குற்றாலம் என்று சொன்னதும் பல பேருக்கு அருவியைத் தாண்டி ஞாபகத்துக்கு வருவது பார்டர் கடை பரோட்டாவும், நாட்டுக் கோழியும்தான். ரஹமத்துல்லா பாயின் கடை என்றால் யாருக்கும் அவ்வளவாக தெரியாது. எல்லோருக்கும் பாடர்கடைதான். அப்படி அழைப்பதற்கான காரணமிருக்கிறது. சில ஆண்டுகளுக்கு முன் செங்கோட்டை கேரள மாநிலத்துடன் இருந்த போது, இந்த இடம் தான் கேரளா தமிழ்நாடு பார்டராய் இருந்ததாம். தற்சமயம் அந்தக் கடை திருநெல்வேலிக்கும் செங்கோட்டைக்கும் இடையே இருப்பதாலும் அப்படி அழைக்கப்படுவதாய் சொன்னார்கள் .(நன்றி டாக்டர் புருனோ) தற்சயமய் கேரள தமிழ்நாடு பார்டர் செங்கோட்டை கொல்லம் நெடுஞ்சாலையில் உள்ளது.
சென்ற முறை மணிஜியுடன் சென்ற போது நான் அங்கு போக முடியவில்லை. ஆனால் இம்முறை நிச்சயம் போக வேண்டும் என்று முடிவெடுத்திருந்தோம். ஊருக்கு நுழைததுமே பார்டர் கடையில் தான் மற்ற நண்பர்களை மீட் செய்தோம். கார் அங்கு போய் சேரும் முன்னரே தெரிந்துவிட்டது அதுதான் பாடர்டர் கடை என்று ஏனென்றால் அம்பூட்டுக்கூட்டம். பக்கத்தில் இருத்த கார் பார்கிங் ஏரியாவில் காரை வைத்துவிட்டு, நண்பர்களை சந்தித்துவிட்டு, மதிய சாப்பாட்டை பார்சல் வாங்கிக் கொண்டு சென்றுவிடலாம் என்று எல்லோரும் சொல்ல, நானும் இன்னும் சில நண்பர்கள் மட்டும் அதெல்லாம் முடியாது இங்கனக்குள்ளேயே ஒரு ரெண்டு பரோட்டா சாப்பிட்டாத்தான் ஆச்சு என்று அடம் பிடித்து பரோட்டா அர்டர் செய்தோம்.
சூடான பரோட்டா கல்லில் போட்டுக் கொண்டேயிருந்தார்கள், அது காலியாகிக் கொண்டேயிருந்தது. இலையில் போட்டதும் வெறும் பரோட்டாவை பிட்டு வாயில் வைத்ததும் அட்டகாசமாய் இருந்தது. கொஞ்சம் விருதுநகர் பரோட்டாவும், காரைக்குடி பரோட்டாவும் கலந்த கலவையாய் கிரிஸ்பாகவும், மெல்லியதாகவும் இருந்தது. வெறும் பரோட்டாவே படு சுவையாய் இருக்க, கூடவே சால்னாவை அதன் மேல் ஊற்றி கொஞ்சம் ஊற வைத்து சாப்பிட்டால் அட அட.. அட்டகாசம். கேட்காமலேயே ஆளாளுக்கு நாட்டுக்கோழியை நன்றாக ப்ரை செய்து அதில் மிளகைப் போட்டுப் பிரட்டி தருகிறார்கள். அஹா.. அதைப் போலவே காடையும் தருகிறார்கள். காரத்துக்கு முழுக்க முழுக்க பெப்பர் போட்டு பிரட்டி எடுத்து தருவதால் வேறுவிதமான் காரம், சுவை.
மதிய நேரத்தில் பிரியாணி போடுகிறார்கள். எனக்கு அவ்வளவாக சிலாக்கியப்பட்டதாய் தெரியவில்லை. அவர்களது ஸ்பெஷாலிட்டி பரோட்டாவும் நாட்டுக் கோழியும்தான். அதில் அவர்களை அடிக்க அந்த ஏரியாவில் ஆளேயில்லை என்றுதான் சொல்ல வேண்டும். சால்னா அவ்வளவாக கெட்டியாக இல்லாவிட்டாலும் சுவை நன்றாகவேயிருந்தது. நிச்சயம் குற்றாலம் போனால் மிஸ் செய்யாமல் சாப்பிட்டு வர வேண்டிய கடையிது.
கேபிள் சங்கர்
கேபிள் சங்கர்
Post a Comment
15 comments:
சாப்பாட்டுக்கடை பதிவுகளில் தாங்கள் உணவுகளை க்ளிக் செய்யும் போட்டோக்கள் தெளிவாக இல்லை. அதில் சற்று கவனம் செலுத்துங்கள் சார்.
இனி ஊருக்கு போகும் போது ஆபீசர்கிட்டே சொல்லி சாப்புட்டுற வேண்டியதுதான்...!
எம்ஜியார்,சிவாஜி காலத்திலிருந்து இன்று வரை அனைத்து நடிகர்களுக்கும்...
இந்த கடை புரோட்டா-சிக்கன் பேவரைட்.
:)
//சில ஆண்டுகளுக்கு முன் செங்கோட்டை கேரள மாநிலத்துடன் இருந்த போது//
இந்த வரிகளில் மாற்றம் தேவை சில ஆண்டுகளுக்கு முன்பு என்பதை விட நாடு சுதந்திரம் பெறும் முன்பு என்று இருக்க வேண்டும். சுதந்திரம் பெற்று மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கும் போது செங்கோட்டை தமிழகத்துடன் சேர்ந்து கொண்டது என்பதான் சரியாகும்
மொழிவாரி மாநிலம் பிரிக்கப்பட்ட ஆண்டு 1956. அதுவரை செங்கோட்டைக்கு உட்பட்ட வடகரை, அச்சன்புதூர் கிராமங்கள் எல்லாம் கேரளாவில் இருந்ததாக நான் கேள்விப்பட்டிருக்கிறேன்.
அதுவரை, தற்பொழுது பார்டர் என அழைக்கப்படும் இடம்தான் மாநில எல்லையாக இருந்திருக்கின்றது.
பிரிந்த பிறகு கொல்லம் ரோட்டில் புளியரை கிராமம் தாண்டி கேரள எல்லை ஆரம்பிக்கிறது.
thanks for sharing anna
இவர்களுடைய கொத்துபரோட்டாவும் (நாட்டுக்கொழியை பிச்சுப்போட்டு கொத்துவார்கள்) அருமையாக இருக்கும்!
-
Bedtime stories for children : kuttees.in
நான் இந்த கடையில் சாப்டிருக்கிறேன் பெப்பர்சிக்கன் அருமையாக இருக்கும் பரோட்டா சைஸ்தான் கொஞ்சம் சின்னது .........வௌவாலின் வருகைக்கு காத்திருக்கிறோம் .:-)
//.வௌவாலின் வருகைக்கு காத்திருக்கிறோம் .:-)//
சிங்கம்,
ஏன் ...ஏன் இந்த கொலவெறி? இப்படி உசுப்பேத்திவிட்டு போயிடுங்க ,அப்பாலிக்கா பட்டம் வாங்க்குறது மட்டும் நானா :-)) அவ்வ்!
சிங்கம்னு பேரு வச்சு இருக்கீர் அப்போ நாம எல்லாம் ஒரே அனிமல் பிளானட் தான், இப்படிலாம் போட்டு கொடுக்கப்படாது.
சாப்பாட்டுக்கடையில எல்லாம் நான் கலாட்ட செய்வதில்லை, வேடிக்கை பார்த்துட்டு போயிடுவேன்.
-------
கேபிள்ஜி,
குற்றாலம் பக்கம் போயிட்டு பார்டர் கடைக்கு போகாம திரும்பமாட்டாங்கன்னு எல்லாருமே சொல்வாங்க, அடுத்த முறை போய்டனும்னு ரெண்டு மூனு தடவை நினைத்துக்கொண்டு போகவேயில்லை, இன்னொரு தடவைப்போனால் கண்டிப்பாக போய்டணும், கேபிள்ஜியே போய்ட்டார் அங்கே :-))
------
பரோட்டா சாப்பிட்டால் தீமையானு ஒருவர் கேட்டு இருக்கிறார் அதனால் பரோட்டாப்பற்றிய எனது பதிவை இங்கே பகிர்கிறேன்.
பரோட்டா சாப்பிடுவதால் வரும் தீமைகளை விளக்கும் பதிவு.(ஹி..ஹி ஆனால் நான் மட்டும் பரோட்டா சாப்பிடுறத விடவில்லை...ஊருக்கு உபதேசம்!)
வவ்வால்-தலை கீழ் விகிதங்கள்: பரோட்டா ரகசியம்!
"சிவகுமார் ! said...
சாப்பாட்டுக்கடை பதிவுகளில் தாங்கள் உணவுகளை க்ளிக் செய்யும் போட்டோக்கள் தெளிவாக இல்லை. அதில் சற்று கவனம் செலுத்துங்கள் சார். " "
என்ன தம்பி . . .
தெளிவா இருந்தா தெளிவா இருக்கும் . . .
கேபிள் சார்,
எல்லாரும் கிண்டல் பண்றாங்கன்னு இந்த வாட்டி உங்க ட்ரேட் மார்க்கான 'டிவைன்!' எழுதாம விட்டுட்டீங்களா?!
நன்றி!
சினிமா விரும்பி
http://cinemavirumbi.blogspot.in
சாப்பாட்டுக்கடை என்பதால் நானும் பார்க்க வந்தேன் :)))
பரோட்டா பெப்பர்சிக்கன் அருமை.
நானும் அங்க சாப்பிட்டு இருக்கறேன்....பரோட்டா ரொம்ப வேகமா தீர்ந்து கொண்டே இருக்கும்..ஒரு பக்கம் ரெடியாயிட்டே இருக்கும்..கும்பலா மாவு உருட்டி கொண்டு இருப்பார்கள்.
சுவையும் நன்றாக இருக்கும்..
பதிவை வாசித்ததிலிருந்து இன்று தான் அங்கே சாப்பிட சந்தர்ப்பம் வாய்த்தது. நன்றாகவே இருந்தது.
Post a Comment