18 வயசு
55 லட்சம் ஹிட்ஸுகளை வாரி வழங்கி தொடர்ந்து ஆதரவளித்து அன்பு செலுத்திவரும் நண்பர்கள், வாசகர்கள், சக பதிவர்கள் அனைவருக்கும் என் கோடானு கோடி நன்றிகள் -கேபிள் சங்கர்
ரெடியாகி ரொம்ப நாளாக வெளிவராமல் இருந்த படம். ரேணிகுண்டா படத்தின் இயக்குனர் பன்னீர்செல்வம் இயக்கிய அடுத்த படம் என்கிற போது ஏற்பட்ட எதிர்பார்பை படம் காப்பாற்றியதா என்று கேட்டால் இல்லை என்றே சொல்ல வேண்டும். ரேணி குண்டா படம் வசூல் ரீதியாய் சரியாய் போகாவிட்டாலும், டெக்னிக்கலாகவும், க்ரிட்டிகலாகவும் பெயர் வாங்கிக் கொடுத்தபடம். அதே தயாரிப்பாளருக்கு மற்றொரு படம், அதுவும் மீண்டும் அவரின் மகனுக்காகவே எனும் போது பாவம் மனிதருக்கு என்ன பிரச்சனையோ? தன்னை அடமானம் வைத்திருப்பது நன்றாக தெரிகிறது.
தவறான நடத்தையுள்ள தாய், அதை தெரிந்து மனம் உடைந்து தூக்குப் போட்டு இறக்கும் தந்தை. அதனால் மனம்நலம் பாதிக்கப்பட்ட மகன். அவன் காதலில் விழுவதும், அவள் பின்னால் அப்செஷனோடு அலைவதும் அதனால் ஏற்படும் ப்ரச்சனைகள் தான் கதை. குணா படத்தை மீண்டும் பர்மிஷன் இல்லாமல் ரீமேக் செய்திருக்கிறார்கள். கொஞ்சமே கொஞ்சம் மனநலப்ரச்சனை வித்யாசத்தோடு.
மனநலம் குன்றிய பையனாக ஜானி. பக்கத்தில் இருக்கும் எந்த மிருகத்தைப் பார்க்கிறாரோ அதே விதமாய் நடந்து கொள்ளும் வித்யாசமான மனவியாதி. நாய், பூனை, பாம்பு, எருது என்று விதவிதமான பாடி லேங்குவேஜில் மனநலம் குன்றுகிறார். அதை வெளிப்படுத்திய பாடி லேங்குவேஜ் நன்றாக இருக்கிறது என்று முழுவதும் பாராட்டிவிட முடியாத படி அவரின் முக லேங்குவேஜ் மிக மோசமாய் இருக்கிறது. பாடியில்தான் முகமும் இருப்பதால் என்னால் பாராட்ட முடியவில்லை. மற்ற படி இவரின் கேரக்டருக்கான சரியான் விளக்கமும், இவரின் வியாதி என்ன விதமானது என்பதைப் போன்ற விளக்கங்கள் இல்லாததால் இவரின் மேல் கவனம் கொள்ள முடியவில்லை.
சத்யேந்திரன். தமிழ் சினிமாவில் வெறும் பைத்தியக்காரனாய், பிச்சைக்காரனாய் மட்டுமே வகைப்படுத்தப்பட்டு குறைவாய் மதிப்பிடப்பட்டிருக்கும் அதி திறமையான நடிகர். இந்தப் படத்திலும் அவருக்கு பைத்தியக்காரன் கேரக்டர்தான் என்றாலும், ஜாக்கி எனும் அக்கேரக்டரை இவரை விட சிறப்பாய் யாரும் நடித்திருக்க முடியாது என்றே சொல்ல வேண்டும். இவரின் டயலாக் டெலிவரியில் அவ்வப்போது ‘காதல் வாழ்க’ எறு சொல்வதும், அவ்வப்போது வாழ்வியல் தத்துவங்களையும், காதலைப் பற்றியும் லெக்சர் அடிப்பது எரிச்சலானதாய் இருந்தாலும் அது இயக்குனர் சொல்லச் சொல்லி சொன்னது என்பதால் மன்னிக்கப்பட வேண்டிய விஷயம். சத்யேந்திரன் உங்களின் நடிப்புக்கு என் வாழ்த்துகள்.
சட்டென பார்த்தால் பகக்த்துவீட்டு பிகர் போல ஒரு பெண் அவர் தான் ஹீரோயின் காயத்ரி. அழகாய் தெரிகிறார். சில சமயங்களில் மிக சாதாரணமாகவும் தெரிகிறார். பட் க்யூட்டாய் இருக்கிறார். இவருக்கு எதிர்காலம் இருக்கிறது. ஏற்கனவே மூன்று படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறாராம். படத்தில் ரோகிணி, செவ்வாழை, யுவராணி போன்றோர்களும் இருக்கிறார்கள் பட் படத்தில் அவர்களுடய நடிப்பு பற்றி சிலாகித்துச் சொல்ல ஏதுமில்லை என்பதற்கான காரணம் இயக்குனர் தான்.
சக்தியின் ஒளிப்பதிவு நச்சென இருக்கிறது. குறிப்பாய் மாடு போல சிலிர்த்தெழுந்து முட்டி சண்டையிடும் காட்சியில் ஒளிப்பதிவாளரும், எடிட்டரும், சிஜி செய்தவரும் பாராட்டுக்குரியவர்கள். பாடல்களைப் பற்றியோ பின்னணியிசையைப் பற்றியே சொல்ல ஏதுமில்லை.
எழுதி இயக்கியவர் பன்னீர் செல்வம்.முதல் படத்தில் பெற்ற பெயரை இரண்டாவது படத்தில் கோட்டை விட்டிருக்கிறார் என்றே சொல்ல வேண்டும். குணா படத்தின் ரிப்ளிக்காவான கதை, ரோகிணிக்கு எதற்காக ஹீரோவின் மேல் அன்பு வர வேண்டும்?. என்னதான் அமமா தவறான வழியில் போகிறவளாய் இருந்தாலும், ஏன் அவள் தன் மகன் மீது பாசம் காட்ட மறுக்கிறாள்? காய்த்ரிக்கும் ஜானிக்குமிடையேயான காதலில் அழுத்தமில்லாதது. அந்த போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு ஜானியின் மேல் ஏன் அவ்வளவு வன்மம்? இந்த கொதிக்கிற சென்னையில் ஜெர்க்கின் போட்டு, தலையில் முழுக்க, மறைக்கும் குரங்கு குல்லாவை ஏன் போட்டுக் கொண்டிருக்கிறான்? க்ளைமாக்ஸில் ஹீரோயின் குல்லாவை திறக்க, அதிலிருந்து வவ்வால், குரங்கு, புறா பூச்சி எல்லாம் வருமென்று நினைத்திருந்தேன். குணாவில் கூட கொடைக்கானல் போன பின்புதான் கமல் போட்டுக் கொள்வார். ஜானியின் சின்ன வயசிலேயே கள்ளக்காதல் வைத்திருக்கும் அம்மா யுவராணி அப்பா செத்த உடனேயே காதலுடன் லிவிங் டுகெதரில் இருந்திருக்கலாமே? ஏன் இடைவேளையின்போது தான் வீட்டிற்கு கூட்டி வருகிறார்?. அதுவும் பத்து பதினைந்து வருஷத்திற்கு பிறகு? ஜானியின் அப்பாவைத் தவிர, சுமார் பதினைந்து வ்ருடங்கள் ஒருவருடனே தொடர்பு வைத்திருக்கும் அம்மாவை பற்றி ஏதும் பெரிய தவறாய் அழுத்தமாய் காட்டாமல் விட்டது. நல்ல கருகரு அழகனாய் இருக்கும் அப்பாவிற்கு செவ செவ அம்மா இதை வைத்தே அவர்களுக்குண்டான ப்ரச்சனையை சொல்லியிருக்கலாம். அதை விட கொடுமையாய் முதல் காட்சியில் கை உடைந்து தொட்டில் கட்டி பேட்டி கொடுக்கும் இன்ஸ்பெக்டர் அடுத்த காட்சியில் ஜீப்பில் சேஸ் செய்வது. போன்ற பல அபத்தங்கள் கேள்விகளாய் படம் முழுக்க தொடர்வதால் முழுவதுமாய் ஒன்ற முடியவில்லை.
ப்ளஸ் என்று பார்த்தால் ஜானி, காயத்ரிக்கான ஆரம்பக் கட்ட காட்சிகள், சத்யேந்திரனை வைத்து கையில் துப்பாக்கி வைத்திருப்பதாய் விரலைக் காட்டி நடிக்கும் காட்சிகள், அதே விரல் துப்பாக்கியை வைத்து போலீஸில் மாட்டியவுடன் தனனைத் தானே விரலால் சுட்டுக் கொண்டு சாகும் காட்சி, இன்ஸ்பெக்டர் எப்படி ஜானியிடம் உயிர்பிச்சைக் கேட்டு கெஞ்சினார் என்று செவ்வாழை ந்டித்துக் காட்டும் காட்சி போன்றவைகள் தான். பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம் ப்ன்னீர் செல்வம்.
கேபிள் சங்கர்
கேபிள் சங்கர்
Comments
by
TamilNenjam
http://rajaavinpaarvayil.blogspot.com/
நீங்களும் உத அண்ணன் மட்டுமே
அவரை உணர்ந்து பாராட்டி உள்ளீர்கள் . .
நன்றி . .
இந்த தேசம் உருப்படுமா ?
காதல் காட்சிகளில் அழுத்தம் இல்லை ஒத்துக்கொள்ளலாம்... ஆனால் படம் பெட்டர் லக் சொல்லும்படியாக மோசமாக ஒன்றும் இல்லை. பார்க்கலாம் ரகத்தில் உள்ள வித்தியாசமான கதைதான்...