Thottal Thodarum

Jun 27, 2012

சினிமா டிக்கெட்டுகளில் அடிக்கப்படும் கொள்ளை

சமீபத்தில் என்னுடய நண்பர் ஒருவர் அரவான் படத்தின் கேரள உரிமையை வாங்கியிருந்தார். படம் படு தோல்வி என்பது தெரிந்த விஷயம்தான் என்றாலும் கேரளாவில் தமிழில் வெளியான அந்தப்படத்துக்கு போட்ட முதலில் முக்கால் வாசி வசூல் செய்ததாகவும், இதே தமிழ்நாட்டில் வாங்கி ரிலீஸ் செய்திருந்தால் அவ்வளவுதான் என்றார். அவர் சொன்னதும் உண்மைதான் தமிழ் நாட்டில் சென்னையில் ஒரு காம்ப்ளெக்ஸில் எட்டுலட்ச ரூபாய்க்கு ஹயர் செய்து வெளியிட்ட விநியோகஸ்தருக்கு இரண்டு லட்சம் கூட வசூலாகவில்லை செம அடி. உடனே தமிழ்நாட்டு ரசிகர்களுக்கு நல்ல சினிமாவை ரசிகக் தெரியவில்லை என்றெல்லாம் சப்பைக்கட்டு கட்ட வேண்டாம்.


ஆந்திராவிலும், கேரளாவிலும் தியேட்டருக்கு சென்று படம் பார்க்கும் மக்கள் அதிகம். காரணம் தியேட்டர்களின் அனுமதிக் கட்டணம். பெரிய காம்ப்ளெக்ஸ் தியேட்டரில் கூட ஐம்பது ரூபாய்க்கு மேல் அனுமதிகட்டணமில்லை. எனவே மக்கள் தியேட்டரில் வந்து படம் பார்க்கிறார்கள். அதே போல கேரளாவில் விநியோகஸ்தர்களுக்கு காட்டப்படும் கணக்கு மிகச் சரியாய் இருப்பதாகவும், உடனடியாகவும் கொடுத்துவிடுகிறார்கள் என்று நண்பர் சொன்னார். ஆனால் இங்கே ஒரு தியேட்டரில் விநியோகஸ்தர்களின் ஷேரை வாங்க ரெண்டு வருடமெல்லாம் காத்திருக்க வேண்டும். 

சரி விஷயத்துக்கு வருகிறேன். ஏற்கனவே இங்கே பல முறை சொன்னது போல தமிழ் நாட்டில் சிங்கிள் ஸ்க்ரீன் தியேட்டரின் அதிகப்பட்ச விலை 50 ரூபாய்க்கு மேல் இருக்கக்கூடாது என்று சட்டம் இருக்கிறது. அதாவது குறைந்த பட்சமான 10, 30. 50 என்று மூன்று விலைகள் இருக்க வேண்டும். பேரூராட்சி, கிராமம் என்று வரும் போது விலை குறையும். அதைத்தான் வாங்க வேண்டும் என்று ஜி.ஓவே இருக்கிறது. ஆனால் எல்லா சிங்கிள் ஸ்கீரின் தியேட்டரிலும் என்பதும், நூறுமாய் புதிய தமிழ் படங்கள் ஓடும் போது வாங்குகிறார்கள். இதில் என்ன விஷேஷம் என்றால் தெளிவாய் 90 ரூபாய் என்று போர்டு போட்டு விற்கிறார்கள். ஆனால் அதே கேஸினோ போன்ற வேற்று மொழி வெளியிடும் தியேட்டர்களில் 50 ரூபாய்க்குத்தான் விற்கிறார்கள். என்ன எல்லா சீட்டும் ஒரே விலைக்கு விற்கிறார்கள். போர்டு போட்டு விற்கும் தியேட்டர்களில் டி.சி.டி.ஓக்கள் மாத, மற்றும் வார வசூலை வாங்கிக் கொண்டு போய்விடுவதால் ஏதும் கேட்பதில்லை. 

கொஞ்சம் நாளாக ஆன்லைனில் டிக்கெட் புக் செய்யும் போது டிக்கெட் விலை மற்றும் அவர்களது சர்வீஸ் சார்ஜுகளை சேர்த்துத்தான் விலை வரும். திருச்சி ரம்பா, கலையரங்கம் போன்ற தியேட்டர்களில் சமீபத்தில் வெளியான ஒரு படத்தின் டிக்கெட் விலை 200 என்று போட்டே டிக்கெட் விற்க, அதை ஸ்கீரின் ஷாட் எடுத்து அரசின் கவனத்திற்கு நேரடியாய் சிலர் கொண்டு செல்ல, திருப்பூரில் சில தியேட்டர்களை இழுத்து மூடி சீல் வைத்ததார் கலெக்டர். இப்போது இந்த பிரச்சனையை மறைக்க புதிய முறையை அமல் படுத்தியிருக்கிறார்கள்.

உதாரணமாய் காசி தியேட்டரை எடுத்துக் கொள்வோம். காசி தியேட்டரில் பால்கனி டிக்கெட் 50 என்றும் அதனுடன் மேலும் 40 ரூபாயை அதர் சார்ஜஸ் என்று சேர்த்து தொண்ணூறு ரூபாய் என்றும் அதனுடன் 15 ரூபாய் இண்டர்நெட் சர்வீஸ் சார்ஜ் என்று சேர்த்து 105 ரூபாய் வாங்குகிறார்கள். இது சில சமயம் 40+50 என்றில்லாமல் கூட மொத்தமாய் எல்லாவற்றையும் சேர்த்து 135 ரூபாய் என்று வந்தது. சகுனி முதல் நாள் அன்று. டிக்கெட் விலை எவ்வளவு என்று போடமலேயே. சரி தியேட்டரில் போய் கேட்டுக் கொள்ளலாம் என்று அங்கே மொபைலில் வந்த செய்தியைக் காட்டி டிக்கெட் கேட்ட போது அங்கே ரிசர்வேஷன் கூப்பன் மட்டுமே கொடுக்கப்பட்டது. அதில் விலை ஏதும் போட்டிருக்க மாட்டார்கள். சரி டிக்கெட் விலை எவ்வளவு என்று கேட்ட போது 120ரூபாய் என்றார்கள். அதாவது 120+15 ரூபாய் இண்டர்நெட் புக்கிங் சார்ஜ்=135. வெறும் 50 ரூபாய் மட்டுமே வாங்க வேண்டிய தியேட்டரில் 120 ரூபாய் வாங்க யார் அனுமதிக் கொடுத்தது. அன்றைய தினத்தில் 50 ரூபாய்க்கு டிக்கெட் கொடுத்ததாய் டி.சிடிஓ அலுவலக சீல் போட்ட டிக்கெட்டுகள் விற்பனயானதாய் காட்டப்பட்டிருக்கும். இது எவ்வளவு பெரிய திருட்டு. இதற்கு உடந்தையாய் தமிழக வருவாய் துறையும் அவர்களோடு கை கோர்த்து ஏமாற்றுகிறது. 

50 ரூபாய் அதர் சார்ஜஸ் என்று சொல்லப்படும் விலைக்கு என்ன கொடுக்கிறார்கள் என்று கேட்டால், வருகிறவர்களுக்கு ஸ்நாக்ஸ் பேக்கேஜ் என்று சொல்கிறார்கள் தியேட்டர்காரர்கள். ஆனால் அப்படி ஏதும் கொடுப்பது கிடையாது. அதைப் பற்றி நம் பார்வையாளர்களும் கேட்பதேயில்லை. ஏதோ என்னைப் போன்றவர்கள்தான் கேட்டுக் கொண்டிருக்கிறோம். அப்படியே கொடுத்தாலும் கட்டாயப்படுத்தி அவர்கள் கொடுப்பதை வாங்கிக் கொண்டுதான் ஆக வேண்டுமென்ற கட்டாயம் ஏன் பார்வையாளர்களுக்கு?. இதை மாயாஜால் வழக்கமாய் செய்கிறது. அரசின் விதிப்படி 120 ரூபாய்க்கு மேல் மல்ட்டிப்ளெக்சுகளில் வாங்க முடியாது என்பதால் புதிய பெரிய படங்கள் வெளியாகும் நாட்களில் 200 ரூபாய்க்கு ஆன்லைனில் டிக்கெட் விற்கிறார்கள். டிக்கெட்டுடன் ஒரு 50 ரூபாய் டின் கோக்கை தருகிறார்கள். இதை வேறு வழியில்லாமல் முதல் நாள் படம் பார்க்க வரும் பார்வையாளர்களிடம் கட்டாயப்படுத்தி விற்பது சட்டப்படி குற்றம்.

அபிராமி மாலில் அதிகப்பட்ச டிக்கெட் விலை 120க்கு மேல் வைக்கக்கூடாது. ஆனால் அவர்களது ஒரு தியேட்டரில் 180 ரூபாய்க்கு இன்க்லைண்ட் சேர் போட்டிருக்கிறோம். அது இது என்று சொல்லி என்பது ரூபாய்க்கோ, அறுபது ரூபாய்க்கோ டிக்கெட் கொடுத்துவிட்டு 180 வாங்குகிறார்கள். அதற்குரிய டிக்கெட்டை கேட்டால் தர மறுக்கிறார்கள். இப்படி வழிப்பறிக் கொள்ளைக்காரர்கள் போல் தியேட்டருக்கு வரும் பார்வையாளரிடம் அடித்து பிடுங்கி அனுப்பி வைத்தால் எப்படி பார்வையாளன் தியேட்டருக்கு வருவான். என்ன தலையெழுத்து அவன் இப்படி வசதி குறைவான தியேட்டருக்கு அநியாய விலை கொடுத்து படம் பார்க்க என்ன வேண்டுதல்?. 

இதற்கு காரணம் விநியோகஸ்தர்கள். பெரிய நடிகர்கள் நடிக்கும் படங்களை ஒரே நாளில் ஆயிரம் தியேட்டர்களில் வெளியிடுகிறேன் என்று சொல்லி, அநியாய விலைக்கு வாங்கிவிடுகிறார்கள். அதை தியேட்டர்காரர்களிடம் அதை விட அநியாய விலைக்கு எம்.ஜிக்கு விற்று விட, ஒரு தெருவில் இருக்கு தியேட்டரில் எல்லா அரங்குகளிலும் ஒரே படம் ஓட, போட்ட காசை உடனடியாய் எடுக்க, நூறும், இருநூறுமாய் விற்கச் சொல்கிறார்கள். இவர்களின் லாபப் போட்டியில் இவர்களால் பாதிக்கப்படுவது பார்வையாளர்களே. படம் பப்படமாய் இருந்தால் படம் ரிலீசான மூணாவது நாள் பத்திரிக்கையாளர்களை அழைத்து ஸ்டார் ஓட்டலில் வெற்றி சந்திப்பு என்று பார்ட்டி வைத்து கொண்டாடி அதைப் பற்றி பேப்பரில் மாபெரும் வெற்றி,  இரண்டே நாளில் இவ்வளவு கலெக்‌ஷன் அவ்வளவு கலெக்‌ஷன் என்று எழுத வைக்கிறார்கள். இதை பார்த்து பார்வையாளன் தியேட்டருக்கு வருவான் என்பது அவர்களது எண்ணம். அப்படி வருபவனிடம் தான் இப்படி அடித்துப் பிடுங்குகிறார்கள்.

இப்படியே போனால் இன்னும் சில வருடங்களில் தியேட்டருக்கு வந்து சினிமா பார்பது என்பது அரிதாகப் போகக்கூடிய விபரீத விளைவுகளை தியேட்டர்காரர்கள் சந்திக்க நேரிடும் என்பதை உணர்ந்து அரசும், விநியோகஸ்தர்களூம், தியேட்டர் அதிபர்களும் பொன் முட்டையிடும் வாத்தான பார்வையாளர்களை ஒரேயடியாய் கொன்று விடவேண்டாம் என்பதை புரிந்து செயல்படுவார்கள் என்று நம்புவோம்.

தமிழ்நாடு தியேட்டர்களுக்கான அனுமதிக் கட்டண அரசாணை விபரங்களை படிக்க இங்கே க்ளிக்கவும்
கேபிள் சங்கர்


Post a Comment

27 comments:

கேரளாக்காரன் said...

In kerala i saw enthiran FDFS for 30 rs and vettaikkaaran FDFS for 20 rs and sivaji for only 16 rs

கார்க்கிபவா said...

முதல் பத்தியில் விநியோகஸ்தருக்கு செம‌ அடி என ஆரம்பித்து இறுதி பத்தியில் அவர்கள் தான் காரணம் என்பதாக முடிகிறது.பிறகென்ன பிரச்சினை தல? சாவட்டும்

எனக்கு என்னவோ கார்ப்பர்ரெட் என ஒரு வகையில் கேவலமாக சொல்லப்படும் சத்யம், பிவிஆர் போன்றவர்கள்தான் தியேட்டரில் பெஸ்ட். 120 ரூபாய்க்கு தி பெஸ்ட் சேவை தருகிறார்கள். அதே காசை வாங்கிக் கொண்டு நம்ம ஊர் தியேட்டர்கள் கடுப்பைத்தான் கிளப்புகிறார்கள்.

குரங்குபெடல் said...

பைரசி பிரச்னைக்கு மிக முக்கியமான காரணம்

இந்த பேராசையே . . .

மிக சாதாரண திரை அரங்கமான போரூர் கோபாலகிருஷ்ணாவில்

சகுனி விலை Rs.100 and Rs.80

நல்ல பதிவு

நன்றி

Nat Sriram said...

சத்தியம்ல லீகலா என்ன வாங்கலாமோ அது மட்டுந்தான் வாங்கறாங்களா :0

Ponchandar said...

உண்மைதான்..இங்கு தென்காசியிலேயே படம் வெளியான ஒரு வாரத்திற்க்கு (கூட்டம் வருவதை பார்த்து நீட்டிக்கப்படும்)டிக்கெட் விலை ரூ 100/-. அதுவும் NON-AC திரையரங்கம். குஷன் சீட் -கூட கிடையாது. தியேட்டர்-ல போய் படம் பார்க்கவே நிறைய யோசிக்க வேண்டியுள்ளது. படம் வெளிவந்த மறுநாளே ட்ரொண்ட் கிடைத்து விடுகிறது. காப்பி சுமாராக இருந்தாலும் படம் பார்த்து விடுகிறேன்.

Cable சங்கர் said...

Natraj

சென்னையில் சத்யம், பிவிஆர், ஐநாக்ஸ்,பேம், ஏஜிஎஸ் ஆகிய மல்ட்டிப்ளெக்ஸுகளில் அரசு நிர்ணையித்த விலையே வாங்குகிறார்கள்.

Anonymous said...

சிறந்த ஒலி,ஒளி அமைப்புடன் சத்யம் போன்ற சிறந்த தியேட்டர்களில் படம் பார்க்க தரும் அதே பணத்தை சுமாரான தியேட்டர்களிலும் தந்துவிட்டு குறைகளை அடுக்குகிறார்கள் சினிமா செல்வோர்.

Cable சங்கர் said...

எல்லோரும் சத்யமிலேயே படம் பார்க்க முடியுமா சிவா?

Cable சங்கர் said...
This comment has been removed by the author.
வவ்வால் said...

கேபிள்ஜி,

ஆஹா ரொம்ப நாளா துண்டு துண்டாக பேசிக்கொண்டு இருந்தோம்,இன்னிக்கு முழுசா போட்டு தாக்கிட்டீங்க, நான் சாதாரண தியேட்டர்களில் அடிக்கும் கொள்ளையை அடிக்கடி சொல்லியிருக்கேன் என்பதையும் சொல்லி வைக்கிறேன், வரலாறு முக்கியம் தலைவரே :-))

இந்த அரசு விதியில் இருக்கும் ஒரு ஓட்டையை தான் சினிமா தியேட்டர்கள் எக்ஸ்பிளாய்ட் செய்கிறார்கள், நீங்க அதை கவனிக்கவில்லை, படம் வெளியான முதல்வாரத்திற்கு தியேட்டர்காரர்களே என்ன விலை வேண்டுமானாலும் நிர்ணயத்துக்கொள்ள ஒரு சப்-கிளாஸ் விதி இருக்கு, அதை உருவாக்கியது மாண்புமிகு மஞ்சள் துண்டார் தான் என நினைக்கிறேன்.ஏன் எனில் பேரன்களின் சினிமா வியாபாரம் செழிக்கவே.

நீங்க போட்ட சுட்டியிலும் அதற்கான குறிப்பு இருக்கு,

//(iii) Subject to the rates mentioned in (i) above, a licensee may charge a rate other than the rate endorsed in the
“C” form licence, for any film for a specified period with due advance notice to the licensing authority and the Commercial
Tax authority and with proper endorsement made by the Licensing Authority in the ‘C’ form licence.//

அதாவது அறிவிச்சுட்டு அனுமதியோட கட்டணம் ஏத்திக்கலாம்.

அதைப்பயன்ப்படுத்தி எப்போதும் கட்டணம் ஏத்தியே விக்குறாங்க. கடலூரில் படம் சரி இல்லைனா இரண்டாவது வாரம்ம் "இன்று முதல் கட்டணம் 20ரூ" என துண்டுப்போஸ்டர் அடிச்சு ஒட்டி ஓட்டுவாங்க, ரொம்ப மட்டமான படம் என்றால் 10 ரூ என ஓட்டுவார்கள் :-))

கட்டணக்கொள்ளைக்கு அரசே ஆதரவு தெரிவிக்கும் நிலையில் ,தியேட்டர்காரங்க எப்படி அடங்குவாங்க. எனவே மக்கள் அவங்களுக்கு தெரிஞ்சவழியான"டிவிடி" மூலம் பாடம் கற்பிக்கிறாங்க.

சினிமா அழியுதுனு புலம்பினால் என்ன புண்ணியம்,அழிவுக்கு அவங்களே காரணம் மக்களை குறை சொல்லுறாங்க.

Rajkumar R said...

நல்ல பதிவு

Anonymous said...

I had the same experience while booking the Saguni movie at Sangam cinemas in ticketnew.com. The ticket price is Rs 90 which seems at least reasonable for balcony but the booking service charge was Rs 60!. So I paid Rs 150 for a ticket :(

Cable சங்கர் said...

intha க்ளாஸின் ஓட்டை வைத்து பணத்தை ஏற்றுகிறார்கள் என்றால் வெளிபடையாய் அறிவிக்க வேண்டியதுதானே?

சிவகுமார் said...

nan theatre la mattum than padam parpan .Last 9 year , TV mattum than. Booking Charge , parking charge katuadiyakala .

இரமேஷ் இராமலிங்கம் said...

It is the same case here in Karur. When I went to Saguni film this week, they don't even give the ticket in counter. 90% of the ticket was sold in black only. That is 150 rs for 40 rs ticket.

So we preferred to go to Urumi which is running in another theater in same complex. But they are asking 50 rs for 40rs. But I refused to pay 50 & asked them to give 50 rs ticket if they want me to pay. They ready to send us out though only 15 people are in theater.

Its even more worse in other theaters here. They don't even give you tickets, they will just give something like token.

வவ்வால் said...

கேபிள்ஜி,

//intha க்ளாஸின் ஓட்டை வைத்து பணத்தை ஏற்றுகிறார்கள் என்றால் வெளிபடையாய் அறிவிக்க வேண்டியதுதானே?//

என்னைய வச்சு காமெடி கீமெடி செய்யலையே.... சினிமாவில இருக்க நீங்க தான் ஏன்னு சொல்லணும், அரசு விதியில இருக்க "ஓட்டைகளை" சரியா பயன்ப்படுத்தி கொள்ளையடிக்கிறாங்க.இதை எல்லாம் சொல்லியா தரணும் சினிமாக்காரங்களுக்கு. என்னை கேட்டால் முதல் வாரம் தியேட்டர் பக்கமே போக கூடாது :-))

மெலோடி தியேட்டரில் இந்திப்படம் முன்னர் பார்த்து இருக்கிங்களா?, இந்த மல்டி பிளக்ஸ் ரூல்ஸ் என வரும் முன்னரே, சத்யம்ல 40 ரூ டிக்கெட் இருந்த காலத்தில் கூட மெல்லோடி ஒரே ஸ்கிரீன் தான் ஆனால் எப்போவும் 100 ரூ க்கு குறையாமல் டிக்கெட் விற்பாங்க,அடுத்த கிளாஸ் 80 ரூ. ஒரு வாரம் ஆனாலும் குறைக்கமாட்டாங்க, வேற்று மொழி படம் திரையிட்டால் அவங்களே கட்டணம் நிர்ணயத்துக்கொள்ளலாம்னு ஒரு துணை விதி இருக்காம்,எங்கே இருக்குனு எனக்கு தெரியாது :-))

ஆனால் அது இந்திப்படம் ஓட்டும் தியேட்டர்கள் மட்டுமே செய்றது(இந்தி ஏரியா விலை கூடவாம்) மற்ற மலையாள,தெலுங்கு படம் ஓட்டும் சங்கம், மஹாராணி,கேசினோ,தியேட்டர்கள் செய்வதில்லை.

அரசாங்கம் சினிமாக்காரங்களுக்கு எல்லாம் சாதகமாகவே இருக்கு,அப்படி இருந்தும் ,திரையுலகம் அழியுது காப்பாத்துங்கன்னு அவ்வப்போது மனு கொடுக்க வேண்டியது,இன்னும் என்ன தான் எதிர்ப்பார்க்கிறாங்களோ?

dhasarathy said...

Neengal solvadhellaam unmai.Evaigal ellaavatraiyum vida periya moasadi endha varivilakku naadagam Munbellaam nalla padangal sariyaaga vasoolaagavilly endraal arrasu andha padangalukku varivilakku alikkum Varivilakku enbadhu makkalukkaagaththaan adhaavadhu ticket vilai 50rupay endraal 30 rupay thayaarippaalargalukkum 20 rupay variyaaga arasukkum pogum andha 20rupaavari vilakku alikkapattaal andha padaththai makkal 30rupay koduththu paarkkalamm idharkku peyadhaan vari vilakku aanaal ippodhu appadiyaa nadakkiradhu idhai yaarum kaetp[adhe illy

Gopi said...

That's why I don't feel guilty to watch movies in DVD (Original or pirated). My only criteria is the print should be damn good with 5.1 sound and I'll wait for that. Nowadays you get good prints within three weeks to four weeks.

”தளிர் சுரேஷ்” said...

உண்மைதான் ஓட்டை ஒடிசலான தியேட்டர்களில் கூட 50,100 என கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அதனால்தான் திருட்டு டிவிடி அமோகமாக விற்கிறது. நல்ல பதிவு!

பிரபல பதிவர் said...

தல‌

படம் நல்லா இருந்தா ஓடும்... சமீபத்தில் ok ok, வழக்கு எண், கலகலப்பு போன்ற படங்கள் வசூலிக்கவில்லையா??

மறு நாளே dvd வெளிவரும் சூழ்நிலையில் முதல் நாளில் வசூலை அள்ளாமல் இருந்தால் என்ன செய்வது... முதலுக்கே மோசமாகிவிடும் அல்லவா...

மேலும் சின்ன படங்களுக்கு இந்த அளவு டிக்கெட் விலையிருக்காது... பெரிய படங்களுக்கு மட்டும்தான் இந்த விலை இருக்கும்...

இந்த முறைதான் சிறந்தது.. அதனால்தான் ஹிந்தி பெரிய‌ படங்கள் மொக்கயா இருந்தாலும் வசூலை அள்ள முடிகிறது...

சின்ன படங்களும் நல்லா இருந்தால் மவுத் டாக் மற்றும் விமர்சனங்களால் வசூல் அள்ள முடிகிறது....


சகுனி, ராஜபாட்டை, மன்னாரு அம்பு, விஸ்வரூபம் போன்ற படங்களுக்கு ஒரு ரூபாய்க்கு டிக்கெட் வித்தாலும் ரெண்டாவது ஷோவிலிருந்தே ஆட்கள் இருக்காது....

முதல்ல நல்ல கதை, திரைக்கதை ரெடி பண்ணிட்டு படம் எடுத்தால் இந்த பிரச்சனை இல்லை....

பிரபல பதிவர் said...

அப்புறம் தமிழ் படங்கள் மற்ற மாநிலங்களில் ஓரளவு சுமாரான வசூல் பெற காரணம்.. வெளி மாநிலத்தில் 1:10 என்ற ரேஷியோவில் ரிலீஸ் ஆவதால்... அந்த மாநிலங்களில் வசிக்கும் தமிழர்கள் வேறு வழியில்லாமல் பார்த்தும் விடுவதால்தான்...

நான் மும்பையில் ரிலீஸாகும் 90% தமிழ் படங்களை பார்த்து விடுவேன்.. ஆனால் சென்னையில் இருந்தால் அப்படி சொல்ல முடியாது 50% படம் மட்டும்தான் பார்ப்பேன்...

R. Vijay said...

When I had gone to purchase advance booking ticket at AVM Rajeswari counter, the person there told me to buy it online. It seems counter ticket will be given just before start of the show. Ticket cost at counter it Rs. 40/50. But extra charges by website is Rs. 20 (ticketnew.com)-- almost half of ticket cost.

rajesh said...

very good pathivu... nagercoil-l padaththukku koottam irunthalum sari illainalum muthal 10 naal Rs.100/- ticket-la pottirukkum vilai Rs.35... ithukku ethavathu pannanum boss

Anonymous said...

Good analysis.But ticketing persons from most of the theaters are rude and rowdies.I am afraid to argue with them

KG said...

In Bangalore i always pay 125 - 200 RS in multiplex.. but the quality is top notch .... In bangalore all range theatres are there ...

Mohan said...

Sir,
Is there is any rule like we should not go to theater after drinking. Bcoz most of the theaters do not allow nowadays. Kindly explain about it.

balaji said...
This comment has been removed by the author.