முதல் பாகம் பார்த்த போது இருந்த ஆர்வம் இரண்டாவது பாகம் பார்க்க வரவில்லை. அதனால் பார்த்தேனா என்ற சந்தேகம் இன்னமும் இருக்கத்தான் செய்கிறது. வேறு வழியேயில்லாமல் எல்லாம் சில படங்களை பார்த்துக் கொண்டிருக்கிறேன். அந்த வரிசையில் இதுவும் ஒன்றாய் இருந்துவிட்டு போகட்டும் என்று போய் உட்கார்ந்தேன்.
ஆரம்பம் தொட்டு, க்ளைமாக்ஸ் வரை எதுவுமே மாறாமல் முதல் பாகம் போலவே ஒரு கதை. டாமி லீ ஜோன்ஸுக்கும், வில்ஸ்மித்துக்கு முகத்தில் கொஞ்சம் வயசாகியிருந்தது. இது போன்ற வித்யாசங்களைத் தவிர லேசான சுவாரஸ்யத்துக்கான ஒரு சின்னத் திரி கதையின் திரைக்கதையில் வைத்திருந்தார்கள்.
படத்தின் வில்லனான போரிஸ் த அனிமல் எனும் ஏலியனை நிலாவில் உள்ள ஒர் சிறையில் அடைத்து வைத்திருக்கிறார்கள். அவன் அங்கிருந்து தப்பிக்கிறான். அவனுடய ஒரே வெறி நாற்பது வருடங்களாய் அந்தச் சிறையில் தன்னை அடைத்து, தன் கையை இழக்க வைத்த ஏஜெண்ட் கேவை கொல்ல வேண்டும் என்பதே.
ப்ரச்சனை ஆரம்பித்தவுடன் கேவை தொடர்பு கொள்ள வில்ஸ்மித் இறங்க அவரைக் காணவில்லை. கே என்ற ஏஜெண்டேயில்லை என்கிறார்கள். அவரது டேட்டா பேஸை அணுக முடியாமல் போகிறது. கே இறந்துவிட்டார் என்கிறார்கள். எனவே கே வை காப்பாற்ற எண்ணி வில் ஸ்மித் எடுக்கும் முயற்சிகள் தான் படம் கொடுத்த சுவாரஸயம். அவரை காப்பாற்றுவதற்காக கே இறந்த 1969க்கு ஒரு நாள் முன்னதாய் கால இயந்தரத்தின் மூலமாய் சென்று, கேவையும், போரீஸ் த அனிமல் எனும் இரண்டு பேரையும் எப்படி அழித்து உலகை காக்கிறார்கள் என்பது தான் கதை.
ஆரம்ப சுவாரஸ்யங்கள் மட்டுமே நன்றாக இருந்தது. அதற்கு அப்புறம் அவர்கள் திரைக்கதையில் அடித்த உட்டாலக்கடியை எல்லாம் நம்மூர் ராம நாராயணன் சமாச்சாரம் தான். எல்லாவற்றிக்கும் ஒரு காரணம். கதை என்று விடுகிறார்கள். டாமி லீ ஜோன்ஸின் இளமையான கே கேரக்டரில் வரும் ஜாஷின் நடிப்பு அப்படியே குட்டி டாமி லீயின் இம்ப்ரிண்டாக இருந்தது அடுத்த சுவாரஸ்யம்.
அமெரிக்க படங்களின் டெக்னாலஜியைப் பற்றியோ, அல்லது இப்படத்தின் மேன்மையைப் பற்றியோ பெரிதாய் சிலாகித்து பேச ஏதுமிருப்பதாய் எனக்கு தெரியவில்லை. எனவே.. சாதாரண டைம் பாஸ் படம். அம்பூட்டுத்தான். ஆங்காங்கே வரும் சின்னச் சின்ன நகைச்சுவைக்காட்சிகளைத் தவிர பெரியதாய் இம்ப்ரஸ் செய்யவில்லை என்னை.
கேபிள் சங்கர்
Post a Comment
5 comments:
கேபிள்ஜி,
படம் சுத்த டப்பா, எதையாவது வச்சு ஒப்பேத்தணுமேனு எடுத்தப்படம்.
கேயின் காலத்தில் அப்போது தான் நிலவுக்கே முதல் பயணம்ம் போவதாக வருகிறது.ஆனால் நிலாவில் சிறை வைக்கும் அளவுக்கு 40 ஆண்டுக்கு முன்னர் கே ஆல் முடியும் எனவும் வருகிறது ,லாஜிக் இடிக்கிறதே.
அதை விட கே ஒரு பெண்டட் வைக்க முதல் நிலவு பயண ராக்கெட்டில் ரொம்ப கஷ்டப்படுகிறார் ,பின்னர் எப்படி நிலவுக்கு இவர் சிறைச்சாலை கட்ட போயிருப்பார். ஏன் எனில் வில்லன் கே ஆல் கைது செய்வதற்கு ஒரு நாள் முன்னதாக வருவதாக தான் கதையில் சொல்கிறார்கள்.
அதைவிட கே கடந்த காலத்தில் கொல்லப்பட்டதும் நிகழ்காலத்தில் எல்லாம் மாறிவிடுகிறது ,வீடு முதல், அப்படி எனில் புகைப்படத்தில் இடம் பெற்றிருந்தால் அதுவும் போய்விடுமா? மேலும் அனைவரது நினைவிலும் கே இறந்தவர் எனப்பதிவாகி விட வில் ஸ்மித்துக்கு மட்டும் இல்லை என எப்படி பதிவாகும் ,அவருக்கும் ஆட்டோ மேடிக்காக நினைவில் இருந்து கே நீங்கிட வேண்டாமா?
ஹலிவுட்டுலவே இம்புட்டு ஓட்டை ஒடைசல்னா அப்புறம் தமிழில் எப்படி இருக்கும் :-))
ஆங்காங்கே வரும் சிறு சிறு சுவாரஸ்யஙகள் தவிர மொக்க தான்.
இதுக்கு என்ன காமெடின்னா.. இந்த திராபைகளை சொந்தமாய் யோசிச்சு படமெடுத்தாங்கன்ன்னு தலையில தூக்கி வச்சிட்டு பேசுறதுதான். @:))
என்ன கதை சொன்னாலும் நம்பும் கூட்டம் இன்னும் உள்ளது .. நம்ம அம்புலி மாமா கதைதான் இது
கேபிள்ஜி,
//இதுக்கு என்ன காமெடின்னா.. இந்த திராபைகளை சொந்தமாய் யோசிச்சு படமெடுத்தாங்கன்ன்னு தலையில தூக்கி வச்சிட்டு பேசுறதுதான். @:))//
எல்லா ஊர்லவும் இதே கதை தான்,இதுல ஹாலிவுட்டார்கள் கூடுதலாக மொக்கை கதையை கூட பேஸ்டு ஆன் னு ஒரு புக் பேர போட்டு ரொம்ப ஆத்தண்டிக்க காட்டிப்பாங்க, கதை பார்த்தா கெக்கேபிக்கேனு இருக்கும் :-))
Post a Comment