சமீபகாலமாய் சின்னப் படங்களை சட்டென புறம் தள்ளி விட முடியாதபடி கவனிக்ககூடிய சில திரைப்படங்கள் வெளிவரத்தான் செய்கிறது. அப்படி தரமான முறையில் தயாரிக்கப்பட்டு, தகுதியான விளம்பரம் ஆகியவற்றை செய்து வெளியிடப்படும் படங்கள் மிகக் குறைவு. அந்த வகையில் இந்தப்படம் தமிழ் சினிமாவில் புதிய பல முயற்சிகளை தமிழ் சினிமாவிற்கு கொண்டு வந்திருக்கிறார்கள் விளம்பரம் மற்றும் மார்கெட்டிங் மூலம் என்றே சொல்ல வேண்டும்.
இப்படத்தைப் பற்றி முதல் முதலில் என் கவனத்திற்கு வந்தது இவர்களின் விளம்பரம். கிருஷ்ணவேணி பஞ்சாலை என்ற டைட்டிலும், ஒரு புதிய டீம் களம் இறங்கியிருக்கிறது என்பதை அறிவிக்கும் வகையில் காஸ்டிங் டைரக்டர் என்ற ஒரு பதவியை நடிகர் ஷண்முகராஜனுக்கு கொடுத்து, தமிழில் எனக்கு தெரிந்து காஸ்டிங் டைரக்டர் என்கிற கார்டை முதல் முதலில் கொடுத்திருப்பது இந்த படம் தான் என்பது என் எண்ணம். காஸ்டிங் டைரக்டரின் பணி என்ன? படத்திற்கு தேவையான நடிகர்களை ஏன் பிரபல நடிகர்களைக்கூட காஸ்டிங் டைரக்டர்தான் அந்த கேரக்டருக்கு இவர் பொருத்தமாய் இருப்பாரா? இல்லையா? என்று முடிவு செய்வதும், புது முகமாய் இருந்தால் அவரக்ளை தெரிவு செய்து அவர்களுக்கான பயிற்சி அளித்து நல்ல நடிகராய் பரிமளிக்க செய்வதும் அவரது வேலை. அப்படி தெரிந்தெடுக்கப்பட்ட புதுமுக நடிகர்களுக்கு பயிற்சி கொடுத்து இப்படத்தில் நடிக்க வைத்திருக்கிறார்கள்.
இரண்டாவது.. முழுக்க முழுக்க ரெட் ஒன் கேமராவில் டிஜிட்டல் முறையில் படமாக்கப்பட்ட இந்தப் படம், ஒரு ப்ரீயட படம். 80களில் மில் கலாச்சாரம் ஓங்கியிருந்த காலத்தில் நடந்த கிருஷ்ணவேணி பஞ்சாலை என்கிற பஞ்சாலையையும், அதை சார்ந்தவர்களையும் சுற்றிப் பின்னப்பட்ட கதை. வழக்கமாய் இம்மாதிரியான கதைக் களன்கள் தமிழில் வருவதில்லை. அதை இவர்கள் முயற்சித்திருக்கிறார்கள்.
அடுத்து பாடல்கள். ரகுநந்தன் இசையில் ஏற்கனவே “ஆலைக்காரி” “உன் கண்கள் கண்ணாடி” ஆகிய பாடல்கள் மக்களிடையே நல்ல ரீச் ஆகியிருக்கிறது. உடனே நான் இதை கேட்கலையே அப்படி ஒன்றும் ஹிட்டில்லையே என்று சொல்பவர்களுக்கு.. இது ஒன்றும் பெரிய குத்து பாட்டில்லை என்பதால் சேர வேண்டியவர்களுக்கு சேர்ந்திருக்கிறது. என்பதை இவர்களின் பாடல் டவுன்லோடின் மூலம் அவர்களுக்கு தெரிந்திருக்கிறது.
அதற்கு அடுத்ததாய் இவர்கள் செய்தது தான் ஒரு வித்யாசமான விஷயம். எம்.பி.ஏ இறுதியாண்டு படிக்கும் மாணவர்களை வைத்து இவர்கள் ஒரு ப்ராஜெக்ட் செய்ததுதான் என்னை மிகவும் கவர்ந்த விஷயம். இன்றைய காலம் வரை தமிழ் சினிமாவில் வசூலாகட்டும், அதன் பிஸினெஸாகட்டும் அது ஏதோ ரகசிய காப்புரிமை பெற்ற விஷயம் போலவே இருக்கும் பட்சத்தில் இப்படத்தைப் பற்றி ஒரு ப்ராஜெக்டாக கொடுத்து தமிழகம் எங்கும் அம்மாணவர்களை வைத்து இப்படத்தின் ஆடியோ, மற்றும் படத்தைப் பற்றி மட்டும் அல்லாமல் பொதுவாக தமிழ் சினிமாவை பார்க்கும் ரசிகர்களின் பார்வையை பற்றி ஒரு பெரிய சர்வேயை எடுத்திருக்கிறார்கள். இவர்களின் ஆடியோ சிடிக்களை நேரடியாய் விற்பனையும் செய்திருக்கிறார்கள். எந்த மாதிரியான படங்களை மக்கள் உடனடியாய் பார்க்கிறார்கள். எந்த வயதுக்காரர்கள் எந்த மாதிரியான வசதியுள்ள தியேட்டர்களை விரும்புகிறார்கள்? ஒரு படத்தின் வெற்றியை எது நிர்மாணிக்கிறது என்பது போல பல டேட்டாக்களை இம்மாணவர்களின் ப்ராஜெக்ட் ரிப்போர்ட்டை வைத்து தெரிந்து கொண்டிருக்கிறார்கள்.
இப்படி படம் மட்டும் எடுக்காமல் வித்யாசமான கோணத்தில் யோசித்து அதை விஞ்ஞானப் பூர்வமாய் செயல்படுத்தி, ஒரு படத்தை தயாரித்து நம்மிடையே கொடுத்திருக்கும் முயற்சிக்கு இவர்களை பாராட்ட வேண்டியது என்னைப் போன்ற சினிமாக்காரர்களின் கடமை. படம் நாளை வெளியாகிறது. நீங்களும் அப்படத்தைப் பார்த்து விட்டு உங்கள் கருத்துக்களை சொல்லுங்களேன்.
கேபிள் சங்கர்
கேபிள் சங்கர்
Post a Comment
11 comments:
விளம்பரம்?
ilali லக்கி. இது விளம்பரம் இல்லை.. ஒரு சின்ன பட தயாரிப்பாளர் செய்த முயற்சியை பாராட்ட ஒரு சந்தர்ப்பம். அவ்வளவுதான்.
இந்த படம் திருப்பூர் வாழ்வியலை பின்னணியாக கொண்டதாக இருப்பதாக கூறுகிறார்கள்...பார்க்கலாம்! போஸ்டர் டிசைன் ஈர்க்கின்றது! நன்றி கேபிள்ஜி!
இம்மாதிரியான முயற்சிகளுக்கு ஆதரவளிப்பது நமது கடமை. அண்ணே நல்ல பதிவு.. நேரமிருந்தால் நம்ம பக்கமும் எட்டிப் பாருங்க..நான் ஒரு இளம் பதிவன்..
ஒரு படைப்பாளியின் கஷ்டம் இன்னும் ஒரு படைபாளிக்குதான் தெரியும் புரியும் .. அதனால் தான் இந்த பதிவை எழுதி உள்ளிர்கள் என எண்ணுகின்றேன் ,,, நல்ல படம் கண்டிப்பாக மக்களை சென்று அடையும்
இதையும் படித்து பாருங்கள்
நடிகர் விஜய்யை கிண்டல் செய்து வம்பில் மாட்டிய விஜய் டிவி
good try for a good cinema thanks for shaaring sankar anna hope more films will come like this to revive cinema industry
"என்னைப் போன்ற சினிமாக்காரர்களின் கடமை"
Appadiyaaa????
I am an mba student. I also participated in this movie marketing surbeys. Awaiting to watch the movie..
//எந்த மாதிரியான படங்களை மக்கள் உடனடியாய் பார்க்கிறார்கள். எந்த வயதுக்காரர்கள் எந்த மாதிரியான வசதியுள்ள தியேட்டர்களை விரும்புகிறார்கள்? ஒரு படத்தின் வெற்றியை எது நிர்மாணிக்கிறது என்பது போல பல டேட்டாக்களை இம்மாணவர்களின் ப்ராஜெக்ட் ரிப்போர்ட்டை வைத்து தெரிந்து கொண்டிருக்கிறார்கள்// --- அப்படியானால் இந்தப் படம் எந்த வயதுக்காரர்களை டார்கெட் செய்கிறது என்பதையும் எழுதி இருக்கலாம். குறிப்பிட்ட த்யேட்டர்களில் தான் வெளியிடுகிறார்களா? என்னைப் பொருத்த வரை ஒரு படம் குறிப்பிடும்படியான வெற்றி பெற வேண்டுமானால் அது எல்லா வயதினரையும் வசியப்படுத்த வேண்டும் அல்லது குறிப்பிட்ட வயதினர் மீண்டும் மீண்டும் தியேட்டரில் பணம் கொடுத்துப் பார்க்கும்படி இருக்கவேண்டும்!
இந்த எம்.பி.ஏ. மாணவர்களின் சர்வே முடிவை தனியே போட முடியுமா?
-ஜெ.
படம் ரெம்ப மொக்கை! உங்கள எனக்கு நானுறு ரூபாய் வேஸ்ட்!
Post a Comment