தீபாவளியின் தோல்விக்கு பிறகு எழில் தன்னை மீண்டும் நிருபிக்க களம் இறங்கியிருக்கும் படம் மனம் கொத்திப் பறவை. எழுத்தாளர் சாருநிவேதிதாவின் கட்டுரைத் தொடரின் பெயர் இது. சிவகார்த்திகேயனின் இமீடியட் இம்பாக்டுடன் களமிறங்கியிருக்கிறார்.
சிறு வயது முதலே எதிர் எதிர் வீட்டில் ஒன்றாய் வளர்கிறார்கள் கண்ணனும், ரேவதியும். ரேவதியை ஒரு தலையாய் காதலித்து, அவளும் காதலிப்பதாய் நண்பர்களிடம் பில்டப் செய்கிறான் கண்ணன். ரேவதிக்கு திடீரென நிச்சயம் ஆகிறது. கண்ணன் பதைக்கிறான். அவனால் ஏதும் செய்ய முடியவில்லை. ஏனென்றால் ரேவதியின் குடும்பமே ஒரு அடாவது அடிதடிக் குடும்பம். ஆனால் ரேவதியோ இதுவரை தன் காதலை அவனிடம் சொன்னதேயில்லை. அவள் வீட்டில் நிச்சயித்த ஆளை திருமணம் செய்ய தயாராக இருக்கிறாள். திருமணத் தினத்தன்று கண்ணனின் நண்பர்கள் போதையிலிருக்கும் கண்ணனோடு, ரேவதியையும் கடத்துகிறார்கள். பின்பு என்ன ஆனது என்பதுதான் கதை. ஏற்கனவே பல படங்களில் பார்த்த அதே அரைத்த மாவுக்கதைதான். அதை சிவகார்த்திகேயனை வைத்து புதுசாய் ஆட்டியிருக்கிறார்கள்.
சிவகார்த்திகேயனை ஒரு ஹீரோ மெட்டீரியலாய் உருவேற்ற முயற்சி செய்திருக்கிறார்கள். ஆனாலும் பல காட்சிகளில் அவருக்கு காமெடி சென்ஸ்தான் அதிகமாய் வருகிறது. ஆங்காங்கே அவர் அடிக்கும் வாய்ஸ் ஓவர்லாப் பஞ்சுகள் சந்தானம் பேசுவது போல் இருந்தாலும் பெரும்பாலான இடங்களில் எடுபடவில்லை. முகத்தில் காதலோ, சோகமோ எதுவுமில்லாமல் வெறுமையாகவே பல இடங்களில் இருக்கிறார். நிறைய இடங்களில் குழந்தைத்தனமான ஆக்ட்டிவிட்டிகளால் சிரிக்க வைக்க முயற்சி செய்கிறார். ஒரு சில இடங்களில் நன்றாக டான்ஸ் ஆட முயற்சித்திருக்கிறார். மெனக்கெட்டால் நல்ல நடிகராய் வர வாய்ப்புள்ளது.
புதுமுகம் ஆத்மியாதான் ரேவதி. பல கோணங்களில் சிவகார்த்திகேயனுக்கு அக்கா போலிருக்கிறார். இவரின் கேரக்டர் ஒரு அன்பிரிடிக்டபிள் கேரக்டராய் இருப்பதால். முதல் பாதி முழுவதும் இவர் காதலிக்கிறாரா இல்லையா? என்று குழப்பம் ஓடிக் கொண்டிருக்கிறது. கடத்தப்பட்ட பிறகு அவருக்கு சிவகார்த்திகேயன் மீது காதல் இருப்பதாய் சொல்வது செம உட்டாலக்கடி.
நண்பர்களாய் சூரி, சிங்கம்புலி, மற்றும் இருவர். பாதி படத்தில் நந்துவும், சாம்ஸும் வருகிறார்கள். சூரி காமெடியாய் பேசுதாய் நினைத்து ஓவராய் பேசிக் கொண்டேயிருக்கிறார். சாம்ஸும் நந்தும் ஆங்காங்கே லேசாய் புன்முறுவல் செய்ய வைக்கிறார்கள். நிஜமாகவே நல்ல நகைச்சுவையை ஏற்படுத்தியவர் சிங்கம்புலிதான். அதிலும் வில்லன் ஆட்கள் ஹீரோ, ஹீரோயின் இரண்டு பேரும் எங்கே போய் இருக்கிறார்கள் என்று கண்டு பிடிக்க, குந்த வைத்து அடிக்கும் அண்ணன்களிடம், “அண்ணே.. அழுகுறதுக்கு கூட கேப் விடாம அடிக்கிறியே இது நியாயமா? ‘ என்று ஆங்காங்கே சட்சட்டென நம்மை கிச்சு கிச்சு மூட்டுகிறார்.
இசை டி.இமான். ஜல் ஜல், போ.. போ..டங்.. டங் போன்ற பாடல்கள் ஓகே.பின்னணியிசை இம்சை. ஒளிப்பதிவு சூரஜ் நல்லுசாமி. அவள் அப்படித்தான் பட ஒளிப்பதிவாளரின் மகனாம். டிஜிட்டல் கேமராவில் படமாககப்பட்டிருக்கிறது என்று நினைக்கிறேன். பல இடங்களில் பளிச் ப்ளீச். நல்ல மலை வாசஸ்தலத்திற்கு வந்தபின் தான் கொஞ்சம் கண்ணுக்கு குளிர்ச்சியாக இருக்கிறது.
எழுதி இயக்கியவர் எழில். முதல் பாதி முழுவதும் செம காமெடியாய் நகர்கிறது என்று நினைத்து அவர் எடுத்த காட்சிகள் எல்லாம் பெரியதாய் செல்ப் எடுக்கவில்லை. இரண்டாவது பாதியில் ரேவதிக்கும், கண்ணனுக்கு இடையே காதல் வரும் எபிசோடும் படு சொதப்பல். இவர்களுக்குள் இருப்பது காதலேயில்லை என்பதால் இருவரும் சேர வேண்டும் என்கிற எண்ணம் ஏற்படவேயில்லை. பல இடங்களில் டயலாக்கை மட்டுமே வைத்து காட்சிகளை நகர்த்தியிருக்கிறார்கள். ஹீரோயினின் முட்டாள் முரட்டு அண்ணனை வைத்தும், கண்ணனின் நண்பர்களை வைத்து கொண்டு சுமொவில் அலையும் விஷயம் காமெடியாய் இருந்தாலும் இதே சிங்கம் புலி பதினெட்டாம் குடி எனும் படத்தில் ஏற்கனவே போட்டுத் தேய்த்த விஷயம் தான். பல இடங்களில் லாஜிக்கேயில்லை. ஒரு இண்ட்ரஸ்டான நாட் அதை வைத்து ஜாலியாய் கொண்டு போக முயற்சி செய்திருக்கிறார்கள். அவ்வளவே.
கேபிள் சங்கர்
Post a Comment
14 comments:
படத்துக்கு முன்னாடியே விமர்சனம் ரிலீஸ் ஆயிடுச்சு..கலகலப்பு அளவுக்கு இல்லை போல..
படம் பார்க்குற மாதிரி இருக்குமா ??? இல்ல தல நடிச்ச ராஜா படம் மாதிரி இருக்கா....???
மனம் கொத்தி பறவை சரியா பறக்கலை போல எழில்க்கு!
படம் ரிலீஸ் ஆயிடிச்சா....
வாழ்த்துக்கள்
வர வர உங்கள் விமர்சனங்களில் தனிப்பட்ட தாக்குதல்கள் அதிகரித்துக் கொண்டு செல்வதும்... சினிமாவின் சகல நுணுக்கங்களையும் அறிந்தவர் போல காட்டிக்கொள்ள முனைவதும்.. ஆரோக்கியமாக இல்லை...
அண்ணன் நல்ல விமர்சனம்
சிவா கார்த்திகேயன் இன்னும் நல்ல முயற்சி பண்ணுன ஒரு சான்ஸ் இருக்கு
DailyLib
வர வர உங்கள் விமர்சனங்களில் தனிப்பட்ட தாக்குதல்கள் அதிகரித்துக் கொண்டு செல்வதும்... சினிமாவின் சகல நுணுக்கங்களையும் அறிந்தவர் போல காட்டிக்கொள்ள முனைவதும்.. ஆரோக்கியமாக இல்லை...
10000000 PERCENT CORRECT
நன்றி விமர்சனங்களின் எல்லா நுணுக்கங்களையும் அறிந்த யாழிபாபா # கார்த்திக் நம்பியார்.
அப்ப சிவகார்த்திகேயன் விஜய் டிவியின் ஆஸ்தான காம்பியராயிடுவாரா?? இரண்டு படம் ஊத்திக் கொண்டால் (மெரினா, ம.கொ.பறவை) அடுத்த சான்ஸ் கஷ்டமாச்சே??
படம் நன்றாக விலை போயிருப்பதாய் ஒரு ப்ளாக்கில் படித்தேன்.. போட்ட காசை எடுக்குமா??
//எழுத்தாளர் சாருநிவேதிதாவின் கட்டுரைத் தொடரின் பெயர் இது//
சாருவுக்கு முன்பே ராஜேஷ்குமார் அவர்களின் க்ரைம் நாவல் ஒன்றில் வந்தப் பெயர் இது
இன்றுதான் படம் பார்த்தேன் .. எனக்கெனவோ சிவகார்த்திகேயன் காமெடி நடிகராக தொடர்வது நல்லது ena தோன்றுகிறது
மாணவர்களே ! பெற்றோர்களே !
பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் முதல் முறையாக நமது பிளாக்கில் ...
விமர்சனம் அருமை. நடுநிலைமை உள்ளது. தனிப்பட்ட தாக்குதலாக தெரியவில்லை.
சிவகார்த்திகேயன் தீவிர நடிப்பு பயிற்சி செய்யவேண்டும். காமெடியனாகக்கூட தனித்துவம் வேண்டும்.
இயக்குனர் கதை சொல்ல பயிற்சி எடுக்க வேண்டும். வேகம் தேவை. ஹரி, சேரன், தங்கர் இன்னும் எத்தனையோபேரிடம் நல்ல விசயங்கள் உள்ளன
Post a Comment