என்னடா இது பாலகுமாரனின் நாவல் பேர் போல இருக்கிறதே என்று யோசிக்கிறீர்களா? ஆம் சென்னையில் இந்த அயிட்டங்களை மட்டுமே வைத்துக் கொண்டு ஒருவர் கடை நடத்துகிறார். அதுவும் ரெஸ்ட்ராண்ட் அல்ல, கையேந்திபவன்.
சென்னையில் ஒரு காலத்தில் கையேந்திபவன் என்றால் அதுவும் வெஜிட்டேரியன் என்றால் புகழ் பெற்ற இடம் சென்னை திநகர் பிரில்லியண்ட் டூட்டோரியலுக்கு முன் இருக்கும் பெரிய இடம் தான். அங்கே தான் கார் முதல் ட்ரக் வரை சென்னையில் அத்துனை வகையான வண்டிகளையும் பார்க் செய்துவிட்டு, சாப்பிடக் கூடிய வசதி இருந்தது. இட்லி, வடை, பரோட்டா, இடியாப்பம், நெய் தோசை, தோசை, பொடி தோசை, பரோட்டா, குருமா, என்று கலந்து கட்டி சாப்பிடக்கூடிய கடை ஒன்று மட்டுமேயிருந்தது. சப்தகிரி என்று அந்த கடைக்கு பேர் கூட இருந்தது. அதற்கு காரணம் அவரே அங்கே அந்தப் பெயரில் ஓட்டல் ஆரம்பித்து இருந்ததார். செம கூட்டம் அள்ளூம், நாம் பாட்டிற்கு சாப்பிட்டு விட்டு, அப்புறம் போய் பில் சொல்லிக் கொள்ளலாம் அவ்வளவு நம்பிக்கை கஸ்டமர்களின் மேல். அவர்களின் சாம்பார் எனும் தக்காளி குழம்பும், கெட்டிச் சட்னியும் அதகளமாயிருக்கும். பின்பு என்ன ஆயிற்றோ தெரியவில்லை அக்கடையை வேறு ஒருவருக்கு லீஸ் விட்டு விட்டு ஓட்டலையும் விட்டு விட்டு கொஞ்சம் நாள் ஆளையேக் காணோம். பல வருடங்கள் சாப்பிட்டு பழகிய இடத்தை அவ்வளவு சீக்கிரத்தில் யாராலும் மறக்க முடியாதில்லை. அதே போலத்தான் அவருக்கும் இருக்கும் என்று நினைக்கிறேன் மீண்டும் தன் கடையே போட வர, ஏற்கனவே லீஸ் இருந்தவரும் கடை போட்டிருக்க, இப்போது அங்கே ரெண்டு இட்லி, பொடிதோசை, பரோட்டா, கடைகளாய் இருக்க, இவர்களுக்கு போட்டியாய் புதிய முளைத்திருக்கும் புதிய கடை தான் ஆப்பக்கடை.
சூடான நான்கைந்து ஆப்பக் சட்டிகள் தயாராக இருக்க, கேட்ட மாத்திரத்தில் இரவில் சூடாக நெகுநெகுவென ஆப்பம் ஊற்றப்பட்டு, அதற்கு சைடு டிஷ்ஷாக தேங்காய்பால், சட்னி, கார சட்னி, சாம்பார், மற்றும் குருமா என்று எதை வேண்டுமானாலும் ஊற்றிக் கொள்ளலாம் என்றால் கொஞ்சம் யோசித்துப் பாருங்கள் எப்படி இருக்கும் என்று. பஞ்சு போன்ற சூடான ஆப்பத்தில் ஒரு கை மசாலா குருமாவை விட்டு ஊற வைத்துவிட்டு சாப்பிட்டு பார்த்தால் தான் தெரியும் அதன் சுவை. ஏன் ஆறு ஆப்பம் அட் எ டைம் சாப்பிட்டோம் என்று. கூடவே தயிர்சாதமும், சப்பாத்தியும் வைத்திருக்கிறார்கள். வேண்டுபவர்களுக்கு. எனக்கு ஆப்பம் போதும். ஹெல்த்தி அண்ட் வெரி டேஸ்டி புட். விலை எவ்வளவு தெரியுமா ஒரு ஆப்பம் பத்தே ரூபாய் தான்.
கேபிள் சங்கர்
கேபிள் சங்கர்
Post a Comment
14 comments:
நான் தமிழன்தான்.. தங்கள் எழுதும் பல ஆங்கில வார்த்தைகள், என்னை போன்ற வாசகர்களுக்கு புரிவதில்லை. வௌவால் சுட்டி கட்டியது போல தங்கள் மிகவும் ஆங்கிலம் கலந்து எழுதுகிறீர்கள். குறைத்து கொண்டால் உங்கள் பதிவுகளை முழுமையாக ரசிக்க முடியும்.
"நான் அப்படிதான் எழுதுவேன்" என்று கூறினால் என்னே செய்வது? என்னை போன்ற இந்த்திய வம்சாவளி ஆசாமிகளுக்கு ப்லோகுகள் தான் ஒரே ஆறுதல்.
எனது முந்தய கருத்து உங்களை காய படுத்தியமைக்கு வருந்துகிறேன்.
சப்தகிரிக்கு சென்று பலமுறை நண்பர்களுடன் உணவருந்தி உள்ளேன். நடேசன் பார்க் அருகில் வெள்ளைக்கலர் தள்ளு வண்டியில் தற்போதிருக்கும் கடை அவர்களுடையதுதான் என நினைக்கிறேன்.
வெள்ளையத்தேவன், என்னை வச்சு காமெடி ..கீமெடி செய்யலையே... ஏற்கனவே தலைவரு என் மேல "நீ மாட்டாமலா போகப்போற அன்னிக்கு இருக்கு உனக்கு கச்சேரி"னு இருக்காப்போல தெரியுது...நீங்க வேற இன்னும் எடுத்துக்கொடுப்பீங்க போல இருக்கே.
நான் சொன்னது வேற சாமி,நீங்க சொல்றது வேறங்கோ!
---------
கேபிள்ஜி,
நீங்க பெரிய ரெஸ்ட்ராண்ட் எக்ஸ்பெர்ட் ஆனால் கையேந்தி பவன் சமாச்சாரத்துல பின் தங்கிட்டிங்க. ஆப்பம் ,இட்லி,இடியாப்பம்,தோசை, தான் ஆதி காலம் தொட்டே கை ஏந்தி பவன் முதல் மெனு.
சென்னையின் பாரம்பரியமான கை ஏந்தி பவன் எனில் கண்டிப்பாக ஆப்பம், இடியாப்பம் இருக்கணும் :-))
நீங்க இப்போதைய தள்ளுவண்டி மட்டும் பார்க்கிறிங்க போல, முன்ன எல்லாம் (இப்பவும் உண்டு) சில ஆயாக்கள்,அம்மணிகள் பிளாட்ஃபார்ம்ல கடைப்போட்டு இருப்பாங்க,ஆப்பம் தான் மெயினே அங்கே, ஆப்பக்கார ஆயானே பேரு வச்சிடுவாங்க.
தி.நகர் சொல்லுற இடம் மாசிலாமணி தெருனு நினைக்கிறேன், அங்கே பாண்டி பஜார் போஸ்ட் ஆபீஸ், ரோகினி ஹோட்டல் போற ரோட், நடேசன் பூங்கா என பல இடங்கள் கைஏந்தி பவன் ஸ்பாட் தான் ,முன்ன பனகல் பார்க் சுத்தியே நிறைய இருக்கும், இப்போ பிசியாகிட்டதால தூக்கிட்டாங்க.
5 ரூ தான் அப்பம் போன ஆண்டு, இப்போ 10 ஆகிடுச்சா,இப்போ கூட 2 ரூ க்கு இட்லி வாங்கிட்டு இருந்தேன், இப்போ தான் 3 ரூ ஆக்கிட்டாங்க.
குளிரூட்டப்பட்ட ஆப்பக்கடை ஒன்னு இருக்கு நளா'ஸ் ஆப்பக்கடை போய் இருக்கிங்களா, எல்லாம் கிடைக்கும் பேரு தன் ஆப்பக்கடை.
குரோம்பேட்ல நாயுடுஹால் பேஸ்மெண்ட்ல இருக்கு,இன்னும் எங்கேலாம் இருக்குனு தெரியல.
வவ்வால்
சென்னையில் பாரம்பரியம் ஆப்பம் என்பது தெரியும் தலைவரே.. இந்த இடம் சமீபகாலமாய்த்தான் திற்ந்திருக்கிறார்கள். ஆப்பம் ஸ்பெஷாய் அதை சொல்லத்தான் இந்த பதிவு. அதே பழைய கடையில் ஆப்பம் போட்டெல்லாம் கொடுத்துக் கொண்டுதானிருக்கிறார்கள். நளாஸ், சிமரன் என்று ஆப்பக் கடைக்ள தமிழ்நாட்டில் சென்னையில் நிறைய இருக்கிறது. ஏன் வடபழனியில் ஒரு வெஜ் ஆப்பக் கடை இருக்கிறது. ஒரு பதிவில் ஒரு விஷயத்த மட்டுமே எழுத வேண்டும் என்று சூளூரை காரணமாய் அதை மட்டுமே எழுதுகிறேன். சில சமயம அதையும் மீறி உங்களைப்போன்றவர்கள்பல ஞாபகங்களை கிளப்பிவிடும் அளவிற்கு என் எழுத்து தூண்டுகிறடு எனும் போது சந்தோஷமே.:)
கிளம்பிட்டாருயா
பின்னூட்ட பின்லேடன் வவ்வால் கிளம்பிட்டாருயா . .
ஆப்பம் பத்து ரூபாய் தானா ? எங்க ஊருல 15
இன்று
விபசாரத்தில் ஈடுபடும் AIRTEL , VODAFONE , DOCOMO
ராஜபாட்டை ராஜாவிற்கு பதில் பின்னூட்டம் போடாதவரை கேபிளின் ப்ளாக் ஓரடி பின்தங்கியே நிற்குமென்பதில் ஐயமில்லை.
கேபிள்ஜி,
//பல ஞாபகங்களை கிளப்பிவிடும் அளவிற்கு என் எழுத்து தூண்டுகிறடு எனும் போது சந்தோஷமே.:)//
சரியா சொன்னீங்க ,ஆப்பம்னு சொன்னதும் எக்கச்சக்கமா கிண்டிருச்சு ,முன்ன எல்லாம் ஆப்பம் தீர்ந்துருச்சுன்னு சொன்னா சண்டைக்கே போய் இருக்கேன், என்ன ரெகுலரா வருவேன்னு தெரியும்லன்னு :-))
(ஒரு டைம்க்குள்ள போகலைனா ஆப்பம் இருக்காது)
அப்போ எல்லாம் என் வருமானத்துக்கு கை ஏந்திப்பவன் தான் அக்ஷ்யப்பாத்திரம் ,நான் கூட நீங்க பெரிய ஹோட்டல் பத்தி தான் எழுதுறிங்கன்னு குறைப்பட்டதுக்கு காரணமும் இதான். நீங்க இது போல சின்ன கடைகள் எழுதினது சரியா என் கண்ணில மாட்டவில்லை, அதான் அப்படி நினைத்துக்கொண்டேன்.
கையேந்திப்பவனில சாப்பிட்டாலும்,அங்கே சாப்பிட்டதா பெரும்பாலும் சொல்லிக்க மாட்டாங்க நம்ம மக்கள் கவுரவ குறைச்சலாம் :-))
பெரிய உணவங்களில் கிடைக்காத கவனிப்பு சில கையேந்திப்பவனில் கிடைக்கும்,இப்பவும் உற்சாக பானம் சாப்பிட்டா கையேந்திப்பவன் தான் :-)) ,
வடப்பழனினு சொன்னதும் நினைவுக்கு வருது, ஆவிச்சி ஸ்கூல் கொஞ்சம் முன்னர், ஒரு தெருமுனை சந்திப்புல நைட்ல செம ஜோரா கையேந்திப்பவன் ஓடும், ஆனால் அங்கு ஷீட்டிங்க்ல மீந்த உணவுகளும் கலந்து விற்பாங்கன்னு ஒரு பேச்சு, ஏன் எனில் இரவில் கூட வெஜ் பிரியாணி கிடைக்கும். ரொம்ப மலிவாகவும் இருக்கும்.
கூடுதல் தகவல்,
எங்க ஏரியாவில 3 ரூக்கு இட்லி, 6 ரூ கட்ட தோசை, நைஸ் 10 ரூ, முட்டதோசை 15க்கு கிடைக்குது.
பாண்டி போனால் ரத்னா தியேட்டர் எதிரில் நடைப்பாதையிலேயே ரோலெக்ஸ்னு ஒரு கடை, முட்டை தோசை, எரா மசால சாப்பிட்டுப்பாருங்க "டிவைன்" சொன்னாலும் சொல்வீங்க.
மு.தோசை-20,ரூ,
எராமசாலா-60 ரூ
பரோட்டா-7 ரூ தான்
------
கு.பெ,
இதெல்லாம் ஓவரா தெரியலை... ஆனாலும் எல்லாருக்கும் பின்னூட்டம் போடுறது தான் என் முதல் வேலை ,பதிவு கூட கம்மியா தான் போடுவேன், பெரும்பாலோருக்கு தெரியும் ஓய்!
thanks for sharing
வவ்வாலை கலாய்த்த குரங்கு பெடல் கமன்ட் சிரிக்க வைத்தது.
ராஜபாட்டையை ரவுண்டு கட்டிய சிவா காமன்ட்டும் அதே !
வவ்வால் said
//எல்லாருக்கும் பின்னூட்டம் போடுறது தான் என் முதல் வேலை ,பதிவு கூட கம்மியா தான் போடுவேன்//
உண்மை தான். என்ன ஒன்னு... திட்டியே comment போடுறாரு ! வாஷிங் மிஷின் பத்தி இவரு எனக்கு திட்டி comment போட்டதை என் வீட்டம்மா படிச்சிட்டு, உங்களை வவ்வால்னு ஒருத்தர் செமையா திட்டிருக்காரு என ரொம்ப சந்தோஷப்பட்டங்க !! அவரு எல்லாரையும் திட்டி தான் எழுதுவாருன்னு சொல்லி சமாளிச்சேன் :))
//கூடுதல் தகவல்,
எங்க ஏரியாவில 3 ரூக்கு இட்லி, 6 ரூ கட்ட தோசை, நைஸ் 10 ரூ, முட்டதோசை 15க்கு கிடைக்குது.//
வவ்வால் நீர் எந்த ஊர் ஓய்? தாம்பரம் அல்லது கூடுவான்செரின்னு சொல்லிக்கிட்டு இருக்கீர். எது உண்மையோ?
மோகன் ,
கு.பெ கமெண்டுக்கு என்ன ஒரு ஆனந்தம் :-))
உங்களை எங்க ஓய் திட்டினேன், இன்னும் நல்லா சொல்லியிருக்கலாமேனு சொன்னேன்,அப்படிப்பார்த்தால் கேபிள்ஜிக்கு நான் போட்ட கமெண்ட் எல்லாம் பார்த்தால் என்ன சொல்லுவீர் :-))
பாராட்ட வேண்டியதை பாராட்டவும் செய்வேன், அதெல்லாம் கண்டுக்காதிங்க.
ஆனால் என் பதிவ படிக்கிறாங்களா,எனக்கு பின்னூட்டம் போடுறாங்களானு எல்லாம் கண்டுக்காம ஒரு பதிவைப்படிச்சா அப்போ மனசில என்ன ஓடுதோ அப்பவே சொல்லிடுவேன். அதனால வார்த்தைகள் கொஞ்சம் இடக்கு மடக்கா வருவது வழக்கம், பின்னர் போய் வந்து கமெண்ட் போடும் போது அப்படி இருப்பதில்லை,ஆனால் அப்புறம் போடலாம்னு நினைச்சா மறந்துடுவேன்..
எனக்கு பயங்கர நியாபக மறதி. ஒரு முறை ஸ்கூட்டரை போகும் போது ஸ்டேண்டில் விட்டுவிட்டு வரும் போது ஆட்டோ பிடித்து வந்துவிட்டு வண்டிக்காணாமல் போச்சுனு தேடினேன் :-))
----
நான் சொன்ன விலையில் கூடுவாஞ்சேரியில் தான், அங்க தான் என்னோட குகை இருக்கு.தாம்பரம் என்ன தாஷ்கென்ட்லா இருக்கு போகாமல் இருக்க.
அப்புறம் கிட்டத்தட்ட அதே விலையில் சென்னை கையேந்திபவன்களிலும் கிடைக்கும் ,கேபிள்ஜியைக்கேட்டுப்பாருங்க சொல்லுவார்!
அருமையான அறிமுகம் கேபிள் :)) ஆகஸ்ட்ல இந்தியா வர்றச்சே உங்க சாப்பாட்டுக்கடைய ப்ரிண்ட் அவுட் எடுத்துக்கனும் :)
Post a Comment