சனியன்று பிரபல இலங்கை வானொலி அறிவிப்பாளர் இளையதம்பி தயானந்தாவின் “வானலையின் வரிகள்” என்கிற புத்தக வெளியிட்டு நிகழ்வில் பேச அழைத்திருந்தார்கள். 2003ல் இலங்கையில் வெளியான இப்புத்தகத்தை மீண்டும் பதிப்பித்து வெளியிட்டிருக்கிறார்கள் ஆரபி பதிப்பகத்தார். தயானந்தா இலங்கை வானொலியில் பணியாற்றிய போது தமிழக பிரபலங்களான ஜெயகாந்தன், கனிமொழி, கே.ஜே.ஜேசுதாஸ், பாலகுமாரன், சோ, டி.எம்.எஸ், சிவாஜி, பழனிபாரதி, மதன், சாரு நிவேதிதா போன்றோரின் நேரலை பேட்டியினை புத்தக வரிகளாக்கி தந்திருக்கிறார்கள். படு சுவாரஸ்யமான புத்தகம். ஒரு வானொலி பேட்டி இவ்வளவு சுவாரஸ்யமாய் இருக்குமா? என்ற எண்ணத்தை இப்புத்தகம் ஏற்படுத்தியது. ஏனென்றால் எந்த துறையினர் ஆனாலும், அவர்களிடமிருந்து வரும் பதில்கள் சுவாரஸ்யமாய் இருக்க, நல்ல கேள்விகள் வேண்டும். அதை தயானந்தா சிறப்பாக செய்திருக்கிறார். புத்தகமும், வானொலியும் மட்டுமே நம் கற்பனைக் குதிரையை தட்டி நமக்கான காட்சிகளை தரும் சக்தியுண்டு. இப்புத்தகத்தைப் படித்ததும், இதுவரை கேட்டிராத தயானந்தாவின் குரல் எப்படியிருக்கும். இந்திந்த கேள்விகளுக்கு இவரின் குரல் எப்படிப்பட்ட ஏற...