Madagascar -3
கார்ட்டூன் படங்கள் எனக்கு எப்போதும் பிடிக்கும். மிகச் சுமாரான கதைக் களன் உள்ள படங்கள் கூட பின்னணியில் உள்ள அனிமேட்டர்களின் உழைப்பினாலும், ஏதோ ஒரு புதிய விஷயத்தை அவர்கள் தொடர்ந்து அனிமேஷன் மூலம் முயன்று கொண்டேயிருப்பதை பார்க்கும் போதும், குழந்தைகளை டார்கெட் செய்து அவர்கள் சொல்லும் விஷயங்கள் எல்லாவற்றிலும் ஒரு விதமான டெம்ப்ளேட் இருந்தாலும், சுவாரஸ்ய பின்னலாய் நிறைய விஷயங்களை மெனக்கெட்டுக் கொண்டேயிருப்பதால் கார்டூன் படங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். பிக்சாரின் படங்களைத் தவிர, மற்ற படங்களை 2டியில் பார்ப்பதை தான் மிகவும் விரும்பியிருக்கிறேன். எனக்கென்னவே 3டியில் கார்டூன் ஒட்டவில்லை.
சரி மடகாஸ்கருக்கு வருவோம். அலெக்ஸ், மார்ட்டி, க்ளோரியா, மெல்மென் ஆகியோர் இன்னமும் அவர்களுடய நியூயார்க் ஜூவுக்குள் போகும் கனவை நோக்கி அலைந்து கொண்டிருக்கிறார்கள். இம்முறை எப்படியாவது போய்விட வேண்டும் என்ற எண்ணத்தில் அவர்கள் போவது ஈரோப் முழுவதும் சர்க்கஸ் மிருகங்கள் என்ற பொய்யின் பேரில். காரணம். அலெக்ஸை துரத்தும் நியூயார்க் சிங்கப் போலீஸ் பெண்மணி. ஒரு பக்கம் துரத்தும் விபரீதணியான அந்த போலீஸ். இன்னொரு பக்கம் அவர்களிடமிருந்து தப்பித்து நொந்து போய் பயணித்துக் கொண்டிருக்கும் சர்க்கஸ் கூட்டம். அவர்களுடன் இவர்களும் தாங்கள் சர்க்கஸ் காரர்கள் என்று சொல்லி ஆடும் ஆட்டமும், ஈரோப் முழுவதும் சுற்றி வருவதற்குள் அவர்கள் சர்க்கஸை நிலை நிறுத்த போராடும் போராட்டமென போகிறது கதை. இவர்களால் சர்க்கஸ் வளர்ந்ததா? மீண்டும் இவர்கள் நியூயார்க் ஜூவுக்குள் போனார்களா? அலெக்ஸா துரத்தும் வில்லி என்ன ஆனாள்? என்பதுதான் கதை.
மற்ற கேரக்டர்களை தொடர்ந்து பார்த்து வருபவர்களுக்கு அவர்களின் சுவாரஸ்யங்கள் புரியும். புதியதாய் வரும் சர்க்கஸ் புலி கேரக்டர் அஹா..சூப்பர். வளையத்தில் நுழைந்து வெளிவரும் வீரன். சர்க்கஸ் என்பது ஒரு தவம். அதில் தன் வளையம் புகும் திறனால் உலகையே வியக்க வைத்துக் கொண்டிருக்கும் கேரக்டர் ஒரு நாள் மிகச் சிறிய வளையத்தில் போக முடியாமல் தோற்க, அதனால் ரிஜக்ஷனின் உச்சியில் உள்ள புலி. மோடிவேஷன் இல்லாமல் ஏதோ செய்து தங்கள் சர்க்கஸை நிலை நிறுத்த முயலும், பெண் புலியும், சீலும், என்பது போன்ற கேரக்டர்களை வைத்து இவர்கள் இழைத்திருக்கும் குட்டிக்கதை தான் இம்ப்ரசிவ்.
அனிமேஷனில் ஒவ்வொரு கேரக்டரின் முகபாவமும், வசனம் பேசியிருக்கும் முறையும் செம க்யூட். அதுவும் அந்த புலி கேரக்டருக்கு குரல் கொடுத்திருக்கும் நடிகர் டேவிட் என்று நினைக்கிறேன். க்ளாஸ். மைனஸ் என்று பார்த்தால் டெம்ப்ளேட் திரைக்கதை தான் என்று சொல்ல வேண்டும். ஏற்கனவே பார்த்துப் பழக்கப்பட்ட கேரக்டர்களின் அணிவகுப்பும், அவர்களின் காமெடி ஜெர்க்குகளும் பழகப்பட்டு விட்டதால் கூட அந்த அலுப்பு இருக்கலாம் என்று தோன்றுகிறது. எனிவே ஐ லவ் திஸ் மூவி.
கேபிள் சங்கர்
Comments
எல்லாம்,கணினி, மென்பொருள் செய்யுது , ரொம்ப ஈசி அனிமேஷன் என பலரும் நினைக்கலாம்,ஆனால் பொறுமையை சோதிக்கும் வேளை அது.
சரியான மோஷன் ,ஆக்ஷன் கொண்டு வர மண்டையை உடைத்துக்கொள்வார்கள், என்ன தான் செய்தாலும் சில குறைகள் வந்துக்கொண்டே இருக்கும்,குளோஸ் அப் காட்சிகள் வைக்கும் போது ரொம்ப மெனக்கெட வேண்டும், ஜிட்டர் எபெக்ட்ஸ் என்ற ஒன்றின் விளைவாக கண் இமைகள் அடித்துக்கொள்வது எப்போதும் சரோஜா தேவி கண்ணை சிமிட்டுவது போலவே வரும். அதை மானுவலாக சரி செய்வார்கள் ,அப்புறம் கிராவிட்டி எல்லாம் சரியாக வராது, யானை ஓடினாலும் காற்றில் மிதப்பது போல ஓடும். எல்லாத்துக்கும் மென்பொருளில் ஆப்ஷன் இருக்கு ,ஆனால் அது திருப்திகரமாக வராது, சரியாக கரெக்ட் செய்ய வேண்டும்.ரெண்டர் செய்வதற்கு சூப்பர் கம்பியூட்டர்களை பயன்ப்படுத்துவார்கள்.
இதெல்லாம் நம்ம ஊரில் செய்ய ஆளே இல்லை. நாம் செய்வதெல்லாம் , மாணவர்கள் செய்யும் பிராஜெக்ட் ஒர்க் அளவுக்கே ஒர்த்.
உழைப்பிற்காகவே அனிமேஷன் படங்களை பார்ப்பேன். மேக்கிங் பற்றியும் ஒரிஜினல் டிவிடிகளில் காட்டுவார்கள் செமையாக இருக்கும்.மற்றப்படி டெம்ப்ளேட் ஆகவே கதை இருக்கும்,ஏன் எனில் சிறுவர்களை மையப்படுத்தி எடுப்பதே காரணம்.
அனிமேஷன் வேலை செய்வதை எப்படினு பதிவு போடலாம் என நினைத்து கொண்டேயிருப்பேன்,ஆனால் செய்ய முடியவில்லை.
nathan-singapore
nathan
gd