வழக்கமாய் நான் ஆங்கிலப் படங்களை தமிழ் டப்பிங்கில் பார்பவன் இல்லை. முக்கியமாய் பைலட் போன்ற தியேட்டர்களில் படம் பார்ப்பதையே தவிர்பவன். வேறு வழியில்லாமல் கிறிஸ்டபர் நோலன் படம் என்பதால் தமிழில் பார்க்க முடிவு செய்தேன். அதற்கு காரணம் நோலனின் படங்களில் வரும் திரைகக்தையை சப்டைட்டிலுடனோ, அல்லது தமிழ் டப்பிங்கிலோ பார்த்தால் தான் பார்த்த மாத்திரத்தில் புரியும் அறிவு மட்டுமே இருப்பதால் இம்முறை தமிழ் வர்ஷனைப் பார்க்க முடிவுசெய்து பைலட்டுக்கு விட்டேன் என் வண்டியை.
இன்ஸ்செப்ஷனின் வெற்றியால் உலகம் முழுவதும் இந்த நோலனின் ப்டத்திற்கு எதிர்பார்ப்பு கூடியிருக்க, இந்த வாரம் வேறு தமிழ்படமே இல்லாததால் பேட்மேன் தமிழ், ஆங்கில வர்ஷன்ங்கள் எல்லாமே ஹவுஸ்புலலாகியிருந்தது. வேறு வழியில்லாமல் பைலடுக்கு போனேன். வழக்கம் போல ஐம்பது ரூபாய்க்கு டிக்கெட் வாங்கிக் கொண்டு உள்ளே சென்றால் முத ஷோ பார்த்த எவனோ நடக்கும் இடத்தில் வாந்தியெடுத்து வைத்திருந்தான். நல்ல வேளை என் சீட்டுக்கு அருகில் இல்லை. ஆனால் இந்த சம்பவம் எனக்கு ஏதோ ஒரு செய்தியை கொடுத்தது போல பட்டது. சரி. படத்தைப் பார்ப்போம் என்றால் ஸ்கீரின் சவுண்ட் படு லோவாக இருக்க, மொத்த தியேட்டரே “டேய்.. த்தா.. சவுண்ட வுடுறா” என்று கத்தியது. பின்பு ஏற்றிய பின்னும் பேட்மேன் பேசும் காட்சிகள் எல்லாம் படு மெலிதாய் கேட்டதால் மீண்டும் மக்கள் கத்தலில் வசனம் கேட்கவேயில்லை.
சென்ற பகுதியில் பாம் வைத்து ஊரையே காலி செய்ய நினைத்த வில்லனைக் பேட்மேன் கொன்றுவிட, அந்த வில்லனின் வாரிசு பேட்மேனை பழி வாங்க வந்து ஊரையே அழிக்க, மீண்டும் பாம் வைக்க வருவதும், அதை எப்படி பேட்மேன் முறியடித்தான் என்பதை ஆர அமர இரண்டேமுக்கால் மணி நேரம் கதற, கதற சொல்லியிருக்கிறார்கள். படம் அவ்வளவு மொக்கையா என்று கேட்பவர்களும் அப்படி இல்லை என்றும் சொல்ல முடியாது என்று தான் சொலல் வேண்டும். இன்ஸ்செப்ஷன் பட பாதிப்பிலிருந்து வெளிவராமல் ட்விஸ்டு வைக்கிறேன் ட்விஸ்டு என்று மாய்ந்து மாய்ந்து ஆளாளுக்கு ஒரு குட்டிக் கதை சொல்கிறார்கள். என்ன எழவு அது எல்லாமே ஏற்கனவே பார்த்த விஷயமாகவே இருப்பதால் படு அசுவாரஸ்யமாய் இருக்கிறது.
இப்படத்தின் மிக முக்கியமான தோல்வி திரைக்கதையில்தான். பெரும்பாலான காட்சிகளில் பேட்மேனாய் வராமல் சாதாரணனாகவே வருவதும், முதல்பாதி முழுவது எல்லோரும் மாய்ந்து மாய்ந்து பேசிக் கொண்டேயிருப்பதும். ஏகப்பட்ட லூப்ஹோல்களுடனான திரைக்கதையினால் அடுத்து என்ன நடக்கப் போகிறது என்பது உ.கை.நெ.கனியாய் தெரிவதால் சுத்தமாய் சுவாரஸ்யம் போய்விடுகிறது. அதிலும் பேட்மேன் ஒரு கயிற்றில் டைம்பாமை கட்டிக் கொண்டு, நடுக்கடலில் போய் வெடிப்பது போன்ற காட்சியெல்லாம் நாங்கள் மாடர்ன் தியேட்டர்ஸ் படக்காலங்க்ளிலேயே பார்த்துவிட்டதால் சிரிப்பாகத்தான் வருகிறது. தொடந்து வெற்றிப் படங்களாகவே கொடுத்து வந்த நோலனுக்கு திருஷ்டி பட்டு விட்டது. அதற்காக இப்ப்டி ஒரு அவர் லெவலுக்கான மொக்கை படத்தை கொடுத்திருக்க வேண்டாம்.
படத்தில் ஆங்காங்கே தமிழில் வரும் வசனங்கள் படம் கொடுக்காத சுவாரஸ்யத்தை கொடுத்தது. திடீரென வரம் கொடுத்தவன் தலையிலேயே கை வைச்சது போல என்றும், ஜெயிலில் கேட் உமனை , ஆண்கள் சிறையில் அடைக்க கொண்டு வரும் போது ஜன்னல் கம்பிகளிடையே இரண்டு கைகளை நீட்டியபடி ஒரு கைதி வா வா. என்று அழைக்க அவனின் இரண்டு கையை பிடித்து அப்படியே ஒரு அந்தர் பல்டி அடித்து கையியை முறித்துப் போடும் லாவகத்தைப் பார்த்து பின்னால் வரும் போலீஸ்காரர் சொல்வார் “நலல்வேளை அவன் கையைக் காட்டினான்” . இம்மாதிரியான சிற்சில சுவாரஸ்யங்களுக்காக இந்த படத்தை தமிழில் பார்க்கலாம்.
கேபிள் சங்கர்
டிஸ்கி: எல்லா பாம்களையும் கடலில் போடுகிறார்களே கடல் என்னாத்துக்கு ஆவுறது? இதையாரும் கேக்குறதேயிலலியா?
கேபிள் சங்கர்
டிஸ்கி: எல்லா பாம்களையும் கடலில் போடுகிறார்களே கடல் என்னாத்துக்கு ஆவுறது? இதையாரும் கேக்குறதேயிலலியா?
Post a Comment
60 comments:
அமெரிக்காவுல இந்த படத்தை தியேட்டரில் பார்த்தவர்களை சுட்டு கொலை செய்கிறான்.
http://www.belfasttelegraph.co.uk/news/world-news/denver-batman-gun-spree-suspect-named-as-james-holmes-24-16187436.html?r=RSS
சங்கர் சார் வணக்கம்!,
விமர்சனத்திற்கு நன்றி!
முதல் பாகத்தில் ஜோக்கர் சும்மா அசத்தி இருப்பார். சரியான வில்லத்தனம். திரைக்கதையும் சூப்பரா இருந்துச்சு. நோலன் இந்தப் படத்தில் இரண்டையும் கோட்டை விட்டுட்டார் போல! அதுவும் இல்லாமல் இதுதான் நோலனின் கடைசி பேட் மேன் வரிசைப் படம்! பேட் லக்!! :)
Thappa ninachikathinga konjam naalaga ungal vimarsana pakkangal padatha pathi pesaratha vida padam paarka pona anubava kaduppa solrathakkave thodaruthu. Neengal intha padatha puriyamal vimarsippathukku ungal muthal line than sattchi. Muthal naale padam paarthu puriyamal neenga eluthanumnu yaar aluthathu?
வாசகர்களே! மற்றுமோர் நற்செய்தி! இப்படத்தின் முந்தய பாகம் இந்த வாரம் சன் டிவியில் (21-July-2012) பிற்பகல் 2:30 மணிக்கு ஒளிபரப்பாகிறது. கட்டாயம் பாருங்கள்!
Thanks Francis.
// அதற்கு காரணம் நோலனின் படங்களில் வரும் திரைகக்தையை சப்டைட்டிலுடனோ, அல்லது தமிழ் டப்பிங் பார்த்தால் தான் பார்த்த மாத்திரத்தில் புரியும் அறிவு மட்டுமே இருப்பதால் இம்முறை தமிழ் வர்ஷனைப் பார்க்க முடிவுசெய்து பைலட்டுக்கு விட்டேன் என் வண்டியை.//
இந்த வாக்கிய அமைப்பு சரியானதா??
// ஸ்கீரின் சவுண்ட் படு லோவாக இருக்க, மொத்த தியேட்டரே “டேய்.. த்தா.. சவுண்ட வுடுறா” என்று கத்தியது. பின்பு ஏற்றிய பின்னும் பேட்மேன் பேசும் காட்சிகள் எல்லாம் படு மெலிதாய் கேட்டதால் மீண்டும் மக்கள் கத்தலில் வசனம் கேட்கவேயில்லை. //
இம்மாதிரி ஒலியமைப்பு சரியிலாத தியேட்டரில் நோலனின் படத்தைப் பார்ப்பதே அபத்தம் , பார்த்துவிட்டு எம்புருஷனும் கச்சேரிக்கு போனான் என்பது போல விமர்சனம் பண்ணுவது அதைவிட அபத்தம்.(இந்த லட்சணத்தில் ஹான்ஸ் சிம்மரின் பின்னணி இசை பற்றி நீங்கள் குறிப்பிடுவீர்கள் என்று எதிர்பார்க்க முடியுமா என்ன??)
//ட்விஸ்டு வைக்கிறேன் ட்விஸ்டு என்று மாய்ந்து மாய்ந்து ஆளாளுக்கு ஒரு குட்டிக் கதை சொல்கிறார்கள். என்ன எழவு அது எல்லாமே ஏற்கனவே பார்த்த விஷயமாகவே இருப்பதால் //
ஜான் ப்ளேக் மற்றும் பேனின் பின்புலம் தவிர்த்து என்னென்ன குட்டிக்கதைகள் கண்டீர்கள் அந்த எழவையெல்லாம் ஏற்கனவே எங்கு பார்த்தீர்கள்?
//ஏகப்பட்ட லூப்ஹோல்களுடனான திரைக்கதையினால்//
மாதிரிக்கு ஓன்றிரண்டு லூப்ஹோல்களை எடுத்துவிடுங்கள் பார்ப்போம்.
// பின்னால் வரும் போலீஸ்காரர் சொல்வார் “நலல்வேளை அவன் கையைக் காட்டினான்” . இம்மாதிரியான சிற்சில சுவாரஸ்யங்களுக்காக இந்த படத்தை தமிழில் பார்க்கலாம்.//
இந்தமாதிரி எழுதியதற்காகவே உங்களை நாடுகடத்தலாம் :))
படத்தில் எவ்வளவு நல்ல வசனங்கள் இருக்கின்றன, குறிப்பாக ஆல்ஃபிரடுக்கும் வெயினுக்கும் நடக்கும் உரையாடல்கள், Why do we fall போன்ற வசனங்கள்.ஜோத்பூர் பாதாள சிறையில் முதியவருக்கும் வெயினுக்குமான பயம் பற்றிய உரையாடல்கள் எதுவும் நினைவில் வராதது ஆச்சரியமே.
முதல் ஷோ பார்த்த எவனோ நடக்கும் இடத்தில் செய்ததைத்தான் நீங்கள் இங்கு செய்திருக்கிறீர்கள் :)
கேபிள்ஜி,
//வழக்கமாய் நான் ஆங்கிலப் படங்களை தமிழ் டப்பிங்கில் பார்பவன் இல்லை. முக்கியமாய் பைலட் போன்ற தியேட்டர்களில் படம் பார்ப்பதையே தவிர்பவன் வேறு வழியில்லாமல் கிறிஸ்டபர் நோலன் படம் என்பதால் தமிழில் பார்க்க முடிவு செய்தேன். அதற்கு காரணம் நோலனின் படங்களில் வரும் திரைகக்தையை சப்டைட்டிலுடனோ, அல்லது தமிழ் டப்பிங் பார்த்தால் தான் பார்த்த மாத்திரத்தில் புரியும் அறிவு மட்டுமே இருப்பதால் இம்முறை தமிழ் வர்ஷனைப் பார்க்க முடிவுசெய்து பைலட்டுக்கு விட்டேன் என் வண்டியை.//
விமர்சனத்தினை விட,ஏன் படத்தினையும் விட ரொம்ப கொடுமையானது இந்த ஸ்டேட்மென்ட்(அறிக்கை) தான் :-))
திரைக்கதை புரிய ஏன் தமிழ் டப்பிங்/சப் டைட்டில் வேண்டும்? கதை புரிய என்று சொன்னாலாவது பரவாயில்லை.அப்போ இத்தனை நாளும் படத்தில் வரும் வசனங்கள் தான் திரைக்கதைனு நினைச்சுக்கிட்டு இருந்தீங்களா ? என்ன கொடுமை சார் இது:-))
மனோகரா படக்காலத்திலேயே இருப்பதாக படுகிறது , இப்போ என்னோடக்கவலை எல்லாம் நீங்களும் படம் செய்ய போறேன்னு சொல்வது தான் ,அப்போ அந்தப்படம் பார்க்கிறவன் கதி?
பரவாயில்லை இப்போ எல்லாருமே கேள்விக்கேட்க ஆரம்பிச்சுட்டாங்க ,நல்ல முன்னேற்றம்,நீங்களும் சளைக்காமல் பட்டம் சூட்டுவிங்க :-))
keyan. படம் பிடிக்காததால் தான் மற்ற விஷயங்களை எழுத வேண்டிய கட்டாயம். படத்தை பார்க்குறதுக்கு எல்லாம் பாடம் படிச்சு புரிஞ்சுத்தான் பாக்கணும்னா.. அது படமேயில்லை பாடம்.
பரத்.
ஆம் வாக்கிய அமைப்பு சரியில்லைதான். குறிப்பிட்டதற்கு நன்றி.
//இம்மாதிரி ஒலியமைப்பு சரியிலாத தியேட்டரில் நோலனின் படத்தைப் பார்ப்பதே அபத்தம் , பார்த்துவிட்டு எம்புருஷனும் கச்சேரிக்கு போனான் என்பது போல விமர்சனம் பண்ணுவது அதைவிட அபத்தம்.(இந்த லட்சணத்தில் ஹான்ஸ் சிம்மரின் பின்னணி இசை பற்றி நீங்கள் குறிப்பிடுவீர்கள் என்று எதிர்பார்க்க முடியுமா என்ன??) //
அதைத்தானேய்யா நானும் சொல்லியிருக்கிறேன். ஒரு விஷயம் படம் சுவாரஸ்யமாய் இருந்தால் சின்ன ஒலியில் கூட அமைதியாய் படம் பார்த்திருப்பார்கள் ஆடியன்ஸ். அவர்களை கவராத வசனங்கள் போரடிக்கும் காட்சிகள் என்பதால் தான் ஆடியன்ஸ் டைவர்ட் ஆகிறார்கள். என்பது டிவிடியில் படம் பார்பவர்களுக்கும், பேட்மேனின் வரலாறு ,புவியியல் எல்லாம் படித்து விட்டு படம் பார்ப்பவர்களுக்கு புரியாது.
பரத்.
ஆம் வாக்கிய அமைப்பு சரியில்லைதான். குறிப்பிட்டதற்கு நன்றி.
//இம்மாதிரி ஒலியமைப்பு சரியிலாத தியேட்டரில் நோலனின் படத்தைப் பார்ப்பதே அபத்தம் , பார்த்துவிட்டு எம்புருஷனும் கச்சேரிக்கு போனான் என்பது போல விமர்சனம் பண்ணுவது அதைவிட அபத்தம்.(இந்த லட்சணத்தில் ஹான்ஸ் சிம்மரின் பின்னணி இசை பற்றி நீங்கள் குறிப்பிடுவீர்கள் என்று எதிர்பார்க்க முடியுமா என்ன??) //
அதைத்தானேய்யா நானும் சொல்லியிருக்கிறேன். ஒரு விஷயம் படம் சுவாரஸ்யமாய் இருந்தால் சின்ன ஒலியில் கூட அமைதியாய் படம் பார்த்திருப்பார்கள் ஆடியன்ஸ். அவர்களை கவராத வசனங்கள் போரடிக்கும் காட்சிகள் என்பதால் தான் ஆடியன்ஸ் டைவர்ட் ஆகிறார்கள். என்பது டிவிடியில் படம் பார்பவர்களுக்கும், பேட்மேனின் வரலாறு ,புவியியல் எல்லாம் படித்து விட்டு படம் பார்ப்பவர்களுக்கு புரியாது.
ஹான்ஸ் சிம்மரின் பின்னணியிசையைப் பற்றி நான் சொல்லாததற்கு காரணம் என்ன தான் நன்றாக இருந்தாலும் படம் பிடித்தால் மட்டுமே அதை பற்றி சிலாகிக்க முடியும். இதில் கழிசடை ஒலி வேறு. பின்பு என்னத்தை சொல்ல.
ஹான்ஸ் சிம்மரின் பின்னணியிசையைப் பற்றி நான் சொல்லாததற்கு காரணம் என்ன தான் நன்றாக இருந்தாலும் படம் பிடித்தால் மட்டுமே அதை பற்றி சிலாகிக்க முடியும். இதில் கழிசடை ஒலி வேறு. பின்பு என்னத்தை சொல்ல.
//ஜான் ப்ளேக் மற்றும் பேனின் பின்புலம் தவிர்த்து என்னென்ன குட்டிக்கதைகள் கண்டீர்கள் அந்த எழவையெல்லாம் ஏற்கனவே எங்கு பார்த்தீர்கள்?
//
இதுவே எனக்கு அரத பழசாய் மொக்கையாய் இருக்கும் பட்சத்தில் வேறு விஷயங்களை பற்றி எனக்கு புரிந்ததை பேச நேரில் உக்காந்து பேசுவோம்.
//படத்தில் எவ்வளவு நல்ல வசனங்கள் இருக்கின்றன, குறிப்பாக ஆல்ஃபிரடுக்கும் வெயினுக்கும் நடக்கும் உரையாடல்கள், Why do we fall போன்ற வசனங்கள்.ஜோத்பூர் பாதாள சிறையில் முதியவருக்கும் வெயினுக்குமான பயம் பற்றிய உரையாடல்கள் எதுவும் நினைவில் வராதது ஆச்சரியமே.//
அந்த டனல் எபிசோடில் பெரியவருக்கு வரும் பயம். அந்த பயம் தான் அவன் வெளியே செல்ல தடையாயிருக்கிறது போன்ற காட்சிகள். சிறுமி தப்பிக்கும் ப்ளாஷ் கட் காட்சிகள் போன்ற நோலனின் சாமர்த்தியங்களை சொல்லும் காட்சிகள் என்றாலும் மொக்கையாய் ஒரு ஹீரோ அதுவும் முதுகெலும்பு உடைந்துபோய் இருப்பவன் கொஞ்சம் கொஞ்சமாய் கயிற்றில் தொங்கியே சரியாவதும், மீண்டும் எழுவதும் அசுவாரஸ்யமாய் இருந்ததால் எதுவும் மனதில் நிற்கவில்லை. சாரி.. பட் ஐ லைக் த போலீஸ் டயலாக்.:))
//விமர்சனத்தினை விட,ஏன் படத்தினையும் விட ரொம்ப கொடுமையானது இந்த ஸ்டேட்மென்ட்(அறிக்கை) தான் :-))
திரைக்கதை புரிய ஏன் தமிழ் டப்பிங்/சப் டைட்டில் வேண்டும்? கதை புரிய என்று சொன்னாலாவது பரவாயில்லை.அப்போ இத்தனை நாளும் படத்தில் வரும் வசனங்கள் தான் திரைக்கதைனு நினைச்சுக்கிட்டு இருந்தீங்களா ? என்ன கொடுமை சார் இது:-))
மனோகரா படக்காலத்திலேயே இருப்பதாக படுகிறது , இப்போ என்னோடக்கவலை எல்லாம் நீங்களும் படம் செய்ய போறேன்னு சொல்வது தான் ,அப்போ அந்தப்படம் பார்க்கிறவன் கதி?
பரவாயில்லை இப்போ எல்லாருமே கேள்விக்கேட்க ஆரம்பிச்சுட்டாங்க ,நல்ல முன்னேற்றம்,நீங்களும் சளைக்காமல் பட்டம் சூட்டுவிங்க :-))//
யோவ் வெண்ணை வெட்டி முட்டாள் வவ்வால். முன்னாடி கேள்வி கேட்டவராவது படத்த பார்த்துட்டு, என்னாடா நமக்கு பிடிச்ச நோலன் படத்தை இப்படி தப்பா எழுதியிருக்காரே.. அதுவும் மொக்கை தியேட்டர்ல படம் பார்த்துட்டு விமர்சனம் எழுத என்ன கெட? என்று ஒரு ஆதங்கத்தில் எழுதியிருக்காரு. அவருக்கு பதில் சொல்ல வேண்டியது என் க்டமை.
நீ ஒரு வெத்து, எதையும் பாககமேயே இண்டர்நெட்டுல படிச்சிட்டு பாத்தாமேரியே எல்லாத்தையும் தெரிஞ்சவனாட்டம் புளூத்திட்டு இருக்க.உன்னையெல்லாம் பட்டம் கொடுத்து திட்டாமல் வேற என்ன செய்வாங்க.:))))))))
அப்புறம் நோலனின் அத்தனை படங்களையும் மறுக்கா மறுகக பார்த்தவன் நான். இதில் அந்த எதிர்பார்ப்பு பொய்த்து போனதினாலும், மோசமான தியேட்டர் அனுபவமும் பயங்கர காண்டாகியிருக்கிறேன்.
என் சினிமா அறிவை பற்றி சந்தேகிக்க உனக்கு இருக்கும் அறிவை என் படம் வரும்போது காட்டிக் கொள்ள எல்லா சுதந்திரமும் இருக்கிறது.அப்போ பக்கம் பக்கமா எழுதிக் கொள்ளுங்க.
உங்க பின்னூட்டங்களை இங்கே வெளியிடுவதிலேயே விமர்சனங்களை ஏற்றுக் கொள்ளும் பக்குவம் எவ்வளவு இருக்கிறது என்று உங்களுக்கு புரியாத போதே இப்படி. நீ யெல்லாம் என்னத்த படிச்சு அமெரிக்காவுல இருந்து என்னத்தை கிழிச்சியோ என்றெல்லாம் சொல்ல மாட்டேன். ஆனால் ஒரு விஷயம் நீ ஒரு முட்டாள் எனப்தை மீண்டும் மீண்டும் நிருபிப்பதிலேயே இருக்கிறீர்கள். :)))))))))))
Cable.... Less tension more work
more work less tension
நன்றி மண்டை மனோகர்.
டிபிக்கல் கேபிள் டச்.... நோலன் படத்தை பாராட்டியே ஆகணுங்கிற எண்ணம் எல்லாம் இல்லாம, என்ன அனுபவத்தை நீங்க படம் பார்க்கும் போது உணர்ந்தீங்களோ, அதை வெளிப்படையா எழுதி இருக்கீங்க..
Cable. Thanks ! you dont like the movie. meaning that this movie must be a great one. (Just think about our discussion - Amazing spiderman).
But Its a pity that you are loosing control against Vavvalji. I dont like that comment at all, I request you to remove that. Just for me ! please !
கேபிள்ஜி,
நல்லப்பக்குவம் :-))
என்னமோ தெரியலை நீங்க சீரியசா பேசினால் கூட எனக்கு சிரிப்பு தான் வருது.
தினம் ஒரு படம் பார்த்துட்டு விமர்சனம் எழுதும் கட்டாயம் எனக்கு இல்லையே, இருந்தால் எல்லா படமும் பார்ப்பேன், 20 ரூ க்கு டிவிடி கிடைக்கும் போது பார்ப்பதில் என்ன சிரமம், நான் பார்த்த படம் லிஸ்ட்லாம் சொன்னா கண்டிப்பாக உங்களுக்கு புரியப்போவதில்லை, இணையத்தில் எல்லா ப்டமும் கிடைக்குது, ஒரு வரி குறிப்பிடுவதற்காக கொஞ்சம் கொஞ்சமாக ஒரு படத்தினை ஒரு வாரம் செலவிட்டு பார்க்கிறேன், ஆனால் என்ன நான் பெருமைக்கு அதை பார்த்தேன் இதைப்பார்த்தேன் என சொல்லிக்கொள்ள மாட்டேன் :-))
நீங்க கூவுறதைப்பார்த்தும் கோவப்படாமல் "cool" ஆக இருப்பதை பார்த்தும் என் பக்குவம் உங்களுக்கு புரிய்லையே!
இப்பவும் சிரிப்பு தான் வருது ஹி ஹி :-))
அட நான் தட்டிக்கிட்டு இருக்கும் போதே செந்தழலார் உள்ள பாய்ஞ்சுட்டார் போல,
செந்தழலரே ,நன்றி, ஆனால் எனக்கு இது ஒரு காமெடியாகவே இருக்கு கவலைப்பட ஏதுமில்லை, ஃப்ரியா விடுங்க.
thanks for the review sankar anna
//சென்ற பகுதியில் பாம் வைத்து ஊரையே காலி செய்ய நினைத்த வில்லனைக் பேட்மேன் கொன்றுவிட, அந்த வில்லனின் வாரிசு பேட்மேனை பழி வாங்க வந்து ஊரையே அழிக்க, மீண்டும் பாம் வைக்க வருவதும், அதை எப்படி பேட்மேன் முறியடித்தான் என்பதை ஆர அமர இரண்டேமுக்கால் மணி நேரம் கதற, கதற சொல்லியிருக்கிறார்கள்.//
சென்ற பகுதினு நீங்க சொல்றது எது? டார்க் நைட்டா.. பேட்மேன் பிகின்ஸா?
பதிவெல்லாம் சரி! படத்துக்கு விமர்சனம் எப்போ எழுதுவீங்க?
//Cable. Thanks ! you dont like the movie. meaning that this movie must be a great one. (Just think about our discussion - Amazing spiderman).
//
செந்தழல் நீங்களும் நானும் ஸ்பைடர் பற்றி பண்ணியது டிஸ்கஷன் என்று அதைக் கேவலப்படுத்த வேண்டாம். :))
வவ்வாலைப் பற்றி நான் சொன்னதற்காக வருதப்படவேயில்லை. ஏனென்றால் அவரே அதை உரைககாமல் காமெடியாய் எடுத்துக் கொள்வார் என்று எனக்கு தெரியும். அதனால் தான் நாங்க ஸ்மைலி போட்டு விளையாடுவோம். சோ.. நோ பஞ்சாயத்து நீடட். நன்றி..
தம்பி அதிஷா உன் சீட்டை விட்டு வேற சீட்டுக்கு மாறும் போது சொன்னார்கள் நீ கேக்கலியா?
Hai Cable Ji..enaku ithuku munnadi vantha Dark knight padathoda vimarasanamum, appuram inception padathoda vimarsanamum link kodunga please...
விமர்சனமும் இதான் ரூபன்
கேபிள் - நான் கேட்ட கேள்விக்கு பதில் இதுதானா.. என்ன கொடுமை.
மறுபடி நல்ல த்யேட்டரில் இந்த படம் பார்த்துட்டு விமர்சனம் எழுதியிருக்கலாம்னு தோணுது...
"Our DOMINANT BELIEFS that have been limiting our
awareness.
Defending them keeps us in ignorance by blocking
the reception of new ideas".
"நடக்கும் இடத்தில் வாந்தியெடுத்து வைத்திருந்தான் "
குடிக்க வைச்சு கோடிகளை அள்ளும் அரசு
வாந்தி எடுக்க தனி இடம் அமைச்சு தர போறாங்களாம் . .
You get bored. bcze u seen it in tamil. dont watch it in tamil. in english all dialogues get interesteing..
Cable,
Your reputation is tarnished by this review and the answers to your followers questions
Have you been like this all the way right from the start? It seems like you would decide what to write about the movie even before seeing the movie. For God's sake it is Christopher Nolan's movie who is one of the most brilliant directors in Hollywood. It definitely looks like you are way behind a normal movie lover let alone your review skills.
What a shame!!!
நானும் அதே பைலட் தேட்டரில் கூச்சலுக்கு நடுவில்தான் நேற்று Noon Show பார்த்தேன்.
டி.வி.டியை விட கேவலமான ஒலி,ஒளி அமைப்பில் நொந்துவிட்டேன்.
பிற சூப்பர் ஹீரோ படங்களைவிட Dark Knight Rises பல மடங்கு தேவலாம்.
ஆனால், டார்க் நைட்,இன்செப்சன் (Nolan's Previous) படங்களோடு இதை ஒப்பிட முடியாது.
நானும் ஹான்ஸ் சிம்மரின் ரசிகன்தான்,ஆனால் இப்படத்தில் சிம்மர் இன்செப்சன் பாதிப்பிலிருந்து வெளி வராமலே பின்னனி இசை அமைத்து விட்டார் போல!
உதாரணமாக, பேன் பங்குசந்தையை கைபற்றியபின் வரும் Chasing Scene பின்னனியில் வரும் இசையானது இன்செப்சனில் ஜோசெப் கோர்டான் லெவி புவியீர்ப்பு விசையே இல்லாமல் சண்டைபோடும்போது வரும் பின்னனி இசையை போலவே உள்ளது.இன்னும் நிறைய இடங்களில் இன்செப்ஷன் பாதிப்பு உள்ளது.இன்செப்ஷனில் கடைசி ஷாட்டில் நம்மை குழப்ப பம்பரம் சுத்தியதை போல,இங்கு கடைசியில் மற்றொரு சுப்பர் ஹீரோ ராபினின் வருகை இருக்கிறது,கடைசி ஷாட்டில் காண்பிக்கப்படும் ப்ருஸ் வெய்ன் மற்றும் அவனுடைய காதலி உணவருந்தும் காட்சி ஆல்பிரட்டின் கற்பனையாக கூட இருக்கலாம்,அதாவது பேட்மேன் இறந்திருக்கலாம்.
Dear Mr Sankar,
If you dont like a movie, better not to review about it. Just because you dont like the movie, you are throwing the words here and there.
I believe you have had watched his Bat Man Begins and Dark Knight. These two movies are very famous for the dialogues, and the way Nolan dealt a Super Hero Character. And TDKR is no less than the other two. A fantastic epic conclusion given by Nolan to the lovers of Batman and the Cinema. There was a huge discussion happened and is happening about Batman Psychology depicted in Nolan's Trilogy.If you get time, please watch it first, then try watching the movies. You say that you enjoyed Inception but not TDKR, its strange.
And Nolan is very famous for Memento and The Prestige movies right from year 2000. Leave the technical part of the movie; I can type few more pages about the Bat Man, Joker, Bane, and Two Face characterization itself, but its not going to change your view anyway.
I am regular reader of your blogs, not that i always go with your film reviews, but this one is too much.sorry if i took advantage of words. Regards
//பெரும்பாலான காட்சிகளில் பேட்மேனாய் வராமல் சாதாரணனாகவே வருவதும், முதல்பாதி முழுவது எல்லோரும் மாய்ந்து மாய்ந்து பேசிக் கொண்டேயிருப்பதும்.//
படத்துல வேற என்ன வேணும் உனக்கு ??? டப்பிங் ஆர்டிஸ்ட் உன்ன விட நல்ல டயலாக் எழுதிடானு வயிதேரிச்சலா ??
நீ வசனம் எழுதுன மசாலா cafela மாய்ந்து மாய்ந்து என்னத்த பண்ணாங்க ???
நீ எதிர்பாற்குறது சுட்டி Tv கார்ட்டூன் நெட்வொர்க் nikelodeonla போடுவானுங்க ... பொய் குச்சி முட்டையும் குருவி ரொட்டியும் சாப்டுகிட்டே பாரு ....
விசில் அடிச்சான் குஞ்சுலாம் விமர்சனம் எழுதுது...
Subbu your no plz
டேய் அரைகுறை, அரத மொக்கை இந்தியன் தியேட்டர்களில் அதுவும் தமிழில் படத்தபாத்திட்டு உனக்கு விமர்சனம் வேற ஒரு கேடா? do you think you are better than IMDB and rotten tomatoes? bloody indian asshole. உங்கள மாதிரி thirdclass indiansகு சுறா தாண்டா சரி.
மிக தவறான அணுகுமுறையுடனான விமர்சனம் என்ற பெயரில் எழுதப்பட்டுள்ளது. அந்த்ராய் தார்க்கோவஸ்கி போன்றவர்களால் வீரியமுடன் ஆரம்பிக்கப்பட்ட பிரமாண்ட சினிமா, கதைக்களன்கள், காட்சிகள், வசனங்கள் அனைத்தும் 60வருடங்களுக்கு மேல் உபயோகிக்கப்பட பின்னரும், நோலனால் தான் ஒரு புதிய அனுபவம் தரப்பட்டுள்ளது. சும்மா தாட் நாட் டுவிஸ்ட் என்று குவாட்டரும் கோழி பிரியாணியும், நடிக நடிகர்களின் காலடியும் என அவர் சினிமா படைப்பவரில்லை. எவ்வளவு பெரிய நடிகர்கள் என்றாலும் நோலனின் காட்சியமைப்பில் கட்டுப்படனும். அதுவும் போக இருளுக்குள் வெளிச்சத்துடன் ஓவியம் போல் அவரது படங்கள். மனோதத்துவ நிலையுடன் கதாபாத்திரங்கள் வடிவமைப்பு, ஒலி ஒளி நேர்த்தி என அத்துனையிலும் வித்தகம் புரிபவர். அவரது ஆழமான மெம்ண்டோ படத்தை திருடி இங்கு படமெடுக்கும் கீழான சமூகத்தில் நாம் இருப்பது வெட்கக்கேடு. நோலன் இனம் ஜாதி மதம் மொழி தாண்டிய அற்புத கலைஞன். இதோ எத்துனை திருடர்கள் அவரது படத்தை திருடி தங்கள் முகம் மறைத்து முகமூடி போட்டுக் கொள்கிறார்கள்.. இங்கு. உங்களிடம் திறமை உங்கள் துறை அனுபவம் இருக்கிறது. ஆனால் கீழான சாக்கடை எண்ணங்க்ளை ஏன் பிரதானமாக உங்கள் சமையலை சாப்பாடு வேக உபயோகிகிறீர்கள்... அதனால் தான் 50 லட்சம் தாண்டி வந்த உங்கள் விருந்தினர்கள் இன்று உவ்வே என்று அருவருப்பானார்கள். புரிந்து கொள்ளுங்கள், தயவு செய்வது. மசாலா கஃபே போன்று ஆங்கில்ப் படம் தாண்டி மிக மிக சாதாரண படமெடுப்பதில் அனுபவ பங்கே உங்கள்து. இதோ நோலனின் இந்த BATMAN படத்தில் நம் ஊரி பிரவின் இளங்கோவன் விஷூவல் எஃபக்டில் பங்காற்றி டைட்டிலிலும் வருகிறது. உங்கள் பகுதிக்கு வந்து படிப்பதால், உங்களின் திறன் அறிந்ததால் இந்த கடிதம்., படம் பற்றி திங்கள் அன்று திண்ணை.காம் பகுதியில் நான் எழுதுகிறேன். அது நோலனுக்கு நாம் செய்ய வேண்டிய நன்றி...
கோவிந்த நோலன் நான் பெரிதும் மதிக்கும் இயக்குனரில் ஒருவர். இது பொருந்தாது என்பது என் கருத்து. மசாலா கஃபே போன்ற் படங்களைத்தாண்டி வேலை பார்க்கவில்லை என்பது ஒன்று கேவலமானது அல்ல. ஏனென்றால் கிடைக்கிற வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு வளர்கிறவன் தான் கலைஞன். படத்தின் விமர்சனம் காரணமாய் உவ்வே என்றவர்கள் மிகச் சிலபேர்.அதிலும் சில பேர் படம் பார்க்காமலேயே முட்டாள்தனமான விவாதங்களைத்தான் பேசி வருகிறார். எனிவே உங்கள் கருத்துக்கு நன்றி. இன்றைய நாள் வரை என் தளத்தை பார்வையிட வருகிறவர்களுக்கு என் கருத்தை யார் என்ன நினைப்பார்க்ள் என்று பார்க்காம்ல் என்வரையில் என்ன தோன்றுகிறதோ அதைத்தான் எழுதி வருகிறேன். எழுதவும் செய்வேன். ஸோ.. உங்கள் கடிதத்திற்கும் நன்றி.உங்கள் திண்ணை.காம் கட்டுரை படிக்க ஆவலாக உள்ளேன்.
எது எப்படியோ, உங்ளின் கேபிள் துறை அனுபவத்தை வார்த்து ஒரு படம் எடுங்கள். நிச்சயம் அதில் ஒரு அருமையான களன் இருக்கிறது. இதுவரை ஒரு துறை வளர்ச்சி, அதுவும் தமிழகத்தை பிசாசாய் ஆட்டிப் படைக்கும் மீடியா துறை, வளர்ச்சி சார்ந்து எங்கும் படமே வந்ததில்லை. உங்கள் தனித்துவம் புலப்பட அருமையான களன் அது. பேசப்படும் இயக்குனராக மிளிர்வீர்கள். ( BTW: நான் திண்ணையில் நோலன் குறிப்பு தான் எழுதுகிறேன், பட விமர்சனமோ கதை பற்றியோ அல்ல.)
உங்கள் நம்பிக்கைக்க்கும் வாழ்த்துக்கும் நன்றி. கோவிந்த்.
பாஸ் tdkr படத்த தமிழ்ல பாத்ததே தப்பு , pilot தியேட்டர்ல பாத்து அத விட பெரிய தப்பு ... எல்லா தப்பையும் நீங்க பண்ணிட்டு படத்த தப்பு சொல்றீங்களே ஞாயமா?
இப்போது தான் படம் பார்த்துவிட்டு வருகிறேன்..படம் அருமை..படம் முடிந்ததும் அனைவரும் எழுந்து கைதட்டியதே, இயக்குநரின் வெற்றிக்கு சாட்சி..நல்ல ஒலியமைப்பு உள்ள தியேட்டரில், ஆங்கில படமாக இந்தப்படத்தை பாருங்கள் கேபிள்..பார்த்தால், இந்த விமர்சனத்தை மறுபரிசீலனை செய்யக்கூடும்..
நேற்று இரவு பிவிஆரில் பார்த்தேன். (ஆங்கிலத்தில்). வசனங்கள் - இசை - திரைக்கதை - மூன்று பகுதிகளையும் இணைத்து முடித்தது என்று அனைத்தும் அருமை. நன்றி கேபிள்..!!
பஞ்சாயத்துக்கு எல்லாம் வரவில்லை, ஒரு தோழமையோடு அவருக்கு மனக்கஷ்டம் ஏற்படக்கூடாது என்ற நல்ல எண்ணத்தில் சொன்னேன்...(அப்படி எதுவும் நடக்கவில்லை, அவர் அதை எல்லாம் தாண்டிய மெச்சூரிட்டி உள்ளவர் என்று பின்னூட்டத்தில் சொல்லிவிட்டார்)...
டிஸ்கஷன் என்றால் சினிமா வார்த்தையில் கொடைக்கானல் / ஊட்டில் போய் மூன்று நாள் ரூம் போட்டு தண்ணி போட்டு ஐட்டம் போட்டு நடைபெறும் அந்த டிஸ்கசனை சொல்லவில்லை...இரண்டு நிமிடத்தில் ஸ்பைடர் மேன் படத்தை பற்றிய உங்கள் கருத்தை அறிந்தேனே அதை சொன்னேன்...!!!
நீங்க புல் பார்ம்ல இருக்கீங்க, நீங்க சொன்ன மாதிரி லவ் கம் த்ரில்லர் படத்ததை எடுங்க தலைவரே, அது குள்ள நரி கூட்டம் மாதிரி படமாக இருந்தாலும் நான் த்யேட்டருக்கு வந்து பார்க்கிறேன்...!!!
கேபிள்ஜி,
படம் பார்க்காமல் படத்தினைப்பற்றிப்பேசினால் தான் தப்பு, ஆனால் படத்தினை எந்த அளவீட்டின்ப்படிப்பார்த்து விமர்சித்தீர்கள் என நீங்களே சொல்லு விதம் அமெச்சூர் தனமாக இருப்பதை சுட்டிக்காட்ட படம் பார்த்திருக்க தேவையில்லை.
இமய மலையை இஞ்ச் டேப் வைத்து அளந்தேன், 8000 கிலோ எடை தான் இருந்துச்சு ,பரங்கி மலையைவிட சின்ன மலைனு சொன்னால் எப்படி இருக்குமோ அப்படி விமர்சனம் செய்யும் முறை இருந்தால் என்ன செய்வது?
எல்லாருக்கும் ஒரு படம் பிடிக்கும்னு சொல்லமுடியாது ,ஆனால் பிடிக்கலைனு சொல்லும் காரணம் நேர்மையானதாக இருக்க வேண்டும்.
மணிரத்ரனம் படம் பிடிக்கும் டி.ஆர் படம் பிடிக்காது என்பது போல படத்தினை அனுகுவது ரசிகனின் பார்வையாக சரியாக இருக்கலாம், ஒரு விமர்சகன் ,அதுவும் தொழில்முறையாக சினிமா தெரியும் என சொல்லிக்கொள்பவர் அனுகும் முறையில் ஒரு நேர்த்தி இருக்க வேண்டும் என்பது என் கருத்து.
உங்களின் பல விமர்சனங்களை பார்க்கும் போது ஒரு hidden agenda or vendetta தான் வெளிப்படுகிறது. தொழிற்முறை விமர்சனமாக தெரிவதில்லை அதனையே சுட்டிக்காட்டிப்பேசினேன், நானெல்லாம் பொறுமையாக படம் பார்க்கும் வகை ,முதல் நாளே பார்க்க வேண்டும் என்ற நெருப்பெல்லாம் எரிவதில்லை அடிவயிற்றில் :-))
--------
செந்தழலாரே,
நானெல்லாம் டென்ஷன் ஆகிற அளவுக்கு இங்கே எதுவும் நடக்கலை, ஹி...ஹி ஆனால் அடுத்தவங்களை போகிறப்போக்கில் டென்ஷன் ஆக்கிவிடுகிறேன் போல.
ஆனால் நீங்க சரியா புரிஞ்சுவச்சு இருக்கீங்க, கேபிள்ஜி மொக்கைனு சொன்னால் படம் நல்லா இருக்கும்னு, இனிமே உங்க வழியிலே புரிஞ்சுக்கிறேன் :-))
senthazal ravi.
டிச்கஸன் என்றால் தண்ணி அடிப்படி, குட்டி போடுவது என்ற பொது புத்தியில் இருப்பது தவறு. அதனால் தான் டிஸ்கஷன் என்று சொல்லாதீர்கள் என்று சொன்னேன். அப்புறம் நீங்கள் தியேட்டரில் வந்து பார்ப்பேன் என்று சொன்னது ரொம்ப சந்தோஷம்.
வவ்வால் & கேபிள் சங்கர் இருவரும் புத்தி கூர்மை உள்ளவர்கள்தான் ஆனால் இருவரும் தங்களுடைய போலி பெயர்களில் ஒருவரை ஒருவர் தரம் தாழ்த்தி கொள்கிறார்கள் (வவ்வால் = soker li ,Subramanian Lokesh ... & கேபிள் சங்கர் = கொக்கிகொமாரு ...).எனக்கு கீழ் கண்ட வரிகள்தான் ஞாபகத்திற்கு வருகின்றது "கனி இருப்ப காய் கவர்ந்தற்று"
@siruppu police
இல்லை நான் அவனில்லை. அதே போல் வவ்வாலும் அம்மாதிரியான ஒரு வேலையை செய்ய மாட்டார் என்ற நம்பிக்கை இருக்கிறது.
செந்தழல் ரவி நீங்க குள்ளநரிக் கூட்டத்தை எந்த தியேட்டரில் பார்த்தீர்கள்?
கேபிள்ஜி,
//வவ்வாலும் அம்மாதிரியான ஒரு வேலையை செய்ய மாட்டார் என்ற நம்பிக்கை இருக்கிறது.//
உங்கள் நம்பிக்கைக்கு நன்றி! வவ்வால் என்பது ஒரு அனாமதேய புனைப்பெயர்(nom de plume) என்றாலும் அடையாளம் காணத்தக்க ஒரு பெயராகவே இத்தனை நாளும் இருக்கிறது, எனவே எனக்கு வேறுப்பெயரில் வந்து பேசவேண்டிய அவசியம் இல்லை. திட்டினாலும்,பாராட்டினலும் வவ்வாலுக்கு தான் அது போய் சேரணும் என எதையும் அப்பெயரில் தான் சொல்வேன், பலருக்கும் தெரியும்.
மார்க்கபந்துக்களிடம் சண்டைப்பிடிக்கும் போதே வேறப்பெயரில் செய்ததில்லை, எனவே அழுகுனி ஆட்டம் எல்லாம் நான் ஆட மாட்டேன்.
உங்கப்படத்தை செந்தழல் தியேட்டரில் பார்த்தால் ,நான் முதல் நாள் முதல் காட்சிப்பார்த்து விட மாட்டேன் :-))
Try to watch the movie in English...In chromepet Rakesh theater, this movie is in English with subtitles....then decide about the movie......Nolan rocks
unlike his previous films, nolan didn't satisfy all his fans. it is true that some part of audiences did n't like the movie. But I liked it.
கேபிள்ஜி .. எப்போ பாத்தாலும் தியேட்டரில் வந்து பாரு பாருன்னு சொல்றது எதுக்கு? soul kitchen படத்தை ஆச்சு மாறாமல் கலகலப்பு என்று காப்பி அடித்த சுந்தர் c யும் வசனம் எழுதின நீங்களும் உண்மையான சினிமா ஆர்வலரா இருந்திருந்தா நியாயமா என்ன சொல்லணும்? அந்த நல்ல படத்தை ஜேர்மன் மொழியிலேயே பாருங்கன்னு சொல்லி இருக்கணும். உங்களை நீங்கள் படைப்பாளிய நெனச்சு ச்ரிச்டோபேர் நோலன் போன்ற மேதைகளை அவமானபடுதுவதை நிறுத்துங்கள்.
sathish unga comedya niruthungal
Irrespective of nolan ,the director did a fantastic job....No one could have finshed the series perfectly.Awesome movie.Better you see in english....You 'll realize that....dialogues are sharp.(ofcourse joker's dialogues are sharper than this)It's not matter of seeing the film....feel it...it's your right to share your review abt film...But it should be a valid one....No one can complaint on this film..Just see the reviews in imdb...all the reviews are not written by film based people...all are just audiance.....It got the highest rating of 9.2..... def your review is damn worst abt this film.....Ppl see it in theatre and feel the power of batman series....Nolan has finished his trilogy perfectly....
Shankar sir, indeed it is a superb movie,i dont know why you didnt like it.I had never seen you arguing like this. So i sense you are purposefully made this review like this.Quite disappointing.Sorry Mr.Shankar.
Post a Comment