சென்ற வாரம் பஸ் விபத்து வாரம் போலிருக்கிறது. தொடர்ந்து ரெண்டு விபத்துகள். இரண்டுமே ஓட்டுனர்களின் அலட்சியத்தால் ஏற்பட்டிருக்கிறது. ஒன்று செல்போன் பேசிப் போனதில் என்கிறார்கள். இன்னொரு பக்கம் வண்டியின் வேகம் என்கிறார்கள். ஆனால் டிரைவரைக் காப்பாற்ற தொழிற்சங்க ஆட்கள் மட்டும் சீட் கழண்டு விழுந்தது என்று உட்டாலக்கடி அடிக்கிறார்கள். விசாரணையில் சீட் எல்லாம் கழலவில்லை என்று சொல்லிவிட்டார்கள். வேகமா இல்லை, செல்போனா என்பது தான் முடிவாக வேண்டும். இன்னொரு விபத்து ஒரு கண்டெய்னர் லாரியை ஓவர் டேக் செய்ய, முயன்று இடது வலதில் வண்டி வந்ததால் ஓவர்டேக் செய்ய முடியாமல் வண்டியை கண்டெய்னரில் போய் இடித்திருக்கிறார் டிரைவர். இவற்றுக்கு என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது அரசு என்று தெரியவில்லை. எந்த டிரைவரும், சிக்னலை மதிப்பதில்லை, பஸ் நிறுத்தத்தின் அருகில் நிறுத்துவதில்லை. நடு ரோட்டில் தான் நிற்கிறார்கள். முதலில் இவர்களை ஒழுங்குப்படுத்தினாலே சென்னையின் பாதி போக்குவரத்து சரியாகும் என்று தோன்றுகிறது. செய்யுமா அரசு?
பெரம்பூரில் சத்யம்S2 என்கிற ஐந்து திரையரங்கை ஸ்பெக்டரம் மால் எனும் இடத்தில் இரண்டாவது மூன்றாவது மாடியில் திறந்திருக்கிறது. வழக்கம் போல் சத்யமின் குவாலிட்டி ஒவ்வொரு இஞ்சிலும் தெரிகிறது. சீட்டுக்கள் நார்த் மெட்ராஸ் ஆட்களுக்காக கொஞ்சம் யோசித்தே போட்டிருக்கிறார்கள் என்று நினைக்கிறேன். குளிரெடுக்கும் ஏசி, ஆர்.டி.எக்ஸ் ப்ரொஜெக்ஷன், ஒவ்வொரு தியேட்டரிலும் சுமார் 250 சீட்டுகளுக்கு குறையாத அமைப்பு. ஒவ்வொரு வரிசையிலும் நடந்து போகும் அளவிற்கான இடம் என்று மிகத்தரமான் அரங்குகள். சத்யம், எஸ்கேப் ஆகிய இடங்களில் என்ன விலையோ அதே விலையில் காண்டீன். நிறைய கவுண்டர்கள் டிக்கெட் வாங்குவதற்கும், ஸ்நாக்ஸ் வாங்குவதற்கும். சுற்றியுள்ள கங்கா, அபிராமி, குப்பையாய் ஒலி,ஒளி, மற்றும் சீட்டுகள் வைத்திருக்கும் வில்லிவாக்கம் ஏ.ஜி.எஸ். ஆகியவைகளுக்கு கொஞ்சம் ஆட்டம் கொடுக்கத்தான் செய்யுமென தெரிகிறது. தியேட்டருக்கு வந்திருந்த இளைஞர்கள் எல்லாம் “நம்ம ஏரியாவுல இந்த மாதிரி தியேட்டரா?” என்று திரும்பத் திரும்ப கேட்டுக் கொண்டிருந்தார்கள். தியேட்டரைப் பொறுத்தவரை ஹிட்தான். ஆனால் மாலில் ஒன்றும் இல்லை. மிக சிறிய மால். புட்கோர்டில், பார்க்கிங்கில் எல்லாம் சொல்லி வைத்தார் போல அதே கொள்ளை. சண்டை போடும் மனநிலையில் இல்லாததால் வந்துவிட்டேன். அதே போல மாலுக்கான நுழைவாயில் மிகச் சிறியது. பேப்பர் மில்ஸ் ரோடு சாதாரணமாகவே பிதுங்கும். தற்போது படம் விட்டு வெளியே வரும் போது சும்மா திக்கித் திணறித்தான் போகிறது. இன்னும் மால் பிரபலமாகிவிட்டால் என்ன செய்யப் போகிறார்களோ தெரியவில்லை.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@
தலைவா வா.. இது நண்பர் சுரேகாவின் புதிய புத்தகத்தின் தலைப்பு. மதி நிலையம் பதிப்பகத்தார் வெளியீடு. சுரேகாவின் இரண்டாவது புத்தகம் இது. இதற்கு முந்தைய புத்தகமான “நீங்கதான் சாவி”யைப் போல தன்நம்பிக்கை கட்டுரை நூல் இல்லை. நமக்குள்ளான தலைமைப் பண்புகளை எப்படி நாம் வெளிக் கொணர்ந்து தலைவனாய் வலம் வர நம்மை தூண்டும், மேனேஜ்மெண்ட் நாவல். தலைமைக்குரிய பண்புகளை எப்படி கொண்டுவருவது என்பதை அடிப்படையாய் வைத்து அதை சுவையான ஒரு நாவல் போல அளித்திருக்கிறார். நிச்சயம் பயனுள்ள சுவாரஸ்யமான புத்தகம் உங்கள் பிரதிக்கு இப்போதே முந்துங்கள். நெய்வேலி புத்தக கண்காட்சியில் இப்புத்தகம் கிடைக்கும்
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
போதைப் பொருளை உபயோகப்படுத்துவதைப் பற்றி அது எப்படி ஒரு மனிதனை கொஞ்சம் கொஞ்சமாய் சாகடிக்கிறது என்பதைப் பற்றிய டீடெய்லான ஒரு டாக்குமெண்டரி இது. தற்போதைய டெக்னாலஜியில் இதை விட சிறந்த மேக்கிங்கில் படம் வந்திருக்கலாம். ஆனால் இப்படம் 2000 ஆண்டு என்று நினைக்கிறேன். குறும்படங்களுக்காகவும், ஆவணப்பட்ஙக்ளுக்காகவும், shortfilmindia.com என்றொரு இணையதளத்தை எந்த விதமான லாப நோக்கில்லாமல், சுமார் ஐந்து வருடங்களுக்கு மேலாக நடத்திக் கொண்டிருந்தேன். அன்றைய கால்கட்டத்தில் வீடியோ ஸ்ட்ரீமிங் எல்லாம் படு காஸ்ட்லி. அத்தளத்திற்கு டிசைனிங்கிலிருந்து எல்லாமே அடியேன் தான். HTMl மட்டுமே கொஞ்சம் தெரியும் அதை வைத்து ஏதோ ஜல்லியடித்து டிசைன் செய்த வெப்சைட் அது. அந்த தளத்தை நடத்தி சில பல ஆயிரங்கள் அக்காலத்தில் நான் இழ்ந்தாலும், இம்மாதிரியான சிறப்பான படங்களை உலகிற்கு அறிமுகப்படுத்தி, சில வெளிநாட்டு விழாக்களில் பங்கெடுக்க வைத்து பரிசு வாங்க ஒரு கேட்டலிஸ்டாய் இருந்திருக்கிறேன் என்பதை நினைக்கும் போது கிடைக்கும் சந்தோஷம் இன்னமும் இப்படத்தைப் பார்க்கும் போது கிடைக்கிறது. பளிச்சென முகத்தில் அடிக்கும் ஆவணப்படம். பார்த்துவிட்டு உங்கள் கருத்துக்களை சொல்லுங்க.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
சமீபத்தில் ஒரு சிக்னலில் இடதுபக்கம் திரும்பும் சிக்னலுக்காக காத்திருந்தேன். அச்சமயம் என் பின்னால் இருந்த ஒருவர் ஹெல்மெட்டெல்லாம் போட்டுக் கொண்டு பைக்கின் ஆரனை அழுத்திக்க் கொண்டேயிருந்தார். நான் அவருக்கு நோ ஃப்ரீ லெப்ட் டர்ன் என்கிற போர்டைக் காட்டினேன். ஆனால் அவர் அதற்கெல்லாம் மசிந்தவராய் தெரியவில்லை. மீண்டும் ஹாரன் அடித்தார். இடது பக்கம் ஓரமாய் இவரைப் போல சிக்னல் மதிக்காமல் வருபவர்களை தடுக்காமல், பிடிக்க, ஒளிந்து கொண்டிருந்த போலீஸைப் பார்த்தேன். அவரிடம் போலீஸ், போலீஸ் என்று சொன்னேன். அவருக்கு என்ன புரிந்ததோ தெரியவில்லை, நாக்கை “ஆங்” என்று காட்டிவிட்டி மீண்டும் ஆரன் அடித்தார். வேறு வழியில்லாமல் அவருக்கு கஷ்டப்பட்டு நான் வழிவிட, என்னை திரும்பிப் பார்த்து முறைத்தபடி சென்றவர் அடுத்த செகண்டில் ஒளிந்திருந்த போலீஸிடம் மாட்டினார். சிக்னல் கிடைத்து நான் அவரை க்ராஸ் செய்யும் போது, ”சொல்லியிருக்கலாமில்லை” என்றார். என்ன கொடுமைடா சரவணா?.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@
மது ஒழிப்பு பற்றி வெறும் பேச்சாய் இல்லாமல் அதை செயல்படுத்தும் நோக்கோடும், மது விற்பனையால் வரும் வருமானத்தை வைத்துத்தான் அரசே நடக்கிறது என்பதால் அதை ஆதரிக்காமல் அதை தவிர்த்து எப்படி அரசு தன்னிடம் உள்ள துறைகள் மூலமே மதுவினால் வரும் வருமானத்தை அரசு சம்பாதிக்க முடியும் என்பதை மாற்று திட்டம் மூலம் கொடுத்திருக்கிறார்கள் காந்திய மக்கள் இயக்கத்தினர். நிச்சயம் இது ஒரு அற்புதமான விஷயம். அவ்வறிக்கையை படிக்க
@@@@@@@@@@@@@@@@@@@@@@@
எல்லருக்கும் பாக்கிஅரசு வக்கீல்களுக்கு சம்பளம் கொடுத்தே வருடம் ஆகிறதாம். சென்ற ஆட்சியில் வேலை செய்ததற்கே சமீபத்தில் தான் வந்ததாம். பாண்டிச்சேரியிலும் அரசு நிறுவனங்களில் வேலை செய்யும் ஊழியர்களுக்கு சம்பள பாக்கியாம். பாவம் அரசு ஊழியர்கள். காற்றாலை மூலம் மின்சார உற்பத்தி இந்த வருடம் அதிகமாயிருக்கிறதாகவும் இதனால் அரசுக்கு 350 கோடி ரூபாய் வரை லாபம் வரும் என்று சொல்லியிருக்கிறார் காற்றாலை மூலம் மின்சாரத்தை தயாரிக்கும் தயாரிப்பாளர்களின் தலைவர். ஆனால் அவர்களிடமிருந்து வாங்கிய மின்சாரத்துக்கு கொடுக்க வேண்டிய பணத்தை கொடுக்கவில்லையாம். இது வரை சுமார் 3000 கோடி வரை இருக்கும் என்கிறார்கள். அதே போல அரசு கேபிளில் இருக்கும் கட்ட்ண சேனல்களுக்கு எல்லாம் கடந்த பல மாதங்களாய் அவர்களுக்கு கொடுப்பதாய் ஒத்துக் கொண்ட தொகையை இன்று வரை கொடுக்கவேயில்லையாம். இப்படித்தான் இருக்கிறது இன்றைய ஆட்சியின் கஜானா. சென்ற ஆட்சியிலிருந்தும் இது தொடர்ந்து கொண்டிருக்கிறது என்பதை நாம் சொல்லித்தான் ஆக வேண்டும். எல்லாம் இலவச, மற்றும் விலையில்லா திட்டங்களினால் தான் என்றால் ஒத்துக் கொள்ளவாப் போகிறார்கள்.

என் ட்வீட்டிலிருந்து
ஹாலிவுட் படங்களில் இந்திய நடிகர்களை ஜீனியர் ஆர்டிடஸ்ட் போல உபயோகிப்பத்தை எப்போது நிறுத்துவார்கள்?# இர்பான் கான்
பொய் என்பது பொய் தான் எந்த காரணத்திற்காக சொன்னாலும்.
ஏதேதோ சொல்ல வேண்டும் என்று நினைத்து வருவேன் உன்னை பார்த்த மாத்திரத்தில் வார்த்தையெல்லாம் ஆவியாய் போவதன் மாயமென்னடி
நாம் அழுவதே யார் வந்து துடைக்கிறார்கள் என்பதைப் பார்க்கத்தான்.
எனக்கு நீ தேவைப்படுவது போல் உனக்கு என்றாவது ஒருநாள் நான் தேவைப்படுவேன்
பொறாமையும், நம்பிக்கையின்மையும் ஒருவருடனான உறவு தொடங்குவதற்கு முன்பே முறிக்க தொடங்கிவிடும்.
உதடுகளைப் போல கண்கள் பொய் சொல்வதில்லை.
யாரும் திடீரென வளர்ந்துவிடுவதில்லை. சூரியன் கூட
மூன்றாம் நாள் வெற்றி விழா கொண்டாடினால் அதற்கு அர்த்தம் வெற்றி என்று நாம் எடுத்துக் கொள்ளக்கூடாது.
விரைவில் மதுக்கடைகளுக்கு பூட்டு போடு ம் போராட்டமாம் ராமதாஸ் அறிவிப்பு. # தோ..பாருடா.. இவருக்கு கூட தைரியம் வந்திருச்சு.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@
சென்ற வாரம் பூராவும் இணையத்தில் கேபிள் சங்கர் என்கிற பெயர் அடிக்கடி அடிப்பட்டது ஒருவிதத்தில் சந்தோஷமாய் இருந்தது. ஹிந்துவின் என்னுடய பேட்டியும், என் புதிய புத்தகமான “சினிமா என் சினிமா” புத்தக வெளீயீடு பற்றிய செய்திகளும், படங்களும், தயாரிப்பாளரின் அறிவிப்பையும் பல இணையதளங்கள் வெளியிட்டிருந்தன. செய்தியை வெளியிட்டு, சிறப்பித்த பத்திரிக்கைகளுக்கும், பேட்டி எடுத்து வெளியிட்ட பத்திரிக்கையாளினி ஜெஷிக்கும், புத்தக வெளியிட்டிற்கு வந்திருந்து சிறப்பித்த இயக்குனர்கள், உதவி இயக்குனர்கள், நண்பர்கள், சிறப்பு விருந்தினர்கள் அனைவருக்கும் என் நன்றிகள் பல. சினிமா என் சினிமா புத்தகம் மட்டுமில்லாமல் என்னுடய அத்துனை புத்தகங்களும் நெய்வேலி புத்தக கண்காட்சியில் 156&157 செண்பகா பதிப்பகத்தில் கிடைக்கும். விரைவில் சினிமா வியாபாரம் புதிய பதிப்பத்தோடு, புதுப்பொலிவுடன் மீண்டும் வெளியாக இருக்கிறது. அநேகமாய் வரும் வாரத்தில்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
ப்ளாஷ்பேக்
ஆர்.டி.பர்மன். ஹிந்தி இசையுலகின் முடிசூடா மன்னன். அற்புதமான பல பாடலகளை நமக்கு அளித்தவர். சஞ்சீவகுமார் அன்றைய காலக்கட்டத்தில் அண்டர்ப்ளேவோடு நடிக்கத் தெரிந்த நடிகர். இவர்களின் காம்பினேஷனில் கிஷோர்குமாரின் தெவிட்டாத குரலில் அனாமிகாவில் வந்த இந்த பாடல் நம்மை இன்றும் கட்டிப் போடும்.

அடல்ட் கார்னர்
A first-grade teacher, Ms Brooks, was having trouble with one of her students. The teacher asked, 'Harry, what's your problem?'
Harry answered, 'I'm too smart for the 1st grade. My sister is in the 3rd grade and I'm smarter than she is! I think I should be in the 3rd grade too!'
Ms. Brooks had had enough. She took Harry to the principal's office.
While Harry waited in the outer office, the teacher explained to the principal what the situation was. The principal told Ms. Brooks he would give the boy a test. If he failed to answer any of his questions he was to go back to the 1st grade and behave. She agreed.
Harry was brought in and the conditions were explained to him and he agreed to take the test.
Principal: 'What is 3 x 3?'
Harry: '9.'
Principal: 'What is 6 x 6?'
Harry: '36.'
And so it went with every question the principal thought a 3rd grader should know.
The principal looks at Ms. Brooks and tells her, 'I think Harry can go to the 3rd grade'
Ms. Brooks says to the principal, 'Let me ask him some questions..'
The principal and Harry both agreed.
Ms. Brooks asks, 'What does a cow have four of that I have only two of?'
Harry, after a moment: 'Legs.'
Ms. Brooks: 'What is in your pants that you have but I do not have?'
The principal wondered why would she ask such a question!
Harry replied: 'Pockets.'
Ms. Brooks: 'What does a dog do that a man steps into?'
Harry: 'Pants.'
The principal sat forward with his mouth hanging open.
Ms. Brooks: 'What goes in hard and pink then comes out soft and sticky?'
The principal's eyes opened really wide and before he could stop the answer, Harry replied 'Bubble gum.'
Ms. Brooks: 'What does a man do standing up, a woman does sitting down and a dog does on three legs?'
Harry: 'Shake hands .'
The principal was trembling.
Ms. Brooks: 'What word starts with an 'F' and ends in 'K' that means a lot of heat and excitement?'
Harry:
'Firetruck.'
The principal breathed a sigh of relief and told the teacher, 'Put Harry in the fifth-grade, I got the last seven questions wrong.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
கேபிள் சங்கர்
Post a Comment
22 comments:
// சீட்டுக்கள் நார்த் மெட்ராஸ் ஆட்களுக்காக கொஞ்சம் யோசித்தே போட்டிருக்கிறார்கள் என்று நினைக்கிறேன். //
இதனால் தாங்கள் கூற வருவது...???
// சிக்னல் கிடைத்து நான் அவரை க்ராஸ் செய்யும் போது, ”சொல்லியிருக்கலாமில்லை” என்றார். என்ன கொடுமைடா சரவணா? //
ஏதாவது எழுதனுமேன்னு கற்பனையா சம்பவங்கள புனையுறீங்களே... செம சிரிப்பு தல நீங்க...
நீ கூடத்தான் பிரபா.. ஏதாவது எழுதணும்னு பின்னூட்டம் போடுறயோன்னு தோணுது.
என்க்கு கற்பனையாய் எழுத வேண்டிய அவசியம் இல்லை. அப்படி எழுதினால் அதை புனைவாக ஆக்கும் திறமை எனக்கிருக்கிறது பிரபா.. சில வேளைகளில் வாழ்க்கையை சுற்றி நீ பார்க்கும் பார்வையும் நான் பார்க்கும்பார்வையும் வேறாக இருக்கும்போது.. இன்று புனைவாக தெரிவது பின்னாளில் நிஜமாகத் தெரியும்.
வணக்கமுங்க...அடல்ட் கார்னர் அப்படின்னு தலைப்ப தமிழ்ல (..?) வச்சிட்டு ஜோக் ஆங்கிலத்துல இருக்கே,,,நமக்கு படிச்சு புரிஞ்சுக்கிற அளவுக்கு இல்லீங்களே...
kovai neram சில விஷயங்களை ஆங்கிலத்தில் சொல்வதைப் போல தமிழில் அவ்வளவு அழகாய் வராது. அதிலும் சில வார்த்தைகள் கொச்சையாய் ஆகிவிடும்
கொத்து பரோட்டாவிற்கு அடல்ட் கார்னர் அவசியமா? கொஞ்சம் யோசிங்க தலைவரே. நல்லது எல்லாம் பேசிபுட்டு கடைசியில ஏன் கரும்புள்ளி? ஜனரஞ்சகமான பதிவுகள். சில நேரம் உரத்த சிந்தனைகள்..இந்த அடல்ட் கார்னர் தவிர. ஒரு வாசகனின் வேண்டுகோள்.
Hi Shyam, Don't try to be smart...
So you are not watching any movies (tamil or hollywood movies) ... Is it ???
கேபிள்ஜி,
//எல்லருக்கும் பாக்கிஅரசு வக்கீல்களுக்கு சம்பளம் கொடுத்தே வருடம் ஆகிறதாம். சென்ற ஆட்சியில் வேலை செய்ததற்கே சமீபத்தில் தான் வந்ததாம். பாண்டிச்சேரியிலும் அரசு நிறுவனங்களில் வேலை செய்யும் ஊழியர்களுக்கு சம்பள பாக்கியாம். பாவம் அரசு ஊழியர்கள். காற்றாலை மூலம் மின்சார உற்பத்தி இந்த வருடம் அதிகமாயிருக்கிறதாகவும் இதனால் அரசுக்கு 350 கோடி ரூபாய் வரை லாபம் வரும் என்று சொல்லியிருக்கிறார் காற்றாலை மூலம் மின்சாரத்தை தயாரிக்கும் தயாரிப்பாளர்களின் தலைவர். ஆனால் அவர்களிடமிருந்து வாங்கிய மின்சாரத்துக்கு கொடுக்க வேண்டிய பணத்தை கொடுக்கவில்லையாம். இது வரை சுமார் 3000 கோடி வரை இருக்கும் என்கிறார்கள். அதே போல அரசு கேபிளில் இருக்கும் கட்ட்ண சேனல்களுக்கு எல்லாம் கடந்த பல மாதங்களாய் அவர்களுக்கு கொடுப்பதாய் ஒத்துக் கொண்ட தொகையை இன்று வரை கொடுக்கவேயில்லையாம். இப்படித்தான் இருக்கிறது இன்றைய ஆட்சியின் கஜானா. சென்ற ஆட்சியிலிருந்தும் இது தொடர்ந்து கொண்டிருக்கிறது என்பதை நாம் சொல்லித்தான் ஆக வேண்டும். எல்லாம் இலவச, மற்றும் விலையில்லா திட்டங்களினால் தான் என்றால் ஒத்துக் கொள்ளவாப் போகிறார்கள்.//
நான் எதாவது சொன்னால், நீங்களும் அப்துல்லாவும்ஆதாரம் இருக்கான்னு துறுவி துறுவி கேட்டீங்க , இப்போ இதுக்கெல்லாம் ஆதாரம் இருக்கான்னு நான் கேட்கிறேன் :-))
இதனால் உணரப்படும் நீதி என்னவென்றால் அடுத்தவரை ஆதாரம் கேட்டால் அவரும் திருப்பி கேட்பார் என்பதே :-))
------------
// சில வெளிநாட்டு விழாக்களில் பங்கெடுக்க வைத்து பரிசு வாங்க ஒரு கேட்டலிஸ்டாய் இருந்திருக்கிறேன் என்பதை நினைக்கும் போது கிடைக்கும் சந்தோஷம் இன்னமும் இப்படத்தைப் பார்க்கும் போது கிடைக்கிறது. பளிச்சென முகத்தில் அடிக்கும் ஆவணப்படம். பார்த்துவிட்டு உங்கள் கருத்துக்களை சொல்லுங்க.//
உங்கள் தளத்தில் இலவசமாக கிடைத்த "கண்டென்ட்" ஆன குறும்படத்தை பகிர்ந்தீங்க சரி,ஆனால் அதை வைத்தா விழாக்களுக்கு தேர்வு ஆகுது, உண்மைல நீங்க சினிமாவில இருக்கும் அப்ரண்டிஸ் என்றே நினைக்க தோன்றுகிறது :-))
ஒன்றும் வேண்டாம் தென் மேற்கு பருவக்காற்று என்ற தேசிய விருது (சிறந்த மாநில மொழிப்படம்)பெற்ற படத்துக்கே சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் நீங்க முறைப்படி மனு போடவில்லைனு சொல்லி தட்டிக்கழிச்சாங்க.
தமிழ் படத்துக்கு , தமிழ் நாட்டிலவே இதான் நிலைமை, காரணம் என்ன வென்றால் திரைப்பட விழாவுக்கு எல்லாம் நுழைவு கட்டணம் கட்டி விண்ணபித்தால் மட்டுமே பரிசீலிப்பார்கள். பெரும்பாலும் மிக பிரபலம் என்றால் கூட நான் காம்பெட்டிவ் செக்ஷன் ல தான் கூப்பிடுவாங்க(அதுக்கான டெர்ம்ஸ்& கண்டிஷன் என்னிக்காவது படிச்சு இருக்கிங்களா?)
காரணம் மேற்கத்தைய தயாரிப்பாளர்,இயக்குனர் இல்லாத படம் ,எல்லாமே குப்பைனு உலக விருது வழங்குவோர் நினைக்கிறாங்க :-))
இன்னும் எத்தனை நாளுக்கு இப்படியே அலப்பறை பண்ணீட்டு இருக்க போறிங்க :--))
sanjeev kumar thalaiva
அறிமுகத்துக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி தலைவரே!
@வவ்வால்
நீங்க மீண்டும் மீண்டும் ஒரு அரைகுறை, ஆர்வக்குட்டி, என்பதை நிருபித்துக் கொண்டேயிருக்கிறீர்கள். என் தளத்த்தில் வெளியிட்டதால் விருது கிடைத்தது என்று சொல்லவேயில்லை. சில ”வெளிநாட்டு விழாக்களில் பங்கெடுக்க வைத்து” என்று தான் சொல்லியிருக்கிறேன். வெளிநாட்டு விழாக்களில் பங்கெடுக்க வைத்து என்றால் அதை பற்றிய ட்ரெம்ஸ் அண்ட் கண்டீஷன் தெரியாதவன் அல்ல நான்.
ஒவ்வொரு போட்டியைப் பற்றி இம்மாதிரி சிறப்பான படங்களை தயாரித்தவர்களுக்கு தெரியப்படுத்தி, ஏன் சில படங்களை பற்றிய ப்ரோமோவை எடிட் செய்து அந்த விழா நிர்வாகிகளுக்கு மெயில் அனுப்பி, அதற்கான எண்ட்ரி பீஸ் கட்டித்தான் அனுப்பினோம். இம்மாதிரி விழாக்கள் எங்கு எப்போது நடக்கிறது என்பது அன்றைய காலத்தில் இம்மாதிரி குறும்படம் எடுப்பவர்களுக்கு தெரியாது. ஏன் இன்றைக்குமே பல பேருக்கு தெரியாது. அதை அவர்களுக்கு சொல்லி கலந்து கொள்ள்ச் சொல்லி அவர்களை மோட்டிவேட் செய்து சில சமயம் நானே கூட பணம் கட்டியிருக்கிறேன். இதெல்லாம் சொல்லி பிரஸ்தாபிக்க வேண்டாம் என்பதுதான் என் எண்ணம்.
எல்லா தளங்களிலும் தாங்கள் ஸ்மார்ட் எனப்தை காட்டிக் கொள்ள அரைகுறையாய் படித்துவிட்டு, பின்னூட்டம் இடுவதை விட்டுவிட்டு, கொஞ்சம் நிதானமாய் யோசித்து பின்னூட்டமிட்டால் தன்யநாவேன்.
இந்த கொசுத் தொல்லைக்கெல்லாம் பயப்பட மாட்டான் இந்த கேபிள்.:))
மன்னிச்சூ கோவிந்தன் நன்றி மாத்திட்டேன்.
கேபிள்ஜி,
ஹி...ஹி அரைகுறையா எழுதினால் அரைகுறையாய் தான் கமெண்ட முடியும்,சட்டியில இருக்கிறத பார்த்து தான் சொல்ல முடியும், இல்லாததை எப்படி சொல்ல முடியும்?
over powerd ஆ ஸ்டேண்ட்மெண்ட் விடுவதற்கு ,ஆர்வக்குட்டி கமெண்டுகள் மோசமில்லை :-))
கம்பி வடத்தை கழுத்தில் போட்டு முறுக்கினாலும் பயப்பட மாட்டான் வவ்வால் :-))
வாழ்த்துகள் நண்பா....என்று உரிமையோடு அழைக்கிறேன்...புது படம்ல செம கலக்கு கலக்குங்க....
gandhiyamakkaliyakkam nice link nice sharing
சுவையான பதிவு! வாழ்த்துக்கள்!
// சுரேகா said...
அறிமுகத்துக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி தலைவரே!//
‘தலைவா வா’....தலைப்பின் அர்த்தம் புரிந்து விட்டது.
As a follower of your blog site for quite some time, I am an admirer of your wide knowledge in different fields. I have been commenting on your blogs now and then and met you also at the last Book Fair! My very best wishes to you for the film to take off and be completed soon and bring you lot of critical accolades and commercial success. May God be with you! - R. Jagannathan

thankyou jaggannathan sir..
Driver was kept in station for more than 4 hours with out any medical assistance . Even if he committed mistake is it humane to keep him in station for enquiry w/o any medical assistance . I have seen many city buses w/o proper seat for driver .
Post a Comment