ஹீரோக்களுக்காக கதை செய்யும் போது ரொம்பவே ஜாக்கிரதையாய் செய்ய வேண்டும். அதுவும் கார்த்தி மாதிரியான தொடர் வெற்றி கொடுத்திருக்கும் ஹீரோவுக்கு இன்னும் அதிகம் மெனக்கெட வேண்டும். தமிழ்நாட்டில் கிட்டத்தட்ட எழுபது சதவிகித தியேட்டர்களில் வெளியாகியிருக்கும் இந்த படம் தான் காத்து வாங்கிக் கொண்டிருக்கும் தமிழ் சினிமாவை காப்பாற்றும் என்ற நம்பிக்கையை மிகப்பெரிய விலைக்கு விற்பனையாகி எதிர்பார்பை ஏகத்துக்கும் ஏத்திய படம் அதை தக்க வைத்ததா? என்று கேட்டால் கடுகளவு கூட இல்லை என்றே சொல்ல வேண்டும்.
தூள் படம் போல் இதில் ஏதோ சாப்பாடு போட்டு அழிந்து போன குடும்பம் என்று ஒரு காரைக்குடி வீட்டைக்காட்டி, அதன் பக்கத்தில் சப்வே வருகிறது என்று சொல்கிறார்கள். ஆனால் ரெயில்வே ட்ராக் காட்டுகிறார்கள். அந்த பாரம்பரிய வீட்டை காப்பாற்ற சென்னைக்கு வருகிறார் கார்த்தி. வழக்கம் போல அரசியல்வாதிகள் ஏமாற்ற, எப்படி அவர் தன் வீட்டை காப்பாற்றுகிறார் என்பதுதான் கதை என்றாலும், சம்பந்தமேயில்லாமல் ஒரு பொம்பளை ரவுடியை கவுன்சிலராக்கி மேயராக்குகிறார். ஆட்சிக்கே வராத ஒரு கட்சியை ஆட்சியை பிடிக்க வைக்கிறார். என்று இலக்கேயில்லாமல் போகிறது கதை. இதெல்லாம் முதலமைச்சர் பிரகாஷ்ராஜை பழிவாங்க என்று நாமே நினைத்துக் கொள்ள வேண்டிய துர்பாக்கிய நிலையில் கதை இருக்கிறது.
கார்த்தி கோட்டு போட்டுக் கொண்டு வேகாத வெய்யிலில்,பசியும் பட்டினியுமாய் இருப்பதாக சொல்லப்படும் காலக்கட்டதில் குத்தாட்டத்தோடு அறிமுகமாகிறார். வழியில் கையில் காசில்லாம் அலையும் போது அவரின் பந்தா ட்ரெஸ்ஸைப் பார்த்து ஆட்டோவில் ஏற்றும் ரஜினி அப்பாதுரையாய் வரும் சந்தானமும், கமலக்கண்ணன் எனும் கமலும் பேசிக் கொள்ளூம் ஆரம்பக் காட்சி படு சுவாரஸ்யமாய் இருந்தாலும் ரெண்டு சீனுக்கு பிறகு அவர்கள் ரஜினி, கமல் என்று பேசிக் கொள்வது எரிச்சலாகிப் போய், பிறகு நிறுத்த மாட்டார்களா என்ற எண்ணமே மேலோங்குகிறது. அவ்வளவு பேசுகிறார்.. பேசுகிறார்.. பேசுகிறார்.. பேசிக் கொண்டேயிருக்கிறார் கமல் (எ) கமலக்கண்ணன்.
ஹீரோவை ஏற்றிவிட்டே டயலாக் வைப்பது மட்டுமில்லாம்ல, படத்தில் வரும் பெண் கேரக்டர்கள் அத்துனை பேரும், கார்த்தியின் பின் வழிவதாய் காட்டுவதும், அதை ஒவ்வொரு பெண் கேரக்டரும் சொல்வதும் ஓவரான ஹீரோ துதி. கார்த்தியின் நடிப்பு என்று பார்த்தால் ஏதுவும் பெரிதாய் சொல்ல முடியவில்லை. அவ்வப்போது வாயை ஆவென திறந்து ஆச்சர்யமாய் பார்ப்பது, கண்களால் சிரித்துக் கொண்டும், குதித்துக் கொண்டு ஆடுவதை தவிர, உக்காந்து யோசிச்சது போல் ஒரு ஐடியாவையும் சகுனியாய் செய்யவேயில்லை. படம் முழுக்க இது போதும் இந்த படத்துக்கு என்ற எண்ணத்திலேயே நடித்துள்ளது போலிருக்கிறது கார்த்தியின் நடிப்பு.

படத்தின் இருக்கும் ஒரே ஒரு ஆறுதல் பாயிண்ட் சந்தானம். நன்றாக கவனித்து படியுங்கள் ஆறுதல்தான். மற்றபடி அவராலும் பெரிதாய் ஏதும் செய்ய முடியவில்லை. ஆரம்ப காட்சிகளில் இருக்கும் அவரது டயலாக்குகளின் சுறுசுறுப்பு மெல்ல டவுனாகி அவராலேயே முடியாமல் தவிக்கிறார்.
ஹீரோயின் ப்ரணிதா மொத்தம் நாலே அரைக்கால் சீன் வருகிறார். இடைவேளை ஆரம்பிக்கும் போதும், படம் முடியும் போது வந்து நின்று விட்டு போய்விடுகிறார். கொஞ்சம் வாய்க் கோணலாய் சிரிக்கும் போது பார்க்கலாம் போல இருக்கிறார். நத்திங் டூ சே. ப்ரகாஷ் ராஜ், கோட்டா சீனிவாசராவ்,ராதிகா, போன்ற சிறந்த நடிகர்கள் முறையே வீணடிக்கப்பட்டிருக்கிறார்கள். கிரண் மீண்டும் ஒரு ரவுண்ட் வர ட்ரை செய்திருக்கிறார். அனுஷ்கா கெஸ்ட் தோற்றம் தான் என்றாலும் நல்லாருக்காங்கப்பா... ரோஜா வேறு கார்த்தியின் அத்தையாய் வருகிறார் அவ்வளவுதான். அந்த அத்தை மருமகன் குடும்ப ஃபீலிங் பணமா பாசமா காலத்தியது.
ஜீ.வி.பிரகாஷ்குமாரின் இசையில் பெரிதாய் நினைவில் நிற்கும்படியாய் பாடல் ஏதுமில்லை என்றே சொல்லவேண்டும். அந்த பார் குத்து பாட்டெல்லாம் ஒரு பாட்டென நடுவில் போட்டு நோகடிக்கிறார்கள். பாடல்களில் பல இடங்களில் லிப் சிங்கேயில்லை. பி.ஜி.முத்தையாவின் ஒளிப்பதிவில் குறையேதுமில்லை.
எழுதி இயக்கியவர் புதியவரான சங்கர் தயாள். பாசிட்டிவான விஷயங்கள் என்று பார்த்தால் கார்த்தி, சந்தானம் மீட்டிங் காட்சிகள். ப்ளேஷ்பேக்கில் மொத்த எபிசோடையும் சொல்லி போரடிக்காமல் சந்தானம், கார்த்தியின் மொக்கை ஜோக்குகளுக்கிடையே சொல்வதும்தான். ஆரம்பக் கமல், ரஜினி எபிசோட் டயலாக்குகள். ரோட்டில் உச்சா போனதற்காக மொபைல் கோர்டில் விதித்த 150 ரூபாய் ஃபைனை கேள்வி கேட்டு 1500 ஆக்கும் காட்சி. என்பது போன்ற சிற்சில அலம்பல்கள் சுவாரஸ்யம். ஆங்காங்கே வரும் அரசியல் டயலாக்குகள் சென்ற ஆட்சியை குறிக்கும் எனக்கு என் குடும்பம் தான் முக்கியம். பாலம் போடுவது போன்ற ”சமகால” அரசியல் வசனங்கள் ஓகே.
ஹீரோவின் கால்ஷீட் கிடைத்தாகிவிட்டது அவரை சுற்றிச் சுற்றியே கதை என்று முடிவாகிவிட்டது. ஆனால் அதற்கேற்றார் போன்ற திரைக்கதையை அமைக்க வேண்டாமோ? அதில்தான் கோட்டை விட்டிருக்கிறார். மகாபாரத சகுனியின் புத்தி சாதுர்யம் எப்படி இருக்க வேண்டும்?. பழைய தெலுங்கு அரசியல் படங்களை இப்போது பார்த்தாலும் விறுவிறுவென இருக்கும். ஆனால் அதை விட அரத பழசான ஐடியாக்களை வைத்து ஒரு மாஸ் ஹீரோவுக்கு காட்சிகள் வைத்தால் எப்படி சுவாரஸ்யபடும்?. காதல் காட்சிகள் என்று நினைத்து வைத்த காட்சிகள் எல்லாம் வெரி வெரி ஓல்ட். அதிலும் க்ளைமாக்ஸ் ட்விஸ்ட் என்று நினைத்து ஒரு காட்சியை வைத்திருக்கிறார் பாருங்கள் படு காமெடி. ஏற்கனவே மை என்கிற படத்தில் வந்த பல காட்சிகள் இப்படத்திலும் ரிப்பீட்டப்படுகிறது. முக்கியமாய் ராதிகா மேயர் எபிசோட். அந்தப்படத்தில் இருந்த சுவாரஸ்யம் கூட இதில் இல்லை.
ஹீரோ தன் வீட்டை பாதுக்காக்க எப்படி வில்லனை எதிர்த்தார் என்று ஒரு லைன் இருந்தாலும், நேரடியாய் ஹீரோவுக்கும் வில்லனுக்கு எந்தவிதமான மொக்கை சபதமும் இல்லாமல் சம்பந்தமேயில்லாமல் பெண் தாதா ராதிகாவை மேயர் ஆக்குவதும், ஜெயிலில் கோட்டா சீனிவாசராவை சி.எம்.ஆக்குவதும், சாதா சாமியார் நாசரை ஹைஃபை சாமியாராக்குவதும் எதற்காக? என்ற கேள்வி படம் முழுக்க எழும்பிக் கொண்டேயிருக்கிறது. சரி வீட்டை காப்பாற்ற உதவாத முதலைமைச்சரை பழிவாங்குகிறார் என்று நாமே நினைத்துக் கொள்ள வேண்டும் போலும். இலக்கில்லாத திரைக்கதையினாலும், கொஞ்சம் கூட புதிதாய் யோசிக்காத, அரசியல் காய் நகர்த்தும் காட்சிகள் எல்லாம் படு இம்சை. முதலமைச்சராகட்டும், எதிர்கட்சித் தலைவராகட்டும், பெண் தாதா ராதிகாவாகட்டும் எல்லாக் கேரக்டர்களும் அரை லூசாக இருந்தாலேயன்றி கார்த்தியின் அட்வைசைக் கேட்க மாட்டார்கள். சரி என்னடா இது மக்களுக்கு ஏதாவது நல்ல செய்தியை கொடுக்கணுமே?என்று யோசித்துக் கொண்டிருக்கும் போது படம் நெடுக, ராதிகாவிடமும், கோட்டா சீனிவாசராவிடமும் மக்களுக்கு ஏதாவது நல்லது செய்ங்க என்று கேட்பது போன்ற ஒரு காட்சியை வைத்து விட்டால் போதும் என்று முடிவெடுத்து நான்கு காட்சிகளுக்கு ஒரு முறை பேச வைத்திருப்பது ஒட்டவேயில்லை. இப்படி இலக்கில்லாத திரைக்கதையினால் படு ஸ்லோவாக படம் ஓடுகிறது. அதிலும் ப்ரகாஷ்ராஜை சி.எம் என்கிறார்கள்.படு காமெடியாய் இருக்கிறது அவரது கேரகடர். படத்தில் சந்தானம் “அக்குள்ள நக்கலை வச்சிட்டுருக்க நீ” என்று கார்த்தியைப் பார்த்து சொல்வார். அப்படி தெனாவெட்டாய் படம் மொத்தமும் அக்குளிலில் நெக்கலை வைத்தபடியே எடுத்திருப்பார்களோ என்ற எண்ணம் தோன்றாமல் இல்லை. கொஞ்சம் கூட புத்திசாலித்தனமேயில்லாத திரைக்கதை தான் படத்தின் பெரிய மைனஸிலும் மைனஸ். தமிழ் சினிமாவிற்கும், கார்த்திக்கும் இன்னொரு ராஜபாட்டை என்றே சொல்ல வேண்டும்.

Post a Comment
21 comments:
// மெனக்கெட //
திரும்பத் திரும்ப பேசுற நீ...
இருந்தாலும் நாசருடைய நடிப்பைப் பற்றி ஏதாவது சொல்லியிருக்கலாம்... கோவிச்சிக்கப் போறார்...
this movie did nt need big review sir.........u correctly said in first para itself.
நீங்களே கதையை சொல்லி முடித்தால் எப்படித்தான் படம் பார்க்க மனம் வரும் தலைவா?
ithil kathaiye இல்லை இதுல நான் கதை வேற சொல்லிட்டேன்னு வருத்தம் வேற.. :))
ஸ்டூடியோ க்ரீன் , படத்தை வெளியில் விற்கும்போதே உஷாராயிருக்கணும்...பாவம்..எல்லாரும் வாங்கி...பாத்து..சிரமப்படுறாங்க!!
எனக்கு இன்னொன்று தோன்றுகிறது..
இதுபோன்ற புதிய இயக்குனர்கள் சொதப்புவதால்தான்...ஹீரோக்கள்...புது இயக்குனர்களுக்கு வாய்ப்புக் கொடுக்கவே மாட்டேன் என்கிறார்கள்.
பாவம்..! நல்ல கதைகளுடன் காத்திருக்கும்....புதிய இயக்குநர்கள்!! :(
கேபிள்ஜி,
புத்தக வெளியீட்டுக்கு வாழ்த்துக்கள்!
தனியா போஸ்டர் ஒட்டாம தியேட்டர்ல சிலைட் காட்டுறாப்போல படவிமர்சனத்துல காட்டுறிங்களே:-))
பார்ட் டைமா தியேட்டர்ல புரொஜெக்டரும் ஓட்டுறிங்களா :-))
------
//ithil kathaiye இல்லை இதுல நான் கதை வேற சொல்லிட்டேன்னு வருத்தம் வேற.. :))//
கதை இல்லைனு கண்டுப்பிடிச்சு சொன்ன கதைய சொல்லி இருப்பார் :-))
----
மொத்தத்தில் சகுனி- ஒரு சப்பாணி னு பஞ்ச் வைத்திருக்கலாம் :-))
கேபிள்ஜி,
வேறு ஒரு பதிவில் புத்தகத்தின் விலை,பக்கம் எல்லாம் பார்த்தேன், 102 பக்கத்துக்கு ரூ 70 என்பதெல்லாம் ,அதிக விலை ,பக்கத்தின் அடிப்படையில்.
அதுவும் சினிமா விமர்சனங்களின் தொகுப்புக்கு, இது போன்ற புத்தகங்கள் எல்லாம் விலைக்குறைவாக இருந்தால் தான் வாங்க பிடிக்கும்.
புத்தகத்தின் உள்ளடக்கம்,பக்கம் இவற்றிற்கு ஏற்ப விலை நிர்ணயம் செய்யலாம்.
சிறந்த வசனகர்த்தாக்களை சினிமாவுக்கு உதவியாக அறிமுகப்படுத்தும், என் அபிமான சினிமா டைரக்டர் பத்ரியை, விழாவிற்கு அழைத்து சிறப்பு மரியாதை செய்ய தவறியதால், இந்த புத்தக வெளியீட்டு விழாவை புறக்கணிக்கிறேன்.
(just for joke).
உங்களுடைய “சினிமா என் சினிமா” புத்தகம் “எக்ஸைல்” புத்தகத்தின் விற்பனையை முறியடித்து சாதனை புரிய, என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
[தமிழ் சினிமாவிற்கும், கார்த்திக்கும் இன்னொரு ராஜபாட்டை என்றே சொல்ல வேண்டும்.]எனக்கு அப்பவே தெரியும் இந்த மாதிரி ஒவர் பந்தாவா வ்ருகிற படம் ஒடவே ஒடாது.பையா,சிறுத்தை படம் வந்தபோது எந்த சேனல் வைத்தாலும் கார்த்தி முகம் தான் வரும். நல்ல வேளை தப்பிச்சுட்டோம்.

Why this kolaveri with Charu?????
Perfect review with complete story (ha ha ha). Inime padam odinamathirithan.
//ஹீரோக்களுக்காக கதை செய்யும் போது ரொம்பவே ஜாக்கிரதையாய் செய்ய வேண்டும். அதுவும் கார்த்தி மாதிரியான தொடர் வெற்றி கொடுத்திருக்கும் ஹீரோவுக்கு இன்னும் அதிகம் மெனக்கெட வேண்டும். தமிழ்நாட்டில் கிட்டத்தட்ட எழுபது சதவிகித தியேட்டர்களில் வெளியாகியிருக்கும் இந்த படம் தான் காத்து வாங்கிக் கொண்டிருக்கும் தமிழ் சினிமாவை காப்பாற்றும் என்ற நம்பிக்கையை மிகப்பெரிய விலைக்கு விற்பனையாகி எதிர்பார்பை ஏகத்துக்கும் ஏத்திய படம் அதை தக்க வைத்ததா? என்று கேட்டால் கடுகளவு கூட இல்லை என்றே சொல்ல வேண்டும்.//
Golden lines sir! all the best
this movie is far better than Telugu films altogether....
http://www.amsenthil.com/2012/06/blog-post_22.html
said
ஏன் ஒடியது என்று தெரியாமலே ஒடிய கலகலப்பைப் போல் இதுவும் ஒடிவிடும்.
"சுரேகா.. said...
எனக்கு இன்னொன்று தோன்றுகிறது..
இதுபோன்ற புதிய இயக்குனர்கள் சொதப்புவதால்தான்...ஹீரோக்கள்...புது இயக்குனர்களுக்கு வாய்ப்புக் கொடுக்கவே மாட்டேன் என்கிறார்கள். "
மிகவும் தவறான வாதம் . .
வாய்ப்பை கொடுத்துவிட்டு ஹீரோ குடும்பத்து நாய் வரை
புது டைரக்டர் தானே என்று
படத்தின் போக்கில் குறுக்கிடுவதாலே . .
இது போன்ற சொதப்பல்கள் நடக்கின்றன . .
//தமிழ் சினிமாவிற்கும், கார்த்திக்கும் இன்னொரு ராஜபாட்டை என்றே சொல்ல வேண்டும். // புகழ்றீங்களா ? இகழ்றீங்களா? ஒண்ணுமே புரியல.
//புத்தகத்தின் உள்ளடக்கம்,பக்கம் இவற்றிற்கு ஏற்ப விலை நிர்ணயம் செய்யலாம்.//
விலை விற்பனை எல்லாம் புத்தகம் வெளீயிடும் பப்ளிஷருக்கு தெரியும். நான் எவ்வளவு விலை வைப்பது என்று யாரிடமும் கேட்கவில்லை. என்ன விலை போட்டால் புத்தகங்கள் விற்கும் என்பது அவர்களுக்கு தெரியும். நான் அதில் தலையிடுவது இல்லை.
மிக அருமையான விமரிசனம்! வெட்டி பந்தா படம்!
http://vejayinjananam.blogspot.in/..this is my blog plz read and give ur comments..
Post a Comment