தமிழ் சினிமா ரிப்போர்ட்- மார்ச் 2012 - ஏப்ரல் 2012
மார்ச் மாதம் பெரும்பாலும் பரிட்சை மாதமாதலால் பெரும்பாலான படங்கள் வெளியாகாமல் இருந்த நேரத்தில் மிகச் சிலப் படங்களே வெளியாயின. நிறைய சின்ன பட்ஜெட் படங்களும் அதில் அடங்கும். பெரும்பாலானவை வந்த சுவடே தெரியாமல் போய்விட்டது.
1 கொண்டான் கொடுத்தான்
வி.சேகரின் பாணிப்படம். முழுக்க,முழுக்க, குடும்ப உறவுகளை மையப்படுத்தி வந்த இன்னொரு சின்ன பட்ஜெட் டிவி சிரியல்.பெரிய அளவு ஓப்பனிங் இல்லை. ஒரு வாரத்தில் பி,சி என்று எந்த செண்டரிலும் கவனிக்கப்படாத படமானது.
2.அரவான்
வெளியாவதற்கு முன் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட படம். அம்மா கிரியேஷன்ஸ் சிவாவின் தயாரிப்பில் உருவான படத்தை முதலில் யுடிவி வாங்கப் போவதாய் இருந்து கடைசியில் லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் வாங்கி ஒரிரு நாளில் அதிக விலைக்கு தமிழ் சினிமாவின் புதிய அன்னதாதாவான வேந்தர் மூவீஸிடம் விற்று விட்டார்கள். வேந்தர் மூவீஸுன் முதல் வெளீயிடு தோல்வியாகிப் போனது. முதல் நாள் இருந்த அப்படியே குறைந்து, சடுதியில் காணாமல் போனது.
3. கழுகு
பழைய ரஜின் பட டைட்டில். கற்றது களவு கிருஷ்ணாவுக்கு சொல்லிக் கொள்ளும் படியான படமாய் அமைந்தது இது தான். கொடைக்கானல் மலையிலிருந்து விழுந்து தற்கொலை செய்து கொள்பவர்களின் உடலை எடுத்து வரும் இளைஞனைச் சுற்றி நடக்கும் கதை. ஏ சர்டிபிகேட் கொடுத்ததால் வரி சலுகை கூட இல்லாமல் போனது. இருந்தாலும் சுமார் 2-3 கோடி வசூல் செய்ததாய் சொல்கிறார்கள். ஷூ ஸ்ட்ரிங் பட்ஜெட்டில் எடுக்கப்பட்டிருந்த இப்படம் இயக்குனருக்கு அடுத்த பட வாய்ப்பை பெற்றுத் தந்திருக்கிறது என்கிற அளவில் வெற்றியே..
4. விண்மீன்கள்
பழம் பெரும் இயக்குனர் கே. சங்கரின் பேரன் இயக்கிய படம். செலிபரல் பால்சி என்கிற நோயுடன் பிறந்த குழந்தையையையும், அவனுடய பெற்றோர்களைச் சுற்றி நடக்கும் கதை. சுந்தமாய் கவனிப்பேயில்லாமல் கரைந்து விட்ட ஒரு படமாய் ஆகிவிட்டது.
ஆவரேஜ் - கழுகு
ஏப்ரல் மாதம் வழக்கம் போல் பெரிய படங்களும் சிறிய படங்களுமாய் நிறைய படங்கள் வெளிவந்தன.
மீராவுடன் கிருஷ்ணா
நடிகராய் வலம் வர ஆசைப்பட்டு பெரிய வாய்ப்பேதும் கிடைக்காததால், தானே தயாரித்து, இயக்கி நடித்த படம் மீராவுடன் கிருஷ்ணா. பத்திரிக்கைகளில் கொஞ்சம் ஸ்பெஷலாய் கவனித்தாலும் மககளால் கவனிக்கப்படாத படமானது.
அஸ்தமனம்
போர்க்களம் படத்தை இயக்கி கவனம் ஈர்த்த பண்டி சரோஜ்குமாரின் படம். அரை குறை திரில்லர். மிகக் குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட டிஜிட்டல் படம். டெக்னிக்கலாகவும் பெரிதாய் ஏதும் சொல்ல முடியாத படம். ஒளிப்பதிவாளர் சி.ஜே. ராஜ்குமார் ஒளிப்பதிவு செய்த படம். ஆனால் அவரது பெயர் இருட்டடிப்பு செய்யப்பட்டது தவிர சாதனையாய் ஏதும் செய்யாத படம்.
ஒரு கல் ஒரு கண்ணாடி
ஏழாம் அறிவு படத்துடன் வெளியிட்ட ஒரு நிமிட டீஸர் கொடுத்த இம்பாக்ட் இப்படத்தின் ஓப்பனிங்கில் தெரிந்தது. ரொம்ப மாசமாய் வசூல் என்கிற ஆக்ஸிஜன் இல்லாமல் அவதிப்பட்டு வந்த தமிழ் சினிமாவிற்கு உயிர் கொடுத்த படமானது. சுமார் நாற்பது கோடிகள் வரை க்ராஸ் செய்திருக்கும் படம். சந்தானம் - ராஜேஷ் காம்பினேஷன் மீண்டும் ஒரு சூப்பர் ஹிட்டை உதயநிதிக்கு வழங்கியிருக்கிறார்கள். “யு” சர்ட்டிபிக்கேட் வாங்கியும் வரி சலுக்கை மறுக்கப்பட்டிருக்கிறது இப்படத்திற்கு. அதற்காக கோர்ட்டை நாடியிருக்கிறது தயாரிப்பு. இந்த வருடத்தின் சூப்பர் ஹிட் படம் இது தான்.
பச்சை என்கிற காத்து
பத்திரிக்கைகள் மட்டுமே ஆஹா ஓஹே என்று பாராட்டிய படம். ஒரே வாரத்தில் காத்தாய் மறைந்து போனது.
மை
விநியோகஸ்தர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற படம். ராமநாராயணன் விநியோகத்தில் வெளியானது. பெரிதாய் விளம்பரம் இல்லாததால் இப்படமும் தோல்வியில் வீழ்ந்தது வருத்தத்துக்குரியதே.
ஆதி நாராயணா
காலத்தே வெளியாகாமல் போனதாலும், குழப்பமான திரைக்கதையாலும், தோல்வியைத் தழுவியப்படம்.
லீலை
இப்படமும், லேட் ரிலீஸ் தான் ஆஸ்கர் ரவிச்சந்திரனின் தயாரிப்பில் ஆரம்பிக்கப்பட்டு, அவரது தம்பியின் தயாரிப்பில் வெளீயானது. நலல் குவாலிட்டி ஃபீல் குட் படம். லோ கீ விளம்பரத்தினாலும், சரியான நேரத்தில் வெளியாகததினாலும் கவனிக்கப்படாமல் போனது வருத்தமே
சூப்பர் ஹிட்: ஒரு கல் ஒரு கண்ணாடி
கேபிள் சங்கர்
Comments
What happened to கலகலப்பு ?
I want to know the details :))
I want to know the details :)) "
அண்ணன் கண்டிப்பா சொல்வாரு . .
மே ரிப்போர்ட்டில் . .
இந்த வருடத்தின் இரண்டாவது சூப்பர் ஹிட் படம்
என்று . .
உங்கள் ஸ்பெகுலேஷன் இது வரை சரியே.. மே மாதத்திய சூப்பர் ஹிட் படம் மசாலா கஃபே என்பதில் சந்தேகமேயில்லை..
who?
பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் முதல் முறையாக நமது பிளாக்கில் ...
@ nermai nyayam ellam sethu pochu illa thala??? Panam pathu mattum illa...intha maathiri comment podavum seyum...Kalakunga...
http://vithyan.blogspot.com/
ஆண்மை குறையேல்.. கலகலப்பு மே மாதத்திய சூப்பர் ஹிட் இல்லை என்று நீங்கள் நினைத்தால்.. அது உங்களுடய சினிமா பற்றிய தெளிவின்மையை காட்டுகிறது. என் ஆழ்ந்த அனுதாபமும், பரிதாபமும்.
மாத ரிப்போர்ட் என்று வரும் போது இது வரை என்று தான் எடுத்துக் கொள்ள வேண்டும். இதெல்லாம் தானாபுரிஞ்சிக்கணும்.:))
நான் :என்ன சார், இப்பதான் ஜூன் மாதம் வந்துள்ளது.இன்னும் பாதி வருடம் இருக்கு அதற்குள் ஓகே ஓகே தான் இந்த வருடத்து ஹிட் என்று சொல்லிவிடீர்கள்.? இதுவரை வந்ததில் ஓகே ஓகே தான் ஹிட் என்றால் ஓரளவு சரி. சகுனி,பில்லா 2 , விஸ்வரூபம்,துப்பாக்கி ஆகிய படங்கள் ஒன்றின் மீது கூட நம்பிக்கை இல்லையா? சரிதான்.
கேபிள்:மாத ரிப்போர்ட் என்று வரும் போது இது வரை என்று தான் எடுத்துக் கொள்ள வேண்டும். இதெல்லாம் தானாபுரிஞ்சிக்கணும்.
நான்: செம பதில் சார். வருடம் = மாதம்.
//முதல் நாள் இருந்த அப்படியே குறைந்து, சடுதியில் காணாமல் போனது. //
3. கழுகு
//பழைய ரஜின் பட டைட்டில்//
4. விண்மீன்கள்
//நோயுடன் பிறந்த குழந்தையையையும்//
5.ஒரு கல் ஒரு கண்ணாடி
//“யு” சர்ட்டிபிக்கேட் வாங்கியும் வரி சலுக்கை //
6.பச்சை என்கிற காத்து
//பத்திரிக்கைகள் மட்டுமே ஆஹா ஓஹே//
7.லீலை
//நலல் குவாலிட்டி ஃபீல் குட் படம்//
//வெளீயானது.//
//வெளியாகததினாலும்//
திருமலை படத்தில வர விஜய் மாதிரி தப்பா எழுதினாலும்
சொல்ல வரது புரியுது தலை.....
கரெக்சன் பிளீஸ்...
எழுத்துப் பிழைகள் ஆங்காங்கே வருகின்றனவே? உங்கள் நடையின் விறுவிறுப்பை அவை குறைக்காதோ ?
அன்புடன்
ஹேமந்த்