டெசா கே.ஆப்ரகாம் என்ற கேரள நர்ஸின் பார்வையில் கதை ஆரம்பிக்கிறது. அவள் கோட்டயத்தில் பிறந்து, பெங்களூரில் நர்ஸாக வேலைப் பார்த்துக் கொண்டு, கனடாவில் வேலையில் சேருவதற்காக முயற்சி செய்து கொண்டிருப்பவள். அவளுக்கு இருக்கும் ஒரே உறவு கொச்சியில் படித்துக் கொண்டிருக்கும் அவளது தங்கை. பெங்களூரில் உடன் இரண்டு நர்ஸ் பெண்களுடன் ப்ளாட்டில் வசித்து வருகிறாள். அவளுடய ரூம் மேட்டிற்கு ஏற்கனவே கல்யாணமான டி.கே என்பவருடன் தொடர்பு இருக்க, அவரைக் கொண்டு அவள் ஆதாயம் பெற்றுக் கொண்டிருக்கிறாள். விசா கன்சல்டண்ஸி நடத்திக் கொண்டிருக்கு சிரில் என்பவனை பார்த்த மாத்திரத்தில் அவனது நடவடிக்கைகளில் இம்பரஸ் ஆகி காதலில் விழுகிறாள். கனடா போவது வரை அவளும் அவனும் லிவிங் டு கெதராய் ஒரே வீட்டிலிருக்க, ஒரு நாள் பப்பில் அவளிடம் ப்ரச்சனை செய்பவனை அடித்துவிடுகிறான் சிரில். அடிவாங்கியவன் ஒரு முக்கியமான அரசியல் தலைவரின் பையன் என்பதால், சிரிலின் கையை வெட்டாமல் விடமாட்டேன் என்று அலைவதால், அவனை பத்திரமாய் தன்னுடய பண்ணை வீட்டில் பாதுகாப்பாய் வைத்திருப்பதாய் சொல்கிறார் அவனுடய பாஸான ஹெக்டே. ஆறுதல் சொல்ல வந்தவன் டெசாவை கற்பழிக்கிறான். இதற்கு பிறகு டெசாவின் வாழ்க்கையில் அடிக்கும் புயல் அவளை எப்படியெல்லாம் புரட்டிப் போடுகிறது என்பதை படம் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.
டெசாவாக ரீமா கல்லிங்கள். கேரக்டருடனே வாழ்ந்திருக்கிறார். அருமையான பர்பாமென்ஸ். ஆரம்பக்காட்சிகளில் அவர் முகத்தில் தெரியும் இன்னொசென்ஸாகட்டும், காதல் வயப்பட்டவுடன் தெரியும் லேசான வெட்கமாகட்டும், கற்பழிக்கப்பட்டு அதன் வலியை சொல்ல முடியாமல் வெளிப்படுத்துமிடமாகட்டும், தன்னை இந்நிலைக்கு ஆளாக்கியவர்களை பழி வாங்கும் போது முகத்தில் தெரியும் அமைதியும், குரூரமுமாகட்டும் க்ளாஸ். என்ன மிக சாதாரணளிலிருந்து மன உறுதி கொண்ட பெண்ணாய் மாறுமிடத்தில் மட்டும் இன்னும் கொஞ்சம் அழுத்தம் இருந்திருக்கலாமோ என்று இடறுகிறது.
சிரிலாக ஃபாசைல். துறு துறு கண்களுடன் பெண்களை துளைக்கும் பார்வையுடனான வில்லத்தனமான நடிப்பு. அதை சரியாக செய்திருக்கிறார். தற்கால ஹைஃபை கார்பரேட் இளைஞனை கண் முன் நிறுத்துகிறார். க்ளைமாக்ஸில் தன் ஆணுறுப்பு அறுக்கப்பட்டு அழும் நேரத்தில் நன்றாய் அழட்டும் என்று அவரை திட்டும் அளவிற்கு அவரது நடிப்பு நன்றாக இருக்கிறது.
ரீமாவை கற்பழிக்கும் வில்லன் ஹெக்டேவாக பிரதாப் போத்தன். ஒரு செக்ஸ் மேனியாக், சந்தர்பத்தை பயன் படுத்தி சிரிலும், இவருமாய் பல பெண்களை சீரழித்து கெடுத்தது தெரியும் போது அவரது சாவு இன்னும் கொடுரமாய் இருக்கக்கூடாதா?என்று எண்ணத் தோன்றுகிறது. ”Can I have Sex With You?" என்று தண்ணீர் கிடைக்குமா? என்பது போல கேட்கும் போது நமக்கே தூக்கி வாரிப் போடும் போது டெசாவுக்கு அதிர்ச்சியில்லாமலிருக்குமா? மனுஷன் ரொம்ப நாளைக்கு பிறகு ரிவிட்டிங் பர்பாமென்ஸ். அவரது வழக்கமான கொஞ்சம் லூசுத்தனமான பாடிலேங்குவேஜுகளும் இக் கேரக்டருக்கு சப்போர்ட் செய்திருக்கிறது.
இவர்கள் இல்லாமல் பணக்கார டி.கே, ஜெயிலில் சந்திக்கும் தமிழ் பெண் ரவுடி, டெசாவின் தங்கை, உடன் தங்கியிருக்கும் பெண், என்று பல கேரக்டர்கள் மூலம் இன்றைய நவநாகரீக நங்கைகளின் நடவடிக்கைகளை, எண்ணத்தை வெளிப்படுத்தியிருக்கும் விதம், அதற்கு கதைக் களனான பெங்களூர் பெரிதாய் உதவியிருக்கிறது.
கதைக்கு பலமாய் காலித்தின் ஒளிப்பதிவும், ரெக்ஸ் விஜயனின் பின்னணியிசையும் பெரிய ப்ளஸ். குறிப்பாய் பெங்களூரையும், அதன் பின்னணியையும், அந்த உயர் மாடிக் கட்டிடங்களிடையே பயணிக்கும் க்ரேன், மற்றும் ட்ராலி ஷாட்கள் சூப்பர்.
அபிலாஷ்குமார், ஷயாமின் எழுத்தில் வசனங்களில் பல இடங்களில் செம ஷார்ப். அதுவும் பட்டவர்தனமாய் செக்ஸ் பற்றிய பேச்சுக்கள், குறிப்பாய் பெண்களிடையே பேசிக் கொள்ளூம் காட்சிகள், டெசா தன்னைப் பற்றி அறிமுகப்படுத்துமிடத்தில் தான் ஒரு வர்ஜின் இல்லை என்று சொல்லும் காட்சியில், எப்படி தன்னை இழந்தாள் என்பதை மிக அழகாய் சொல்லுமிடத்திலும், ஜெயிலில் அந்த தமிழ் பெண் கைதி பேசுவது கொஞ்சம் ஓவராய் இருந்தாலும் கொடுக்க வேண்டிய பெப்பை சரியாக கொடுத்திருப்பதும் நன்றாக இருந்தது. “நாமே ஒரு ஆயுதம் தான் பல சமயம் அதுவே நமக்கு ஆபத்தா இருக்கு” என்பது போன்ற வசனங்கள் நச். திரைக்கதையில் ரீமாவின் கேரக்டரை இன்னும் கொஞ்சம் கன்வின்சிங்காய் அமைத்திருக்கலாம் என்று தோன்றுகிறது. ஏனென்றால் யாருமில்லா பெண் என்று அவரைக் காட்டிவிட்டு, பார்த்த மாத்திரத்தில் காதல் கொண்டு, சிரிலுடன் தங்குமளவுக்கு போகும் கேரக்டர் எப்படி ட்ரான்சிஷன் ஆனது என்பதை இன்னும் அழுத்தமாய் சொல்லியிருக்கலாம்.
இயக்கியவர் ஆஷிக் அபு. டாடிகூல், சால்ட் அண்ட் பெப்பர் பட இயக்குனர். இந்தக் கதையை கையாண்ட விதத்தில் தன் திறமையை மிக அழகாய் வெளிப்படுத்தியுள்ளார். முக்கியமாய் க்ளைமாக்ஸ் காட்சிகளில், டெசாவின் பழிவாங்கு நடவடிக்கைகள் சும்மா ஜிவ்வென எகிறுகிறது. சிரிலின் ஆணுறுப்பை அறுத்து எரியும் போது நான் எழுதிய சிறுகதையான “துரை நான் ரமேஷ்சார்” ஞாபகம் வந்தது. இதே போன்ற கதையில் ஸ்ரீராம் ராகவன் ‘ஏக் ஹசீனா தீ” என்று எடுத்தது ஞாபகம் வந்தால் அதற்கும் பிலிமோகிராபி என்று குவாண்டினின் “கில்பில்” “கேபரேட் டான்ஸர்” ஆகிய படங்களின் பெயர்களைப் போடுகிறார்கள். ஏக் ஹசீனா தீயே ஷிட்னி செல்டனின் "If tommorrow comes' நாவலின் அடிப்படையில் எடுக்கப்பட்டது. இப்படி ஏற்கனவே படித்த, பார்த்த படங்களின் சாயல் இருந்தாலும் ராத்திரி பதினோரு மணிக்கு ஆரம்பித்து ஒரு மணி வரை விடாமல் என்னை கதைக்குள் ஆழ்த்தி, படம் பார்த்து சில மணி நேரங்கள் வரை படத்தைப் பற்றியே சிந்திக்க வைத்த வகையில் நிச்சயம் அபு வெற்றி பெற்று விட்டார்
கேபிள் சங்கர்
Post a Comment
13 comments:
நன்றாய் இருக்கிறது...
"Labels: 24 Female Kottayam "
ஹி ஹி . .
படம் பார்க்க வேண்டும் என்று ஆவலை தூண்டுகிறது...
நன்றி சார். (TM 2)
திண்டுக்கல் தனபாலன்
குரங்குபெடல் மாத்திட்டேன் நன்றி.
movie is not that good...
When seeing the review for Thattathin Marayathu . I thought to recommend 22 Femal Kottayam . If possible watch this film also. http://en.wikipedia.org/wiki/Ee_Adutha_Kaalathu
nice review
மீண்டும ஒரு நல்ல விமர்சனம் கேபிள் சார். ரீமா தன இயலாமையை சிரிலிடம் காட்டும் இடத்தில அழுதுகொண்டே விரலல்களை வருடும் இடத்தில என் மனதை கவர்ந்துவிட்டார். படத்தில் லாஜிக் ஓட்டைகளும் நிறைய இருக்கு. பெங்களூரில் வேலை செய்யும் நர்சு ஒருவரால் அந்த மாதிரி அபார்ட்மேண்டில் வசிக்கவோ, KFC போகவோ, android போன் வாங்கவோ நிச்சயம் முடியாது. BSC நர்சிங் முடிக்கும் ஒரு கேரளா பெண்ணுக்கு கனடா செல்லும் வாய்ப்பு எல்லாம் நிச்சயம் கிடையாது, MSC கே கொஞ்சம் கம்மி தான். அந்த சுபைதா சொல்லும் டயலாக் நல்ல இருக்கும் "பெண் பிறக்கும் போதே ஆயுதத்தோடு தான் பிறக்கிறாள் அனால் அதேதான் அவளது weakness கூட" . இந்த climax யே சட்டம் ஆக்கினால் நல்ல இருக்கும் தானே?
remaa நர்ஸ் என்பதே க்ளைமாக்சில் அவள் ஆணுறுப்பை அறுத்து சர்ஜரி செய்கிறாள் என்பதை ஐஸ்டிபை செய்வதற்காக்த்தான் வைத்திருர்க்கிறார்கள் என்று நினைக்கிறேஎன்.அதனால்தான் நடு நடுவே சர்ஜிகல் பற்றிய புத்தகம் படிப்பதாய் காட்டியிருப்பார்கள்.
// BSC நர்சிங் முடிக்கும் ஒரு கேரளா பெண்ணுக்கு கனடா செல்லும் வாய்ப்பு எல்லாம் நிச்சயம் கிடையாது, //
கனடாவுக்கு நர்ஸ் வேலைக்கு நிறைய பேர் போறாங்க, ஆனால்,
Canadian Registered Nurse Exam (CRNE) என ஒன்று எழுதி தேர்வாகணும்,அப்புறம் The International English Language Testing System ( ILETS )
நர்சிங் ரிஜிஸ்டர் செய்ய ஒரு சப்ஜெட்க்ல சிறப்பு பாடமாக வச்சிருக்கணும் ,அதுக்கு கூட சர்ஜரி படிக்கிறாப்போல காட்டி இருக்கலாம்.
ஒரு மினிமம் ஸ்கோர் இருக்கணும் ,இது ஆங்கில அறிவு இருக்குனு காட்ட.
வளைகுடா நாடுகளில் இப்படி தேர்வு இல்லை, எனவே அங்கே நர்ஸ் ஆக பணிப்புரிவது பெரும்பாலும் கேரளா,பிலிப்பைன்ஸ் பெண்களே. மேலும் உலக அளவில் நர்ஸ் வேலைக்கு இவர்களே அதிகம் போறாங்க, மேலும் லேப் டெக்னிசியன்,ரேடியாலஜிஸ்ட் வேலை வாய்ப்பு அதிகம்.
--------
கேபிள்ஜி ,
அடுத்தடுத்து மலையாள படம் விமர்சனமா வருது, இதுல ஹீரோவா நடிச்சு இருக்கிறது இயக்குனர் ஃபாசில் பையன்னு போட்டு இருக்காங்க.
கடசியா ஒரு மம்மூக்கா படம் பார்த்து நொந்தேன்(ஹி..ஹி டிவிடி தான்) அது ஆச்சு ஒரு வருஷம் மேல அதுக்கு அப்புறம் மலையாளப்படம் பார்க்கிற ஆசையே போச்சு :-))
மற்ற படங்களுக்கு விமர்சனம் போட்டே உங்களுக்கு முக்கால் வயசாகிடும் போல!
"வவ்வால் said...
கனடாவுக்கு நர்ஸ் வேலைக்கு நிறைய பேர் போறாங்க, ஆனால்,
Canadian Registered Nurse Exam (CRNE) என ஒன்று எழுதி தேர்வாகணும்,அப்புறம் The International English Language Testing System ( ILETS )
நர்சிங் ரிஜிஸ்டர் செய்ய ஒரு சப்ஜெட்க்ல சிறப்பு பாடமாக வச்சிருக்கணும் ,அதுக்கு கூட சர்ஜரி படிக்கிறாப்போல காட்டி இருக்கலாம்.
ஒரு மினிமம் ஸ்கோர் இருக்கணும் ,இது ஆங்கில அறிவு இருக்குனு காட்ட.
வளைகுடா நாடுகளில் இப்படி தேர்வு இல்லை, எனவே அங்கே நர்ஸ் ஆக பணிப்புரிவது பெரும்பாலும் கேரளா,பிலிப்பைன்ஸ் பெண்களே. மேலும் உலக அளவில் நர்ஸ் வேலைக்கு இவர்களே அதிகம் போறாங்க, மேலும் லேப் டெக்னிசியன்,ரேடியாலஜிஸ்ட் வேலை வாய்ப்பு அதிகம். "
அண்ணே Well Detail வவ்வால் அண்ணே . . .
ஒரு பதிவை பின்னூட்டமா போடற ஒரே ஆளு நீதான் அண்ணே
இந்த படத்தில் வரும் ரீமா போலவே சென்னையில் ஜெலீனா என்ற கேரளா பெண் சமீபத்தில் இதே போல அன்ன நகரில் ஒரு ஆயுர்வேத மருத்துவரால் ஏமாற்ற பட்டது செய்தியாக வந்ததே, அதை படித்தபின் புரிந்தது, ரீமாவின் கேரக்டர் பெரும்பாலான நர்சிங் மாணவிகளின் பிரதிபலிப்பு என்று.
Post a Comment