ஏப்ரல் மாத சூப்பர் ஹிட் மட்டுமல்லாமல், இது வரை வந்த படங்களில் ளில் சூப்பர் ஹிட்டான ஒரே படம் ஒரு கல் ஒரு கண்ணாடி அமைந்தது. சுமார் நாற்பது கோடிகளுக்கு மேல் வசூலித்தது. பெரும்பாலான விநியோகஸ்தர்கள் பெரும் லாபம் சம்பாதித்திருக்க தமிழ் சினிமாவிற்கு ஆக்ஸிஜன் கொடுத்தது போல் ஆனது. கொலைவெறி பாடல் மூலம் உலகையே திரும்பிப் பார்க்க வைத்த 3 படம் தோல்வியை தழுவியது திரையுலகத்தினருக்கு அதிர்ச்சியே.
வழக்கு எண் 18/9
பத்திரிக்கையாளர்களாலும், விமர்சகர்களாலும் பெரிதும் பாராட்டப்பட்ட படம். பாலாஜி சக்திவேல் கல்லூரிக்கு பிறகு நான்கு வருட இடைவெளி என்று நினைக்கிறேன் அதன் பிறகு சின்ன பட்ஜெட்டில் கேனான் 5டியில் எடுக்கப்பட்டது. மல்ட்டிப்ளெக்ஸிலும் சில ஏ செண்டர்களிலும் ஓடிய இப்படம். மற்ற ஏரியாக்களில் ஓடவில்லை என்பது வருத்தமே. சுமார் நான்கு கோடிகள் செலவு செய்யப்பட்டு தயாரிக்கப்பட்ட இந்த படத்தை முன்பு யுடிவி வாங்கியிருந்ததாக சொல்லப்பட்டு, கடைசி நேரங்களில் யுடிவி அதிலிருந்து விலகிக் கொண்டதாய் செய்தி. ஒன்லி கிரிட்டிக்கல் அக்ளெயிம் தான்.
கலகலப்பு @ மசாலா கஃபே
நீண்ட நாள் கழித்து சுந்தர்.சியின் இயக்கத்தில் வெளிவந்த படம். தமிழ் சினிமாவின் அடுத்த ஜாக்பாட் என்றே சொல்ல வேண்டும். ஒரு கல் ஒரு கண்ணாடியைத் தொடர்ந்து மீண்டும் ஒரு காமெடிபடம் தமிழகம் எங்கும் சக்கைப் போடு போட்டது. சுமார் 3 கோடிக்கு த்யாரிக்கப்பட்டு, ஐந்தரை கோடிக்கு யுடிவி வாங்கி சுமார் ஒன்பது கோடிக்கு எல்லா ஏரியாக்களும் விற்பனையாகிவிட, இதைத்தவிர சேட்டிலைட், எப்.எம்.எஸ் என்று தனியே யுடிவி கல்லா கட்ட, விநியோகஸ்தர்கள் கலெக்ஷனாய் சுமார் 25 கோடியை வசூல் செய்து இந்த வருடத்தின் இரண்டாவது சூப்பர் ஹிட் படமாய் அமைந்தது. என்னைப் பொறுத்தவரையில் யுடிவியின் நிஜ வெற்றிப் படம் இதுவே.
ராட்டினம்
படம் வெளியாவதற்கு முன்னமே தமிழ் திரையில் உள்ள அத்துனை இயக்குனர்கள், தயாரிப்பாளர்களால் புகழப்பட்டு, விலைக்குப் போன படம். சுமார் என்பது லட்சங்களில் தயாரிக்கபப்ட்ட இந்தப்படத்தை 90 லட்சத்திற்கு எஸ்கேப் ஆர்டிஸ்ட் மதன் வாங்கி, வேந்தர் மூவிஸ் மூலமாய் வெளியிட்டார்கள். சாட்டிலைட் உரிமம் மட்டுமே 90 லட்சங்களுக்கு மேல் விற்றிருக்கிறது என்கிறார்கள். தயாரிப்பாளருக்கும், வாங்கிய மதனுக்கும் லாபகரமாய் அமைந்த இந்த படம், ரிலீஸ் செய்த விநியோகஸ்தர்களுக்கு லாபகரமாய் அமையவில்லை. எல்லாராலும் சிலாகிக்கப் பட்ட இந்தப்படம் வசூல் ரீதியாய் எந்தவிதமான் இம்பாக்டையும் ஏற்படுத்தவில்லை என்பது ஏன் என்ற ஒரு கேள்விக்குறி சினிமா சம்பந்தப்ப்ட்ட ஆட்க்ளூக்கு இருக்கத்தான் செய்கிறது.
இஷ்டம்
கலகலப்புக்கு பிற்கு விமல் தனியாய் நடித்து வெளிவந்த படம். மிடில் க்ளாஸ் கிராமத்து இளைஞனாய் வலம் வந்து கொண்டிருந்த விமலுக்கு அல்டிமேட் சிட்டி செண்ட்ரிக் இளைஞனாய் அவரால் கொஞ்சம் கூட செட்டாக முடியவில்லை. படம் தெலுங்கில் மிக பெரிய ஹிட். ஆனால் தமிழில் சுத்த மான் ஒரு படு தோல்விப் படம்.
இப்படங்களைத் தவிர மேலும் பல சின்னப் படங்கள் வழக்கம் போல வெளிவது வந்த சுவடே தெரியாமல் போனது.
மே மாத சூப்பர் ஹிட் : கலகலப்பு @ மசாலாகஃபே

Post a Comment
20 comments:
கேபிள்ஜி,
//சுமார் நான்கு கோடிகள் செலவு செய்யப்பட்டு தயாரிக்கப்பட்ட //
வழக்கு எண் படத்துக்கு 4 கோடியாம்,
கலகலப்புக்கு ,
// சுமார் 3 கோடிக்கு தயாரிக்கப்பட்டு, //
இப்படி வழக்கு எண்ணின் பட்ஜெட்டினை ஏற்றி சொல்லும் நுண்ணரசியல் என்னவோ :-))
ரொம்ப விசுவாசமான ஆர்வகுட்டி பதிவோ :-))
சரியான கேள்வி வௌவால்..
//மே மாத சூப்பர் ஹிட் : கலகலப்பு @ மசாலாகஃபே//ஓ அப்படியா
கலகலப்பு இமாலாய சூப்பர் ஹிட் வெற்றிக்கு ஒரே காரணம் அதன் வசனங்கள்தான். வசனம் எழுதியவரையும் அதற்கு உதவியவர்களையும் பாராட்ட வேண்டும்.
vavall.. நுண்ணரசியல் மண்ணாங்கட்டியெல்லாம் இல்லை. அந்த செலவு பண்ணியதால்தான் அப்படம் தோல்வி. இப்படம் வெற்றி
very surprise "RATINAM MOVIE" fail to hit the box office, tamil cenema GOVINDA GOVINDA
aravi
Good question
Thank you cable, I’m following u since 2011.nice reviews,Your sincierty is very much appreciable, thank you
கலகலப்பு 3 கோடிதானா இல்லையே 5அல்லது6 என்று அதிகாரபூர்வமாக கேள்விப்பட்டேனே
சந்தானம் விமல் சிவா அஞ்சலி ஓவியா என்று இவர்களின் சம்பளமே 2கோடி பக்கம் வந்திருக்கும் 3கோடி தான் பட்ஜெட் என்பதை யார் நம்புவார்கள்
கலகலப்பு நல்ல பொழுது போக்கு படம் என்பதில் சந்தேகம் இல்லை
இன்று
Mobile வைத்திருக்கும் பெண்கள் கவனத்திற்கு ..
வழக்கு எண் படத்தில் நடித்தவர்களுக்கு ஒரு சாஃப்ட்வேர் என்ஜினியருக்கு ஒரு மாதம் வருகிற சம்பளம் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது.(நேரடியாக கேட்ட தகவல்).ஏனெனில் புது நடிகர்கள் நடித்ததால். அதில் டூயட் கிடையாது. இரண்டாம் பகுதியை அபார்ட்மெண்டில் பெரும்பாலும் எடுத்துவிட்டார். செலவு அதிகமாக வாய்ப்பே இல்லாத படம் அது.
// சந்தானம் விமல் சிவா அஞ்சலி ஓவியா என்று இவர்களின் சம்பளமே 2கோடி பக்கம் வந்திருக்கும் 3கோடி தான் பட்ஜெட் என்பதை யார் நம்புவார்கள்
//
ஆர்டிஸ்ட் & டெக்னிஷியன்ஸ் சம்பளம் அதிகபட்சம் 1.75 கோடிக்குள் முடிந்து இருக்கும். மேக்கிங் செலவு ஒருநாளைக்கு ஒன்னரை இலட்சம் என்று வைத்துக்கொண்டாலும் 50 நாள் ஷூட்டிங்க்கு 75 இலட்சம் ஆகியிருக்கும். போஸ்ட் புரடெக்ஷன் அதிகபட்சம் 50 இலட்சம். ஆக இந்த படத்திற்கு ஃபர்ஸ்ட் காப்பி 3 கோடி என்பது என் அனுபவத்தில் சரியானதே!
// கலகலப்பு 3 கோடிதானா இல்லையே 5அல்லது6 என்று அதிகாரபூர்வமாக கேள்விப்பட்டேனே
//
5 அல்லது 6 கோடி யூடிவியின் பட்ஜெட்டா இருக்கும். ஃபர்ஸ்ட் காப்பி அடிப்படையில் எடுத்த சுந்தர்.சி. க்கு 3 கோடிதான் ஆகியிருக்கும்.
அப்துல்லா அண்ணே,
கலகலப்பு 3 கோடி, வெற்றி என்பதெல்லாம் ,ஓ.கே, வழக்கு எண் பட்ஜெட் 4 கோடி என்பதும்,அதனால் தோல்வி என்பதும் தான் இடிக்குது.
வழக்கு எண்ணில் கேமெரா விஜய் மில்டன், இயக்குநர் பாலாஜி தவிர எல்லாமே புது முகம், பைசா செலவில்லாமல், எடுக்க கூடிய படம். பாலாஜி ஒரு பேட்டியில் 1.25 கோடி செலவுன்னு படிச்சேன், அப்படி இருக்கும் போது 4 கோடி எப்படி, எதாவது சொல்லுங்க கேட்டுக்கிறோம் :-))
பேப்பரில் கொடுக்கும் பேட்டியெல்லாம் உண்மைன்னு நம்புறவங்களையெல்லாம் என்னான்னு சொல்றது. டைரக்டர், கேமராமேன் சம்பளமே கிட்டத்தட்ட ஒன்னரை கோடிகிட்ட வந்துவிட சுமார் இரண்டு வருடம் ஷூட்டிங். ஆர்டிஸ்ட் சம்பளம், மொத்த செலவுக்கான வட்டி, எல்லாம் சேர்த்து ஆனதுஎன்னன்னு எங்களுக்க்குத்தான் தெரியும். அதை நிறுபிக்க வேண்டிய அவசியம் இல்லை.
கேபிள்ஜி,
தலைவரே ஒய் டென்ஷன்...நோ டென்ஷன். ஸ்டார் காஸ்ட்டே இல்லையேனு தான் கேட்டேன்.
கலகலப்பு ,அந்த பட்ஜெட்டுக்கு ஹிட் என்பதை நீங்கள் சொன்னதை ஏற்றுக்கொண்டோமே. வழக்கு என் தான் ஆச்சரியப்படுத்திடுச்சு,
இணையத்தில் படிச்சதையே நம்பறோமே :-))
-----------
ஃபெட்னா வேலைக்கு இடையிலும் பதிவில் கவனம் செலுத்தும் உங்க கடைமை உணர்ச்சிக்கு ஒரு சல்யூட்!
anne, ok ok chennaiyil maddum 15 kodi collection nu webdunia la poduran unmaiyava? ore varathula 8 kodiya adhigama soltanunga .
Post a Comment