Thottal Thodarum

Jun 12, 2012

Shanghai

சில இந்திப் படங்களின் விளம்பரங்கள் செய்யப்படும் போதே பார்க்கலாம் என்ற ஒரு எண்ணத்தை கொடுக்கும். அப்படி ஒரு குட் புக் லிஸ்டில் இந்த படம் எப்படி வந்தது என்பதற்கான காரணம் இயக்குனர் டிபங்கர் பனர்ஜி. கோஷ்லா கா கோஷ்லாவிற்கு பிறகு இவரின் புதிய படம். அடுத்து ட்ரைலரில் பார்த்து இம்பரசிவான ஷாட்டுகள் என்று பல விஷயங்கள் கன்பர்ம் செய்ய படம் பார்த்தாகிவிட்டது.


ரொம்ப நாளாகிவிட்டது ஒரு சாலிடான, நேர்மையான த்ரில்லரைப் பார்த்து. ஆரம்பித்த முதல் காட்சியிலிருந்து முடிவு வரை ஒரே நேர்க்கோட்டில் சென்று நம்மை சொல்லப்பட்டிருக்கும் கதை. ரொம்பவும் சிம்பிளான கதை தான் மக்கள் வசிக்கும் இடத்தில் ஐ.பி.பி எனும் ஒரு டெக்னோ சிட்டியை கட்ட அரசு தன் திட்டங்களை விரிக்கிறது. அதுதான் இந்தியாவின் எதிர்காலம் என்று நம்ப வைக்க பல முயற்சிகள் செய்கிறது. அதை எதிர்த்த ஒரு எழுத்தாளர், ஆக்டிவிஸ்டை கொலை செய்ய முயல, அது ப்ரச்சனையாகிறது. வேறு வழியில்லாமல் அபய் டியோலின் தலைமையில் விசாரணைக் கமிஷன் வைக்க, லோக்கல் போர்ன் படமெடுக்கும் ஆள் ஒருவனின் க்ளூவை வைத்து அதன் பின்னணியில் இருக்கும் அரசின் முகத்தை வெளிப்படுத்த முயல்கிறார்கள். இவர்களால் முடிந்ததா இல்லையா என்பதுதான் கதை.
படம் ஆரம்பத்திலிருந்து நூல் கோர்த்தார்ப் போல கதை சொல்ல ஆரம்பித்திருக்கிறார்கள். எதைப் பற்றியும் கவலைப்படாத அடிமட்ட தொண்டன், லோக்கல் வீடியோகிராபர் இமரான் ஆஸ்மி, கார்பரேட் மீடியேட்டரான பரூக் ஷேக் எவ்வளவு நாளாகி விட்டது இவரைப் பார்த்து. பி.ஏ.கிருஷ்ணன் என்கிற கேரக்டரில் தமிழ் நாட்டுக்காராக வரும் அபய் டியோல். ஷோஷியல் ஆக்டிவிஸ்டை ஒரு தலையாய் காதலிக்கும் கல்கி, அவரது மனைவி, கல்கியின் வேலைக்காரி, என்று பார்த்து பார்த்து கேரக்டர்களை பொறுக்கியெடுத்திருக்கிறார்கள்.

ஒவ்வொரு கேரக்டரும் தன் பாகம் உணர்ந்து செயல்பட்டிருப்பதால் கிரெடிபிலிட்டி அதிகமாகவேயிருக்கிறது. அதுவும் பரூக்‌ஷேக்கும், கிருஷ்ணனும் க்ளைமாக்ஸில் பேசிக் கொள்ளும் காட்சி அட்டகாசம். 

ப்ரெஞ்சு நாவலில் இருந்து எடுக்கபட்டது என்று க்ரெடிட் எல்லாம் கொடுத்தாலும் இக்கதைக்கு ப்ரெஞ்சுக்கு எல்லாம் போக வேண்டிய தேவையேயில்லாத அளவிற்கு நம்மூரிலேயே கதை கொட்டிக் கிடக்க, எதற்கு அந்த செலவு என்று தெரியவில்லை. ஒரு வேளை என்.எப்.டி.சி போன்ற நிறுவனங்களின் பங்களிப்பில் படமெடுக்க இம்மாதிரியான விஷயங்கள் தேவைப்படுகிறதோ என்னவோ.
படத்தில் முக்கியமாய் பாராட்டப்படவேண்டியவர் இயக்குனர் டிபங்கர் தான். மிகவும் கண்ட்ரோல்டான மேக்கிங். முதல் காட்சியில் ஆரம்பித்து எங்கேயும் சினிமாவி பதற்றமோ, அல்லது தடதடக்கும் ஸ்டைலோ வந்து விடாமல் மெனக்கெட்டு , கதை போகும் வேகத்திலேயே லெதார்ஜிக்காக கொண்டு போயிருப்பது மிகத் தெளிவாய் தெரிகிறது. பெரும்பாலும் ஹேண்ட் ஹெல்ட் காட்சிகளிலும், மிக அருகாமையிலான க்ளோசப்புகளும் வசனமாய் சொல்லாத பல விஷயங்களை சொல்ல முயன்றிருக்கிறார்.  பாடல் காட்சிகள் கூட செம ஆப்டாய் இன்சர்ட் செய்திருக்கிறார். முக்கியமாய் ஐ.பி.பி துவக்க விழாவில் ஆடப்படும் குத்து சாங் கூட பெப்பாக ஆரம்பித்து முக்யஸ்தர் வந்தவுடன் அவருக்கு தனியாய் ஒரு வணக்கம் போட்டு விட்டு மீண்டும் விட்ட இடத்திலிருந்து ஆடும் பாணி என்று பல விஷயங்கள் நுணுக்கமாய் கையாண்டிருக்கிறார். பட்.. குறிப்பாக பல இடங்களில் வசனங்கள் பளிச்.

இப்படி ஆஹா ஓஹோ என்று பாராட்டப்பட வேண்டிய படத்தின் மிக முக்கியமான மைனஸ் என்னவென்றால் இந்த திரைக்கதையின் வேகம். நிஜமாகவே நம் வாழ்வில் இம்மாதிரியான ஒரு ப்ரச்சனை எழும்பி அது பற்றிய விழிப்புணர்ச்சியாலோ, அல்லது கண் துடைப்புக்காகவோ, ஒரு கமிஷனை எழுப்பி, அது எப்படி லெதார்ஜிக்காக நடக்குமோ அதே சுறுசுறுப்பில் படம் முழுவதும் நடப்பதால் தடாலடியான திருப்பங்களையோ, அல்லது லைட்டினிங் ஸ்பீட் உட்டாலக்க்கடியோ, ஹீரோயிசங்களையோ எதிர்பார்க்காமல் ஒரு பொலிட்டிக்கல் திரில்லரை பார்க்க தைரியமுண்டென்றால் நிச்சயம் இது உங்களுக்கான படம்.
கேபிள் சங்கர்

Post a Comment

15 comments:

குரங்குபெடல் said...

புக் லிஸ்டில்

இம்பரசிவான

கன்பர்ம்

சாலிடான,

கிரெடிபிலிட்டி

கண்ட்ரோல்டான மேக்கிங்

லெதார்ஜிக்காக

ஹேண்டஹெல்ட்

ஆப்டாய் இன்சர்ட்

பெப்பாக

லைட்டினிங் ஸ்பீட

Cable சங்கர் said...

இந்திப்பட விமர்சனமென்று இல்லை என்னிடம் தமிழ்தீவிரவாதம் வேலைக்காகாது.. அப்படித்தான் எழுதுவேன். குரங்கு பெடல்.:)

மணிஜி said...

PA.Krishnan!!

பி.ஏ கிருஷ்ணனின் கலங்கிய நதி வாசித்து பாரு கேபிள்( முதல்ல புலிநக கொன்றையை கொண்டு வந்து எடுத்த இடத்தில் வைக்கவும்:-)

கா.கி said...

sir, i think his last movie is LSD, not khosla....

Lakshman said...

After Khosla ka Ghosla, DB directed Oye Lucky Lucky Oye and Love Sex Aur Dhoka, both equally good films. You have to watch OLLO and review it Shankar Sir.

காவேரிகணேஷ் said...

இந்த மாதிரியான ஹிந்தி படங்களில்ஆங்கில சப்-டைட்டிலில் வெளியிட்டால் நலம்..

rajamelaiyur said...

தடையற தாக்க கூட இது போல விறு விருப்பான படன் என எண்ணுகிறேன் ( கதை களம் வேறு )

rajamelaiyur said...

இன்று

டெங்கு காய்ச்சல் : தெரிந்து கொள்ளுங்கள்

salam nainar said...
This comment has been removed by the author.
salam nainar said...

//அப்படித்தான் எழுதுவேன்//

கேபிள், உங்களை பார்த்தால் அமெரிக்கன் இந்தியன் போல இருக்கிறீர்கள். உங்கள் சொந்த ஊர் நியூ யார்க்கா? தொற இங்குலீஷு எல்லாம் பேசுது

Cable சங்கர் said...

வெள்ளைய தேவா என்று பெயர் வைத்ததினால் மட்டும் நீங்கள் தமிழரா என்று முட்டாள் தனமாய் கேட்க மாட்டேன்.

coferaja said...

iyyo...pothum..neeruthungapa

salam nainar said...

நான் தமிழன்தான்.. தங்கள் எழுதும் பல ஆங்கில வார்த்தைகள், என்னை போன்ற வாசகர்களுக்கு புரிவதில்லை. வௌவால் சுட்டி கட்டியது போல தங்கள் மிகவும் ஆங்கிலம் கலந்து எழுதுகிறீர்கள். குறைத்து கொண்டால் உங்கள் பதிவுகளை முழுமையாக ரசிக்க முடியும்.
"நான் அப்படிதான் எழுதுவேன்" என்று கூறினால் என்னே செய்வது? என்னை போன்ற இந்த்திய வம்சாவளி ஆசாமிகளுக்கு ப்லோகுகள் தான் ஒரே ஆறுதல்.
எனது முந்தய கருத்து உங்களை காய படுத்தியமைக்கு வருந்துகிறேன்.

Indian said...

//இந்த மாதிரியான ஹிந்தி படங்களில்ஆங்கில சப்-டைட்டிலில் வெளியிட்டால் நலம்..
//

இரண்டு மாதங்கள் பொறுத்தால் அனைத்து இந்திப் படங்களும் ஒரிஜினல் டிவிடி நல்ல துணையெழுத்துடன் வாங்கலாம்.

கூட இரண்டு நாட்கள் பொறுத்தால் இணையத்தில் டோரண்ட் உபயத்தில் இலவசமாகத் தரவிறக்கலாம்.

குமரன் said...

//கோஷ்லா கா கோஷ்லாவிற்கு பிறகு இவரின் புதிய படம்.//

Khosla Ka Ghosla (2006)
Oye Lucky! Lucky Oye! (2008)
Love Sex aur Dhokha (2010)
Shanghai (2012)

இயக்குநருக்கு இது நாலாவது படம்.