Thottal Thodarum

Jun 17, 2012

Ferraari Ki Sawaari

விதுவிநோத் சோப்ரா, போமன் ஹிரானி, ராஜு ஹிரானி போன்ற பெயர்களைப் பார்த்ததும் சரி ஃபீல் குட் படம் ரெடி என்கிற நம்பிக்கை வந்துவிடும் அளவிற்கு இவர்களின் ப்ராண்ட் ஹிட் கொடுத்திருக்க, அதை நிருபிக்கும் வகையில் மெனக்கெட்டு ஒரு சுவாரஸ்ய ஐடியாவை நம்முன் வைக்கும் போது பாராட்டாமல் இருக்க முடியவில்லை. 


ரொம்பவும் சிம்பிளான கதை. கிரிக்கெட்டில் அதீத திறமையுள்ள தன் மகனின் லார்ட்ஸ் ஆட்டக் கனவிற்காக போராடும் ஒரு சாதாரண அதி நேர்மையான அப்பனின் போராட்டம் தான். அதை சொன்ன விதத்தில் தான் நம்மை அவர்களூடேயே பயணிக்க வைத்திருக்கிறார்கள். எப்படி என்றால் அது சச்சினின் டெண்டுல்கரின் பெராரி காரை வைத்து. அவருக்கே தெரியாமல் அந்த பெராரி காரை படம் நெடுக பயன்படுத்தியிருக்கும் முறைக்கும், அதை ஒரு கேரக்டராய் வைத்து ஆடியிருக்கும் சுவாரஸ்ய ஆட்டத்திற்கு சபாஷ். லாஜிக் என்ற ஒன்றை பற்றி நாம் யோசித்தோமானால் நம்மால் ஒன்ற முடியாது. ஆனாலும் இந்நிகழ்வுகளூடே நாம் பயணிக்கும் நிஜமும், அதன் நிதர்சனங்களும் நம்மை அச்சிறுவனின் கனவை நிறைவேற்ற போராடும் தந்தையின் அன்பை, பாசத்தை, ஆசையை வழி நடத்திச் செல்ல துணை நிற்கிறோம்.
நேர்மையின் திருவுருவமாய் ஷர்மான் ஜோஷி, மனைவியை இழந்த ஒரு சாதாரணனாய், தினமும் தன் குடும்பத்திற்கு சமைத்து, ஸ்கூல் பேக் செய்து, அப்பாவுக்கு டிபன் செய்து கொடுத்துவிட்டு, சிக்னலில் நிற்காமல் வந்ததற்காக தானே போலீஸிடம் போய் ஃபைன் கட்டிவிட்டு வரும் அளவிற்கான நல்லவன் கேரக்டரில் மிளிர்கிறார். கொஞ்சம் பஃபூன் தனமான அவரது முகலேங்குவேஜுகள் கேரக்டரின் மீது கொடுக்கும் அப்பாவித்தனத்தை சரியாக கொடுத்திருக்கிறது. சச்சினின் காரை தான் திருடிவிட்டோம் என்று அவர் ஃபீல் செய்யுமிடத்தில் நிஜமாகவே இம்ப்ரசிவ்.

கேயோ. ஷர்மான் ஜோஷியின் மகன். கிரிக்கெட்டின் மீது ஆதீத வெறி கொண்ட சிறுவன். மிகச் சிறந்த பேட்ஸ்மேன். அப்பாவின் கஷ்டம் தெரிந்து அட்ஜெஸ்ட் செய்து கொள்பவன். நிச்சயம் தாம் வெல்வோம் என்று கனவிலிருக்கும் வழக்கமான டெம்ப்ளேட் சினிமா பையன் கேரக்டர்தான். பையன் அதை சரியாக செய்திருக்கிறான். 
அடித்து தூள் பரத்தி விடும் கேரக்டர் நம்ம பொமன் இரானிதான். சிறுவனின் தாத்தாவாக. என்னா கேரக்டர்டா. கோண பேச்சும், லேசான தொந்தியுமாய் உட்கார்ந்தபடி பிள்ளையிடம் “மொத்த கிரிக்கெட் டீமீலேயே 11 பேர் தான் தெரியுமா? மத்தாவனெல்லாம் என்னை மாதிரி டிவி பார்த்திட்டு, ரோடுல ஆடிட்டிருக்கான்” என்று சொல்லி பேரனின் கனவுக்கு தடை போடும் போதும் சரி, பின்பு ஒரு நாள் நடு ராத்திரி தன் பவுலிங் திறமைகள் அனைத்தையும் காட்டி நொந்து போய் அடுத்த நாள் காலையில் தன் பழைய கிரிக்கெட் கோட்டைப் போட்டுக் கொண்டு பழைய நண்பனை காண தயாராக இருக்குமிடமாகட்டும். மனுஷன் நிஜமாகவே உருக்குகிறார். தான் இழந்த இடத்தை தன் பேரன் நிச்சயம் பெருவான் என்ற நம்பிக்கையை அவர் வெளிப்படுத்தும் அந்தக் காட்சி ரியலி பெண்டாஸ்டிக்.

டெக்னிக்கலாய் பார்த்தால் அழகான ஒளிப்பதிவு. தேர்ந்த பின்னணியிசை என்று எல்லாமே இன்ஸ்பயரிங் தான். ராஜு ஹிரானியின் வசனங்கள் வழக்கம் போல நச்சென்று இருக்கிறது.  பல இடங்களில் ஏற்கனவே அவர்களின் பழைய படங்களில் கேட்டது போலவும் இருப்பதை தவிர்க்க முடியவில்லை. பாராட்டப்பட வேண்டிய விஷயமென்றால் அது படத்தின் திரைக்கதைதான். பெராராரி என்கிற ஒரு காரை வைத்து கொஞ்சம் பேண்டஸியாய் திரைக்கதை அமைத்து அதை ஆங்காங்கே லாஜிக் மீறலையும் மீறி சுவாரஸ்யப்படுத்தி, நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து, அந்த கல்யாண ஏற்பாடு செய்யும் ஆண்டி, பணக்கார பெராராரி கேட்கும் லூசு அரசியல்வாதி குடும்பம், சச்சினுக்கு தெரியாமல் ராத்திரியோடு ராத்திரியாய் வண்டியை கண்டுபிடித்து வைத்துவிடலாம் என்ற ப்ளானின் அலையும் அந்த ட்ரைவரும், வாட்ச்மேனும், பழைய வண்டியை பிய்த்து விற்கும் கடைக்காரன் கேரக்டர், காந்தியவாதி இன்ஸ்பெக்டர், என்று பார்த்து பார்த்து கேரக்டர்களை பிடித்து சுவாரஸ்யப்படுத்தியிருக்கிறார்கள். நடுவில் வித்யாபாலனின் ஒரு குத்தாட்டம் வேறு இருக்கிறது. இது ஒரிஜினல் பெராரி ஆட்டம்.
ஆனால் இப்படி பார்த்து பார்த்து செய்த கேரக்டர்களே பல இடங்களில் டெம்ப்ளேட்டாய் இருப்பதும் படு செயற்கையாக இருக்கிறது. ஒரு எக்ஸ்டெண்ட் வரை ஓகே நகைச்சுவை கதை என்று எடுத்துக் கொண்டாலும், திரும்பத் திரும்ப, கிரிக்கெட், சச்சின், கிரிக்கெட் ஒன்று தான் வாழ்க்கையின் எதிர்க்காலம் போன்று உலகமே அச்சிறுவனின் வெற்றிக்கு உதவுவது என்பது போன்ற காட்சிகள். அதிலும் க்ளைமாக்ஸ் ட்ராமா என்று பரேஷ் ராவலின் கேரக்டரை செய்யும் காட்சிகள் எல்லாம் இந்திய சினிமா கண்டதிலிருந்து இருக்கும் காட்சிகளாய் இருப்பதால் சரி.. ஓகே.. சீக்கிரம் முடிங்கப்பா என்ற ஒரு அயர்வு வரத்தான் செய்கிறது. அந்த வகையில் விது விநோத் சோப்ராவுக்கும், ராஜேஷ் மபூஸ்கருக்கும் திரைக்கதை ஆசிரியராய் மைனஸ் தான்.  ஆனால் ஒரு இயக்குனராய் ராஜேஷ் மபூஸ்கர் இத்திரைக்கதையை எடுத்தாண்டு சிறப்பாய் கொடுத்திருக்கும் விதத்திற்கு வாழ்த்தும் நிச்சயம் உண்டு.
கேபிள் சங்கர்

Post a Comment

5 comments:

CS. Mohan Kumar said...

பாக்கணும் என திட்டமிட்டுள்ளேன். டெம்பிளேட், இம்ப்ரசிவ் போன்ற வார்த்தைகளை உம்ம memory-ல் இருந்து நீக்கணும் ஓய்

CS. Mohan Kumar said...

உடான்ஸ் - 2

CS. Mohan Kumar said...

உடான்சில் ஓட்டு போட்டா தான் நீர் ஹாப்பி ஆவீர் என தெரியும் அதான்

வவ்வால் said...

கேபிள்ஜி,

பிரகாஷ் ராஜ் எடுத்த தோனி படத்தின் மராத்தி மூலக்கதையை(மகேஷ் மஞ்ச்ரேகர் படம்?) உல்டா ஆக எடுத்தாப்போல தெரியுதே.

விது வினோத் சோப்ரா டீம் நம்ம ஊரு விக்ரமன் போல ஒரு லாலா... லாலலா தீம்லவே எடுப்பாங்க,ஆனாலும் ஹிட்டாகிரும் :-))

Ba La said...

பாக்கணும்