Thottal Thodarum

Jul 25, 2012

Thattathin Marayathu

 மலையாளப் படங்களை தியேட்டர்களில் பார்த்து நிரம்ப நாளாகிவிட்டது. அதற்கு காரணம் லாலேட்டனும், மம்முவும்தான். ஒரு காலத்தில் மலையாள படங்களை பார்க்க காரணமாயிருந்தவர்களும் அவர்கள் தான். கடந்த சில வருடங்களாய் அவர்களின் படங்களின் ட்ரைலரைப் பார்த்தாலே தெரித்து ஓடக்கூடிய வகையில் இருந்ததால் மலையாளக் கரையோரத்தில்  டிராபிக், பாஸஞ்சர் போன்ற படங்களைப் பார்த்து அவ்வப்போது மலையாளக் கரையோரம்கால் நினைத்துக் கொண்டிருந்தேன். சால்ட் அண்ட் பெப்பர் வேறு நன்றாய் இருப்பதாய் சொன்னார்கள். மலையாள திரையுலகில் புது வெள்ளமாய் வாரிசுகள் பல பேர் நுழைந்து கொஞ்சம் புதுக் காத்து வீசத் தொடங்கியிருப்பது சந்தோஷமாய் இருக்கிறது. அந்த வகையில் எழுத்தாளர், நடிகர், இயக்குனர் ஸ்ரீனிவாசனின் மகன் வினீத் ஸ்ரீனிவாசனின் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் இந்தப்படம் சமீபத்திய ஹிட் என்று சொன்னதால் ஆஜரானேன்.


மிடில்க்ளாஸ் பையன்/ பணக்காரப் பெண், இந்து/ முஸ்லிம் காதல் கதை. அவர்களுக்கு உதவும் ஒரு இன்ஸ்பெக்டர், மற்றும் நண்பர்கள் என்று வழக்கமான காதல் கதைதான் என்றாலும் காதலிக்கப்படும் ஒவ்வொருவருக்கும் அந்த காதல் புதுசானது என்பது போல அதைச் சொன்னவிதத்தில்தான் ஜெயித்திருக்கிறார்கள்.
வினோத்தாக நிவீன் சட்டென பார்த்தவுடன் பிடிக்கிற முகம். ஒரு பெண்ணைப் பார்த்ததும் காதல் வயப்பட்டு, அவள் பின்னால் அலைவதும், காதல் ஜுரம் வந்து வீட்டுச் சுவரேரி, நடு ராத்திரியில் காதல் சொல்லும் காட்சியில் ஆகட்டும், காதல் ஓகே ஆனதும் காட்டும் உற்சாகமாகட்டும் நன்றாகவே செய்திருக்கிறார். 

ஆயிஷாவாக இஷா தல்வார். காத்ரீனா கைய்ப்பையும், ப்ரொபைலில் ஸ்ருதியையும் கலந்தடித்தார் போல் இருக்கிறார். முக்காடு இட்ட ஆயிஷாவை படம் பார்க்கும் நாமே பார்த்துக் கொண்டிருக்கலாமே என்று நினைக்கும் அளவிற்கு அழகாயிருக்கிறார். நடிப்பதற்கு என்று பெரிய ஸ்கோப்பில்லாவிட்டாலும், ஆங்காங்கே கண்கள் பேசும் மொழிகள் அட அட அட.. அதுக்காக ஆயிரம் ரிஸ்க்கை ரஸ்காய் சாப்பிடலாம் என்று நினைக்கும் அளவிற்கு இளைஞர்களை மயக்கும் பார்வை. 

இவர்களுடன் நல்ல சுவாரஸ்யமான கேரக்டரில் மனோஜ்.கே.ஜெயன். காதலுக்காக வினோத்துக்கு உதவும் தலைச்சேரி போலீஸ் இன்ஸ்பெக்டர். கொஞ்சம் கிளிஷேவான கேரக்டர் தான் என்றாலும் இண்ட்ரஸ்டிங்.
படத்தின் பெரிய பலம் ஒளிப்பதிவாளர் ஜோமன் டி.ஜானும், இசையமைப்பாளர் ஷான் ரஹ்மானும், வசனகர்த்தாவும் என்றால் அது நிஜம். அழகான இஷாவை இன்னும் அழகாய் காட்டிய காட்சிகளாகட்டும்,   பாடல்களின் மூலம் காதலை அதன் அழகோடு உணர வைத்த இசையாகட்டும் க்யூட். மிக முக்கியமாய் வசனங்கள். முதல் காட்சியில் இரண்டு சிறுவர்கள் பேசிக் கொள்ளும் காட்சி, அதில் ஹீரோ சின்னப் பையனாய் இருக்கும் போது ஒரு முஸ்லிம் சிறுமியைப் பார்த்து, கல்யாணம் பண்ணினா இவளைப் போன்ற அழகான “உம்மாச்சிக் குட்டி” பண்ணிக்கணும் என்று சொல்ல, சின்ன வயசில அழகாயிருக்கிறவள் பெரியவள் ஆனதும் எப்படி இருப்பாளோ என்று நண்பன் கேட்க, சின்ன வயசில் ஆழகாயிருக்கிற முஸ்லிம் பெண் பெரியவள் ஆனதும் அப்படியே இருப்பாள் என்று சொல்லும் காட்சி கொஞ்சம் ஓவர் தான் என்றாலும் ரசிக்கக்கூடியவை. காதலுக்கும் மதத்திற்கும் சம்மந்தமேயில்லை என்பது போன்ற டயலாக்கைப் பேசிவிட்டு என்னடா சின்னப்பசங்கள் இதையெல்லாம் பேசுகிறார்களே என்று யோசித்தால் இது மாமா போனில் லவ் பண்ணும் போது பேசினது என்று சொல்லி சமாளித்திருப்பது புத்திசாலித்தனம்.
எனக்கு கல்யாணனு மத்தவங்க சொல்லித்தான் தெரியும்.” “அப்படி எனக்கு இருக்க வேண்டாம்” என்று ஆயிஷா சொன்னதும். “அப்படித்தானே நம்ம வீட்டு பெரியவங்களும் சமூகமும் முடிவு செய்யறாங்க” என்று அவள் அக்கா சொல்ல, “எனக்கு கடவுள் மேல நம்பிக்கையிருக்கு. எனக்கு ஒரு வழிய காட்டுவாரு” என்று ஆயிஷா சொல்ல, “கடவுளையெல்லாம் நம்பாதே, எனக்கு கல்யாணம் ஆகும் போதும், என்னை கொடுமைப்படுத்தி தலாக் சொல்லி அனுப்பி வைக்கும் போதும் அவர் எங்கே போய்ருந்தார்?” என்பது போன்ற  மத ரீதியாய் பெண்களுக்கு மறுக்கப்படும், நசுக்கப்படும் உணர்வுகளை வெளிக் கொணரும் சாட்டையடி வசனங்கள். 

ஆயிஷா, வினோத்தின் காதலை ஏற்கும் நேரத்தில் “என் சமூகத்தில் பெண்களுக்கு போடும் கட்டுப்பாடுகளால் வெளிப்படுத்த முடியாத உணர்வுகளை வெளியே சொலல் முடியாமல் தவிக்கும் இளம்பெண்கள் ஏராளம். அவர்களில் ஒருத்தியாய் இருக்க விரும்பவில்லை:” என்று சொல்வாள். இந்துப் பையனும் முஸ்லிம் பெண்ணும் ஒரு காரில் வந்ததைப் பார்த்து, வழி மறித்து விசாரித்துக் கொண்டிருக்கும் போது உடன் வரும் முஸ்லிம் நண்பன் “இது என்ன இந்தியா பாகிஸ்தான் ப்ரச்சனையா? இல்லை மாரல் போலீஸிங்கா?” என்று  கலாய்த்து அவர்களை மீட்கும் இடத்திலும்,  க்ளைமாக்ஸில் ஹீரோயினின் அப்பா, பெரும்பாலும் பேசாமலேயே வரும் சீனிவாசன் “பர்தாவால் நம் பெண்கள் உடம்பை மறைப்பது  மானத்தையும், கற்பை காக்கவே தவிர, அவர்களின் கனவுகளை, ஆசைகளை மூடுவதற்கில்லை” எனும் வசனம் அட்டகாசம். இதற்கு முன் அவரின் மனைவி எவ்வளவு இனிமையானவள், எவ்வளவு திறமையானவள், அவளின் ஆசா பாசங்கள் எல்லாம் குடும்பம், மற்றும் சமூக கட்டாயம் காரணமாய் கனவுகளை அடக்கிக்கொண்டு இருந்த கஷ்டத்தை தான் உணர்ந்த விதத்தை சொல்லும் போது சாதாரண காதல்  கதை ஒரு முக்கிய அந்தஸ்தை அடைந்து விடுகிறது. பாம்பே படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்ததைப் போல இதற்கு கேரளாவில் எதிர்ப்பு கிளம்பாமல் இருப்பதே நிஜத்தை மக்கள் ஏற்றுக்கொள்ள தயாராகிவிட்டார்கள் என்பதை சொல்கிறது.
மைனஸாய் சொல்லப் போனால் பல க்ளிஷேவான காதல் காட்சிகள், காமெடியான போலீஸ் கும்பல், வீட்டை விட்டு வெளியே வந்த வினோத் பிஸினெஸ் செய்து வசதியாவதும், பர்தா கடை ஓப்பன் செய்வது போன்ற சிலபல விஷயங்கள் எல்லாம் தான் என்றாலும், இளமையான திரைகக்தை, ஷார்ப்பான வசனங்கள், மிக இயல்பான திணிக்காத நகைச்சுவை, அருமையான ஒளிப்பதிவு, நல்ல இசை என்று கலந்துக்கட்டி ஒரு ஃபீல் குட் படத்தை அளித்திருக்கிறார் வினீத் ஸ்ரீனிவாசன். 
கேபிள் சங்கர்

Post a Comment

12 comments:

kalil said...

vadai enakku....

kalil said...

vadai enakku...

kalil said...

Thala.. poster design seems like VTV

குரங்குபெடல் said...

"பாம்பே படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்ததைப் போல இதற்கு கேரளாவில் எதிர்ப்பு கிளம்பாமல் இருப்பதே நிஜத்தை மக்கள் ஏற்றுக்கொள்ள தயாராகிவிட்டார்கள் என்பதை சொல்கிறது. "


பம்பாய் படத்தில் வணிகத்திற்காக . .

இயல்புக்கு மாறாய்

சில சர்ச்சைகளை சேர்த்திருப்பார் Money ரத்னம்

அதனாலேயே எதிர்ப்பு கிளம்பியது


நல்ல பகிர்வு

நன்றி

செம்மலர் செல்வன் said...

22 Female kottayam படமும் பாருங்க,பாஸ். நல்லா இருக்கு.

arul said...

nalla pathivu anna

rajamelaiyur said...

நல்ல விமர்சனம்

rajamelaiyur said...

இன்று

சினிமா ........சினிமா ....

sathish77 said...

கேபில்ஜி நல்ல விமர்சனம். 22 F கோட்டயம் படம் பார்த்தீங்களா? ரீமா கல்லிங்கள் செமையா நடிச்சிருப்பா. இந்த ஹீரோயின் பார்க்க எமி ஜாக்சன் சாயலில் இருக்கு. சீனிவாசன் வாரிசு அவுற மாதிரி நிறைய நல்ல படங்கள குடுத்த நல்லா இருக்கும்.

வவ்வால் said...

கேபிள்ஜி,

மலையாளத்திலும் மக்கள் மம்மூக்கா,லாலேட்டன் வகையறாக்களை பார்த்து சலிச்சுப்போய் ஃப்ரெஷ்ஷான படங்களை எதிர்ப்பார்க்கிறாங்க,எனவே சுமாரா இருந்தா கூட வரவேற்பு கொடுக்கிறாங்க,கொஞ்சம் மெனக்கெட்டாலே கைக்கொடுத்து ஹிட் ஆக்கிடுவாங்க போல.



படம் நல்லா இருந்தால் மொழிப்புரியாமலே பார்க்கலாம், ஆனால் சப் டைட்டில் போட்டாங்களானு சொல்லவில்லை :-))

வவ்வால் said...

தமிழுக்கு அடுத்த மலையாள ஹீரோயின் இறக்குமதி இஷா தல்வார் தான்னு நினைக்கிறேன் , யங்க் வித்யா பாலன் போல எனக்கு தெரியுது.

tjsadhik said...

மனிதர்கள் செய்யும் தவறுக்கு மதம் என்றுமே பொறுப்பாகாது. இஸ்லாம் கூறும் பெண் உரிமை பற்றி இயக்குனர் வினித் அறியவில்லை போலும்