக இஸ்லாம் மக்களிடம் இதுபோல் தன வேலையை காட்டியுர்க்கிறார். அந்த கேள்விக்கு எப்போதும்போல நாங்கள் காங்கிரஸ் கட்சியோ அல்லது இந்த கூட்டணி எந்த வேட்பாளரை தேர்வு செய்கிறதோ அவரையோ மட்டுமேதான் ஆதரிப்போம் என்று சொல்லி இருக்கலாம். அல்லது இவரின் குடிமி காங்கிரஸ் கட்சியிடம் இல்லை என்றால் ஒரு தமிழரை ஆதரிப்போம் என்ற வழக்கம்போல சொல்லி இருக்கலாம். ஆமாம் நீங்கள் இந்த வார பரபரப்பு நித்தி பற்றி எதுவுமே சொல்லவில்லையே. அனைத்தும சரி இல்லாவிட்டாலும் அந்த கர்நாடக நிருபர் கொண்டுவந்த சம்மனை நித்தி வாங்காமல் அவரை வெளியேற்றியது சரி என்றே படுகிறது. இதை எப்போதடா நேரம் கிடைக்கும் என்று காத்து இருந்தவர்கள் தமிழன் கர்நாடகன் பிரச்சினையை ஆரம்பித்து விட்டார்கள். வெயில் ஆரம்பித்து விட்டது அத்தோடு பவர் கட்டும். ஒய்வு எடுத்து உடல் நலம் பேணி கொள்ளுங்கள்.
நன்றி.

மணிஜி said...

யானை டாக்டரை ஏற்கனவே திரு ராஜா சந்திரசேகர் தன் குரலில் பதிவு செய்திருக்கிறார்.. ஒரு தகவலுக்காக.. லாரன்சுக்கு எனது வாழ்த்துக்கள்.

ppage said...

நன்றி... மணி ஜி... ராஜா சந்திர சேகர், யானை டாக்டர் குறித்த விமர்சனத்தையே ஒலி வடிவத்தில் வைத்திருக்கிறார். நான் முயன்றதோ, யானை டாக்டர் சிறுகதையின் முழு ஒலிவடிவம்....

rajamelaiyur said...

//எனக்கு தெரிந்து பின்னணியில் ஆடிய அந்த சிகப்பு கலர் டைட் ஜீன்ஸ் பெண் புட்டேஜ் கூட ஒரு பத்து செகண்ட் அதிகமிருந்ததாய் தெரிந்தது.
//

ரொம்ப டீப்பா பார்த்து இருக்கிங்க தல

rajamelaiyur said...

கடைசி ஜோக் ஹா ஹா ஹா

rajamelaiyur said...

அனைவரும் படிக்க வேண்டிய பதிவு

பிகரை கரெக்ட் பண்ணுவது எப்படி ?

JR Benedict II said...

CABLE G சூப்பர்..

JR Benedict II said...

எனக்கு பிடித்த வலையுலகின் பிளாக்குகள் - http://ideasofharrypotter.blogspot.com/2012/06/01_18.html

'பரிவை' சே.குமார் said...

அருமை... எல்லாமே அருமை.
கலாம் குறித்த கலைஞரின் பேச்சு கண்டிக்கத்தக்கதுதான்.
மற்றவை நன்று.

விஷாஹ் மானஸ்வி said...

/** என்னைப் பொருத்தவரை அப்துல்கலாம் என்பவர் சரியாக மார்கெட் செய்யப்பட்ட இன்னொரு விதமான தமிழர் இன் ஜெக்‌ஷன் ரப்பர் ஸ்டாப் அவ்வளவுதான். **/

கேபிள்ஜி.. திரு கலாம் அவர்களை யாரும் மார்க்கெட் செய்ய வேண்டும் என்கிற அவசியமில்லை.. இந்த தேசத்திற்காக அவர் ஆற்றிய பணிகளில் ஆயிரம் என்ன இலட்சத்தில் ஒரு பங்கு கூட நாம் நம் சார்பில் செய்திருக்கமாட்டோம்.. இமயத்தின் உயரத்தை யாரும் விளம்பரப்படுத்த வேண்டய அவசியமில்லை.. ஒரு முறை அவரின் வரலாற்றைப் புரட்டிப் பாருங்கள்..