Thottal Thodarum

Jul 5, 2012

All The Best

ஜேடி சக்ரவர்த்தி இயக்கும் படங்கள் ஹிட்டாகிறதோ இல்லையோ வருடத்திற்கு ஒரு படமாவது வந்துவிடுகிறது. ராம் கோபால் வர்மாவின் பள்ளியிலிருந்து நடிகராய் வளர்ந்து இயக்குனராகியிருக்கும் இவரது படங்கள் பெரும்பாலும் ஏதாவது வேற்று நாட்டு படத்தின் தாக்கம் இருக்கும். அதன்படியே இப்படமும்.


ரவிக்கு அவனுடய அப்பாவை ஜெயிலில் இருந்து காப்பாற்ற பணம் வேண்டும். அதற்காக யாரை வேண்டுமானாலும் ஏமாற்ற தயாராகிறான். சந்து ஒரு தில்லாலங்கடிப் பார்ட்டி, சொந்த வீட்டிலேயே திருடுபவன். குடும்பம் பாசம் என்று ஏதுமில்லாதவன். கல் நெஞ்சக்காரன்.  அவனுடய அப்பா இறப்பதற்கே காரணம் அவன் தான். சந்துவும் ரவியும் சந்திக்கிறார்கள். இருவரும் சேர்ந்து அவரவர்கள் ப்ரச்சனையிலிருந்து தப்பிக்க ஒரே ஒரு மாஸ்டர் ப்ளான் போட்டு மில்லியன் கணக்கில் சம்பாதிக்க ஆசைப்பட்டு ஒரு ப்ளான் செய்கிறார்கள். அது ஜெயித்ததா? இல்லையா? என்பதுதான் கதை.
கதை என்று பார்த்தால் சுவாரஸ்யமாய் இருப்பது போலத்தான் தெரியும். ஆனால் அதை எக்ஸிக்யூட் செய்தவிதத்தில் படு சொதப்பலாய் வந்துவிட்டது. காமெடி என்று நினைத்து வைத்த காட்சிகள் எல்லாம் அபத்தமாய் போக அங்கொன்றும் இங்கொன்றுமாய் சிதறிய கிச்சு கிச்சுக்களைத்தவிர, பெரிதாய் ஏதுமில்லை. 
ஸ்ரீகாந்த் ரொம்ப நாளைக்கு பிறகு பார்க்க கொஞ்சம் லேசாய் குண்டடித்திருக்கிறார். முகத்தில் வயது தெரிகிறது. அநாவசியமாய் நிறைய பாடல்கள் எல்லாம் வைத்து இம்சைப்படுத்தவில்லை. ஆளுக்கொரு பாடலை மட்டும் பாடிவிட்டு வேலையைப் பார்க்கிறார்கள். ஹீரோயின் என்றால் ஒருவர் மட்டும் நிறைய இடங்களில் வருகிறார். ஜேடியின் காதலியாய் வருபவர் திடீரென துபாயில் வந்து பாட்டு பாடிவிட்டு பிறகு கோபித்துக் கொண்டு போனவர் திரும்பவேயில்லை. ஜேடி கொஞ்சம் விதயாசமான டயலக்டுடன் பேசி காமெடி செய்ய விழைந்தது தெரிகிறது. பட் நோ யூஸ். பிரம்மானந்தம் இருந்தும் பயணில்லை. இவரை விட தெலுங்கானா சகுந்தலா, கிருஷ்ண பகவான் காமெடி ஓகே.. ஆங்காங்கே சிரிக்க வைக்கிறார்கள்.

ஒளிப்பதிவு, பாடல்கள் எலலாமே படு சுமார். செம பட்ஜெட்டில் படமெடுத்திருக்கிறார்கள் போலிருக்கிறது. அது படத்தில் நன்றாக தெரிகிறது. இம்மாதிரி படங்கள் எல்லாம் சுவாரஸ்யமான கதை சொன்னால் தான் விளங்கும். ஆனால் அது இப்படத்தில் இல்லை. 

கேபிள் சங்கர்


Post a Comment

2 comments:

Jayaprakash said...

ஒளிப்பதிவு, பாடல்கள் எலலாமே படு சுமார். செம பட்ஜெட்டில் படமெடுத்திருக்கிறார்கள் போலிருக்கிறது. அது படத்தில் நன்றாக தெரிகிறது. இம்மாதிரி படங்கள் எல்லாம் சுவாரஸ்யமான கதை சொன்னால் தான் விளங்கும். ஆனால் அது இப்படத்தில் இல்லை.

Eppadi irundhalum saguni ku ithu better than nu nenaikiren

Regards
JP

”தளிர் சுரேஷ்” said...

தெலுங்கு நமக்கு ஒத்துவராது! எஸ்கேப்!