கவிதையான டைட்டில், அதை விட இன்ஸ்பயரிங்கான போஸ்டர் டிசைன், சட்டென ஒரு ஆர்வத்தை ஏற்படுத்தும் ட்ரைலர் எல்லாம் பார்த்தவுடன் ஏதோ இவங்களுக்குள்ள இருக்கும் என்ற நம்பிக்கையில் பார்க்கப் போன படம்.
ஹீரோ ஒரு உதவி இயக்குனர், அரை சொட்டை தலையன் ஒருவனை தயாரிப்பாளர் என்று இயக்குனரிடமும், தயாரிப்பாளரிடம் நீங்க தான் ஹீரோ என்றும் சொல்லி ஹீரோவின் அஸிஸ்டெண்ட் ப்ரஜெக்ட்டை கரெக்ட் செய்ய, உண்மை தெரிந்து ஹீரோ இவனெல்லாம் ஹீரோவாவென சொட்டைத்தலையனை அடித்துவிட, இது வரை செலவு செய்த மூன்று லட்ச ரூபாயை அஞ்சாம் தேதி அஞ்சு மணிக்குள் எடுத்து வைக்காவிட்டால் நடக்கிறதே வேறு என்று மிரட்டிவிட்டு செல்கிறார் சொட்டைத் தலையனின் மாமா. எங்கே சென்றாலும் நாலு படி ஏறினா நாற்பது படி இறங்கும் நிலையில் இருக்கும் ஹீரோ ஒரு ரோசனையாய் காபிடே காப்பி ஷாப்புக்கு செல்ல, அங்கே ஒரு அழகிய பெண்ணை சந்திக்கிறான் பார்த்த மாத்திரத்தில் காதல் கொள்கிறான். அந்த காபி ஷாப்பில் இன்னொரு ஜோடி, தன் பையனுடன் வருகிறார்கள் இருவருக்கும் ஏகப்பட்ட கருத்து வேறுபாடு, எடுத்ததெற்கெல்லாம் சண்டைப் போட்டுக் கொண்டிருக்கிறாள் மனைவி, அவளை உதாசீனப்படுத்தும் கணவன், தன்னை எழுத்தாளர் என்று சொல்லிக் கொண்டு லேப்டாப்பை ஆன் செய்துவிட்டு சும்மாவே உட்கார்ந்திருக்கும் ஒருஎழுத்தாளர், அந்த காபி ஷாப்பின் மேனேஜர் சுப்பு. வியாபாரம் டல்லடிப்பதால் எப்போது வேண்டுமானாலும் கடையை மூடிவிடக்கூடிய நிலையில் யோசனையில் இருக்கிற நிறுவனத்திடம் எக்ஸ்டென்ஷன் எதிர்பார்த்திருக்கிறவர். தன் பிரச்சனையை மீறி தன்னிடம் வேலை பார்க்கும் கருணாவின் எதிர்காலத்தைப் பற்றியும், அவனது படிப்பைப் பற்றியும் அக்கறை கொண்டவர். எதைப் பற்றியும் கவலைபடாத வரும் பிகர்களை உசார் செய்து அவர்களுடன் சல்லாபிப்பதற்காகவே வேலை செய்யும் பொறுப்பற்ற இளைஞன் ஒருவன் என்று இவர்களை வைத்து ஒரு காபி ஷாப்பிலேயே படம் ஆரம்பித்து, அங்கேயே முடியும் கதைக் களன். கேட்டவுடன் அட போட வைக்கும் களன் தான் என்றாலும், அதை சொன்ன விதத்தில் நம் பொறுமையை சோதித்து விடுகிறார்கள்.
ஹீரோவாக ஆரி. பார்க்க ஸ்மார்ட்டாக இருக்கிறார். க்ளோசப்களில் கொஞ்சம் ரியாக்ஷன் செய்யவும் தெரிந்திருக்கிறார். எதிர்காலத்தில் நல்ல கதைகளில் நடித்தால் பிரகாசிக்க வாய்ப்புண்டு. ஹீரோயினாக சுபா. குட்டியாய் கைக்கு அடக்கமாய் இருக்கிறார். நன்றாக தமிழ் பேசுவதாய் ஹீரோ கிண்டல் செய்ய பல ஊர்களில் சுற்றியவள் என்பதால் தனக்கு சுமராய்த்தான் தமிழ் வருமென்று சொல்லி அதே போல பல காட்சிகளில் கடித்து பேசினாலும் அருவியாய் வாழ்க்கையைப் பற்றி, காதலைப் பற்றியெல்லாம் உபன்யாசம் செய்யும் அளவிற்கு பேசுகிறார். மிக க்ளோசப்பில் கொஞ்சம் பயமுறுத்துகிறார்.
படத்தின் சுவாரஸ்யம் என்றால் காபி ஷாப்பில் வேலை செய்யும் கருணா,சதீஷ் காம்பினேஷன் தான். அவர்கள் மட்டும் இல்லையென்றால் ரொம்பவே கஷ்டமாயிருக்கும். பாலாஜியின் ரியாக்ஷன்கள் ஆங்காங்கே நன்றாக இருந்தாலும் சம்பந்தமேயில்லாமல் காபிஷாப் மேனேஜரும், அவரும் பேசிக் கொள்ளும் காட்சிகளில் அநியாய பிரசாரம்.
படம் முழுக்க உட்கார வைத்த க்ரெடிட் ரெண்டு பேருக்கு உண்டு, ஒருவர் ஒளிப்பதிவாளர் கோபி அமர்நாத். முழுக்க முழுக்க வரும் இண்டீரியர் காட்சிகளிலும் சரி, வெளிப்புற படப்பிடிப்பிலும் சரி ப்ளீசிங் விஷுவல்ஸ். முக்கியமாய் பாண்டிச்சேரி வீதிகளிலும், லீ கேஃபில் வரும் ஷாட்களும் கண்ணில் ஒற்றிக் கொள்ளலாம் ரகம். ஒரு பாடல் காட்சியில் மட்டும் ஆங்காங்கே ப்ளீச் அடிப்பதும், எடிட்டிங்கும் உறுத்துகிறது. இன்னொருவர் இசையமைப்பாளர் அச்சு. தனியாய் கேட்க சில பாடல்களும் ஆங்காங்கே சின்னச் சின்ன பின்னணியிசை தொகுப்புகளும் இன்ஸ்பயரிங். ஆர்ட் டைரக்டர் ஜெ.பி.கே.பிரேமின் கை வண்ணம் காபி டே செட்டில் நன்றாக வெளிப்பட்டிருக்கிறது.
எழுதி இயக்கியவர் நாராயண் நாகேந்திர ராவ். கதையில் வரும் கேரக்டர்களின் ப்ரச்சனையாய் சொல்லும் எதுவுமே படம் பார்க்கும் யாருக்கும் பாதிக்கவேயில்லை. மூன்று லட்ச ரூபாய் பணம் கொடுக்க முடியாமல் வீட்டில் ஒளிந்து கொண்டு இருக்கும் ஹீரோ அடுத்த காட்சியில் பிவிஆரில் ப்டம் பார்க்க போய் டிக்கெட் க்யூவில் நிற்கிறான். அங்கே டிக்கெட் கிடைக்காமல் இருக்க, காபி டேவுக்கு காப்பி சாப்பிட வருகிறான். என்ன ஒரு முரண் பாருங்கள். ரவுடிகள் துரத்தும் நேரத்தில் ஹீரோ செய்யும் செயல்களில். அதில் உட்சபட்சமானது பாத்த மாத்திரத்தில் வரும் காதல். சுத்தமாய் ஏறவேயில்லை. அடுத்த ப்ரச்சனையாய் இவர் சொல்லியிருப்பது காதலித்து கல்யாணம் செய்து , ஒரு பிள்ளை பெற்ற பிறகு அவர்களுக்குள் ஏற்பட்ட விரிசலை சொல்ல, எடுத்த எடுப்பிலேயே “உங்க பையன் கூப்பிட்டான்னு இங்கே ஏன் கூப்பிட்டு வந்தீங்க என்று ஆரம்பிக்கிறார் மனைவி. எல்லாக் கேரக்டர்களும் முதல் பாதி முழுவதும் பேசியதையே பேசிக் கொண்டிருக்கிறார்கள். அதற்கு நேர்மாறாக இரண்டாம் பாதியில் எல்லோரும் பல அருமையான டயலாக்குகளையும் பேசுகிறார்கள். பெரும்பாலும் ப்ரீச்சிங்காகவே இருக்கிறது. அதில் பெரும்பாலும் ஏதோ புத்தகங்களில் படித்தது போலவே இருப்பது மைனஸ்.
ப்ளஸ்பாயிண்ட் என்று பார்த்தால் நகைச்சுவைக்காக என்று தனியாய் எழுதாமல் காபிஷாப்பில் வேலை பார்ப்பவர்களை வைத்தே நகர்தியவிதம். போனில் நீ வை.. இல்ல நீ வை. அப்புறம் என்பதையே மாற்றி மாற்றி பேசுவதை கருணா கிண்டல் செய்யும் காட்சிகள், மிகச் சில நச் வசனங்கள், கோபியின் ஒளிப்பதிவு, ப்ரோமோட் செய்த விதம் ஆகியவைதான்.
கேபிள் சங்கர்
Post a Comment
26 comments:
ஹ்ம்ம், ரொம்ப எதிர்பார்த்த படம் ..
நானும் தான் இளா.
"ஹீரோயினாக சுபா. குட்டியாய் கைக்கு அடக்கமாய இருக்கிறார்."
அண்ணே
படம் ஓடும்போது ஸ்க்ரீன்ல கை வச்சது . .
நீங்கதானா அது .. .. !?
உண்மைத் தமிழன் நன்றாக இல்லை என்கிறார். நீங்கள் நன்றாக இல்லை என்கிறீர்கள். யாரை நம்புவது?
நீங்க சுஜாதா வாசகர்.உங்களுக்கு இப்படத்தை தப்பு..ரைட்டுன்னு சொல்ற உரிமை இல்லை.
காரிகன்னு மகான் ஒருவர் இருக்கார்.
அவர்கிட்டெ கேட்டுகிட்டு பதிவெழுதவும்.
அவரை பத்தி தெரிஞ்சுக்கணும்னா என் பிளாக் வரணும்.
ஏன்னா அவர் எனக்கு மட்டும் கமெண்ட் போடற கடவுள்.
அவர் உங்க பிளாக் வரணும்னா நீங்க கமலை பாராட்டி ஒரு பதிவு போடணும்.
//ப்ரோமோட் செய்த விதம்//
அதான் ரிலீஸ் அன்னைக்கே மண்டைல அடிச்சிட்டீங்களே
@உலக சினிமா ரசிகன்.
கமலைப் பற்றி தனியே பாராட்டி எழுத நிறைய விஷயம் இருந்தாலும் இப்போதைய தேவை என்ன?:)
//கமலைப் பற்றி தனியே பாராட்டி எழுத நிறைய விஷயம் இருந்தாலும் இப்போதைய தேவை என்ன?:)//
என்னுடைய லேட்டஸ்ட் பதிவையும்...அதுக்கு வந்த கமெண்டையும் வந்து படித்து பார்க்கவும்.
படிச்சீங்கனா...காரிகன்னு ஒரு மகான் அவதாரத்தை புரிந்து கொள்ளும் வாய்ப்பு கிடைக்கும்.
நீங்க சினிமாவுல இருக்கிங்க...அவர் ஆசிவாதம் வேண்டாமா?
நம்பி போலாம்னு இருந்தேன்.
poster design nalla irukku
தன்னை எழுத்தாளர் என்று சொல்லிக் கொண்டு லேப்டாப்பை ஆன் செய்துவிட்டு சும்மாவே உட்கார்ந்திருக்கும் ஒருஎழுத்தாளர்,.........................////////////////////////////////
இந்த பயபுள்ள யாராக இருக்கும் .....................ஒருவேளை அவரா இருக்குமோ .............இல்லைனா இவரா இருக்குமோ .........?
கன்பீஸ் ஆயிட்டேன் ..................
அஞ்சாசிங்கம். நீ நினைக்கிற ஆள் தான் ஆனா பேர் சொல்ல மாட்டேன்.
Cable சங்கர் said...
அஞ்சாசிங்கம். நீ நினைக்கிற ஆள் தான்
ஆனா " பேரு " சொல்ல மாட்டேன்.
அண்ணே சரியா சொல்றேனா . . .!?
sir me 2 impressed by first poster (in top ur review)of the film.......//கவிதையான டைட்டில், அதை விட இன்ஸ்பயரிங்கான போஸ்டர் டிசைன், சட்டென ஒரு ஆர்வத்தை ஏற்படுத்தும் ட்ரைலர் எல்லாம் பார்த்தவுடன் ஏதோ இவங்களுக்குள்ள இருக்கும் என்ற நம்பிக்கையில் பார்க்கப் போன படம்..//
What about the Music?
மொக்கையான படத்துக்கு உங்க விமர்சனம் அருமை.
இவரது திறமை அருமையான படங்களுக்கு, மொக்கையா விமர்சனம் எழுதுவதிலும் உள்ளது.
நானும் மிக எதிர்பார்த்து சென்ற படம் :-( காதலிக்காக புலம்புகிறவனுக்கு அட்வைஸ் சொல்லியபடி அருகில் இருக்கும் பெண்ணிடம் தன் காதலை ஹீரோ சொல்வது போல் மிக புத்திசாலித்தனமாக (நீண்ட காட்சி என்றாலும்)காட்சியை யோசிக்க தெரிந்த இயக்குனர்.படத்தின் சுவராஸ்திற்காக இன்னும் யோசித்திருக்கலாம்.
கேபிள்ஜி,
ஹாலிவுட் பாணியில் லைவ் ரெக்கார்டிங்னு போடுறாங்க,அதைப்பற்றி எதுவும் சொல்லவில்லை, தமிழ் சினிமா ,இந்திய சினிமா எல்லாமே இது வரை டப்பிங்க் தான்.
இதுக்கு முன்னர் தமிழில் லைவ் ரெக்கார்டிங்கில் படம் வந்திருக்கா தெரியவில்லை.
கமலின் ஹேராம், மற்றும் சில கமல் படங்கள் தமிழிலும், ஹிந்தியில் நிறைய படங்கள் லைவாக வந்துவிட்டது.
அநேக ஆங்கில வார்த்தைகள், தொழில்நுட்ப விமர்சனங்கள், இந்த விமர்சனத்தில் கதையைப் பற்றி சொல்லும் பொழுது, புரிந்து கொள்வதில் குழப்பம் வருகிறது.
பட விமர்சனத்தை எழுதிவிட்டு ஒருமுறையாவது வாசித்து பார்ப்பீர்களா சங்கர். வாசகர்களின் நலன் கருதி கொஞ்சம் படித்து பார்த்து பிறகு பதிவிடுங்களேன்.
கேபிள்ஜி,
விக்கிப்பீடியாவில், லகான்,தில் சத்தா ஹை, ஜோதா அக்பர் ஆகியவற்றை மட்டும் லை ரிகார்டிங் வகைப்படம்னு போட்டு இருக்காங்க,1960க்கு முன்னர் இந்தில எல்லாப்படமும் லைவ் ரெக்கார்டிங்கில் தான் எடுத்தாங்க என்றும் போட்டு இருக்காங்க.
ஹே ராம் நடித்தவர்களே டப்பிங் பேசினார்கள்னு போட்டு இருக்காங்க.
ஒரு லோ பட்ஜெட் படத்தில் புதுமுகங்களை வைத்து லைவ் ரெகார்டிங் செய்தது ,மாலைப்பொழுது எனும் போது கவனிக்கதக்கதே. பாக்தாத் கபே என்ற ஜெர்மானிய/ஆங்கிலப்படத்தின் சாயல்/தழுவலாகவே இப்படம் இருக்கலாம் என நினைக்கிறேன்(இன்னும் இப்படம் பார்க்கவில்லை, நான் பார்க்கும் வரைக்கும் தியேட்டர்ல ஓடுமானு தெரியலை)
@vavval
cable is right. hey ram ram is live recording. Infact those time kamal confessed using low noise generator to enable live recording. even i believe virumaandi is also live recording.
wikipediaவில் தகவல் இன்னும் அப்டேட் செய்யப்படவில்லை என்று நினைக்கிறேன். அல்லது தவறான தகவல்களை எழுதியிருக்கக்கூடும். ஹேராம். 100 சதவிகிதம் லைவ் ரிக்கார்டிங், அதே போல ஆயுத எழுத்தும் லைவ் ரெக்கார்டிங்.
கேபிள்ஜி,
முன்னர் லோகநாயகரின் பேட்டியிலும் இதை படித்த நியாபகம் இருக்கு, சமீபத்தில் ஒரு ஒலியமைப்பு பதிவுக்காக தேடியப்போது இப்படி தான் தகவல் கிடைத்தது அதையே பகிர்ந்துக்கொண்டேன்.
லைவ் ரிக்கார்டிங்க்லாம் முன்னரே செய்யப்பட்டு இருக்கும் என்பது சரியே.
ஆயுத எழுத்தும் லைவா புது தகவல் ,நன்றி!
ஹே ராம்,ஆயுத எழுத்தெல்லம் ஒரே சமயத்தில் இந்தி,தமிழ்னு எடுத்தாங்க, அதில லைவ் ரெக் செய்ய இன்னும் அதிகம் மெனக்கெட்டு இருக்க வேண்டும்.
ஹாலிவுட்டில் படுக்கை அறைக்காட்சில கூட லைவ் ரெக்கார்டிங்க் செய்ய மைக்கை ஒரு நீண்ட கம்பியுடன் இணைத்து தலைக்கு மேல புடிச்சு கிட்டு எடுக்கிறது, மேக்கிங்ல காட்டும் போது செம சிரிப்பா இருக்கும் :-))
சில சுமாரான படங்களில் மைக் கூட காட்சியில் தெரியும் :-))
-------
ஜெகன்,
ஆமாங்க, ஆனால் அப்படி போட்டு இருக்கு என்பதையே சொன்னேன்.மாலைப்பொழுதின் படம் லைவ் னே பலருக்கும் தெரியலை.புது முகம், சின்ன பட்ஜெட் என்பதால் அதிகம் தெரியவில்லைனு நினைக்கிறேன்.
shankarji virumandi live recording thana......?
Post a Comment