Thottal Thodarum

Jul 18, 2012

பகல் கொள்ளையும் அதற்கு துணை போகும் அரசாங்கமும்.

இந்தியாவிலேயே விலைவாசியை காட்டி, பெட்ரோல் விலை ஏற்றத்தை காட்டி கொள்ளையடிக்கும் கும்பல் எதுவென்றால் அது சென்னையின் ஆட்டோக்கள் தான். ஆம் பகல் கொள்ளைதான். இந்தக் கொள்ளையை தடுக்க, முந்தைய அரசும் சரி, இந்த அரசும் சரி எந்தவிதமான நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை.


இந்த பகல் கொள்ளை சென்னையில் மட்டுமல்ல, தமிழகத்தில் பெருமபாலான இடங்களில் நடந்து கொண்டுதானிருக்கிறது. தமிழ்நாட்டைத் தாண்டி பெங்களூர், ஹைதராபாத், கேரளா போன்ற மாநிலங்களுக்கு சென்றவர்கள், ஏன் மும்பைக்கு சென்று வந்தவர்கள் கூட சென்னை ஆட்டோக்களில் ஏறிவிட்டு வந்து ஒரு பாட்டம் அழுதுவிட்டுத்தான் போவார்கள். “ஏங்க பெட்ரோல் விலை எல்லோருக்கும் தானே ஏறுது ஏதோ இவனுங்களுக்கு மட்டும் ஏத்திட்டா மாதிரி இல்லை கொள்ளயடிக்கிறாங்க” என்று புலம்ப ஆரம்பித்துவிடுகிறார்கள்.

இப்போதெல்லாம் ஆட்டோவை ஸ்டார்ட் செய்தாலே 40 ரூபாய்க்கு குறைந்து போவதில்லை என்று ஸ்டாண்டில் இருக்கும் ஆட்டோக்களின் அராஜகம் செய்ய ஆரம்பித்திருக்க, சைதாப்பேட்டையிலிருந்த செண்ட்ரலுக்கு அவர்கள் கேட்கும் தொகை எவ்வளவு தெரியுமா? 300. சுமார் பதினோரு கிலோ மீட்டர் வரும். சரி இன்றைய ஒன்வே எல்லாம் கணக்கு செய்து பார்த்தால் கூட 15 வரும் என்று வைத்துக் கொள்ளுங்கள். பதினைந்து கிலோ மீட்டருக்கு முன்னூறு ரூபாய் அதுவும் இரவு நேரங்களில் கேட்டீர்கள் என்றால் அது அவர்கள் வாய்க்கு வந்ததுதான். குறைந்த பட்ச விலையாய் கிலோமீட்டருக்கு அரசு நிர்ணையித்திருக்கும் விலை 14 அதாவது இரண்டு கிலோ மீட்டருக்கும் அதற்கு மேலும் ஆகும் ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும் 7 ரூபாய்.  அப்படி கணக்கு செய்தால் முதல் 15 கிலோ மீட்டருக்கு சுமார் 110 ரூபாய் தான் வரும். ஆனால் இவர்கள் கேட்பது 300 ரூபாய்.

ஆனால் பெட்ரோல் விலை ஏற்றம் இந்தியாவெங்கும்தான் இருக்கிறது. அதே விலை ஏற்றத்தோடு மற்ற மாநிலங்களில் எப்படி கட்டுப்படியாகிறது. நான் ஹைதராபாத் பயணிக்கும் போதெல்லாம் அரசு பஸ்கள், டாக்சிகளை விட அதிகம் பயணிப்பது ஆட்டோக்களில் தான். ஏனென்றால் மிகச் சரியான விலை,  பேரம் பேசாத டிரைவர்கள், அப்படியே பேரம் பேசினால் அருகில் உள்ள போலீசாரிடம் கம்ப்ளெயிண்ட் செய்தால் உடனடி நடவடிக்கை எடுத்துவிடுவார்கள். முக்கியமான விஷயம் நாம் கூப்பிடுகிற இடத்துக்கு பெரும்பாலும் மறுக்காமல் வருவார்கள். அவர்களுடய ரேட் முதல் 1.5 கி.மி 14 ரூபாயும், அதற்கு மேல் பயணிக்கும் ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும் 8 வாங்குகிறார்கள். என்னிடம் ஒரு முறையும் அவர்கள் அதிக ரேட் கேட்டது இல்லை ஓரிரு முஸ்ஸிம் ஆட்டோ டிரைவர்களைத் த்விர, அவர்கள் கூட இறங்கும் போது தான் கேட்பார்கள். அப்படி கேட்கும் போது நாம் கொடுத்துவிட்டால் கூட வரும் ஊர்காரர்கள் திட்டுவார்கள் “உங்களைப் போன்ற ஆட்களினால் தான் இவர்கள் இப்படி கேட்க ஆரம்பித்துவிட்டார்கள்” என்று.

இன்றைய பெட்ரோல் விலை ஏற்றத்திற்கு பிறகும் ஹைதையின் ஆட்டோக்களுக்கும் நம் ஊர் ஆட்டோ ரேட்டுக்குமான விதயாசம் ஒரு ரூபாய்தான். ஏன் இப்படி கொள்ளையடிக்கிறீர்கள் என்று கேட்டால் விலைவாசி ப்ரச்சனையைத்தான் சொல்வார்கள்.  அதையும் மீறி கேட்டால் அரசு கட்டணத்தை உயர்த்தவில்லை என்பார்கள். ஆனால் காரணம் வேறு ஒரு லிட்டர் பெட்ரோல் போட்டால் குறைந்த பட்சம் பதினெட்டிலிருந்து இருபது கிலோ மீட்டர் வரை பயணிக்க முடியும்.  என்றால் இவர்களின் ஆட்டோ வாடகை இருநூறு ரூபாய் என்று வைத்துக் கொள்ளுங்கள் பெட்ரோல் ஆயிலுடன் சேர்த்து என்பது ரூபாய்க்கு போட்டாகிவிட்டது. அன்றைய முதல் 280 ரூபாய். இரண்டு கிலோ மீட்டர் தூரத்திற்கு குறைந்த பட்சம் நாற்பது ரூபாய் வாங்குகிறார்கள். அப் அண்ட் டவுன் ட்ரிப் கிடைப்பதில்லை என்று காரணம் சொல்வார்கள். சரி அப்படி பத்து ட்ரிப் போனால் அதில் ஏழில் ரிட்டர்ன் ட்ரிப் போடு கணக்கு செய்தால் 280 ரூபாய் வந்துவிடுகிறது.   இவர்கள் இதற்கு மேலும் சம்பாதிக்க பெரிய தூரங்கள் பயணிக்காமல் உட்கார்ந்த இடத்திலேயே ஒரு கிலோ மீட்டருக்கும் அரைகிலோ மீட்டருக்கும் நாற்பதும், ஐம்பதுமாய் வாங்கி சாயங்காலத்திற்குள்  ஐந்நூறு ரூபாய் வரை சம்பாதித்தால் வீட்டிற்கும் டாஸ்மாக்கிற்கும் போக அவர்கள் வேலை செய்வதில்லை. டீஸல் ஆட்டோக்கள் என்றால் குறைந்த பட்சம் 30 கிலோ மீட்டர் போகும் என்கிறார்கள். பெரும்பாலான பெட்ரோல் ஆட்டோக்கள் எல்.பி.ஜி கேஸில் ஓடுகிறது. அதன் விலையை  பெட்ரோல் விலையை விட குறைவு. இவர்களிடம் 300-400 கொடுத்து அழுவதற்கு கால்டாக்சிகளை புக் செய்தால் முதல்  நான்கு கி.மீ 100 ரூபாயும், மேலும் ஆகும் கி.மீ 12 ரூபாயும் வாங்குகிறார்கள் அப்படி பார்த்தால் காரில் பயணித்தால் கூட 232 தான் ஆகிறது. ஏசி கார் என்றால் இன்னும் ஒரு ரூபாய் அதிகம் வாங்குகிறார்கள். இவர்களிடம் பேரம் பேசி மன உளைச்சலுடன் பயணிப்பதற்கு கால்டாக்சிகள் எவ்வளோ மேல். கால்டாக்சியினால் மன உளைச்சல் அடைந்தவர்களின் ப்ரச்சனையை தனியே பார்ப்போம். சென்னைப் போன்ற ஆட்டோ பெருத்த நகரங்களில் டாக்சிக்களின் வெற்றிக் காரணம் இவர்களின் அராஜகமான விலைதான் என்பதை அவர்கள் எப்போது புரிந்து கொள்வார்கள் என்று தெரியவில்லை?. 

சரி இவர்களுக்கான விலையை அரசு நிர்ணையித்தால் ஆட்டோ ஓட்டுனர்கள் அதை தொடர்வார்களா? என்றால் நிச்சயம் அது நடக்காது. ஏனென்றால் பெட்ரோல் விலை ஏற்றத்தால் தான்  14 ரூபாய் விலை நிர்ணையித்து, டிஜிட்டல் மீட்டர் கட்டாயம் போட்டாக வேண்டும் என்று சட்டமெல்லாம் போட்டார்கள். ஆனால் இன்று வரை என் வாழ்நாளில் மீட்டர் போட்டு ஆட்டோவில் ஏறியதே கிடையாது. சில மாதங்களுக்கு முன் பெங்களூருக்கு சென்றிருந்தேன் போரம் என்று நினைக்கிறேன் அங்கே வாசலில் ஆட்டோ பிடிக்க நிற்கும் போது அங்கே ஒரு ட்ராபிக் கான்ஸ்டபிளை வைத்து பயணிகளுக்கு அவர்கள் போகும் தூரத்தைக் கேட்டு ஒரு சலான் போட்டுக் கொடுத்து ப்ரீபெய்ட் ஆட்டோ சிஸ்டத்தை அருமையாய் செய்து கொடுத்துக் கொண்டிருந்தனர்.  ஏன் சென்னையில் உள்ள எந்த ஒரு மாலும் இதை செய்வதில்லை?.  

பெரும்பாலும் போலீசாருக்கு ஆட்டோ ட்ரைவர்கள் மற்ற ஊர்களில் கட்டுப்படுகிறார்கள். ஆனால் இங்கே அப்படியே நேர் மாறாய் இருப்பதற்கு காரணம் பெரும்பாலான ஆட்டோ ஓனர்கள் போலீஸ்காரர்களாய் இருப்பதுதான். அதனால் தான் என்ன தான் சட்டம் போட்டாலும் அதை தொடராமல் போவதற்கான காரணம்.   இவர்களின் கூக்குரலின் படி அரசு புதிய கட்டணமாய் குறைந்த பட்சம் இருபது ரூபாயும், மேலும் ஆகும் கி.மீட்டருக்கு பத்து ரூபாய் கொடுத்தால் அதை பின்பற்றாத ஆட்டோக்களின் லைசென்சுகளையும், ஓட்டுனரையும் தீவிரமாய் அரசு தண்டிக்காத வரை சென்னையின் ஆட்டோ கட்டணக் கொள்ளைக்கு அரசும் உடந்தையாய் இருக்கிறது என்று தான் நாம் கருத வேண்டும்.

Post a Comment

48 comments:

CS. Mohan Kumar said...

மிக உண்மை. சென்னை போல் கொள்ளை அடிக்கும் ஆட்டோ காரர்கள் எங்கும் கிடையாது. நீங்கள் சொன்ன காரணம் (போலிஸ் தான் நிறைய ஆட்டோவுக்கு ஓனர்கள் ) நிச்சயம் இது தொடர்வதற்கு ஒரு காரணம் தான்

Unknown said...
This comment has been removed by the author.
CrazyBugger said...

Vaavaal and monkey pedal waiting for your comments

Rajesh V Ravanappan said...

சார், கேரளாவில் இன்னுமும் நடு இரவு 3 மணிக்கு கூட சிக்னலை மதிக்கும் ஆட்டோ டிரைவர்களை பார்க்க முடியும்; 6 மாதத்திற்கு முன்பு கூட 10 ரூபாய்க்கு ரெண்டு பேர் கொச்சின் ஜன்க்சனில் இருந்து சலிமர் தியேட்டருக்கு போயிருக்கிறோம், இது ரெண்டு பேர் பஸ்ஸில் ட்ராவல் செய்வதை விட குறைவான தொகை. அவர்களை விட நாம் எந்த விதத்திலும் குறைந்தவர்கள் இல்லை, சுய ஒழுக்கத்தை தவிர..
சென்னையில் குறைந்த பட்சம் 40 ரூபாய் என்றால், கோவை - திருப்பூரில் 60 ருபாய்.
காசை விட, தெரிந்தே தவறுக்கு துணை போகிறோம் என்ற குற்ற உணர்வே, நான் ஆட்டோக்களை நாடுவதேல்லை..

அந்நியன் அம்பி போல் இருப்பது என்று கம்பீரமாய் பார்க்க முடிகிறதோ அல்லது அசாதாரணமாய் பார்க்காமல் இருக்க முடிகிறதோ அதுதான் சிறந்த சமுதாய வாழ்க்கை.. ஆனால் அம்பியை அம்மாஜியாக பார்க்கும் உலகம் இது.. "ரொம்ப நல்லவன்" - என்ற வார்த்தையே கோமாளிகளுக்கு என்றாகிவிட்டது..

Karaikudiyaan said...

Cable Ji...
I started from JB Nagar to Mumbai Airport which is closely 2km.Autp meter shows 34 Rs.Due to heavy rain I gave 40 Rs.I thought he would accept.But he returned back 6Rs.I came to Chennai Airport .I booked a call taxi and went to mahindra city.Rate was 675.I given 50 Rs advance at airport.While I get down at Mahindra city ,Taxi driver pressurized me to give extra 50 Rs to himThis never happened me in Maharashtra.

Saravanakumar Karunanithi said...

சங்கர் ஜி, இதெல்லாம் உக்காந்து பேசின ஒரு வருஷத்துக்கு மேல பேசலாம்..... இவனுங்க கேக்க மாட்டனுங்க .... நாம ஆட்டோவ தவிர்த்து வேற என்ன செய்யலாம்னு தான் யோசிக்கணும்.
முடிஞ்ச அளவுக்கு நண்பர்களை ஒருங்கிணைத்து பைக்,காரில் செல்லலாம், அல்லது பஸ், டிரைனில் செல்லலாம்.....
அவசரத்திற்கு என்றோ ஒரு நாள் ஆட்டோவில் போனால் நமக்கும் நல்லது பர்சுக்கும் நல்லது. வேற வழியில்லை, திட்டி கொண்டே வேற வேலைகளை பார்க்க வேண்டியதுதான்....


Pls listen to this sound clip,

http://soundcloud.com/balajipatturaj/92-7-big-fms-best-of-take-6

Karaikudiyaan said...

இன்னும் முடியவில்லை....
அண்ணா சாலை செஞ்சுரி பிலாசாவில் இருந்து
ஏர்போர்ட் போக 3௦௦ ரூபாய் ...ஏர்போர்ட்டிலிருந்து கோயம்பேடு போக 3௦௦ ரூபாயும் அழுதேன்....
காசு கூட பரவாயில்லை ....மரியாதை என்பதை இவர்களிடம் கிஞ்சிற்றும் எதிர்பார்க்கக் கூடாது

Karaikudiyaan said...
This comment has been removed by the author.
Paleo God said...

செண்ட்ரலிலிருந்து ஜிஹெச்சுக்கு 200 ரூவாத்தாண்ணே வாங்கினாய்ங்க!

Sivasamy said...

Sign & Send send the link to your friends… Let’s see what will happen…

http://www.change.org/petitions/rationalise-auto-rickshaw-fares-in-chennai-chennaiauto

arul said...

karuthulla pathivu anna

KARTHIK said...

சென்னையை பொருத்தவரைக்கும் கால்டேக்ஸி தான் பெஸ்ட்டு தல...
ஒரே தூரத்துக்கு ஆட்டோவவிட கால்டேக்ஸி 20ரூபா கம்மியாவே இருந்துதுங்க...
இங்க ஈரோட்டுல அதவிடக்கொடுமை 5 இரவு நேரங்கள்ல கிமீட்டருக்கு 100 ரூபா கேக்குராங்க :-(

Jayaprakash said...

Nalla pathivu! itharku yaaravathu action eduthal tamil nadu munnerum

Regards
JP

பிரபல பதிவர் said...

கேட்டால் கிடைக்கும்.... கேளுங்க... கேளுங்க... 98.3 FM

Cable சங்கர் said...

அதற்காகத்தான் கேட்டிருக்கிறேன். ஆல்ரெடி இதற்கான அடிப்படை வேலைகள் கேட்டால் கிடைக்கும் குழுமத்தில் ஆரம்பிச்சாச்சு. சும்மா பதிவு போட்டு பின்னூட்டம் போடறது எங்க வேலையில்லை பிரபல் பதிவர்

Cable சங்கர் said...
This comment has been removed by the author.
அரவிந்தன் said...

இப்போதெல்லாம் நானும் சலிக்காமல் பேரம் பேசுகிறேன்.என்னளவில் ஒரு கீ,மீட்டருக்கு 15 என்று பேரம் பேசி பயணிக்கிறேன்.

உலக சினிமா ரசிகன் said...

நம்மை ஆள்பவர்கள் சுத்தமில்லை.
அவர்களால்... எப்படி ஆட்டோவை சுத்தப்படுத்த முடியும்?.

வவ்வால் said...

கேபிள்ஜி,

இதே பிரச்சினையை முன்னரும் பேசின நினைவு, பெங்களூரு ஆட்டோ படம் எல்லாம் போட்டிங்களே?

ஒன்று மட்டும் உண்மை சென்னையை விட எல்லா ஊரிலும் ஆட்டோக்கட்டணம் குறைவு.கடலூரில் வழக்கமான ஆட்டோவே ஷேர் ஆட்டோ போல ஓடும்.ஆளுக்கு 5 ரூ இப்போ 6 ரூ ஆக்கி இருக்காங்க,கொஞ்சம் தூரம் அதிகம் என்றால் 10. 5 பேரு ஏத்திக்கிட்டு போறாங்க.

டெல்லி ஏர் போர்ட்டில் இருந்து நொய்டா அருகில் செல்ல 320 ரு தான் 25 கி.மீ வரும் , இங்கே சென்னையிலே அதிகமாக கேட்பார்கள்.

பெங்களூரில் கட்டணத்தினை அதிகம் ஆக்கிவிட்டதால் , பிரச்சினை வருவதில்லை. சரி இதான் கட்டணம் என கொடுத்துப்போகலாம்.

ஆட்டோ பிரச்சினை தீராமல் இருக்க இன்னொரு காரணம் தொழிற்சங்கங்கள், அரசு எதாவது கடுமை காட்டினால் போராட்டம் நடத்துவார்கள். மேலும் பல ஆட்டோக்கள், போலீஸ் ,கவுன்சிலர்களுக்கு சொந்தம்.

நிற்கும் ஆட்டோ/ஸ்டேண்ட் ஆட்டோவை கேட்க கூடாது, நாம் செல்லும் திசையில் போகும் ஆட்டோவை நிறுத்தி கேட்க வேண்டும், நல்லா பேரம் பேசி குறைக்கலாம்.

புது ஆட்டோ எனில் 25 கி.மீக்கு குறையாமல் மைலேஜ் கொடுக்கும், பழைய வண்டி சுமார் 20 கொடுக்கும்.

எனவே சின்ன சின்ன சவாரியாக அடித்தால் நல்ல லாபம் கிடைக்கும்.நீங்க சொன்னது போல டாஸ்மாக் சரக்கு, மாவா, சிகரெட், பிரியாணி என சாப்பிட்டு எல்லாம் செலவாகிடும்.

எனவே மக்களிடம் நிறைய கறக்கவே துடிக்கிறார்கள்.

கால் டாக்சியில் பிரச்சினை இல்லை, ஆனால் ஏர் போர்ட்டுக்குள் வர மாட்டார்கள், டிராப் தான்.

ஏர் போர்ட் பிரிபெய்ட் டாக்சியில் நன்றாக ஏமாத்துகிறார்கள். பில் போடும் போது சரியாக வீட்டுக்கதவு என் ,தெரு என எல்லாம் சொல்லிவிடணும், இல்லைனா அந்த பில்லில் போட்டு இருக்கும் இடம் வரைக்கும் வந்துவிட்டு மேலே போக காசுக்கேட்கிறாங்க.

காப்பிகாரன் said...

சினிமால தான் எங்கள மோசமானவங்கள காட்ரங்கங்கான இப்ப ப்ளாக்ல கூடவா அது என்ன {ஓரிரு முஸ்ஸிம் ஆட்டோ டிரைவர்களைத் த்விர} மத்தவங்க கேட்க மாடங்கள

Sketch Sahul said...

http://honeylaksh.blogspot.com/2012/07/blog-post_18.html

Unknown said...

சரியாய் சொன்னீங்க safi
இவர் நடுநிலைமையா எழுதறதா இருந்தா சென்னைல எந்த மதத்தை சேர்ர்ந்தவங்க அதிகமா வாங்குறாங்கன்னு எழுதி இருக்கணும் --

shankar said...

ஹாய் கேபிள் சங்கர்,

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ஒரு ஆட்டோ நண்பர் பெரம்பூரில் சொன்னது.

பெரம்பூரில் ஓடும் ஒவ்வொரு நான்கு சீட் ஷேர் ஆட்டோக்களும் மாதம் 500 ருபாய் லஞ்சமாய் பெரம்பூர் செம்பியம் போலீஸ் க்கு கொடுக்க வேண்டுமாம். மேலும் 1 கேஸ்
பதிவார்கள். அதற்க்கு 100 ருபாய் பைன் கட்டவேண்டுமாம்.

மேலும் 6 சீட் ஷேர் ஆட்டோ க்கள் மாதம் 700 ருபாய் லஞ்சம் கட்டாயமாய் கொடுக்க வேண்டுமாம்.
மேலும் 1 கேஸ் பதிவார்கள். அதற்க்கு 100 ருபாய் பைன் கட்டவேண்டுமாம்.

லஞ்சம் செலுத்த பட்டு விட்டது என்பதற்க்கு அடையாளமாக பைன் கட்டிய ரேசிப்டை ஆட்டோவின்
முன்னால் வைத்து இருக்க வேண்டுமாம்.

யார் லஞ்சம் செலுத்தினார்கள் என்ற லிஸ்ட் ஒரு போலீஸ் இடம் இருக்குமாம் அவர் மாத
கடைசியில் அதை வைத்து கொண்டு யார் கட்டினார்கள் என்று சரி பார்ப்பார்கள்

இந்த மாதிரி கேடு கேட்ட போலீஸ் காரர்களால் தான் ஆட்டோ சவாரி விலை ஏறுகிறது.

மேலும் 75% ஆட்டோ டிரைவர்கள் குடித்து விட்டு தான் வண்டி ஒட்டு கிறார்கள். அவர்களிடம்
லஞ்சம் வாங்குவதால் போலீஸ் அவர்களை ஒன்றும் கேட்பதில்லை.

போலீஸ் மட்டும் ஒழுங்காய் இருந்தால் ஒரு ஆட்டோ காரனும் அதிக விலை வாங்க முடியாது.

”தளிர் சுரேஷ்” said...

லஞ்சம் பெருத்த நாட்டில் ஆட்டோக்கள் கொள்ளையடிக்கத்தான் செய்யும்.ஆனால் ஒன்று எந்த ஆட்டோ டிரைவரும் சம்பாத்தியத்தை சேர்த்து வைத்துக் கொள்வதில்லை! அன்றைய வருமானம் அன்றோடு காலி!

kailash said...

/மேலும் 75% ஆட்டோ டிரைவர்கள் குடித்து விட்டு தான் வண்டி ஒட்டு கிறார்கள்/

Dont blame just like that ,if that is the case there would have been more accidents .

Unknown said...

Good article and good calculation.
Thanks

கோவை நேரம் said...

எப்போ கோவைக்கு கால் டாக்சி வந்துச்சோ...அப்போ இருந்து அதுல தான் பயணம்..அதே மாதிரி கேரளாவில் ஒரு ரூபாய் திருப்பி தந்த ஆட்டோ டிரைவரை பார்த்து வியந்து இருக்கிறேன்..

Siva said...

Ji...Naan Coimbatore native Chennai la ippo iruken..Coimbatore auto fare Chennai a vida adhigam theriuma, Chennai evlovo parava illanga, Coimbatore la poi paarunga...

? said...

பதிவுலகில் மலையாளி எனில் கரித்து கொட்டுகிறார்கள். ஆனால் கொச்சியில் ஒரு ஆட்டோ டிரைவர் தமிழில் பேசிய என்னிடம் மீட்டரை பார்த்து 25 காசு திருப்பி தந்து மூர்ச்சையடைய வைத்தார். இதே தமிழ்நாட்டில் வேற்றுமொழிக்காரன் மாட்டினால் அவன் என்ன ஆவான் என சொல்லி தெரியவேண்டியதில்லை. வேற்று மொழிக்காரனை விடுங்கள் அசலூர்காரன் மாட்டினால்...

Goodland Surveys, India said...

நீங்கள் சொலவது நூறு சாதம் உண்மை.இப்போ எல்லாம் நான் ஆட்டோ பேரம் பேசுவதற்கு பயந்து ஷேர் ஆட்டோ ள போறேன்,அடு பெரிய தனி கொடிமை.

குரங்குபெடல் said...

" பகல் கொள்ளையும் அதற்கு துணை போகும் அரசாங்கமும். "


அண்ணே

அரசாங்கமே குடலை காலி பண்ணி கொள்ளை தான் அடிச்சிகிட்டிருக்கு . . .

இதையெல்லாம் சரிபண்ண அவுங்களுக்கு ஏது நேரம் . . .

கொடநாட்ல க்ரூப் போட்டாவும் . .

பெங்களுரு கேசுக்கு நூற்றாண்டு விழா வைக்கிற யோசனையிலும்

காலம் ஓடுது . .

scenecreator said...

கேபிள் சார்,
தியேட்டர் டிக்கெட் கட்டணம், ஆட்டோ கட்டணம் இரண்டுமே நம் அண்டை மாநிலங்களை விட அதிகமாய் கொள்ளை அடிக்கிறார்கள்.நம்ம சைதாபேட்டை கடும்பாடி அம்மன் கோயிலில் இருந்து சைதாபேட்டை மெயின் பஸ் ஸ்டான்ட் போகவே அறுபது ருபாய் கேட்க்கிறார்கள்.இதை எல்லாம் ஒன்றும் செய்ய முடியும் என்று தோண வில்லை. மக்களாக இப்போது திரை அரங்குகளை பெருமளவு புறக்கணிப்பது போல் ஆட்டோக்களை புறக்கணிக்க வேண்டும்.சும்மா சுற்றிக்கொண்டு இருக்கிறார்கள்.அருகில் ஒரு இடத்திருக்கு கூப்பிட்டால் இஷ்டத்திற்கு கேட்க்கிறார்கள்.அதிலும் ஸ்டாண்டில் நிற்கும் ஆட்டோவை கூப்பிட்டால் நிச்சயம் மயக்கம் வரும் தொகை கேட்பார்கள்.

செங்கதிரோன் said...

சென்னையை பொருத்தவரைக்கும் கால்டேக்ஸி தான் பெஸ்ட்டு தல...well said..

Shan said...

Cable,
Why can't we start some campaigns calling for boycott of Auto in Chennai? It may not be 100% effective, but I feel we should start something like no matter what would be the outcome. At least we did it!!

Also we can bring this to the attention of the High Court by filing a case or we can ask use RTI to ask how effectively the laws/guideline for Chennai Auto transport are followed.

At last, as the saying goes, "people deserve the Government they elect", we are the reason that this country is being ruined like this. We cannot expect a change within our life time, but at least we let's start some thing even it is a tiny drop in the ocean.

புதுகை.அப்துல்லா said...

சினிமால தான் எங்கள மோசமானவங்கள காட்ரங்கங்கான இப்ப ப்ளாக்ல கூடவா அது என்ன {ஓரிரு முஸ்ஸிம் ஆட்டோ டிரைவர்களைத் த்விர} மத்தவங்க கேட்க மாடங்கள


//


சகோதரர் ஷபி அவர்களே, கேபிள் அப்படி எழுதி இருப்பதைப் படிக்கும்போது எனக்கும் "சுருக்" என்று இருந்தது. ஆனால் கொஞ்சம் பிராக்ட்டிகலாக யோசியுங்கள். கேபிளுக்கு அவர் இஸ்லாமியர் என்று எப்படித் தெரியும்? அவர் தாடி,தொப்பி வைத்து இருந்தால் மட்டுமே அவர் இஸ்லாமியர் என்று அறிய முடியும்! தாடி, தொப்பி வைத்த குரான் மீது நம்பிக்கை வைத்த ஒரு மனிதன் சட்டத்திற்குப் புறம்பாக அதிகம் கேட்பது நம் மத வழக்கப்படியும் தவறுதானே?? அவர் எல்லா இஸ்லாமிய ஓட்டுனர்களும் என்று சொல்லவில்லை. மதத்தை அடையாளப்படுத்திக் கொண்டு அதிகம் கேட்கும் சில ஓட்டுனரையே சொல்கிறார். இதில் இருந்து தெரிவது என்ன? சமூகம் பூரண இஸ்லாமியனாக இருந்தால் நிச்சயம் அவன் நேர்மையானவனாக இருந்தே ஆக வேண்டும் என்பதே!! ஆக திருந்த வேண்டியது அந்த தாடி,தொப்பி அணிந்த ஓட்டுனர்கள்தான், எழுதிய கேபிள் அல்ல..

முன்தலை மழித்து, சட்டை அணியாமல் பூணுல் அணிந்து, பஞ்சகச்சம் அணிந்த ஒரு ஓட்டுனர் அடாவடியாக அதிக தொகை கேட்டால் நமக்கு என்ன உணர்வு வருமோ அதே உணர்வுதான் தாடி,தொப்பி அணிந்து நாம் கேட்டாலும் அடுத்தவர்களுக்கு வரும் # எதார்த்தம்

CrazyBugger said...

Well said abdulla.

Cable சங்கர் said...

safi நான் இந்த மதத்திற்காரர்கள் மோசமானவர்கள் என்பதை சொல்வதற்காக அந்த வரியை சொல்லவில்லை. இத்தனைக்கும் நானும் அப்துல்லாவும் மிக நெருங்கிய நண்பர்கள். நான் இந்த வரியை எழுதியதன் அர்த்தத்தை அவர் நன்றாக உணர்ந்திருக்கிறார். அந்த அளவுக்கு புரிதல் உள்ளவர்கள் நாங்கள். ஆனால் நடப்பதை, நடந்ததை சொல்வதில் எந்த தவறும் இல்லை. இந்த தவறை யார் செய்தாலும், எந்த மதத்தினர் செய்தாலும் அதை சொல்ல எனக்கு தைரியமும் உரிமையும் உண்டு. இதனால் எனக்கு தனிப்பட்ட முறையில் காழ்புணர்ச்சி என்றெல்லாம் நினைக்க வேண்டாம்.

Ganpat said...

இப்படி ஒரு முக்கிய பிரச்சினையை பற்றி எழுதிய சகோதரர் கேபிள் சங்கருக்கு முதற்கண் நன்றி..

சீனாவின் சாபம் மஞ்சள் நதி என்று சொல்லுவார்கள்..சென்னையின் சாபம் ஆட்டோ ரிக்க்ஷாக்கள்..

ஹைதராபாத் பெங்களூரு ஆகியவற்றுடன் ஒப்பிடும்போது மொத்த ஆட்டோ எண்ணிக்கை சென்னையில் மிக குறைவு.
பர்மிட் வழங்குவதிலுள்ள ஊழலே இதற்கு காரணம்.

சென்னையில் ஒரு ஆட்டோவில் கூட மீட்டர கிடையாது.

சராசரியாக பகல்நேரத்தில் ஒரு கி.மீக்கு ரூ 20 வாங்குகிறார்கள்.குறைந்தபட்சம் ரூ.50..

பெரும்பாலான ஆட்டோக்கள் போலீசிற்கு சொந்தமானவை என ஒரு பலம் வாய்ந்த கருத்தும் உண்டு.

எனக்கும் ஆட்டோ ஒட்டுனருக்கும் எப்பொழுதும் நடக்கும் ஒரு உரையாடல்..

நான்:தி.நகர வரீங்களா?
அவர்:ஓ..போலாம் ஸார்..
நான்:எவ்வளவு?
அவர்:தி.நகரில் எங்கே ஸார்?
நான்:பஸ் ஸ்டாண்ட்..
அவர்:நூறு ரூபா கொடுங்க ஸார்!
நான்: மீட்டர போடுங்களேன்!
அவர்:அதெல்லாம் முடியாது ஸார்.எப்போவோ பெட்ரோல் நாற்பது ரூபா வித்தபோது கவர்மேன்டிலே கி.மீ க்கு ஆறு ரூபா வச்சாங்க..ஆச்சு ஆறு வருஷம்..நாங்க எவ்வளு கேட்டும் ஏத்த மாட்டேன்க்கிறாங்க!
நான்:நீங்க எவ்வளவு கேட்டிருக்கீங்க?
அவர்:கி.மீ க்கு ஒரு பத்து ரூபா ண்ணா ஓகே ஸார்..
நான்: சரி இதுக்கு அரசு அனுமதி எதற்கு..இப்போ நான் கி.மீக்கு பத்து ரூபா தரேன்..வாங்களேன் போலாம்!(இந்த கணக்குப்படிபார்த்தாலும் ..ரூ.40 தான் வருகிறது)
இதை அவர் சற்றும் எதிர்பார்க்கவில்லை போலும்..கொஞ்சம் அதிர்கிறார்..
பிறகு சொல்கிறார்:
"அதெல்லாம் கட்டுபடி ஆகாதுங்க!"

தீர்வு:
கால் டாக்ஸி போன்று,தனியார் நிறுவனங்கள் கால் ஆட்டோ நடத்த அனுமதி..
(இப்போ உள்ள ஆட்டோவும் தொடரலாம்)
கட்டணம் :
இரண்டு கி.மீக்கு முப்பது ரூபா.பிறகு ஒவ்வொரு கி.மீக்கும் ரூ.எட்டு.waiting ஐந்து நிமிடங்களுக்கு இரண்டு ரூபா.
இதன்படி தி.நகரிலிருந்து சென்ட்ரல் செல்ல.. சுமார் 10 km..30 நிமிடம் waiting.. மொத்த கட்டணம்..30+64+12=106 ரூபா.
உங்கள் கருத்துக்களை அறிய ஆவலாக இருக்கிறேன்..

Cable சங்கர் said...

ganpat. சென்னையில் கால் ஆட்டோ ஆரம்பித்தார்கள். ஆனால் ஏனோ பெரிய வரவேற்ப்பில்லை ஏன் என்றும் தெரியவில்லை.

manjoorraja said...

Sanjai Gandhi
13:49 (edited) - Public
ஒரு வழியாக, ஆட்டோக்காரர்களின் அராஜகத்திலிருந்து தப்பிக்க வழி கிடைத்திருக்கிறது.. சில மாதங்களுக்கு முன் Taxi Taxi என்ற டாக்சி சர்வீஸ் ஆரம்பித்தார்கள். இப்போது 100 கார்கள் இயக்குகிறார்கள். அதைத் தொடர்ந்து இப்போது Red Taxi என்ற புதிய டாக்சி சர்வீஸ் ஆரம்பிச்சிருக்காங்க.

பகல் நேரங்களில் கி/மீக்கு 18 ரூபாயும் இரவில் 21 ரூபாயும் கட்டணம். குறைந்த பட்சம் 3 கிமீ கட்டணம் செலுத்த வெண்டும். 3 கி/மீக்கு மேல் ஒவ்வொரு மீட்டருக்கும் கட்டணம் வரும்.

ஆட்டோவில் 3 கிமீக்கு 150 ரூபாய்க்கு குறைவாக வாங்குவதில்லை. இவர்களிடம் பகலில் 55 ரூபாய் இரவில் 65 ரூபாய் தான்.. ஏசி கார்.. சொகுசான, மரியாதையான பயணம்..

கோவைக்கு வருபவர்கள் ஆட்டோக்கு பதில் டாக்சியை பயன்படுத்துங்க..

TAXI TAXI - 0422 40 50 60 70
RED TAXI - 0422 4 5 6 7 8 9 0
Hellow Taxi - 0422 4040 7070 - உபயம் - ஸ்வாமி ஓம்கார்

sathish77 said...

நம்ம கோவைல ஒரு கொடுமைய பார்த்தேன். ஒரு வெளியூர்காரர் சாந்தி தியேட்டர் கிட்ட ஒரு ஆட்டோவ கூப்பிட்டு ரயில்வே ஸ்டேஷன் போனும்னு சொன்னாரு , அவருடன் மனைவி மற்றும் குழந்தை அப்பறம் ஒரு பெரிய பேக். அந்த ஆட்டோகாரர் எவ்வளவு கேட்டார் தெரியுமா? 120 ருபாய் !!! அன்னைக்கு முடிவு பண்ணுனேன், only Taxi Taxi.. no autos.

sathish77 said...

பக்கத்தில் இருக்கும் பாலக்காட்டில் அப்படி இல்லை. மிகவும் சரியான சார்ஜ் தான் வாங்குகிறார்கள். நல்ல வேலை நம்ம ஊருல ஆட்டோ பயணத்தை மக்கள் விரும்புவதில்லை, உண்மைலேயே இந்த ஆட்டோ காரங்க டார்கெட்டு தான் என்ன ? ஒரு நாளில் 2000 ருபாய் சம்பாதிப்பதா? எனக்கு அப்படிதான் தோணுது.

Ganpat said...

கேபிள் ஷங்கர்..

45 கமெண்ட்ஸ் உடன் இதை முடிப்பதை விட வேறு எதாவது ஆக்கபூர்வமாக செய்ய இயலுமா?

உதாரணத்திற்கு ஒரு ஐம்பது ஆட்டோக்கள்,ஒரு மாத காலத்திற்கு ,காலை எட்டு மணி முதல் இரவு எட்டு மணி வரை ,சென்னையில் sponsor செய்யவேண்டும்.இவை பழுதில்லாத/சூடு வைக்காத மீட்டர் பொருத்தப்பட்டு. கி.மீக்கு அரசு கட்டணமான ரூ.6 மட்டும் வாங்க வேண்டும்.யார் எங்கு சவாரி கூப்பிட்டாலும் போக வேண்டும்.ஒரு மாதம் கழித்து இவர்கள் அனுபவம்,சென்ற தூரம் மற்றும் வருமானத்தை அலச வேண்டும்..
முடியுமா?

kaniB said...

தமிழன்னு தெரிஞ்சா பெங்களுருல யாருமே மீட்டர் போடமாட்டாங்க... ஏன்னா தமிழன் பேரம் பேசி தான் ஆட்டோல போவான்னு அவுங்களுக்கு நல்லாவே தெரிஞ்சிருக்கு....

Browsenet said...

good post !!!

Ganpat said...

ஏதேனும் ஆக்கபூர்வமாக செயல்திட்டங்கள் வருமோ என எதிர்பார்த்து ஏமாந்தேன்..பிரச்சினையை சொல்லி அழுவதில் எந்த ஒரு பயனுமில்லை.
ஒரு நகரின் ஆட்டோ பிரச்சினைக்கு கூட விவாதித்து தீர்வு காணமுடியாத நம்மால் எங்கே 2G,3G எல்லாம் சமாளிப்பது?
I think most of us talk to hear our own voice..தமிழில் சொன்னால் சோப்ளாங்கிகள்.
நன்றி

Cable சங்கர் said...

ganpat.. naan ready enna seiyalam solllunga..

Ganpat said...

அரசு ஆட்டோ பர்மிட் விதிமுறைகளை தளர்த்திவிட்டதாக சொல்லிவருகிறது எனக்கு என்னமோ இதுவே பொய் எனத்தோன்றுகிறது.

இரண்டு லட்சமா ரூபா செலவில் ஒரு ஆட்டோவை on road கொண்டு வந்து விடலாம்.(எல்லா செலவும் உட்பட)இதற்கு வருட வட்டி.ரூ.24000,அதாவது ஒருநாளைக்கு சுமார் ரூ.70.ஒரு மணிக்கு 15கி.மீ.என பத்து மணிநேரம் ஓட்டினால் 150கி.மீ சவாரி கிடைக்கும்.
பெட்ரோல் லிட்டருக்கு ரூ 75;ஒரு லிட்டருக்கு 20கி.மீ கொடுக்கும் அதாவது ஒரு கி.மீக்கு பெட்ரோல் செலவு சுமார் ரூ.3.5 பராமரிப்பு ஒரு.கி.மீ.க்கு ரூ 1 வட்டி கி.மீக்கு ரூ0.5 மொத்தம் ரூ.5.
எனவே கி.மீக்கு ரூ.8 வாங்கினால் கூட ஒரு நாளைக்கு ரூ.450 தேறும் அதாவது 25 நாட்களுக்கு ரூ.11250.
இவ்வளவு எளிய,முதலீடு குறைந்த லாபம் உள்ள தொழிலில் அனேகம பேர் ஈடுபட முன்வருவர்.அதை தடுக்கவே இந்த பர்மிட் முறை என்பது ஏன் சந்தேகம்.உங்கள் கருத்து என்ன?