Thottal Thodarum

Aug 6, 2012

கொத்து பரோட்டா -06/08/12

சென்ற வாரம் சில சினிமா நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்த போது பெரிய விவாதம் வந்தது. அதாவது பட்ஜெட் பற்றியும் வசூலைப் பற்றியும் யோசித்தால் நல்ல இயக்குனராக முடியாது என்று நண்பர் ஒருவர் வாதிட்டார். அதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. என்னைப் பொறுத்தவரை ஒரு இயக்குனர் படத்தில் யார் நடிக்கிறார்கள், அவர்களுக்கு என்ன வியாபாரம் இருக்கிறது, என்பதையெல்லாம் கணக்கிட்டுத்தான் ஒரு படத்தின் பட்ஜெட் இருக்க வேண்டும் என்றும் அப்போதுதான் அப்படம் சுமாரான வெற்றி பெற்றால் கூட தயாரிப்பாளர் தப்பிக்கமுடியும் என்றும் சொன்னேன். இன்று வரை பட்ஜெட்டைப் பற்றி கவலைப்படாத பல இயக்குனர்களின் படங்களைப் பற்றி பத்திரிக்கைகள் வேண்டுமானால் பாராட்டலாம் ஆனால் அடுத்த படம் செய்வதற்கு தயாரிப்பாளர்கள் வர மாட்டார்கள். என்ன தான் கலை அது இது என்று உட்டாலக்கடி அடித்தாலும், பணம் போட்டு பணம் சம்பாதிக்கும் ஒரு வியாபாரம் தான் சினிமா. அதில் நூற்றில் ரெண்டு படம் ஹிட்டாவதைவிட, சரியான பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டு, வெளியிடப்படும் சிறிய படங்களின் வெற்றி விகிதம்  அதிகமாய் இருந்தால்தான் சினிமாவின் நிலையும் புதிய இயக்குனர்களுக்கு வாழ்வும் கிடைக்கும் என்றேன். அதற்கு உதாரணமாய் பல படங்களைச் சொன்னேன். வியாபாரமே இல்லாமல் ஏழெட்டு கோடிக்கு படமெடுத்துவிட்டு, வெறும் இரண்டு கோடி மட்டுமே வசூல் செய்த படங்கள் பல, ஆனால் பத்திரிக்கைகளில் நல்ல பெயர் கிடைத்ததால் இயக்குனருக்கு வேறு படம் கிடைக்கும் ஆனால் அந்தத் தயாரிப்பாளர் அவ்வளவு தான் திரும்ப வருவதில்லை.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@


இந்த வார சந்தோஷம்
சூரியகதிர் இதழில் என்னுடய “துபாய் நண்பன்” சிறுகதை வெளியாகியிருக்கிறது. படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை கூறுங்கள்.

கலகலப்பு புகழ் இயக்குனர் பத்ரி இயக்கும் “தில்லு முல்லு” படத்தில் மீண்டும் வசன வேலைப் பார்க்க ஒரு வாய்ப்பு கொடுத்திருக்கிறார். வேந்தர் மூவீஸின் முதல் தயாரிப்பில், சிவா, பிரகாஷ்ராஜ், யுவன்சங்கர்ராஜா, என்று பெரிய டீம். மீண்டும் ஒரு கலக்கல் காமெடி படம் தயாராகிறது.
@@@@@@@@@@@@@@@@@@@@@
சிறுமி ஸ்ருதியின் மறைவிற்குபின் தொடர்ந்து பள்ளிச் செல்லும் சிறுமிகள் தமிழகமெங்கும் ஏதேனும் ஒரு விபத்தில் இறந்து கொண்டிருப்பது கவலையைத் தருகிறது. ஷேர் ஆட்டோவில், ஆட்டோவில், ஸ்கூல் வேன் என்று எதில் பார்த்தாலும் அளவுக்கு அதிகமான மாணவர்களையே ஏற்றிக் கொண்டு செல்லும் அவலத்தை நாம் தினமும் பார்க்கத்தான் செய்கிறோம். ஸ்ருதியின் மறைவுக்கு பிறகு ஆங்காங்கே ஆர்.டி.ஓக்கள் ஸ்ட்ரிக்டாய் இருந்து பஸ்களை, வேன்களை செக் செய்தாலும், போலீஸார் ஷேர் ஆட்டோக்களை கைப்பற்றி 20 ஆட்டோகளை பறிமுதல் செய்தாலும் இது எல்லாம் இன்னும் எத்தனை நாளைக்கு? என்ற கேள்வி மனதினுள் எழாமல் இல்லை. பெண் சிசுக்கொலையை தடுக்க பாடுபடும் அரசு இம்மாதிரியான விபத்துக்களில் இறக்கும் பெண் குழந்தைகளையும் கவனத்தில் கொள்ள வேண்டும். ஒரு பக்கம் பெண் குழந்தைகளே வேண்டாம் என்று அழிக்கும் பெற்றோர். இன்னொரு பக்கம் ஆசையாய் பெற்ற பெண் குழந்தையை சாகக் கொடுத்துவிட்டு கலங்கி நிற்கும் பெற்றோர். இவர்களின் துயரத்துக்கு ஒரு நல்ல முடிவை அரசு எடுக்க வேண்டும்
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
ஆதிதிராவிட மாணவர்களுக்காக அரசு ஒதுக்கும் 1850 கோடி ரூபாயை பள்ளித் தலைமையாசிரியர்கள் அவர்களுக்கு கொடுக்காமல் தங்களுக்கு ஒதுக்கிக் கொள்வதை கண்டுபிடித்து நிறைய பேரை சஸ்பெண்ட் செய்துள்ளார்கள். இவர்களுக்கு கொடுக்கும் உதவிப் பணத்தில் மட்டுமல்ல, சத்துணவு, இலவச பள்ளி நோட்டு புத்தகங்களுக்கு ஒவ்வொரு மாணவருக்கும் புத்தகத்திற்கு பத்து ரூபாய் என்கிற மேனிக்கு வாங்கிப் பிரித்துக் கொள்வதும், நோட்டுப்புத்தகங்களை மாணவர்களுக்கு கொடுக்காமல் பக்கத்தில் உள்ள ஸ்டேஷனரி கடைகளுக்கு விற்று அதிக லாபம் சம்பாதிப்பதும் நடந்து கொண்டுதானிருக்கிறது. முதல் ஊழலை களைந்தெடுக்க முற்பட்ட்டது போல, இதற்கு அரசின் தன் இயந்திரத்தை முடுக்கி விட்டால் அரசின் சலுகைகள் தேவையானவர்களுக்குப் போய் சேரும். அதே போல மதுரையில் அரசு அனுமதித்த அளவுக்கு மேல் கிரானைட் கற்களை எடுத்து அரசுக்கு பல்லாயிரம் கோடி ரூபாய் நஷ்டம் அடைய வைத்ததாய் கலெக்டர் நடவடிக்கை எடுத்ததும் வரவேற்க்கப்பட வேண்டிய ஒன்று. இம்மாதிரி அதிகாரிகளுக்கு முழு  சுதந்திரத்தை, பவரையும் கொடுத்தால் இன்னும் பல ஊழல்களை களைந்தெடுக்க முடியும். செய்யுமா இந்த அரசு?
@@@@@@@@@@@@@@@@@@@
ஈரோடு புத்தகக் கண்காட்சி
ஈரோட்டில் புத்தக கண்காட்சி ஆரம்பித்துவிட்டது. 3-14ஆம் தேதி வரை நடக்கவிருக்கும் இக்கண்காட்சியில் எனது சினிமா வியாபாரம் மதி நிலையத்திலும், மற்ற புத்தகங்களான லெமன் ட்ரீயும் ரெண்டு ஷாட் டக்கீலாவும், மீண்டும் ஒரு காதல் கதை, கொத்துபரோட்டா, தெர்மக்கோல் தேவதைகள், சினிமா என் சினிமா  மற்றும் யுவகிருஷ்ணாவின் அழிக்கப்பிறந்தவன், உலகநாதனின் நான் கெட்டவன், வீணையடி நீ எனக்கு , பத்மஜா நாராயணின் “மலைப்பாதையில் நடந்த வெளிச்சம்” ஆகிய புத்தங்கள் ஸ்டால் நம்பர் 65 கெளதம் பதிப்பகத்திலும், 88,89,91,92 ஆகிய ஸ்டால்களிலும்  கிடைக்கும். நாகரத்ன பதிப்பகம் சில புத்தகங்களுக்கு 20-25 சதவிகிதம் வரை கழிவு தருகிறார்கள். என்ஜாய் மாடி
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
என் ட்வீட்டிலிருந்து
வாழ்க்கையை சுவாரஸ்யமாக்கும் விஷயங்களில் உண்மையை விட பொய்க்கு அதிகம் பங்கு உண்டு

பெண்ணிடம் போய் “அப்பாடக்கர்” என்று சொல்ல முடியும். அப்பாவிடம் போய் “பெண்ணு டக்கர்” என்று சொல்ல முடியுமா? #பேஸ்புக்

முத்தமிடுவதால் பல் சொத்தை அடைவது குறையுமாம். # சர்வே ரிப்போர்ட்
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
ப்ளாஷ்பேக்
சில சமயங்களில் இசை நம்மை எங்கெங்கோ இட்டுச் செல்லும். அது நம்முடைய மூடுக்கு ஏற்றார்ப் போல விதவிதமான அனுபவங்களைக் கொடுக்கும். அந்த வகையில் இந்த பின்னணியிசை எனக்குள் பல விதமான உணர்வுகளை எப்போதும் கிளர்ந்தெழுத்துவிடும்.அதுதான்  இளையராஜாவின் ஆளுமை.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
வேலு பிரபாகரனின் காதல் கதைக்கு பிறகு தமிழில் ஏகப்பட்ட பாலியல் சம்பந்தப்பட்ட படங்கள் தொடர்ந்து வெளியானது. ஆனால் காதல் கதை செய்த வியாபாரத்தை நெருங்கக்கூட முடியவில்லை. தமிழில் அச்சமயத்தில் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்த படம். தெலுங்கில் முன்று கைமாறி விற்கப்பட்டு, பெரும் லாபத்தை அளித்த படம். அந்தப் படத்திற்கு  பிறகு வேலு பிரபாகரனின் தயாரிப்பில், நடிப்பில் வெளிவர இருக்கும் படம் “காதல் கனவு கொலை”  அதன் ட்ரைலர்..
@@@@@@@@@@@@@@@@@@@@
அடல்ட் கார்னர்
சர்சுக்குள் வந்த தன் மனைவியை தேடி வந்த ஒருவன் பாதரிடம், தன் மனைவியை தேடி வந்ததாகவும், அவள் இல்லை என்பதால் உங்களிடம் பாவ மன்னிப்பு கேட்கவிரும்புவதாகக் கூற, சரி என்று கேட்க ஆரம்பித்தார். “ஒரு முறை என் மனைவியைத் தேடி அவள் வீட்டிற்க்கு போனேன். அவள் இல்லை. அவளுடய தஙகை இருந்தாள் அன்று அவளுடன் மேட்டர் செய்துவிட்டேன். என்றான். “அஹா அது பெரிய பாவம் ஆயிற்றே. சரி.. பாவ மன்னிப்பாவது பெற வந்தாயே?” என்று சொல்ல, அவன் “இல்லை பாதர் இன்னொரு முறை அவளுடய கஸின் வீட்டிற்கு என் மனைவியைத்தேடிப் போனேன் அவள் இல்லாததால் அவளூடன் மேட்டர் செய்தேன். பாதர் “தம்பி இது ரொம்பவும் அநியாயம்” என்றார். அதுமட்டுமில்லை பாதர் இன்னொரு முறை மனைவி வேலை செய்யும் அபீஸுக்கு போனேன் அங்கே அவளின் தோழி மட்டும் தனியாய் இருந்தாள்  அவளுடனும் மேட்டர் செய்துவிட்டேன். என்றான். பாதர் பாவ மன்னிப்பு அறையிலிருந்து ஓட, “பாதர் ஏன் ஓடுகிறீர்கள்? என்று இவன் கேட்டான். “இங்கேயும் உன் மனைவி இல்லை நான் மட்டும்தான் இருக்கிறேன் அதனால் தான் என்று ஓடியேப் போனார்.

Post a Comment

11 comments:

வவ்வால் said...

கேபிள்ஜி,

மட்டுறுத்தல் எல்லாம் இருக்கு :-))

உங்க நண்பர்கள் சொன்னது நல்ல இயக்குனர்களைப்பற்றி, நீங்க சொல்றது வெற்றிகரமான இயக்குனர்களைப்பற்றி.

இரண்டுக்கும் நடுவே பேலன்ஸ் செய்து சில இயக்குனர்கள் சில வெற்றிக்கொடுத்து இருக்காங்க ,அதுவும் முதலுக்கு மோசம் இல்லாமல்.

தமிழின் மிகவும் வெற்றிகரமான ,பட்ஜெட் கணக்குகளுடன் படம் எடுத்து சாதித்தவர் இராமநாரயணன் மட்டுமே. ஆனால் அவரது படம் என்ன வகைனு ஊருக்கே தெரியும்.

ஆனால் மகேந்திரனின் படங்கள் சில வெற்றி சில தோல்வி என கலவையாக இருக்கும், அவரின் படங்கள் காலம் கடந்தும் பேசப்படுகின்றன.

இரண்டு வகையான இயக்குநர்களுமே திரைத்துறைக்கு தேவை. காசு மட்டும் கணக்குப்பார்த்தால் ராமநாராயணன்களும், சுந்தர்.சிக்களும் மட்டுமே படம் செய்ய முடியும்.

----------

அமோல் பலேக்கரின் கோல் மால் ,போல் பச்சனாக ரிமேக்காகிவிட்டது ,இப்போ தமிழிலும் தில்லு முல்லு ,ரிமேக் ஆகப்போகிறதா, ஆனால் சூப்பர் ஸ்டாரின் இடத்தில் சிவா என்னும் போதே கிர்ரடிக்குது :-((

ஹிந்தி ஒரிஜினல் இயக்கியது ஷியாம் பெனகல் தானே ?

அமர பாரதி said...

1850 கோடி என்பது தவறான தகவல் கேபிள்.  மோசடி 81 லட்ச ரூபாய்க்குள் இருக்கலாம்.  மாணவன் ஒருவனுக்கு 1850 ரூபாய் அளவில் வழங்கப்பட்ட சலுகையில் கை வைத்திருக்கிறார்கள்.

குரங்குபெடல் said...

ஒரு படத்திலேயே செட்டில் ஆக துடிக்கும்

சில இயக்குனர்களின் பேராசையும்

இன்றைய சீரழிவிற்கு முக்கிய காரணம்

Cable சங்கர் said...

@vavaal
ரிஷிகேஷ் முகர்ஜி

@ அமரபாரதி
1850 என்பது அரசு ஒதுக்கும் தொகை என்பதை குறிக்கவே..

test said...

//“தில்லு முல்லு”//
அந்த "தேங்காய் சீனிவாசன்" காரெக்டர் யாரு பண்றாங்க? :-)

Paleo God said...

மலையாள மொழியில் வெளிவந்து தமிழ்நாட்டில் வசூலைக் குவித்த உலகப் படங்களான அஞ்சரைக்குள்ளவண்டி, சாரவளையம், அவளோட ராவுகள் போன்ற கலைப்படங்கள் லோ பட்ஜெட்டில், புதுமுகங்களைப் போட்டு வசூலை அள்ளிக்குவித்த படங்கள்தானே?

இதற்குச் சான்றாக நீங்கள் இங்கே அளித்துள்ள ட்ரெய்லரே சாட்சி :))

arul said...

karuthulla pathivu sankar anna

வவ்வால் said...

கேபிள்ஜி,

ரிஷிகேஷ் முகர்ஜி தான், எனக்கு ஒரு பெரிய இயக்குனர்,அதுவும் விருதுகள் பலப்பெற்றவர் காமெடி படம் கூட செய்வார்னு நம்பமுடியாம இருந்துச்சு,ரொம்ப நாளாச்சு அதான் பெயர் குழம்பிடுச்சு , நம்ம ஊரில் தான் அவார்டு இயக்குனர்,மசாலா இயக்குனர்னு பிரிச்சுக்கிறாங்க போல.
---------

தேங்காய் வேடத்தில் பிரகாச் ராஜ் இருப்பார்னு நினைக்கிறேன்.

இப்போ தமிழில் அதிகமா சூப்பர் ஸ்டார் படங்களின் ,பெயரும், படமும் தான் மறு சுழற்சி ஆகுது , முரட்டுக்காளை போல ஆக்காமல் நல்லா எடுத்தா சரி தான்.

விஜய் said...

தில்லுமுல்லுவை paradyயாக வேண்டுமானால் சிவாவை வைத்து எடுக்கலாம்.

காப்பிகாரன் said...

ஹி ஹி ஜோக் சூப்பர்

காப்பிகாரன் said...

ஹி ஹி ஜோக் சூப்பர்