விளம்பரங்களில் த்ரில்லர் என்று ஸ்டாம்ப் போல டிசைன் செய்து விளம்பரப்படுத்தியிருந்தார்கள். இதை இரண்டு விதமாய் எடுத்துக் கொள்ளலாம். ஒன்று இது த்ரில்லர் படம்பா.. வேற எதையும் எதிர்பார்த்து வந்திராதீங்க. இரண்டு நம்மை தயார் படுத்தி படத்திற்கு அழைத்துச் செல்வது. சமீபத்தில் தமிழில் த்ரில்லர் படம் பார்த்து நாளாகிவிட்டிருந்ததால் ஒரு ஆர்வத்தில் சென்றது எவ்வளவு பெரிய ரிஸ்க் என்று படம் பார்த்தவுடன் தான் தெரிந்தது.
கொடைக்கானலில் தேனிலவுக்குப் போன ஜோடி ரொமான்ஸின் உச்சத்தில் ஒர் இடத்தில் மாட்டிக் கொள்ள, அங்கு தங்கும் போது பெண்களை கிட்டத்தட்ட அடித்து அரை மயக்க நிலையில் வைத்து உடலுறவு கொண்டு, அவர்களின் தோல்களை பிய்த்து கொடூர கொலை செய்து அதை வீடியோவாக எடுக்கும் கும்பலை வீடியோ எடுத்து விடுகிறாள் நான்ஸி. அதை பார்த்த அந்தக் குழு துரத்துகிறது. உடன் கணவன் இருந்தும் அவளுக்கு எந்தவிதமான உதவியும் செய்ய் முடியாமல் தவிக்கிறான் ஏன்? அவர்களிடமிருந்து அவள் தப்பித்தாளா? இல்லையா என்பதை சொல்ல நம்மை கொன்று எடுத்திருக்கிறார்கள்.
படம் ஆரம்பித்ததில் இருந்தே எதற்கு ஓடுகிறார்கள் என்று சொல்லப்படாமலே அவர்கள் காரில் ஓட, பின்னால் ஜிப்ஸியில் துரத்த, ஓட, துரத்த, ஓட, துரத்த, ஓட, துரத்த, என்ன எழுதியதைப் படிக்கும் போதே போரடிக்கிறது இல்லையா? அதை விட போர் அடிக்கிறது இவர்கள் திரில்லாய் காட்டியிருப்பதாய் எடுத்திருக்கும் இந்த காட்சிகள். முடியலை. இடைவேளையில் தான் சொல்கிறார்கள் கணவன் ஏன் அவளுக்கு உதவ முடியவில்லையென்று.
பல சமயங்களில் டிஜிட்டல் டெக்னாலஜியின் வளர்ச்சியைக் கண்டு ஆச்சர்யப்படும் நேரத்தில் ஏண்டா இதை கண்டு பிடித்தார்கள் என்று எரிச்சல் அடையவும் செய்வேன். அப்படி எரிச்சலடைய செய்ததில் பொல்லாங்குக்கு பெரும் பங்கு உண்டு. டிஜிட்டல் கேமராவை எடுத்துக் கொண்டு, ஏதாவது காட்டிற்கு போய்விட்டு, ஒரு நாலு பேரை வைத்து சின்ன பட்ஜெட்டில் த்ரில்லரை எடுத்துவிடுவோம் என்று ராத்திரியில் லைட் இல்லாமல் அரையிருட்டில் படமெடுத்து, அதை ஒழுங்காய் டி.ஐ கூட செய்யாமல் ஸ்கீரினில் டார்ச் லைட் அடித்து பார்த்தால் கூட எதுவும் தெரியாத நிலையில் ஆளாளுக்கு அந்த அடர் காட்டில் ஆ..ஆ. என்று தொடர்ந்து எதற்காக ஹீரோயின் கத்திக் கொண்டேயிருக்கிறார் என்று தெரியவில்லை .கத்தினால் பின்னால் வரும் ஆட்களுக்கு தெரிந்துவிடாதா? ஆளாளுக்கு ஓடும் போது, நடக்கும் போதெல்லாம் கையில் இருக்கும் துப்பாக்கியை மிஸ் செய்துவிட்டு, கண்டின்யூட்டி இல்லாமல் மீண்டும் துப்பாக்கியோடு அலைகிறார்கள். சமயங்களில் சம்பந்தமேயில்லாமல் நடுக்காட்டிலிருந்து செட்டுக்குபோய் பாட்டெல்லாம் பாடுகிறார்கள். டென்ஷனாய் போகும் படத்திலிருந்து நமக்கு ரிலாக்ஸேஷன் தருகிறார்களாம். இதை போடாமல் சீக்கிரம் படத்தை முடித்தால் இன்னும் ரிலாக்சாய் இருக்கும் என்று யாரிடம் சொல்வது?
ஹீரோயின் முதற்க் கொண்டு படத்தில் வரும் எல்லாருமே சிறந்த நடிப்பை கொடுப்பதாய் நினைத்துக் கொண்டு ஓவரான ஓவராய் நடித்துக் கொட்டுகிறார்கள். முடியலை. நடுவில் காட்டிலாக்கா ஆபீஸராய் வந்தவர் வேறு போன் பேசும் போதே ரியாக்ஷனில் பின்னுகிறார். அநேகமாய் அவர் தயாரிப்பாளரர்களில் ஒருவராய் இருக்க வேண்டும். வாழ்த்துக்கள். சுரேஷ் அர்ஸின் எடிட்டிங் என்று போட்டிருந்தார்கள். ஆங்காங்கே ஒரு சில நல்ல டாப் ஆங்கிள் ஷாட்களும், லோக்கேஷன்களும் மட்டுமே சிறப்பாயிருந்தது. இசை எரிச்சல் மிகுந்த எரிச்சல். படத்திற்கு ஏன் இந்த பெயரை வைத்தார்கள் என்று கேட்டுவிடக்கூடாது என்று ஒரு சாமியார் கேரக்டர் பஞ்ச் டயலாக்காய் சும்மா எங்க மேல பொல்லாங்கு சொல்லாதீங்க என்று சொல்லும் படியாய் வைக்கப்பட்டிருக்கும் காட்சி நகைச்சுவை பஞ்சத்தை தீர்த்தது என்றேஎ சொல்ல வேண்டும். படத்தை விட இந்த மாதிரி படங்கள் எப்படி நம்மள இம்சைப் படுத்தப் போவுதோங்கிற பயம் இருக்கே அது தான் செம த்ரில்லா இருக்குங்க என்றார் ஒரு பத்திரிக்கை நண்பர். அதென்னவோ உண்மைதான்.
கேபிள் சங்கர்
Post a Comment
10 comments:
Engalukkaga neenga romba risk edukkareenga Saar. Udamba parthukkonga....
ஹைய்யோ ஹைய்யோ .... முடியலை வலிக்குது.... கேபிள்ஜி
அப்ப படம் வேஸ்ட் ...
இன்று
கண்ணை நம்பாதே ...
குப்பைப் படமா?
///கொடைக்கானலில் தேனிலவுக்குப் போன ஜோடி ரொமான்ஸின் உச்சத்தில் ஒர் இடத்தில் மாட்டிக் கொள்ள////படிச்சதும் பக்னு ஆயிடுச்சு...படமே ஒரு மாதிரியோன்னு...
நல்ல விமர்சனம்
நன்றி,
ஜோசப்
--- ezedcal. com (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம்)
waiting fr the review of ice age 4..........
உங்க ஒரே மன தைரியத்தை பாராட்டும் விதமாக உங்களுக்கு ஒரு பொல்லாங்கு டிவிடி பார்சல்...
நல்ல நாடகம் சார்ந்த படம்
Post a Comment