Thottal Thodarum

Jul 13, 2012

பில்லா -2

ஹிட்டான படத்தின் அடுத்த பாகமாய் ஆங்கிலத்தில் பல படங்கள் வெளிவந்திருக்கிறது. அதை தொடர்ந்து ஹிந்தி மற்றும் பல தென்னிந்திய மொழிகளிலும் படங்கள் வெளி வந்திருக்கிறது. முதல் முறையாய் தமிழில் ஏன் இந்திய படங்களில் ப்ரீக்யூவல் எனப்படும் முதல் பாகத்திற்கு முந்தைய கதை என்று எடுக்கப்பட்ட படம் பில்லா 2.


எடுத்த எடுப்பிலேயே அட்ரிலினை ஏற்றும் படியான ஒர் ஆக்‌ஷன் காட்சியில் தொடங்குகிறது கதை. அட.. என்று ஆச்சர்யப்படும் அளவிற்கு டைட்டிலில் காட்டப்படும் கருப்பு வெள்ளை படங்களிலேயே அஜித்தின் சாரி பில்லா .. டேவிட் பில்லாவின் ப்ளாஷ்பேக்கை சொல்லி விடுகிறார்கள்.  இலங்கையில் அகதியாய் வந்து இறங்குபவர் எப்படி பெரிய டான் ஆனார் என்பது தான் கதை. அதை நீட்டி முழக்கி, படு ஸ்டைலாய் இரண்டரை மணி நேரம் படம் பார்க்கிற ஆடியன்ஸை தவிர மற்ற எல்லாரையும் சுட்டுச் சுட்டே சொல்லியிருக்கிறார்கள்.
படத்தின் மேக்கிங், மற்றும் ப்ரொடக்‌ஷன் வேல்யூவெல்லாம் அசத்தல் என்றால் அவ்வளவு அசத்தல். நிஜமாகவே படத்தின் ஹீரோ யார் என்றால் ஒளிப்பதிவாளர் ஆர்.டி.ராஜசேகரும், சுரேஷ் அர்ஸின் எடிட்டிங்கும்தான். தான். ரெட் எபிக் கேமராவில் படு துல்லியமான ஒளிப்பதிவு, கலர் டோன், ஹாலிவுட் பட லெவலுக்கான ஷாட்டுகள் என்று பிரம்மிக்க செய்யும் ஒளிப்பதிவு. எடிட்டிங்கின் திறமை சண்டைக் காட்சிகளில் மிளிர்கிறது.

அஜித் வழக்கம் போல ஸ்மார்ட்டாக இருக்கிறார். மற்றபடி நடிக்கவெல்லாம் முயற்சியே செய்யவில்லை. அதற்கான காட்சிகளும் படத்தில் இல்லை என்பதால் அவரைக் குறை சொல்ல முடியாது. படம் நெடுக படம் பார்க்கிற ஆடியன்ஸைத் தவிர சுமார் நூறு பேரையாவது மிஷின் கன், சாதாரண் பிஸ்டல், கலானிஷ்கோவ்,  ஏகே 47 என்று வகை வகையான துப்பாக்கிகளிலும், தக்குணூயூண்டு கத்தியில் சதக் சதக்கென குத்தியும் சாய்க்கிறார். பல இடங்களில் ரசிகர்கள் அவர்கள் உடம்பில் பட்ட கத்திக் குத்தாகவே ஃபீல் செய்து கத்தியது ரசிகர்களின் ஆர்ப்பரிப்பு என்று நினைத்தால் அது அவதானிக்கிறவர்களின் தவறு.
புருனோ அப்துல்லா, ஓமனக்குட்டன் என்று ரெண்டு ஹீரோயின்கள். பிகினியில் ஒருத்தி, டைட் சட்டையில் ஒருத்தி என்று ஆளாளுக்கு கவர்ச்சியாய் வந்தாலும் ஒண்ணும் ஏறத்தான் மாட்டேனென்கிறது. நடுவில் விபசாரவிடுதியில் ஆடும் பெண்கள் கொஞ்சம் கிளுகிளூப்பை ஏற்றுகிறார்கள். வில்லன் என்று ரெண்டு பேர் கல் போன்ற இறுகிய முகத்துடன் எப்பப்பார் புட் மசாஜ் செய்து கொண்டு பிஸினெஸ் டீல், என்று பேசுகிறார். இன்னொருவர் பொலிவியாவில் சப்டைட்டிலிலேயே பேசுகிறார். க்ளைமாக்ஸில் சாகிறார் இதைவிட வேறு ஏதும் சிறப்பான வேலையை செய்ததாய் ஏதும் தெரியவில்லை.

வசனம் இரா.முருகன் மற்றும் இன்னொருவரின் பெயரைப் போட்டார்கள். நிறைய இடங்களில் வெகு ஷார்பான வசனங்கள் மிக குறைந்த வரிகளில். அதுவும் அஜித் மாதிரி ஹீரோ பேசும் போது நிறைய அழுத்தம் கிடைக்கிறது. ஆனால் எல்லாமே விழலுக்கு இறைத்த நீராய் போய்விட்டது.  இசை யுவன் சங்கர் ராஜாவாம். பின்னணியிசையில் ஓகே ஆனால் பாடல்கள் ஏதும் நினைவில் நிற்கவேயில்லை. 
அஜித்தின் கால்ஷீட் கிடைத்துவிட்டது. சரி பில்லா என்ற ஒருவன் எப்படி உருவானான் என்பதுதான் கதை என்றாகிவிட்டது. பிறகு அதற்கான கதை என்ற வஸ்துவை கொஞ்சமாவது யோசித்திருக்கலாம். அல்லது ஒரு நல்ல லைனை வைத்து நல்ல திரைக்கதை அமைத்திருக்கலாம். எந்த ஒரு கேரக்டருக்கும் எந்த ஒரு விளக்கமும் இல்லாது தடாலடியாய் அறிமுகப்படுத்துகிறார்கள். ஆரம்பக் காட்சிகள் எல்லாம் அப்படியே நாயகன் படத்தின் ரீமேக். ஒரு சாதாரண அகதி ஏன் கடத்தல் தொழிலில் இறங்குகிறான். ஏன் அவனுக்குள் காதல் போன்ற இத்யாதிகள் வருவதில்லை. எதனால் அவன் டான் ஆகிறான் எனபதற்கான காரண காரியம் ஏதுமில்லாமல் ஏதோ லாரியில் டைமண்ட் கடத்துகிறார்கள் என்று பெரிய சைஸ் கல்கண்டு போல ஒன்றை காட்டுகிறார்கள். உலகமெல்லாம் பறக்கிறார்கள். சென்னைக்கும், கோவாவிற்கும் துரத்துகிறார்கள். ஆளாளுக்கு சுட்டுக் கொண்டேயிருக்கிறார்கள்.  இரண்டு ஹீரோயின்களை வைத்துக் கொண்டு என்ன செய்வது என்று தெரியாமல் விழித்திருக்கிறார்கள். அதிலும் க்ளைமாக்ஸில் ஓமனக்குட்டன் நான் திரும்ப வர முடியாத இடத்துக்கு போறேன் என்று சொல்வதெல்லாம் படு அபத்தம். முதல்பாதியைக் கூட ஓரளவுக்கு ஏற்றுக் கொள்ள முடியும். ஆனால் ரெண்டாம் பாதி வந்ததும் என்ன செய்வது என்றே தெரியாமல் யார் தான் பில்லாவுக்கு வில்லன் என்றில்லாமல் இலக்கில்லாமல் ஓடுகிறது திரைக்கதை. சீக்கிரம் சுட்டு முடியுங்கப்பா என்று புலம்ப வைத்துவிட்டார் சக்ரி டோலட்டி.

ஸ்டைலான மேக்கிங் மட்டும் படத்தை காப்பாற்றும் என்று நம்பியிருக்கிறார்கள். ஓவர் ஸ்டைல் உடம்புக்கு ஆகாது என்பதை இப்போது புரிந்திருப்பார்கள் என்று நினைக்கிறேன். ஊரெல்லாம் டிக்கெட் இலலை என்று சொன்னவர்களுக்கு.. எஸ்.எஸ்.ஆர்.பங்கஜம் தியேட்டரில் காலைக்காட்சிக்கு நேரில் சென்று வாங்கினேன். டிக்கெட் விலை 100. நாற்பது சீட்டுகள் விற்பனையாகாம்ல் இருந்தது.
கேபிள் சங்கர்

Post a Comment

51 comments:

hayyram said...

///ஊரெல்லாம் டிக்கெட் இலலை என்று சொன்னவர்களுக்கு.. எஸ்.எஸ்.ஆர்.பங்கஜம் தியேட்டரில் காலைக்காட்சிக்கு நேரில் சென்று வாங்கினேன். டிக்கெட் விலை 100. நாற்பது சீட்டுகள் விற்பனையாகாம்ல் இருந்தது///

நச் கமென்ட்

hayyram said...

///ஊரெல்லாம் டிக்கெட் இலலை என்று சொன்னவர்களுக்கு.. எஸ்.எஸ்.ஆர்.பங்கஜம் தியேட்டரில் காலைக்காட்சிக்கு நேரில் சென்று வாங்கினேன். டிக்கெட் விலை 100. நாற்பது சீட்டுகள் விற்பனையாகாம்ல் இருந்தது///

நச் கமென்ட்

Anonymous said...

ஆஸ்கர் ரவிச்சந்திரனின் கதை என்ன ஆகும்? அத சொலுங்க முதலில்!!
வழக்கம்போல அஜித்க்காக அஜித் ரசிகர்கள் எல்லாரும் ஒரு வாட்டி பார்த்தா படம் ஹிட்டாகிருமா?

test said...

அம்புட்டுதானா?

test said...

//கலானிஷ்கோவ், ஏகே 47 என்று வகை வகையான//
ரெண்டும் ஒண்ணுதான் பாஸ்! A.கலானிஷ்கோவ் 1947 ல உருவாக்கினதால - AK 47
ஆமா இது ரொம்ப முக்கியமில்ல! :-)

Cable சங்கர் said...

mister ji.. நானே படம் பார்த்து நொந்து போயிருக்கேன். போங்க பாசு

Ravi.L said...

Cable Anna,

Padam Parkalama Venama...?

Atha Sollavey Illa... :-)

Perusa Nambinoom.. Avlo Thana...

naren said...

கேபிள் சார், நீங்களே இப்படி செய்யலாமா. சினிமாவில் வசனம் வளர்வதற்கு முக்கிய காரணகர்த்தாவா இருக்கும் நீங்களே....
///வசனம் இரா.முருகன் மற்றும் இன்னொருவரின் பெயரைப் போட்டார்கள்.///
என்று சொல்லலாமா???. அந்த இன்னொரு வசனகர்த்தாவின் மனம், நம்ம பெயரை பிரபல பதிவரே நினைவுபடுத்த முடிவதில்லையே என அங்கீகாரம் கிடைக்காததை நினைத்து, புண்படுமே. திரைக்கு பின்னால் வேலை செய்பவர்களுக்கு, அவர்களின் பெயர்களை பார்ப்பதும் படிப்பதும் ஒரு விதத்தில் ஒரு அங்கீகாரம் தானே.
சினிமா கலைஞனின் மனம் ஒரு சினிமா கலைஞனுக்கே தெரிய மாட்டேங்குது.

அமர பாரதி said...

படத்த விடுங்க. கோமணக் குட்டியைப் பற்றி அதிகம் எழுதாததை கண்டிக்கிறேன்.

Niventh said...

இன்னுமொரு வசனகர்த்தா ஜாபார் கான் Mr naren
Nice review

scenecreator said...

உங்கள் விமர்சனம் நோகாமல் இருக்கிறது.படம் பார்த்து நொந்து போனதாக commentil சொல்லியுள்ளீர்.நொந்து போன பல படங்களை கிழித்து தொங்க விட்டு உள்ளீர்கள் .இந்த படத்திற்கு மட்டும் ஏன் இந்த வஞ்சனை.மற்ற படங்களை காய்ச்சி எடுத்தது போல் இதையும் எடுத்திருக்கலாமே ?
--

Cable சங்கர் said...

முழுசாபடிக்கலைபோலருக்கு சீன் கிரியேட்டர்..

கேரளாக்காரன் said...

Sorry cable scenecreator sirkku mental muththiduchu naalaikke pudichu ervaadila adachudarom innikku one day adjust pannikkonga please

Muralidharan said...

varra ella padathulaiyum 4 pattu,2 romance scene,sentiment,comedy nu ean athaiye expect panreenga....god father,scarface, padam mathiri indian tasteku eatha mathiri konjam mathi edukratha ungalala unara mudiyalennaathoda vittudalam.....atha vittutu cine field la irunthukitte padathukku poravangalaium thadukka vendam...i'm not at all ajith fan....but definitely i enjoyed very well...i felt this is the best of ajith....padam nallalanu yarum katha mattanga....edtha vittu enthirichu poiduvanga.....i see 2 kind of people in this blog world....some ppl become popular because of their true talent....some ppl criticize the remaiaing and become popular...pls don't be like that...when i can't do a matter i never critize other's work...better i'll do better than him and them i'll suggest him a different way.... :) be nutral....please don't be selfish....I accept naren's content...

unmaiyalan said...

ஓவர் பில்டப் கொடுத்து வந்த பல படங்கள் பப்படமான கதை நிறைய உண்டு ....பாபா , ஆளவந்தான் , சுறா , பீமா ,.நான் கடவுள் ., சகுனி ...பில்லா 2 ,.......இதை தவிர பல படங்கள் வெற்றி ...சூப்பர் டூப்பர் என்று சொல்லிய பல படங்கள் நஷ்டத்தை கொடுத்துள்ளன...

வவ்வால் said...

கேபிள்ஜி,

இப்போ நீங்க மட்டும் எஸ்எஸார் பங்கஜம்ல டிக்கெட் ஃப்ரியா இருக்குனு சொன்னதும் எல்லாம் நம்பனும், நீங்க ஹிட்டுனு சொன்னப்படத்திற்கு காத்தாடுதுன்னு சொன்னா ,என் கிட்டே டிசிஆர் ரிப்போர்ட் இருக்குன்னு சொல்வீங்க :-))

ஒவ்வொரு ஏரியாவில ஒரு மாதிரி இருக்கும், சிட்டிக்குள்ளவே பங்கஜம்ல ஏன் கூட்டம் வரலைனா அங்கே மெயின்டனஸ் இல்லை, ஏசி ஓடாது டிடிஎஸ் இல்லை ஆர் வேலை செய்யாது, நீங்க பார்க்கும் போது எல்லாம் சரியா வேலை செய்ததா ,கேண்டீனில் சமோசா சூடா இருந்துச்சா என எதுவும் சொல்லவில்லையே :-))

எனக்கு தெரிஞ்சு டீ.ஆர் க்கு அப்புறம் சினிமாவில எல்லாம் தெரிஞ்சவர் நீங்க மட்டும் தான் தலைவரே :-))

-------

சுரேகாஜி,

படம் பத்தி ரொம்ப பேசி நொந்து போயிருப்பார் போல,விடுங்க ,விடுங்க ..எல்லாம் அப்படித்தான் :-))

Jawahar said...

ஒரு டைரக்டராக அவதாரம் எடுத்திருக்கும் நிலையில் விமர்சனத்தில் இவ்வளவு சுதந்திரம் எடுத்துக் கொள்வது கொஞ்சம் ரிஸ்க் என்று தோன்றுகிறது! :))

http://kgjawarlal.wordpress.com

இளம் பரிதி said...

மெட்ராஸ்ல எப்டின்னு தெரியல ......இங்க கூட்டம் பிச்சிகுது......கிளைமாக்ஸ் வரைக்கும் நல்ல ரெஸ்பான்ஸ்ம் இருந்தது .....

இளம் பரிதி said...

சார்,,,,ஒரு டான் பயோகிராபிய இத விட எப்டி எடுக்க முடியும் ....சில குறைகள் இருந்தாலும் பில்லா ஒரு நல்ல படமே....

Rajesh V Ravanappan said...

not BILLA 2 .. it's ASAL 2 ???

Unknown said...

Scarface, godfather madhiri padam edukurathu thappu illa..aana adhayae Padama edukurathu thaan tappu....

Regan said...

Another Dialog writer name is Jaffer Mohamed..Neenga solra alavu padam mokka illa sir..12'th night thaan SSR theatre confirm aachu so athaan min crowd kaaranam..Athukkaaga neenaga openiing illa nu solla mudiyathuNeengale vera theatre la ticket kidaikkama thaan SSR ku Poirupeenga..Movie is good that'all..Sooper Dooper nu ellaam poi solla maatten..

sivasenthilkumar said...

Here people ere criticizing cableni more than billa. Bot any way billa II is Nothing but Asal II only.

Anonymous said...

Cable just writes his view about a film like an audience like. So it can not be a verdict or final rating about the film. Sometimes his taste can completely opposite to the majority of audience and may have some personal connections to the film, but he has rights to post on his own thoughts like me :). So the point is, don’t just depend on only his reviews to watch a film. He may likes it but others not.

But Cable has a huge fan base and many readers expect his review on the first day release. So requesting Cable to write an unbiased review even if has any personal connections to the film.

But we should appreciate his efforts and should understand that he is the only blogger who writes review for most Tamil films in very clear Tamil.

Anonymous said...

// vera theatre la ticket kidaikkama thaan SSR ku Poirupeenga //
well said boss..

ரஹீம் கஸ்ஸாலி said...

ஒரு சாதாரண அகதி ஏன் கடத்தல் தொழிலில் இறங்குகிறான். ஏன் அவனுக்குள் காதல் போன்ற இத்யாதிகள் வருவதில்லை. எதனால் அவன் டான் ஆகிறான் எனபதற்கான காரண காரியத்தை சொல்ல பில்லா 3 என்று இன்னொரு ப்ரிக்யூவல் சினிமாவை எடுப்பார்களோ என்னவோ....

arul said...

songs itself are not impressive

scenecreator said...

யோவ் மௌன குரு சொம்பு சத்தம் அதிகமா கேக்குது ஓடிப்போ.ஒரு உரையில் இரு கத்திகள் கூடாது.ஏர்வாடியில் நீயே இறுந்துக்கோ.

Unknown said...

Don story na appate than erukkum eathu real story, "ungalukku than unmaiyea sonna kasakkumea" love scenes kattea nanga onnum romance film eadukkalea Real Don Film eaduthurukkom ,

Ivan Yaar said...

Dear Mr. வவ்வால்,

If you don't like Cable sankar Don't visit his site and put personal comments on him.

I think you want publicity to your blog, that is why you are putting controversial comments on cable sankar blog.

I have never seen a person like Cable sankar who is answering to anonymous people too in the comments.

ராஜ் said...
This comment has been removed by the author.
வவ்வால் said...

இவன் யார்,

நான் எல்லாருக்கும் பதில் சொல்வேன் கேள்வி கேட்பேன், சரி விடுங்க அனானிமஸ் பத்தி பேசுற இவன் யார் "ஹிஸ்டரி ,ஜியாகிரபிலாம் "போட்டுக்கிட்டு தான் பதிவுல நடமாடுறார் :-))

நானாவது 7 ஆண்டுகளாக குப்பை கொட்டிட்டேன்(அதானே தெரியும்) நேத்து பெய்யாத மழையில இன்னிக்கு முளைக்காத காளான் போல , ஒரு ஐ.டி வச்சுக்கிட்டு வந்துட்டு அனானிமஸ் பத்தி பேசுறதுலாம் , எப்படிய்யா? சொம்படிச்சா சோறு கிடைக்கும்னு எதாவது ஸ்கீம் ஸ்டார்ட் பண்ணிட்டாங்களா :-))

Every anonymous has a past but "வவ்வால்" has a history !!!!

நான் என்ன பப்ளிகுட்டிக்கு லிங்க் ஆஹ் போடுறேன் கமெண்டுல ?

பிடிச்சா படிக்கணும் ,பிடிக்கலைனா படிக்க கூடாது , ஓ.கே , அப்போ பிடிக்காத படம் பார்க்காமல் இருக்கலாம்னு ஒரு வார்த்தை தலைவருக்கு சொல்லிப்பாருங்களேன் :-))

பில்லா டையலாக்கு புது வடிவில் ... "நான் வாசகன் ஆனால் அடிமை இல்லை"

ஒரு பக்க சார்பு தன்மையுடன் பேசுவதை சுட்டியும்,நல்ல விஷயம் எனில் தட்டியும் கொடுப்பேன்.

www.kuttees.in said...

கதையோட கரு சுவாரஷ்யமானது தான் ஆனா அதை திரைக்கதை ஆக்கியதில் தான் எதையோ மிஸ் பண்ணிட்டாங்க.
மற்றப்படி ரொம்ப மோசமான படம் கிடையாது.

---
Bedtime stories for children: www.kuttees.in

perumal shivan said...

naanthaan first comment potten athu en varalai?

padam nalla erukku super !

ellathukkum kaarana kaariyam kettukkittu erunthaa ovvorutharukkum thanithani padamthaan pannanum

neenga solrathu sari seytha athai matraver kuraisolvar !

ungal vimarchanam thavaru athu ungalukkumattume !

pothuvaga padam nanraga erukkirathu!

கிருஷ்ணா said...

padam avvalawu periya mokkai illaingo............

soundararajanr said...

watched the movie two times in the same day(i'm not an Ajith fan, but forced to watch by friends), in the first session theater was silent, but in the second session theater was lively and can see the crowd cheering a lot, though there were some missing dots, movie is not that bad

Unknown said...

sir intha padam al pacino naditha scarface padathin kathayai than 1st half fulla kataranga,see scarface movie

korangupaiyan said...

//ஒரு பக்க சார்பு தன்மையுடன் பேசுவதை சுட்டியும்,நல்ல விஷயம் எனில் தட்டியும் கொடுப்பேன்.
வௌவால் அண்ணே விடுங்க நீங்கதான் வலை உலக போலீஸ் அப்டீங்கற விஷயம் இன்னும் யாருக்கும் தெரியல. ப்ரீயா விடுங்க. நாயகன்ல கமலுக்கு ஒரு பர்சனல் போலீஸ் இருப்பாருல அந்த மாதிரி.
ஏன் நெறையா நேரத்துல ஒரு வாக்கியம் முடிஞ்ச உடனே ':)' போட்டுகிறீங்க. சொல்லிட்டு சொல்லிட்டு தானே சிரிச்சா பைத்தியம் மாதிரி இருக்கு அதான் கேட்டேன்.
ரொம்ப பொங்கி எழுந்து உடனே எதாவது சொல்லி கடைசில சிரிச்சிட்டு போங்க (அதாவது :) போட்டுங்குங்க அப்படீன்னு சொன்னேன்). இல்லேனா அப்புறம் தூக்கம் வராது உங்களுக்கு.

I'm a fan of your blog & comments but sometimes you seem to go too far.

Unknown said...

//ஒரு பக்க சார்பு தன்மையுடன் பேசுவதை சுட்டியும்,நல்ல விஷயம் எனில் தட்டியும் கொடுப்பேன்.

நான் எல்லாருக்கும் பதில் சொல்வேன் கேள்வி கேட்பேன்,

"நான் வாசகன் ஆனால் அடிமை இல்லை"

Ayyo dialog super vaval
You got real gut to say this
I visit cable blog everyday,
He is sincere man.Thats why got such a huge fan.He is confident guy, as you do
We always welcome you here.
as i said earlier you make real value this blog,go on
.

Unknown said...

Cable
Please watch this movie in a good theater,may be the poor atmosphere spois your mood.

Question for you.
Why the producer not invite you to watch in preview??

Why not reserve earlier somewhere like satyam

Cable சங்கர் said...

normaly i neve prefer preview

and then the theatre is upgraded with pxd projection and ac is also done.

what ever the atmosphere the movie has to engage me beyond all that then only the film is inspiring and interesting. even if i see this film in satyam my opinion is same.

வவ்வால் said...

அரவிந்தன் ரங்கா,

//Ayyo dialog super vaval
You got real gut to say this
I visit cable blog everyday,
He is sincere man.Thats why got such a huge fan.He is confident guy, as you do
We always welcome you here.
as i said earlier you make real value this blog,go on //

என்னைய வச்சு காமெடி கீமெடி செய்யலையே அவ்வ்!

சரியான கோணத்தில் புரிந்துக்கொண்டுள்ளீர்கள் என நினைக்கும் போது சந்தோஷமே.

அவர் தன்னம்பிக்கை மனிதர் என்பதில் சந்தேகமில்லை, எனக்கு முரண்பாடாக தோன்றுவதை "பேச்சுக்கு" ஆஹா என சொல்லாமல் குறிப்பிடுவதால், ஏதோ வம்புக்கு பேசுவதாக சிலர் நினைக்கலாம் , அதற்கு காரணம் நம்ம கலாச்சாரம் அப்படி" 108 டிகிரில காச்சல் அடிக்கும் போதும் ,யாராவது நல்லா இருக்கிங்களா கேட்டால் நல்லா இருக்கேன்னு "பேசுவது" நாகரீகம்னு பழக்கப்பட்டுவிட்டோம்.

ஹி..ஹி நமக்கு நாகரீகம் இல்லைனு கூட எடுத்துக்கலாம். :-))

கருத்துக்கு நன்றி!
-------------
கேபிள்ஜி,

பிரமிட் சாய் மீரா நல்லா இருந்தப்போ எடுத்து புதுப்பிச்சாங்க பங்கஜத்தைனு நினைக்கிறேன்,ஆனாலும் அப்போ கூட தியேட்டர்ல சவுண்டு ஜாரிங்க் ஆ வரும், ஒரு நிலத்தடி சுரங்கத்துல உட்கார்ந்து படம் பார்க்கிறாப்போலவே உணர்வு தான் வரும், நல்ல படத்தினை பார்த்தால் கூட கொஞ்சம் மொக்கையான உணர்வு வரும்.

பில்லாவில் ஆண்டகோனிஸ்டிக் வியுல கதை கொண்டு சென்று , ரொம்ப டீப்பா அதையே காட்டுறேன்னு சொதப்பிட்டாங்க போல.
Traffic(சோடர் பெர்க்) ,No Country for Old Men (கோயன் பிரத்ர்ஸ்)ஸ்கார்ஃபேஸ் என நிறைய ஹாலிவுட் படம் பார்த்து அப்படி எடுப்பதாக நினைத்து குட்டையை குழப்பி இருக்கணும் , படத்தோட கலர் டோன் கூட இப்படங்களைப்போலவே இருக்கும்.

படம் ஆரம்பிக்கும் போது அஸ்திவாரத்தோட ஆரம்பிச்சு, முடியும் போது வீடு கட்டி முடிக்கிறாப்போல ஃபினிஷிங்க் ,இருக்கணும், நல்லவன்,கெட்டவன் யார்னு அடையாளம் இருக்கணும் ,ஹீரோயின் இருக்கனும் ,அதற்காக டுயட் என்றெல்லாம் நம்ம ஊரில் படம் பார்ப்பவர்கள் எதிர்ப்பார்ப்பதால் தான் வழக்கமான படங்களே வருது. இதனாலே ஆரண்ய காண்டம் போன்ற படங்கள் எல்லாம் மக்களால் சகிக்க முடியாமல் போகிறது.பில்லா அவ்வகையில் நன்றாக செய்திருக்கலாம், ஏன் எனில் "விற்க கூடிய" ஹீரோ கையில் இருக்கும் போது ஆரண்ய காண்டம் அளவுக்கு மெனக்கெட்டு இருந்தாலே சூப்பர் டூப்பர் ஹிட் ஆகியிருக்கும்.

நீங்க படத்தினை பற்றி சொல்வதை விட உள்ளீடாக முதல் நாளிளே ஒரு படம் சூப்பர் ஹிட் என்றும், இல்லைனா அன்றே அவுட் என்பது போலவும் அடிச்சு சொல்வதை தான் நான் எப்படினு கேட்டேன்.இது தான் தொடர்ந்து பல சமயங்களில் என்னை பேச வைக்குது, எப்படியோ படம் மொக்கை , ஓப்பனிங் கலெக்‌ஷம் மட்டும் தான் தேறும் என நினைக்கிறேன்.(அடுத்த மாதம் நீங்களே நாட் பேட் , ஹிட் வரிசையில் சேர்க்கலாம்னு சினிமா ரிப்போர்ட்ல சொன்னாலும் சொல்வீங்க :-))]

Sathish said...

நான் ஈ போன்ற பிரம்மாண்ட வெற்றி அடைய வேண்டிய படத்தை பில்லா வந்து கெடுத்துவிட்டதே என் வருத்தம் !!

Siva said...

Ajith ku mass opening irukku..so eppadiyum 3 days housefull aa dhaan irukum,,adhanala dhaan oru B grade theatre la poi padam paarthu irukinga ...Film is a neat action entertainer with good screen presence from Thala..koncha naal santhanam comedy a paarthu paarthu nama mindset maariduchu pola,,adhan ipdi ellam review eludhanumnu thonudhu

அருண் said...

முதல் நாள் முதல் ஷோ பார்த்துட்டேன்,பட் மங்காத்தா அளவுக்கு மாஸ் கெடையாது,கிளைமாக்ஸ் சீன்ல ஒரு டச்சே இல்ல.
விஷ்ணுவர்தன் இயக்குனரா இருந்திருந்தா பெட்டரா வந்திருக்கும்னு தோணுது.
-அருண்-

புதுகை.அப்துல்லா said...

// ஓ.கே , அப்போ பிடிக்காத படம் பார்க்காமல் இருக்கலாம்னு ஒரு வார்த்தை தலைவருக்கு சொல்லிப்பாருங்களேன் :-))


//

ஒரு படம் பார்த்ததுக்கு அப்புறம்தானே பிடிச்சதா இல்லையானு தெரியும்? பார்க்குறது முன்னாலயே எப்படி பிடிக்காத படம்னு கண்டு பிடிக்கிறது?!?!?

வவ்வால் said...

அப்துல்லா அண்ணே ,

நல்ல கேள்வி, ஆனால் என்னிடம் கேட்காமல் , இவன் யாரிடம் கேட்டு இருக்கணும்.

படிக்கிறதுக்கு முன்னர் பிடிக்காத பதிவுனு எப்படி தெரியும்?

எனவே எழுதுற ஆளை பிடிக்கலைனு எடுத்துக்கணும்னு சொன்னீங்க என்றால், பில்லா-2 பிடிக்கலை அப்படினா அஜித்தை பிடிக்காது என எடுத்துக்கொண்டு அஜித் படம் பார்க்காமல் இருக்கணும் :-))

இப்போ இவன் யார் என்னை கேட்டதுக்கு பதில் சொல்லிட்டேன், நான் கேட்டதுக்கு யாரு பதில் சொல்லுவா :-))

நீங்களே ஆபத்பாந்தவானாக எல்லாருக்கும் பதில் சொல்வீர்களாக!

"ராஜா" said...

தல, பில்லா 2 வே உங்களுக்கு படு மொக்கையாக தெரிகிறது ... உங்கள் களவாணி விமர்சனத்தில் போட்ட அதே கமெண்ட் தான் , நீங்கள் இயக்கக போகும் படத்தை ஆவலுடன் எதிர்பார்கிறேன் ....

vijay said...

billa 2 padam mokkai, mokkai & mokkai. Ajitha mudhala andha courtsuit wash panna sollanguppa ella padthilum use panruru

புதுகை.அப்துல்லா said...

// நல்ல கேள்வி, ஆனால் என்னிடம் கேட்காமல் , இவன் யாரிடம் கேட்டு இருக்கணும்.

//

yes :)

arun said...

The movie is heavily inspired by Scarface....