சென்னையில் இருக்கும் பிரச்சனைகளில் மிகப் பெரிய ப்ரச்சனை பார்க்கிங் ப்ரச்சனைதான். ரோட்டில் பார்க் செய்வதை சொல்லவில்லை, வீட்டில் பார்க்கிங் செய்வதைப் பற்றிச் சொல்கிறேன். பெரும்பாலான ப்ளாட்டுகளில் பார்க்கிங்கே இல்லாமல் தான் வீடு வாங்கியிருக்கிறார்கள். அவர்களின் கார்கள் ஒரு தெரு முழுக்க, அடைத்துக் கொண்டு நிற்கிறது. அதுவும் இரவு நேரங்களில் பத்தடி அகல ரோடில் இரண்டு பக்கமும் வண்டியை பார்க் செய்திருந்தால் எப்படி மற்ற வண்டிகள் போகும்?. பெரும்பாலான வண்டிகளின் பார்க்கிங் ரோடில்தான் என்றாகிவிட்டது. இனிமேல் சென்னையில் வீடு கட்ட, ப்ளாட் கட்ட ப்ளான் அப்ரூவல் செய்யும் போதே எத்தனை வீடிருக்கிறதோ அத்துனை வீடுகளுக்கு பார்க்கிங் வசதியையும் சேர்ந்து தர வேண்டுமென ஒரு சட்டம் இயற்ற வேண்டும். அப்போதுதான் இனி வரும் காலங்களிலாவது ரோட்டில் பார்க்கிங் செய்வது குறையும்.
#####################################
வெற்றி வெற்றி
#####################################
வெற்றி வெற்றி
சிறை நிரப்பும் போராட்டத்தில் ரெண்டு லட்சம் பேர் வரை கலந்து கொண்டு கைதானார்கள். ஆனால் அரசு தரப்பில் 95ஆயிரம் பேர்தான் கைதானதாய் சொன்னார்கள். நல்ல வேளை மொத்தமே 95 பேர் என்று சொல்லாமல் போனார்களே?. திமுகவைப் பொருத்தவரையில் இந்த போராட்டம் வெற்றியே. சோர்ந்து கிடக்கும் உடன்பிறப்புகளை தட்டி எழுப்பி ரிஜுவனேட் ஆக்கியிருக்கிறது இந்தப் போராட்டம். எப்போதுமே ஆளுங்கட்சியாய் இருக்கும் போதைவிட, எதிர்கட்சியாய் இருக்கும் போது தான் திமுக சிறப்பாக செயல்படும் என்று அப்து சொல்லிக் கொண்டேயிருப்பார். அதை நிறுப்பிப்பதற்கு என்றே இந்த போராட்டம் போலும். எனக்கு என்ன குறை என்றால் சிறை நிரப்பும் போராட்டம் திமுக அமைச்சர்களை கைது செய்ததற்கா? அல்லது விலைவாசி ஏற்றத்திற்கா என்று தெளிவில்லாமல் போனதுதான் வருத்தம்.
@@@@@@@@@@@@@@@@@@@@
வாழ்க தமிழ்
ஆ,ஊவென்றால் தமிழ், தமிழ்நாடு, தமிழ் மொழி என்று சீன் போடும் தங்கர் பச்சான் எப்படிப்பட்ட்வர் என்பதைப் பற்றி அவருடன் பழகியவர்களிடம் கேட்டால் தெரியும். ஆளாளுக்கு கதை கதையாய் சொல்வார்கள். புதுசாய் என்ன விஷயம் என்றால் இவரது புதிய படத்திற்கு இசை வடநாட்டு இசையமைப்பாளரான ரோஹித் குல்கர்னியாம். கேட்டால் உலக லெவலில் இசையை கொண்டு சேர்க்கும் திறமையைப் பார்த்து வாய்ப்பு கொடுத்திருக்கிறாராம். ஏன் இங்கே தமிழ்நாட்டில் தமிழன் ஒருவன் கூட உலக லெவலில் இசையமைக்க ஆளேயில்லையா? என்று கேட்டால் இதற்கு முன்பு தன் படங்கள் ஒலக லெவலில் இருந்தும் பெரிய லெவலில் ரீச்சாகாமல் இருந்ததற்கு காரணம் இசை என்றிருக்கிறார். இசைஞானியில்லாமல் ஒரு அழகி மக்களிடம் போய் சேர்ந்திருக்குமா என்று ஒரே ஒரு கணம் இவர் நினைத்துப்பார்த்தால் இப்படி பேச மாட்டார். அது தான் எப்போது கிடையாதே என்று அவருடன் நெருங்கி பழகியவர்கள் சொல்வது எனக்கு கேட்கிறது. உங்களுக்கு சொல்கிறேன் அம்பூட்டுத்தான்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

இலங்கை வீரர்களுக்கு இங்கே பயிற்சி அளித்ததை எதிர்த்து குரல் கொடுத்த அம்மாவிற்கு வாழ்த்து. நாட்டை விட்டு வெளியேற்றாமல் தமிழ்நாட்டிலிருந்து பெங்களூருக்கு ஷிப்ட் ஆக்கியிருக்கிறார்கள். அம்மா குரல் கொடுத்ததற்கு சில கிண்டல் அடித்துள்ளார்கள். அட்லீஸ்ட் இந்தம்மாவாவது குரல் கொடுத்தார்களே? என்று சொல்பவர்களும் உண்டு. எனகென்னவோ எல்லாத்துக்கு மம்மியை எதிர்ப்பது சரியில்லை என்றே தோன்றுகிறது. அதுவும் இந்த விஷயத்தைப் பொறுத்தவரை.
######################################
ஈகா (எ) நான் ஈ
வர வர சினிமாவே சரியில்லை. எந்த படமும் ஓட மாட்டேன்குது என்றெல்லாம் தமிழ் சினிமா ஆட்கள் புலம்பிக் கொண்டிருக்கும் வேளையில் அதுவும் முதன் முதலாய் ஒரு தெலுங்கு இயக்குனர் தமிழில் இயக்கியிருக்கும் படம். பெரிய அளவில் விளம்பரம் இல்லாமல் வந்த படம் ஒரே நாளில் மவுத் டாக்கில் ஒரு தூக்கு தூக்கி தமிழகமெங்கும் பிக்கப்பாகியிருப்பதை கண்கூடாக முதல் நாள் முதல் காட்சியிலும் அடுத்த நாள் தமிழ் வர்ஷனில் என் குடும்பத்துடன் பார்த்த போது தெரிந்தது மக்களின் சக்தி. என்னமாய் ரசிக்கிறார்கள் குழந்தைகளும், பெரியவர்களும். எனவே என்னுடய ரெக்கமெண்டேஷன் டோண்ட் மிஸ் நான் ஈ.
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$
பாண்டி புத்தகக் கண்காட்சி
பாண்டிச்சேரியில் இலக்கியம் என்கிற நூல் விற்பனையகமும், காலச்சுவடும் சேர்ந்து இம்மாதம் ஒன்றாம் தேதி முதல் முப்பதாம் தேதி வரை, புத்தக கண்காட்சி ஒன்றை நடத்துகிறார்கள். என்னுடய புத்தகங்களான, லெமன் ட்ரீயும் ரெண்டு ஷாட் டக்கீலாவும், சினிமா வியாபாரம், மீண்டும் ஒரு காதல் கதை, கொத்து பரோட்டா, தெர்மக்கோல் தேவதைகள், புதிய புத்தகமான சினிமா என் சினிமா, என். உலகநாதனில் நான் கெட்டவன், வீணையடி நீ எனக்கு, யுவகிருஷ்ணாவின் “ஆளப்பிறந்தவன் ஆகிய நூல்கள் விற்பனைக்கு கிடைக்கிறது. மற்றும் டிஸ்கவரி புக் பேலஸின் புத்தகங்களும் அங்கே விற்பனைக்கு தள்ளுபடி விலையில் கிடைக்கிறது. பாண்டி வாழ் வாசகர்கள் இந்த கண்காட்சியில் புத்தகங்களை வாங்கி பெரும் ஆதரவை தருமாறு கேட்டுக் கொள்கிறேன். விபரங்களுக்கு விளம்பரத்தை க்ளிக்கவும்
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
கரு.பழனியப்பனின் தைரியமான பேச்சு
அமரா ஆடியோ வெளியீட்டன்று கரு.பழனியப்பன் பேசிய பேச்சுக்கு திரையுலகினரிடையே பெரும் ஆதரவு எழும்பியிருக்கிறது. ஒரு காலத்தில் முழு பக்க, விளம்பரம், இரண்டு பகக் விளம்பரம் என்று பணம் இருக்கும் தயாரிப்பாளர்கள் அவரவர் வசதிக்கு ஏற்ப விளம்பரபப்டுத்திக் கொண்டிருந்த காலத்தில் தயாரிப்பாளர் சங்கம் மூலமாய் எவ்வளவு பெரிய படமாய் இருந்தாலும் குவாட்டர் பக்க விளம்பரம் தான் கொடுக்க வேண்டும் என்பதை சின்னப் படம், பெரியப்படம் என்று பாகுபாடில்லாமல் ஒரே அளவில் விளம்பரம் இருக்க வேண்டும் என்ற முறையில் கட்டுப்பாட்டை கொண்டு வந்திருந்தது. அதை சமீபத்தில் முகமுடி விளம்பரத்தை முழு பக்க விளம்பரமாய் கொடுத்திருந்தார்கள். ஏற்கனவே டிவியில் பத்து செகண்டுக்கு ஒரு முறை சூப்பர் ஹிட் திரைப்படம் என்ற விளம்பர சுனாமியை யார் பூனைக்கு மணி கட்டுவது என்று பார்த்து கொண்டிருக்கும் காலத்தில் இந்த வேலையை மீண்டும் ஆரம்பித்தால் தமிழ் சினிமாவில் பெரிய படங்கள் மட்டுமே வியாபாரமாகும் நிலையும், சின்னப் படங்கள் கண்ணுக்கு தெரியாமல் போகக்கூடிய வாய்ப்பு தலை தூக்கும். தன் எதிர்ப்பை, அழகாய், தைரியமாய் சொன்ன கரு.பழனியப்பனுக்கு வாழ்த்துக்கள்.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
என் ட்வீட்டிலிருந்து
நீ யாரையாவது காதலித்தால் அதை தைரியமாய் சொல்லிவிடு. அல்லது வேறொருவரால் காதலிக்கப்படுவதை பார்த்து கொண்டிரு.
நெருக்கமான உறவுகளில் எப்போது சண்டைகள் இருக்கத்தான் செய்யும். அதுதான் உறவின் நெருக்கத்தை வெளிப்படுத்தும்.
உன்னுடய கடந்த காலத்தை புரிந்து கொண்டு, எதிர்காலத்தை நம்பி, உன்னை அப்படியே விரும்புகிறவன் தான் நண்பன்.
உன் இதயம் யாரிடம் இருக்கிறது என்று தெரிந்து கொள்ள வேண்டுமா? உன் மனது யாரை நினைக்கிறதோ அவனிடம் தானிருக்கிறது.
சமயங்களில் தீடீரென நாம் கேட்கும் பாடல்கள் நம் மனதை படித்தது போல் இருக்கும்போது கிடைக்கும் சந்தோஷமோ, சோகமோ.. ஒருவிதமான அனுபவம்தான்.
ஹிக்ஸ் பாஸன் எனும் துகளை படைத்தவர் கடவுள் தானே? @# டவுட்டு
நீ ஒருவனை முக்கியமானவனாய் கருதுவாயானால் அவன் சந்தோஷம் மட்டுமே உனக்கு பிரதானமாய் இருக்கும்.
நீ ஒருவரை மிக முக்கியமானவனாக கருதுவாயானால் அவன் சந்தோசம் மட்டுமே உனக்கு முக்கியமாய் படும்.
உன்னை எப்போது சந்தோஷப்படுத்துபவனோடே இரு. அவன் இல்லாத போதும்.
ஆயிரம் பேர் என்னை அழகென்று சொன்னாலும் நீ சொல்லும் போதுதான் அதற்கு அர்த்தமே உண்டாகிறது.
90 சதவிகித பிரிடிஷ் பெண்களுக்கு செக்ஸ் படம் பார்த்தால்தான் மூடு வருகிறதாம். சர்வே ரிசல்ட்
626 மில்லியன் இந்தியர்களுக்கு கூரையோடு கூட டாய்லெட் வசதியில்லையாம்.
நெஞ்சுக்கு நீதி பதிப்பகத்தாருக்காக ஏற்பாடு செய்யப்பட்ட போராட்டம் இது என்று உளவுத்துறை தகவல்
சிறையில் காலையில் பொங்கல் போடுவார்களாம். சிறப்பு ஏற்பாடாம். தூங்க மருந்தான பொங்கலைப் போட்டு போராட்டத்தை பிசுபிசுக்க சதி உடன்பிறப்பே..
மதுரைக்காரனெல்லாம் எப்போது அருவாளோடுத்தான் அலைந்து கொண்டிருப்பார்கள் என்ற எண்ணம் எப்போதிலிருந்து, எந்த படத்திலிருந்து அவதானித்தார்கள்?
காதலில் விழுவதற்கு இருக்கும் தைரியம். உடைப்பதற்கு இருக்க மாட்டேன் என்கிறதே..
யாரிடமும் உன் அன்பை கொட்டிவிடாதே ஏனென்றால் பின்னாளில் உன் அன்பை மறுத்தளிக்கும் போது அது கொடுக்கும் வலி அதிமானது
நேற்றுப் பார்த்த குருகுலம் படம் வெரி இம்ப்ரசிவ்.
தமிழ் தமிழ் என்று முழங்கும் பலபேருக்கு தமில் என்று தான் வருகிறது. # வச்சிக்கிட்டா வஞ்சனை பண்றோம்
ஸ்டார் ஓட்டல்களில் 24 மணி நேரமும் மது பான விற்பனை. ராமதாஸண்ணே.. உடனடியா பெரிய பூட்டா வாங்கிக்கங்க..
சமயங்களில் தீடீரென நாம் கேட்கும் பாடல்கள் நம் மனதை படித்தது போல் இருக்கும்போது கிடைக்கும் சந்தோஷமோ, சோகமோ.. ஒருவிதமான அனுபவம்தான்.
ஸ்டார் ஓட்டல்களில் 24 மணி நேரமும் மது பான விற்பனை. ராமதாஸண்ணே.. உடனடியா பெரிய பூட்டா வாங்கிக்கங்க..
சமயங்களில் தீடீரென நாம் கேட்கும் பாடல்கள் நம் மனதை படித்தது போல் இருக்கும்போது கிடைக்கும் சந்தோஷமோ, சோகமோ.. ஒருவிதமான அனுபவம்தான்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
கேட்டால் கிடைக்கும்
நண்பர் ஒருவர் சினிமா இயக்குனர் எனக்கு போன் செய்திருந்தார். ஏங்க கார் வாங்கப் போறேன் லோன் பேப்பர் சைன் செய்யும் போது ப்ளாங் செக் கேட்குறாஙக். நான் தரமாட்டேன்னு சொன்ன்னேன். நீங்களும் உங்க நண்பரும் கேட்டால் கிடைக்கும்ல சொன்ன மாதிரி ப்ளாங் செக் வாங்கிட்டிருக்கேன்னு லெட்டர் கொடுங்க நான் ப்ளாங் செக் தர்றேன்னு சொல்லிட்டேன் என்றார். ஒரு வேளையாய் அவரது அலுவலகத்திற்கு போன போது அந்த எக்ஸிக்யூட்டிவ் உட்கார்ந்திருந்தார். கிட்டத்தட்ட செம கடுப்புடன். ஆனால் நண்பர் விடாமல் லெட்டர் கொடுத்தால் தான் ஆயிற்று என்று சொல்ல, வேறு வழியில்லாமல் லெட்டர் கொடுக்கிறேன் என்று சொல்லிவிட்டு மற்ற பார்மாலிட்டியையெல்லாம் முடித்துவிட்டு, கிளம்ப, அப்ளிகேஷன் பாரமில் இருக்கும் கஸ்டமர் காப்பியை கொடுக்காமல் கிளம்ப யத்தனிக்க, நண்பர் கேட்டு பெற்றுக் கொண்டார். அந்த எக்ஸிக்யூட்டிவ் முகத்தில் சிரிப்பேயில்லை. எனக்கு ஒரே சந்தோஷம். நமக்கு கிடைக்க வேண்டிய உரிமைகளை கேட்டால் கிடைக்கும் என்பதை உணர்ந்து நண்பரைப் போல கேட்க வைப்பதே எங்களது எண்ணம். அது கொஞ்சம் கொஞ்சமாய் ஈடேறுவது பெரு மகிழ்ச்சியாய் இருந்தது.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
ப்ளாஷ்பேக்
ரெய்டு
நண்பருடன் மாம்பலம் ஸ்டேஷனிற்கு வெளியே இருக்கும் மார்க்கெட்டில் காய்கறி வாங்க சென்றிருந்தேன். தெருவின் இரண்டு பக்கமும் தங்கள் ப்ளாட்பாரக்கடையை பரத்தியிருந்தார்கள்.நடுவில் நடந்து போவதற்கு ஒரு ஆள் நடக்கும் இடமேயிருக்க, அப்போது ஒரு எட்டு வயது சிறுவன் ஒருவன் நடேசன் தெருவின் முனையிலிருந்து “ரெய்டு வராங்க.. ரெய்டு வராங்க என்று கத்திக் கொண்டு வர, நடு ரோட்டின் வரை கடை பரப்பிக் கொண்டிருந்த கடை ஆட்கள் சரசரவென பரபரப்போடு, ரோட்டில் இருந்த கடையை பழையபடி அவரவர் கடைகளுல் செட்டப் செய்தார்கள். போலீஸ் பேட்ரோலில் இருந்து ஆள் வந்திருக்க, எல்லோரும் அவரவர் கடைகளில் வியாபாரம் செய்து கொண்டிருந்தார்கள். அவர்களின் வண்டி போன ஐந்தாவது மீண்டும் ரோட்டை அடைத்து கடை போட்டு விடுகிறார்கள். இப்படி கடை போடுகிறார்களுக்கு லோக்கல் போலீஸின் முழு ஆதரவு உண்டாம்.@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
கேட்டால் கிடைக்கும்
நண்பர் ஒருவர் சினிமா இயக்குனர் எனக்கு போன் செய்திருந்தார். ஏங்க கார் வாங்கப் போறேன் லோன் பேப்பர் சைன் செய்யும் போது ப்ளாங் செக் கேட்குறாஙக். நான் தரமாட்டேன்னு சொன்ன்னேன். நீங்களும் உங்க நண்பரும் கேட்டால் கிடைக்கும்ல சொன்ன மாதிரி ப்ளாங் செக் வாங்கிட்டிருக்கேன்னு லெட்டர் கொடுங்க நான் ப்ளாங் செக் தர்றேன்னு சொல்லிட்டேன் என்றார். ஒரு வேளையாய் அவரது அலுவலகத்திற்கு போன போது அந்த எக்ஸிக்யூட்டிவ் உட்கார்ந்திருந்தார். கிட்டத்தட்ட செம கடுப்புடன். ஆனால் நண்பர் விடாமல் லெட்டர் கொடுத்தால் தான் ஆயிற்று என்று சொல்ல, வேறு வழியில்லாமல் லெட்டர் கொடுக்கிறேன் என்று சொல்லிவிட்டு மற்ற பார்மாலிட்டியையெல்லாம் முடித்துவிட்டு, கிளம்ப, அப்ளிகேஷன் பாரமில் இருக்கும் கஸ்டமர் காப்பியை கொடுக்காமல் கிளம்ப யத்தனிக்க, நண்பர் கேட்டு பெற்றுக் கொண்டார். அந்த எக்ஸிக்யூட்டிவ் முகத்தில் சிரிப்பேயில்லை. எனக்கு ஒரே சந்தோஷம். நமக்கு கிடைக்க வேண்டிய உரிமைகளை கேட்டால் கிடைக்கும் என்பதை உணர்ந்து நண்பரைப் போல கேட்க வைப்பதே எங்களது எண்ணம். அது கொஞ்சம் கொஞ்சமாய் ஈடேறுவது பெரு மகிழ்ச்சியாய் இருந்தது.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
ப்ளாஷ்பேக்
ராஜேஷ்கண்ணாவின் படங்களில் எல்லாம் ஹிட் பாடல்களுக்கு குறையே இருக்காது. அதிலும் கிஷோர், ஆர்.டிபர்மன் காம்பினேஷனில் இந்த பாடல் சூப்பர் ஹிட். கிட்டத்தட்ட இதே ட்யூனில் சாஜனில் நதீம் ஷர்வன் கூட ஒரு பாடலை போட்டிருப்பார்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
அடல்ட் கார்னர்
இரண்டு குடிகாரர்கள் முழு போதையில் ஒரு கில்மா வீட்டிற்கு போக, அந்த வீட்டு ஓனர் பெண்களுக்கு பதிலாய் இரண்டு பேருக்கும் காற்றடித்த பெண்கள் பொம்மையை வைத்துவிட்டு அவர்களை ஏமாற்ற நினைத்தாள். மேட்டர் முடித்துவிட்டு வந்த இரண்டு பேரும் வீடு நடத்தும் ஒனரிடம் “என்னா பொண்ணுஙக் செத்த பொணம் மாதிரி இருந்தா கொடுத்த காசு முழுசும் வேஸ்ட்” எனக் கூற, இன்னொருவன் “உனக்காவது பரவாயில்லை மச்சான். நான் அவ பட்டக்ஸ கடிச்சதும், பர்னு காத்தோட குசு விட்டுட்டே பறந்து போயிட்டா” என்றான்.
கேபிள் சங்கர்
கேபிள் சங்கர்
Post a Comment
25 comments:
// உன் இதயம் யாரிடம் இருக்கிறது என்று தெரிந்து கொள்ள வேண்டுமா? உன் மனது யாரை நினைக்கிறதோ அவனிடம் தானிருக்கிறது. //
அரிய கண்டுபிடிப்பு... வாத்துகள்...
// நீ ஒருவனை முக்கியமானவனாய் கருதுவாயானால் அவன் சந்தோஷம் மட்டுமே உனக்கு பிரதானமாய் இருக்கும்.
நீ ஒருவரை மிக முக்கியமானவனாக கருதுவாயானால் அவன் சந்தோசம் மட்டுமே உனக்கு முக்கியமாய் படும். //
ரைட்டு...
கேபிள்ஜி,
//பிரபல பதிவர்கள் புதுகைஅப்துல்லா, கேபிள்சங்கர், ORB இராஜாமுதலானோர் கலந்து கொள்ளும் பேசுபுக், ட்விட்டர், கூகுள்பிளசு, மின்னஞ்சல் குழுமப் பயனீட்டாளர்கள், வலைப்பதிவர்களுக்கான ’வலைஞர்சங்கமம்’ நிகழ்ச்சியில் பங்கேற்க அதன் ஒருங்கிணைப்பாளர் பதிவர்பழமைபேசி: 980 322 7370.//
இப்படி உங்கப்பதிவில சொல்லிட்டு குடும்பத்தோட நான் ஈ பார்த்தேன்னு சொல்லுறிங்க, குடும்பத்தோட அமெரிக்கா போய் இருப்பதை சொல்லவே இல்லை?
இந்த முட்டாள் ஆர்வக்குட்டி அரைகுறைக்கு என்ன நடக்கிறது எனப்புரியவில்லை விளக்கவும்.
Hi Cable Sankarji,
தி மு க அபிமானிகளான நீங்களும் , ஜாக்கி சேகர் அவர்களும் சிறை நிரப்பும் போராட்டத்தில்
கலந்து கொள்ள வில்லையா?
நன்றி தலைவரே!
" வெற்றி வெற்றி "
அண்ணே அது ஒரு சிரிப்பு போராட்டம் . .
திருமண மண்டபத்துல போய் சரக்கும் பிரியாணியும்
சாப்பிடறது பேரு போராட்டமா . . ?
குஷ்பூ சரவண பவன் சாப்பாடாம் . . .
இந்த நிகழ்வின் ஒரே லாபம்
அண்ணாச்சி ஹோட்டலுக்கு கிடைச்ச
இலவச விளம்பரம்தான்
என்னது போராட்டம் வெற்றியா? எத்தன லட்சம் பேர் கலந்துகிட்டா என்ன?? என்ன காரணத்துக்கு போராட்டம்?
"மண்ணெண்ன வேப்பெண்ண வெளக்கெண்ண. சனங்களுக்கு பிரயோசனப்படாத போராட்டத்த எந்த கட்சி நடத்துன எனக்கென்ன..." இதுதான் மக்கள் மனது.
எழுச்சி, புரட்சின்னு தமாசு பண்ணிக்கிட்டு. நீங்க ஆனாலும் ரொம்பத்தான் லைவ் வள்ளுவர் கட்சி பக்கம் சாயறீங்க. ஏன் சார்?
தி.மு.க. கேபிள் அணி செயலாளர் சங்கர்அவர்களே ,
நான் ஈ பெரிய அளவில் விளம்பரம் இல்லாமல் வந்த படமா? எங்கு பார்த்தாலும் நான் ஈ பட ஹோல்டிங்கும் ,எல்லா தொலைகாட்சிகளிலும் சரமாரியான விளம்பரமும் இருக்கே .இதை கூட பெரிய அளவு விளம்பரம் என்று சொல்ல முடியாதா? அப்போ என்ன செய்தால் பெரிய அளவு விளம்பரம்.
// இந்த முட்டாள் ஆர்வக்குட்டி அரைகுறைக்கு என்ன நடக்கிறது எனப்புரியவில்லை விளக்கவும்.
1:06 AM
//
விசா பிரச்சனையால் அவர் செல்ல இயலவில்லை. தனிப்பட்ட சில காரணங்களால் நானும் செல்ல இயலவில்லை. சென்னை வரும்போது சொல்லுங்க நாம் இருவரும் சந்திப்போம் :)
//எழுச்சி, புரட்சின்னு தமாசு பண்ணிக்கிட்டு. நீங்க ஆனாலும் ரொம்பத்தான் லைவ் வள்ளுவர் கட்சி பக்கம் சாயறீங்க. ஏன் சார்?//
கேபிள்ஜியின் பாசறையில் இருந்தே இப்படி ஒரு கேள்வி வ்ரும்னு நான் நினைச்சுக்கூட பார்க்கலை :-))
சிவகுமார் மெய்யாளுமே மானஸ்தர் தான்யா!
தங்கர் பச்சானின் செயல் தான் இப்பதிவில் என்னை கிலேசம் கொள்ள வைத்திருக்கிறது... மற்றவருக்கு செய்யும் உபதேசத்தை வீட்டு கண்ணாடியை பார்த்து செய்யலமே....
ருவிட்டுகள் எல்லாம் என்னை கவர்ந்தவையே உடனேயே படித்தாலும் இங்கும் ஒரு முறை படித்து விட்டுப் போகிறேன்...
//எனக்கு என்ன குறை என்றால் சிறை நிரப்பும் போராட்டம் திமுக அமைச்சர்களை கைது செய்ததற்கா? அல்லது விலைவாசி ஏற்றத்திற்கா என்று தெளிவில்லாமல் போனதுதான் வருத்தம்.///
கேபிள் அண்ணே! சத்தம் போட்டுப் பேசிடாதீங்க! யாராவது பாத்துடப் போறாங்க!!
#முடியல
//ஆனால் அரசு தரப்பில் 95ஆயிரம் பேர்தான் கைதானதாய் சொன்னார்கள்.
//
ஸ்டாலின் கூட பேட்டியில் இதைதான் சொன்னார்
//தமிழ் தமிழ் என்று முழங்கும் பலபேருக்கு தமில் என்று தான் வருகிறது. # வச்சிக்கிட்டா வஞ்சனை பண்றோம்
//
100% true
இன்று
அஜித் : நடிகனா ? மனிதனா ?
அவதானிப்பு - இந்த வார்த்தையே ட்விட்டர் வந்ததற்கு அப்புறம் தான் வந்தது. # என் அவதானிப்பு! (சரியா, இல்லையா என்று சொல்லுங்கள்!)
ஒரு வருஷம் லேட் என்றாலும், 11-ஆம் தேதி நடக்கப் போகும் ‘பூட்டுப் போடும்’ விழாவைப் பற்றி ஐயாவை பாராட்டி ரெண்டு வார்த்தை எழுதலாமில்ல?
மாம்பலம் மார்கெட்- அந்த பைலட் பையனையே போலிஸ் தான் அனுப்பியிருக்கும் !
-R. J.
//தமிழ் தமிழ் என்று முழங்கும் பலபேருக்கு தமில் என்று தான் வருகிறது. # வச்சிக்கிட்டா வஞ்சனை பண்றோம்
// இதைச் சொல்றதுக்கு முன் கொஞ்சம் மேட்டரை ப்ரூப் பார்த்துடுங்க... நிறைய தவறு கண்ணில் படுகிறது.
Instead of filling jails , if DMk has called people for a day to clean up the ponds and lakes , atleast we would have stored more water and public would have appreciated DMK .
very nice article
சென்னையில் இருக்கும் பிரச்சனைகளில் மிகப் பெரிய ப்ரச்சனை பார்க்கிங் ப்ரச்சனைதான்//
எனக்குங்கற வார்த்தையை விட்டுட்டீங்கன்னு நினைக்கிறேன்...
my neighbor got payback for his unworthily induction stove. thanks to KETTAAL KIDAIKKUM ( SUREKA )
எல்லாம் சரி தல. ஆனா ரெண்டு பகக்த்துக்கும், நொடிக்கொருமுறை விளம்பரம் போட்ட எதுவும் லாபம் எடுக்கவில்லை என நீங்கதானே சொன்னீங்க?
மந்திரப்புன்னகை மாதிரியான த்ராபைகளை அவர் நல்ல படம் எடுக்கிறோம் என்கிறார்.அத 4 பகக்த்துக்கு கொடுத்தலும் ஒண்ணும் வேலைக்காவாது
https://p.twimg.com/AxV1r69CAAAn-gk.jpg:large
many congrats.
d.m.k vin poratathinal makkal ku ena payan. trafic jam aanadhu dhan micham
//Blogger கார்க்கி said...
எல்லாம் சரி தல. ஆனா ரெண்டு பகக்த்துக்கும், நொடிக்கொருமுறை விளம்பரம் போட்ட எதுவும் லாபம் எடுக்கவில்லை என நீங்கதானே சொன்னீங்க?
மந்திரப்புன்னகை மாதிரியான த்ராபைகளை அவர் நல்ல படம் எடுக்கிறோம் என்கிறார்.அத 4 பகக்த்துக்கு கொடுத்தலும் ஒண்ணும் வேலைக்காவாது//
கார்க்கி.... தல கிட்டல்லாம் இன்னுமா நடுநிலை எதிர்பாக்குறீங்க... அவரு ஆளவந்தான் சூப்பர் ஹிட் படம்னு காமெடி பண்ணுனவரு....
அவருக்குன்னு ஒரு தனி உலகம்... அதுல அவரு நினைச்சது மட்டும்தான் உண்மை.... அப்டின்னு வாழுறவரு.... படிச்சோமா... ரசிச்சோமான்னு போய்கிட்டே இருக்கனும்.... ஆராய்ச்சி பண்ண்க்கூடாது
Post a Comment