பில்லா -2
ஹிட்டான படத்தின் அடுத்த பாகமாய் ஆங்கிலத்தில் பல படங்கள் வெளிவந்திருக்கிறது. அதை தொடர்ந்து ஹிந்தி மற்றும் பல தென்னிந்திய மொழிகளிலும் படங்கள் வெளி வந்திருக்கிறது. முதல் முறையாய் தமிழில் ஏன் இந்திய படங்களில் ப்ரீக்யூவல் எனப்படும் முதல் பாகத்திற்கு முந்தைய கதை என்று எடுக்கப்பட்ட படம் பில்லா 2.
எடுத்த எடுப்பிலேயே அட்ரிலினை ஏற்றும் படியான ஒர் ஆக்ஷன் காட்சியில் தொடங்குகிறது கதை. அட.. என்று ஆச்சர்யப்படும் அளவிற்கு டைட்டிலில் காட்டப்படும் கருப்பு வெள்ளை படங்களிலேயே அஜித்தின் சாரி பில்லா .. டேவிட் பில்லாவின் ப்ளாஷ்பேக்கை சொல்லி விடுகிறார்கள். இலங்கையில் அகதியாய் வந்து இறங்குபவர் எப்படி பெரிய டான் ஆனார் என்பது தான் கதை. அதை நீட்டி முழக்கி, படு ஸ்டைலாய் இரண்டரை மணி நேரம் படம் பார்க்கிற ஆடியன்ஸை தவிர மற்ற எல்லாரையும் சுட்டுச் சுட்டே சொல்லியிருக்கிறார்கள்.
படத்தின் மேக்கிங், மற்றும் ப்ரொடக்ஷன் வேல்யூவெல்லாம் அசத்தல் என்றால் அவ்வளவு அசத்தல். நிஜமாகவே படத்தின் ஹீரோ யார் என்றால் ஒளிப்பதிவாளர் ஆர்.டி.ராஜசேகரும், சுரேஷ் அர்ஸின் எடிட்டிங்கும்தான். தான். ரெட் எபிக் கேமராவில் படு துல்லியமான ஒளிப்பதிவு, கலர் டோன், ஹாலிவுட் பட லெவலுக்கான ஷாட்டுகள் என்று பிரம்மிக்க செய்யும் ஒளிப்பதிவு. எடிட்டிங்கின் திறமை சண்டைக் காட்சிகளில் மிளிர்கிறது.
அஜித் வழக்கம் போல ஸ்மார்ட்டாக இருக்கிறார். மற்றபடி நடிக்கவெல்லாம் முயற்சியே செய்யவில்லை. அதற்கான காட்சிகளும் படத்தில் இல்லை என்பதால் அவரைக் குறை சொல்ல முடியாது. படம் நெடுக படம் பார்க்கிற ஆடியன்ஸைத் தவிர சுமார் நூறு பேரையாவது மிஷின் கன், சாதாரண் பிஸ்டல், கலானிஷ்கோவ், ஏகே 47 என்று வகை வகையான துப்பாக்கிகளிலும், தக்குணூயூண்டு கத்தியில் சதக் சதக்கென குத்தியும் சாய்க்கிறார். பல இடங்களில் ரசிகர்கள் அவர்கள் உடம்பில் பட்ட கத்திக் குத்தாகவே ஃபீல் செய்து கத்தியது ரசிகர்களின் ஆர்ப்பரிப்பு என்று நினைத்தால் அது அவதானிக்கிறவர்களின் தவறு.
புருனோ அப்துல்லா, ஓமனக்குட்டன் என்று ரெண்டு ஹீரோயின்கள். பிகினியில் ஒருத்தி, டைட் சட்டையில் ஒருத்தி என்று ஆளாளுக்கு கவர்ச்சியாய் வந்தாலும் ஒண்ணும் ஏறத்தான் மாட்டேனென்கிறது. நடுவில் விபசாரவிடுதியில் ஆடும் பெண்கள் கொஞ்சம் கிளுகிளூப்பை ஏற்றுகிறார்கள். வில்லன் என்று ரெண்டு பேர் கல் போன்ற இறுகிய முகத்துடன் எப்பப்பார் புட் மசாஜ் செய்து கொண்டு பிஸினெஸ் டீல், என்று பேசுகிறார். இன்னொருவர் பொலிவியாவில் சப்டைட்டிலிலேயே பேசுகிறார். க்ளைமாக்ஸில் சாகிறார் இதைவிட வேறு ஏதும் சிறப்பான வேலையை செய்ததாய் ஏதும் தெரியவில்லை.
வசனம் இரா.முருகன் மற்றும் இன்னொருவரின் பெயரைப் போட்டார்கள். நிறைய இடங்களில் வெகு ஷார்பான வசனங்கள் மிக குறைந்த வரிகளில். அதுவும் அஜித் மாதிரி ஹீரோ பேசும் போது நிறைய அழுத்தம் கிடைக்கிறது. ஆனால் எல்லாமே விழலுக்கு இறைத்த நீராய் போய்விட்டது. இசை யுவன் சங்கர் ராஜாவாம். பின்னணியிசையில் ஓகே ஆனால் பாடல்கள் ஏதும் நினைவில் நிற்கவேயில்லை.
அஜித்தின் கால்ஷீட் கிடைத்துவிட்டது. சரி பில்லா என்ற ஒருவன் எப்படி உருவானான் என்பதுதான் கதை என்றாகிவிட்டது. பிறகு அதற்கான கதை என்ற வஸ்துவை கொஞ்சமாவது யோசித்திருக்கலாம். அல்லது ஒரு நல்ல லைனை வைத்து நல்ல திரைக்கதை அமைத்திருக்கலாம். எந்த ஒரு கேரக்டருக்கும் எந்த ஒரு விளக்கமும் இல்லாது தடாலடியாய் அறிமுகப்படுத்துகிறார்கள். ஆரம்பக் காட்சிகள் எல்லாம் அப்படியே நாயகன் படத்தின் ரீமேக். ஒரு சாதாரண அகதி ஏன் கடத்தல் தொழிலில் இறங்குகிறான். ஏன் அவனுக்குள் காதல் போன்ற இத்யாதிகள் வருவதில்லை. எதனால் அவன் டான் ஆகிறான் எனபதற்கான காரண காரியம் ஏதுமில்லாமல் ஏதோ லாரியில் டைமண்ட் கடத்துகிறார்கள் என்று பெரிய சைஸ் கல்கண்டு போல ஒன்றை காட்டுகிறார்கள். உலகமெல்லாம் பறக்கிறார்கள். சென்னைக்கும், கோவாவிற்கும் துரத்துகிறார்கள். ஆளாளுக்கு சுட்டுக் கொண்டேயிருக்கிறார்கள். இரண்டு ஹீரோயின்களை வைத்துக் கொண்டு என்ன செய்வது என்று தெரியாமல் விழித்திருக்கிறார்கள். அதிலும் க்ளைமாக்ஸில் ஓமனக்குட்டன் நான் திரும்ப வர முடியாத இடத்துக்கு போறேன் என்று சொல்வதெல்லாம் படு அபத்தம். முதல்பாதியைக் கூட ஓரளவுக்கு ஏற்றுக் கொள்ள முடியும். ஆனால் ரெண்டாம் பாதி வந்ததும் என்ன செய்வது என்றே தெரியாமல் யார் தான் பில்லாவுக்கு வில்லன் என்றில்லாமல் இலக்கில்லாமல் ஓடுகிறது திரைக்கதை. சீக்கிரம் சுட்டு முடியுங்கப்பா என்று புலம்ப வைத்துவிட்டார் சக்ரி டோலட்டி.
ஸ்டைலான மேக்கிங் மட்டும் படத்தை காப்பாற்றும் என்று நம்பியிருக்கிறார்கள். ஓவர் ஸ்டைல் உடம்புக்கு ஆகாது என்பதை இப்போது புரிந்திருப்பார்கள் என்று நினைக்கிறேன். ஊரெல்லாம் டிக்கெட் இலலை என்று சொன்னவர்களுக்கு.. எஸ்.எஸ்.ஆர்.பங்கஜம் தியேட்டரில் காலைக்காட்சிக்கு நேரில் சென்று வாங்கினேன். டிக்கெட் விலை 100. நாற்பது சீட்டுகள் விற்பனையாகாம்ல் இருந்தது.
கேபிள் சங்கர்
Comments
நச் கமென்ட்
நச் கமென்ட்
வழக்கம்போல அஜித்க்காக அஜித் ரசிகர்கள் எல்லாரும் ஒரு வாட்டி பார்த்தா படம் ஹிட்டாகிருமா?
ரெண்டும் ஒண்ணுதான் பாஸ்! A.கலானிஷ்கோவ் 1947 ல உருவாக்கினதால - AK 47
ஆமா இது ரொம்ப முக்கியமில்ல! :-)
Padam Parkalama Venama...?
Atha Sollavey Illa... :-)
Perusa Nambinoom.. Avlo Thana...
///வசனம் இரா.முருகன் மற்றும் இன்னொருவரின் பெயரைப் போட்டார்கள்.///
என்று சொல்லலாமா???. அந்த இன்னொரு வசனகர்த்தாவின் மனம், நம்ம பெயரை பிரபல பதிவரே நினைவுபடுத்த முடிவதில்லையே என அங்கீகாரம் கிடைக்காததை நினைத்து, புண்படுமே. திரைக்கு பின்னால் வேலை செய்பவர்களுக்கு, அவர்களின் பெயர்களை பார்ப்பதும் படிப்பதும் ஒரு விதத்தில் ஒரு அங்கீகாரம் தானே.
சினிமா கலைஞனின் மனம் ஒரு சினிமா கலைஞனுக்கே தெரிய மாட்டேங்குது.
Nice review
--
இப்போ நீங்க மட்டும் எஸ்எஸார் பங்கஜம்ல டிக்கெட் ஃப்ரியா இருக்குனு சொன்னதும் எல்லாம் நம்பனும், நீங்க ஹிட்டுனு சொன்னப்படத்திற்கு காத்தாடுதுன்னு சொன்னா ,என் கிட்டே டிசிஆர் ரிப்போர்ட் இருக்குன்னு சொல்வீங்க :-))
ஒவ்வொரு ஏரியாவில ஒரு மாதிரி இருக்கும், சிட்டிக்குள்ளவே பங்கஜம்ல ஏன் கூட்டம் வரலைனா அங்கே மெயின்டனஸ் இல்லை, ஏசி ஓடாது டிடிஎஸ் இல்லை ஆர் வேலை செய்யாது, நீங்க பார்க்கும் போது எல்லாம் சரியா வேலை செய்ததா ,கேண்டீனில் சமோசா சூடா இருந்துச்சா என எதுவும் சொல்லவில்லையே :-))
எனக்கு தெரிஞ்சு டீ.ஆர் க்கு அப்புறம் சினிமாவில எல்லாம் தெரிஞ்சவர் நீங்க மட்டும் தான் தலைவரே :-))
-------
சுரேகாஜி,
படம் பத்தி ரொம்ப பேசி நொந்து போயிருப்பார் போல,விடுங்க ,விடுங்க ..எல்லாம் அப்படித்தான் :-))
http://kgjawarlal.wordpress.com
But Cable has a huge fan base and many readers expect his review on the first day release. So requesting Cable to write an unbiased review even if has any personal connections to the film.
But we should appreciate his efforts and should understand that he is the only blogger who writes review for most Tamil films in very clear Tamil.
well said boss..
If you don't like Cable sankar Don't visit his site and put personal comments on him.
I think you want publicity to your blog, that is why you are putting controversial comments on cable sankar blog.
I have never seen a person like Cable sankar who is answering to anonymous people too in the comments.
நான் எல்லாருக்கும் பதில் சொல்வேன் கேள்வி கேட்பேன், சரி விடுங்க அனானிமஸ் பத்தி பேசுற இவன் யார் "ஹிஸ்டரி ,ஜியாகிரபிலாம் "போட்டுக்கிட்டு தான் பதிவுல நடமாடுறார் :-))
நானாவது 7 ஆண்டுகளாக குப்பை கொட்டிட்டேன்(அதானே தெரியும்) நேத்து பெய்யாத மழையில இன்னிக்கு முளைக்காத காளான் போல , ஒரு ஐ.டி வச்சுக்கிட்டு வந்துட்டு அனானிமஸ் பத்தி பேசுறதுலாம் , எப்படிய்யா? சொம்படிச்சா சோறு கிடைக்கும்னு எதாவது ஸ்கீம் ஸ்டார்ட் பண்ணிட்டாங்களா :-))
Every anonymous has a past but "வவ்வால்" has a history !!!!
நான் என்ன பப்ளிகுட்டிக்கு லிங்க் ஆஹ் போடுறேன் கமெண்டுல ?
பிடிச்சா படிக்கணும் ,பிடிக்கலைனா படிக்க கூடாது , ஓ.கே , அப்போ பிடிக்காத படம் பார்க்காமல் இருக்கலாம்னு ஒரு வார்த்தை தலைவருக்கு சொல்லிப்பாருங்களேன் :-))
பில்லா டையலாக்கு புது வடிவில் ... "நான் வாசகன் ஆனால் அடிமை இல்லை"
ஒரு பக்க சார்பு தன்மையுடன் பேசுவதை சுட்டியும்,நல்ல விஷயம் எனில் தட்டியும் கொடுப்பேன்.
மற்றப்படி ரொம்ப மோசமான படம் கிடையாது.
---
Bedtime stories for children: www.kuttees.in
padam nalla erukku super !
ellathukkum kaarana kaariyam kettukkittu erunthaa ovvorutharukkum thanithani padamthaan pannanum
neenga solrathu sari seytha athai matraver kuraisolvar !
ungal vimarchanam thavaru athu ungalukkumattume !
pothuvaga padam nanraga erukkirathu!
வௌவால் அண்ணே விடுங்க நீங்கதான் வலை உலக போலீஸ் அப்டீங்கற விஷயம் இன்னும் யாருக்கும் தெரியல. ப்ரீயா விடுங்க. நாயகன்ல கமலுக்கு ஒரு பர்சனல் போலீஸ் இருப்பாருல அந்த மாதிரி.
ஏன் நெறையா நேரத்துல ஒரு வாக்கியம் முடிஞ்ச உடனே ':)' போட்டுகிறீங்க. சொல்லிட்டு சொல்லிட்டு தானே சிரிச்சா பைத்தியம் மாதிரி இருக்கு அதான் கேட்டேன்.
ரொம்ப பொங்கி எழுந்து உடனே எதாவது சொல்லி கடைசில சிரிச்சிட்டு போங்க (அதாவது :) போட்டுங்குங்க அப்படீன்னு சொன்னேன்). இல்லேனா அப்புறம் தூக்கம் வராது உங்களுக்கு.
I'm a fan of your blog & comments but sometimes you seem to go too far.
நான் எல்லாருக்கும் பதில் சொல்வேன் கேள்வி கேட்பேன்,
"நான் வாசகன் ஆனால் அடிமை இல்லை"
Ayyo dialog super vaval
You got real gut to say this
I visit cable blog everyday,
He is sincere man.Thats why got such a huge fan.He is confident guy, as you do
We always welcome you here.
as i said earlier you make real value this blog,go on
.
Please watch this movie in a good theater,may be the poor atmosphere spois your mood.
Question for you.
Why the producer not invite you to watch in preview??
Why not reserve earlier somewhere like satyam
and then the theatre is upgraded with pxd projection and ac is also done.
what ever the atmosphere the movie has to engage me beyond all that then only the film is inspiring and interesting. even if i see this film in satyam my opinion is same.
//Ayyo dialog super vaval
You got real gut to say this
I visit cable blog everyday,
He is sincere man.Thats why got such a huge fan.He is confident guy, as you do
We always welcome you here.
as i said earlier you make real value this blog,go on //
என்னைய வச்சு காமெடி கீமெடி செய்யலையே அவ்வ்!
சரியான கோணத்தில் புரிந்துக்கொண்டுள்ளீர்கள் என நினைக்கும் போது சந்தோஷமே.
அவர் தன்னம்பிக்கை மனிதர் என்பதில் சந்தேகமில்லை, எனக்கு முரண்பாடாக தோன்றுவதை "பேச்சுக்கு" ஆஹா என சொல்லாமல் குறிப்பிடுவதால், ஏதோ வம்புக்கு பேசுவதாக சிலர் நினைக்கலாம் , அதற்கு காரணம் நம்ம கலாச்சாரம் அப்படி" 108 டிகிரில காச்சல் அடிக்கும் போதும் ,யாராவது நல்லா இருக்கிங்களா கேட்டால் நல்லா இருக்கேன்னு "பேசுவது" நாகரீகம்னு பழக்கப்பட்டுவிட்டோம்.
ஹி..ஹி நமக்கு நாகரீகம் இல்லைனு கூட எடுத்துக்கலாம். :-))
கருத்துக்கு நன்றி!
-------------
கேபிள்ஜி,
பிரமிட் சாய் மீரா நல்லா இருந்தப்போ எடுத்து புதுப்பிச்சாங்க பங்கஜத்தைனு நினைக்கிறேன்,ஆனாலும் அப்போ கூட தியேட்டர்ல சவுண்டு ஜாரிங்க் ஆ வரும், ஒரு நிலத்தடி சுரங்கத்துல உட்கார்ந்து படம் பார்க்கிறாப்போலவே உணர்வு தான் வரும், நல்ல படத்தினை பார்த்தால் கூட கொஞ்சம் மொக்கையான உணர்வு வரும்.
பில்லாவில் ஆண்டகோனிஸ்டிக் வியுல கதை கொண்டு சென்று , ரொம்ப டீப்பா அதையே காட்டுறேன்னு சொதப்பிட்டாங்க போல.
Traffic(சோடர் பெர்க்) ,No Country for Old Men (கோயன் பிரத்ர்ஸ்)ஸ்கார்ஃபேஸ் என நிறைய ஹாலிவுட் படம் பார்த்து அப்படி எடுப்பதாக நினைத்து குட்டையை குழப்பி இருக்கணும் , படத்தோட கலர் டோன் கூட இப்படங்களைப்போலவே இருக்கும்.
படம் ஆரம்பிக்கும் போது அஸ்திவாரத்தோட ஆரம்பிச்சு, முடியும் போது வீடு கட்டி முடிக்கிறாப்போல ஃபினிஷிங்க் ,இருக்கணும், நல்லவன்,கெட்டவன் யார்னு அடையாளம் இருக்கணும் ,ஹீரோயின் இருக்கனும் ,அதற்காக டுயட் என்றெல்லாம் நம்ம ஊரில் படம் பார்ப்பவர்கள் எதிர்ப்பார்ப்பதால் தான் வழக்கமான படங்களே வருது. இதனாலே ஆரண்ய காண்டம் போன்ற படங்கள் எல்லாம் மக்களால் சகிக்க முடியாமல் போகிறது.பில்லா அவ்வகையில் நன்றாக செய்திருக்கலாம், ஏன் எனில் "விற்க கூடிய" ஹீரோ கையில் இருக்கும் போது ஆரண்ய காண்டம் அளவுக்கு மெனக்கெட்டு இருந்தாலே சூப்பர் டூப்பர் ஹிட் ஆகியிருக்கும்.
நீங்க படத்தினை பற்றி சொல்வதை விட உள்ளீடாக முதல் நாளிளே ஒரு படம் சூப்பர் ஹிட் என்றும், இல்லைனா அன்றே அவுட் என்பது போலவும் அடிச்சு சொல்வதை தான் நான் எப்படினு கேட்டேன்.இது தான் தொடர்ந்து பல சமயங்களில் என்னை பேச வைக்குது, எப்படியோ படம் மொக்கை , ஓப்பனிங் கலெக்ஷம் மட்டும் தான் தேறும் என நினைக்கிறேன்.(அடுத்த மாதம் நீங்களே நாட் பேட் , ஹிட் வரிசையில் சேர்க்கலாம்னு சினிமா ரிப்போர்ட்ல சொன்னாலும் சொல்வீங்க :-))]
விஷ்ணுவர்தன் இயக்குனரா இருந்திருந்தா பெட்டரா வந்திருக்கும்னு தோணுது.
-அருண்-
//
ஒரு படம் பார்த்ததுக்கு அப்புறம்தானே பிடிச்சதா இல்லையானு தெரியும்? பார்க்குறது முன்னாலயே எப்படி பிடிக்காத படம்னு கண்டு பிடிக்கிறது?!?!?
நல்ல கேள்வி, ஆனால் என்னிடம் கேட்காமல் , இவன் யாரிடம் கேட்டு இருக்கணும்.
படிக்கிறதுக்கு முன்னர் பிடிக்காத பதிவுனு எப்படி தெரியும்?
எனவே எழுதுற ஆளை பிடிக்கலைனு எடுத்துக்கணும்னு சொன்னீங்க என்றால், பில்லா-2 பிடிக்கலை அப்படினா அஜித்தை பிடிக்காது என எடுத்துக்கொண்டு அஜித் படம் பார்க்காமல் இருக்கணும் :-))
இப்போ இவன் யார் என்னை கேட்டதுக்கு பதில் சொல்லிட்டேன், நான் கேட்டதுக்கு யாரு பதில் சொல்லுவா :-))
நீங்களே ஆபத்பாந்தவானாக எல்லாருக்கும் பதில் சொல்வீர்களாக!
//
yes :)