Thottal Thodarum

Jun 30, 2012

The Amazing Spiderman

Spiderman சீரிஸ் படங்களை விரும்பியோ விரும்பாமலோ தொடர்ந்து பார்த்துக் கொண்டிருக்கிறேன். இந்த வாரம் தமிழ் படங்கள் ஏதுமில்லாததாலும், சத்யமின் புதிய எஸ்2வை ஒரு லுக் விட்டு வரலாம் என்ற எண்ணத்திலும் ஸ்பைடர்மேன்.


பீட்டர் பார்கர் தன் மாமாவுடன் வசித்து வருகிறான். அவனின் அப்பாவைப் பற்றி அறிய முயற்சிக்கும் போது அவனுக்கு கொஞ்சம் சுவாரஸ்யமான தகவல்கள் கிடைக்க, அதை தேடி போகிறான். அவரின் சிநேகிதரை சந்திக்கிறான். அவருக்கு ஒரு கை இல்லை. அவர் ஒரு ஆராய்ச்சி செய்கிறார். அதாவது பல்லிக்கெல்லாம் வால் அறுந்தால் மீண்டும் தானாகவே முளைக்கும் இல்லையா அது போல மனிதர்களுக்கு வளர்ந்தால் எப்படி இருக்கும் என்பதை ஆராய்ச்சியாய் செய்து எலிக்கு கொடுத்து டெஸ்ட் செய்கிறார். இதன் நடுவில் பீட்டர் பார்க்கர் அவரின் ஆராய்ச்சி கூடத்திற்கு ரகசியமாய் செல்ல, அங்கே சிலந்திகளை வைத்து ஆராய்ச்சி செய்யும் கூடத்தை பார்க்கிறான். அதில் இருக்கும் ஒரு சிலந்தி அவனை கடித்துவிட, அவனுக்கு எக்ஸ்ட்ரா ஆடினரியான பவர் கிடைக்க, அவன் ஸ்பைடர் மேன் ஆகிறான். அதே நேரத்தில் எலிகள் மீது தான் கண்டுபிடித்த மருந்தை டெஸ்ட் செய்தவர் மனிதர்கள் மீதும் டெஸ்ட் செய்ய விழைய, வேலையிலிருந்து கல்தா கொடுக்கப்படுகிறார். அதனால் மனம் நொந்து போன டாக்டர்  வில்லனாகி, தனக்கே ஊசிப் போட்டுக் கொண்டு தன் கை வளர்கிறதா என்று பார்க்க தன் உடம்பிலேயே இன் ஜெக்‌ஷனை போட்டுக் கொள்ள, அவர் ஒரு பாதி பல்லியும், டைனோசருமாய் மாறுகிறார். தன்னைப் போலவே எல்லோரையும் மாற்ற முடிவு செய்து அந்த மருந்தை பொதுவில் எறிய போலீஸ்காரர்கள் எல்லாம் விதிர்த்துப் போய் நிற்க, அவர்களும் டைனோசர் பல்லிகளாய் மாறி ஊரையே அழிக்க, எப்படி ஸ்பைடர் மேன் உலகை காப்பாற்றினான்? என்பதைத்தான் சுத்தி சுத்தி அடித்து  சொல்லியிருக்கிறார்கள்.

வழக்கமான ஸ்பைடர் மேன் ஆபீஸ் கோயராய் இருப்பார். இதில் ஸ்டூடண்ட். மிகவும் பிரயத்தனப்பட்டு, யோசித்து இதில் ஸ்கூல் பையனாய் வருகிறார். அப்பா அம்மாவின் இறப்புக்கு பிறகு மாமாவிடம் வளரும் அவர் தனக்கு இந்த சக்தி வந்ததும், படும் அவஸ்தையையும், சாகசங்கள் செய்யத் தொடங்கும் அடி வயிற்று பட்டாம்பூச்சி பறத்தலையும் அருமையாய் கொண்டு வந்திருக்கிறார். இதற்கு முந்தைய படங்களின் இயக்குனர் சாம் ரெய்மி. இப்படத்தின் இயக்குனர் 500 டேஸ் ஆப் சம்மர் பட இயக்குனர் மார்க் வெப். ஒரு வேளை சிலந்தி வலைப்படம் என்பதால் வெப்பை செலக்ட் செய்திருக்கிறார்களோ (இங்கே நீங்கள் சிரிக்க வேண்டும்).
இயக்குனரின் முந்தைய படம் ஒரு அருமையான காதல் படம் என்பதால் இப்படத்திலும் அவரின் முத்திரை காதல் காட்சிகளில் அதிகம் இருக்கிறது. முக்கியமாய் ஒரு காட்சியில் உடன் படிக்கும் மாணவி கெவினுக்குமான காதல் காட்சிகள் படு சுவாரஸ்யம். காலேஜ் வராண்டாவில் இருவரும் தனியே சந்திக்க, என்ன பேசுவது என்று தெரியாமல் இருவரும் வழியும் இடம் பதின்வயது இளைஞர்களிடையே உள்ள அத்துனை ஷேஷ்டைகளையும் மிக இயல்பாக கொண்டு வந்திருக்கிறார் இயக்குனரும் நடிகர்களும். இயக்குனருக்கு இது சவாலான படமே ஏனென்றால் இதற்கு முந்தைய படங்களில் வந்த காட்சிகளையே மீண்டும் எடுக்கப்படும் போது அதில் சில முக்கியமான திருப்பங்களை மிக அழகாக வைத்திருப்பதும், அதில் சில நுணுக்கமான உணர்வுகளை கொடுத்திருப்பதும் அழகு.

இதற்கு முந்தைய படங்களில் ஸ்பைடர்மேன் எனும் ஒருவர் பிரசித்திப் பெற்ற ஒருவராய் வலம் வருவார்கள். ஆனால் இதில் முதலிலிருந்தே படத்தை ஆரம்பிக்கிறோம் என்று சொல்லி எடுத்திருப்பதால் ஸ்பைடர்மேன் என்பவன் ஹீரோ எல்லாம் கிடையாது. திடீரென உதயமாகி போலீஸுக்கு மேலும் இடைஞ்சல் கொடுப்பவன் என்றே நினைக்கிறார்கள். கொஞ்சம் கொஞ்சமாய்த்தான் சூப்பர் ஹீரோவாக ஏற்றுக் கொள்ள ஆரம்பிக்கிறார் ஹீரோயினின் அப்பாவான போலீஸ் ஆபீசர். அதுவும் கடேசி கடைசி காட்சியில்.

3டியில் ஸ்பைடர்மேன் பறக்கும் காட்சிகள் நன்றாக இருந்தாலும், பெரும்பாலும் சிஜியில் இருப்பதால் ஒரு மாதிரியான டெம்ப்ளேட் விஷுவல்தான் வருகிறது. அதிலும் முதல் பாதி முழுவதும் அதிக நேரம் பேசிக் கொண்டேயிருக்கும் படத்திற்கு எதற்கு 3டி என்று படம் பார்த்த நார்த் மெட்ராஸ் இளைஞர்கள் சொல்லிக் கொண்டேயிருந்தார்கள். என்னைப் பொறுத்தவரை இதை 2டியிலேயே பார்த்திருக்கலாம் என்று தோன்றியது. ஸ்பைடர்மேன் படத்தை அஹா ஓஹோ என்று பாராட்டுபவர்களும், அதன் தீவிர ரசிகர்களும் இதில் அதில் செய்திருக்கிறார்கள், இதை செய்திருக்கிறார்கள் என்று அலசி ஆராய்ந்து பிய்த்து உதறி பேசினாலும், இன்றைய புதிய ஜெனரேஷன் ஆட்களுக்கு இதன் முன் பின் கதை தெரியாதவர்களுக்கு படம் மிக சுமாரே. வால் வளரும் வில்லனென்ல்லாம் படு மொக்கை , ஸ்பைடர் மேன் பேசிட்டேயிருக்காருப்பா..  இந்த மாசமே சரியில்லைப்பா.. எதிர்பார்க்குறது எல்லாம் சொதப்புது என்பதுதான் படம் பார்த்துவிட்டு வெளியே வந்த ரசிகர்களின் கருத்து.

கேபிள் சங்கர்

Post a Comment

11 comments:

தாஸ். காங்கேயம் said...

என்னைப் பொறுத்தவரை இதை 2D யிலேயே பார்த்திருக்கலாம்...
Doss.a

rajamelaiyur said...

//வால் வளரும் வில்லனென்ல்லாம் படு மொக்கை , ஸ்பைடர் மேன் பேசிட்டேயிருக்காருப்பா.. இந்த மாசமே சரியில்லைப்பா.. எதிர்பார்க்குறது எல்லாம் சொதப்புது என்பதுதான் படம் பார்த்துவிட்டு வெளியே வந்த ரசிகர்களின் கருத்து.

//

இந்த வரிகளிலே படத்தின் ரிசல்ட் தெரிந்துவிட்டது

rajamelaiyur said...

இன்று

எனக்கு ஒரு சந்தேகம் ...

வவ்வால் said...

கேபிள்ஜி,

ஸ்பைடர் மேன் க்கு என ஒரு தனி ஆடியன்ஸ் -குழந்தைகள் உண்டு , சரியாக டார்கெட்டெட் ஆடியன்ஸ்க்கு என எடுக்கப்படும் படங்களில் இதுவும் ஒன்று , எனவே போட்ட காசு வந்துவிடும், எனவே தான் புதுசா யோசிச்சு ரிஸ்க் எடுக்காமல் இப்படிலாம் எடுக்கிறாங்க,நீங்க கூட எல்லா ஸ்பைடர் மேன் பார்த்தாச்சு இதையும் பார்ப்போம்னு பார்க்கிறிங்க :-))

ஸ்பைடர் மேன் கேரக்டருக்கு சிஜி செய்வது எளிது ,வில்லன் கேரக்டருக்கு தான் ரொம்ப மெனக்கெடனும், இந்த படத்தில அதுக்கும் மெனக்கெடலை போல.

நம்ம ஊரில் இது போல பெரிய பட்ஜெட்டில் குழந்தைகள் படம் என்பதே இல்லை என்பதையும் கவனத்தில் வைத்து யாராவது படம் எடுத்தால் எளிதில் கல்லாக்கட்டலாம்.

முன்னர் இராமநாராயணன் , ஒரு குழந்தை(பேபி ஷாம்லி) கூட குரங்கு,யானை,பூனை என வைத்து குழந்தைகளை குறிவைத்து படம் எடுத்து கல்லாக்கட்டினார். நீங்க கூட இப்படி முயற்சிக்கலாம்!

Unknown said...

கேபிள்ஜி! ஹிஸ் பட ஹீரோ..! இந்தி நடிகர் இர்பான்கான் வில்லன்களில் ஒருவராக நடித்திருக்கிறார்....விமர்சனம் போட்ட யாரும் அவரைப் பற்றி சொல்லலை! நீங்க ஒரு வரியாவது சொல்லுவீங்கன்னு எதிர் பார்த்தேன் பொய்யாக்கி விட்டீர்களே!

ஹாலிவுட்ரசிகன் said...

//வழக்கமான ஸ்பைடர் மேன் ஆபீஸ் கோயராய் இருப்பார்.//

இல்லையே கேபிள் சார். காமிக்ஸிலும் சரி, முந்தையப் படங்களிலும் சரி காலேஜ் பையனாகத் தானே பீட்டர் பாக்கரை காட்டுறாங்க? பார்ட் டைம் தான் daily bugle பேப்பருக்காக போட்டாக்ராபராக வேலை செய்கிறான்.

பாலா said...

பிரயத்தன படவெல்லாம் இல்லை. ஸ்பைடர்மென் எப்போதுமே ஸ்கூல் பையன்தான். சூப்பர்மேன்தான் ஆபீஸ் கோயர்.

அதே போல ஸ்பைடர்மேன் படங்களில் பதின்ம பருவ காதல் தவிப்புகள் எல்லா படங்களிலுமே இருக்கும். முந்தைய படங்களைக்காட்டிலும் இதில் ஆக்ஷன் குறைவு என்பதே என் கருத்தும்.

இந்த படத்தில் வலை வருவதற்கு ஒரு கருவியை கையில் பொருத்திக்கொள்வதாக காட்டுகிறார்கள். முந்தைய படங்களில் அது கைக்குள் இருந்து வரும். என்னை பொறுத்தவரை படம் ஓகே.

”தளிர் சுரேஷ்” said...

சின்ன பசங்க ரசிப்பார்களா? சொல்லவேயில்லை!

Damodar said...

S2 yeppadi

ராஜா said...

// அதே நேரத்தில் எலிகள் மீது தான் கண்டுபிடித்த மருந்தை டெஸ்ட் செய்தவர் மனிதர்கள் மீதும் டெஸ்ட் செய்ய விழைய, வேலையிலிருந்து கல்தா கொடுக்கப்படுகிறார்.//

அவர் விழைய மாட்டார் ... அவருடைய மேனேஜர் தான் மனிதனின் மேல் டெஸ்ட் செய்ய சொல்லுவார் ...

// தன்னைப் போலவே எல்லோரையும் மாற்ற முடிவு செய்து அந்த மருந்தை பொதுவில் எறிய போலீஸ்காரர்கள் எல்லாம் விதிர்த்துப் போய் நிற்க, அவர்களும் டைனோசர் பல்லிகளாய் மாறி ஊரையே அழிக்க, //


போலீஸ் லாம் அப்படி மாறறது மாதிரிதான் காட்டுனாங்க .... ஆனா அவங்க ஊரையே அழிக்கறது மாதிரி சீன் ஏதும் இல்லையே !....

// அப்பா அம்மாவின் இறப்புக்கு பிறகு மாமாவிடம் வளரும் அவர் //
அம்மா அப்பா என்னா ஆனாங்கன்னு இன்னும் தெரியாது, அது அடுத்த பார்ட்

// இன்றைய புதிய ஜெனரேஷன் ஆட்களுக்கு இதன் முன் பின் கதை தெரியாதவர்களுக்கு படம் மிக சுமாரே. //

கதை தெரியாதவங்களுக்கு சூப்பர்... என்னை பொறுத்த வரையில் SPIDER MAN- 1 part ஐ விட இது நல்லா இருந்தது ....

Balaganesan said...

THALAIVA UR BOOK REVIEW - CINEMA VIYABARAM http://balaganesan305.blogspot.in/2012/06/book-review-cinema-viyabaram.html